​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 7 June 2018

சித்தன் அருள் - 758 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


சித்தம் நிலைத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரையேரத் தொடங்கிவிடும். அங்குதான் சித்த நிலையின் முதல் விதை விதைக்கப்படுகிறது. இதற்காக, ஒரு மனிதன், வெளியுலக தேடலை குறைத்துக் கொண்டு, தனக்குள்ளேயே ஏன்? எது? எப்படி? என்று கேள்விகளை எழுப்பி அமைதியாக, பொறுமையாக காத்திருந்தால் அனைத்தும் சரியானபடி விளங்கும். இவ்வுலகில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும், காரண காரியங்களை புரிந்து கொள்ள முடியும். முன் ஜென்மத்தில் ஏதேனும் ஒரு நிமிடத்தில், சித்தர்களுடன் தொடர்பிருந்தால் தான், இந்த பாதையில் நடத்து செல்லவும் முடியும். ஒரு உண்மை தெரியுமா? இறைவனும், சித்தர்களும், தன் சேய்களிடம் பேச, தகவல் பரிமாற, அந்த ஒருவனை நேர்வழிப்படுத்த மிக மிக ஆவலாக உள்ளனர். மனிதனுக்குத்தான், நேரம் இல்லை. ஏன் என்றால், வாழ்க்கையில், அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தின் திசை வேறு வேறு புறமாக இருப்பதால்தான். எவனொருவன், தன் மனதை கட்டுப்படுத்தி, ஒரே நேர் கோடில் கொண்டுவந்து, சித்தத்தில் (உடலில் அது நம் புருவங்களுக்கிடையில் சுழுமுனையில் உள்ளது) நிறுத்துகிறானோ, அவனுக்கு அவர்கள் வாக்கு கேட்க்கும். அந்த வாக்கும் உண்மை என்று கண் முன் நடக்கும் பொழுது உணரலாம். நம்பிக்கை, நிறைய தனிமை தான் இதற்கு தேவை. தவம் செய்பவர்கள், காடு மலை, குகை என்று தனிமையான இடங்களை தேடிப்போவது, இதனால் தான். எத்தனையோ விஷயங்கள், தவத்தின் பின் நடந்தாலும், தவத்தின் முடிவு, தசவாசலை நோக்கித்தான் அழைத்துச் செல்லும்" என்று நிறுத்தினார்.

"இந்த தசவாசலை நோக்கிய பயணத்தை, சற்று விரிவாக கூறுங்களேன்" என்றேன்.

"ஒன்றை அடிப்படையாக மனதுள் வைத்துக்கொள். எத்தனைதான் இங்கு கூறினாலும், எதையுமே, அவனவன் உணர்ந்தால் அன்றி உணர முடியாது. சரிதானே!"

"ஆமாம்!"

"ஒரு குழந்தை பிறந்தவுடன், அதன் தலையை தொட்டு பார்த்திருக்கிறாயா?"

'ஆமாம்! பார்த்திருக்கிறேன்!"

"எப்படி இருக்கும் என்று கூறேன்?"

"தலையின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! தோல் அதை மூடியிருக்கும். தடவினால், ஒரு சிறு பள்ளத்தை உணரலாம்!" என்றேன்.

"உண்மை! ஒரு குழந்தையின் பிறப்பின் வழி இறைவன், மறுபடியும், மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு செய்தியை தெரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூடே வாழ்க்கையை நடத்தும் பொழுது, உடலை விட்டு நீங்கும் போது, இந்த தசவாசல் வழி வெளியே வந்தால், உனக்கு மோட்சம் என்று கூறுகிறான். ஒரு மனிதனின் தலை உச்சியை, பெரியவர்கள் "சஹஸ்ராரம்" என்று கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு மனிதனின் உடலுக்கு உள்ளே செல்கிற வழிகள் ஒன்பது இயற்கையாகவே, இறைவன் கொடுத்தது. அத்தனையையும் கட்டுப்படுத்தி, அனைத்திலும் ஊறும் சக்தியை திரட்டி, பத்தாம் வாசலுக்கு செல்ல வேண்டும். அந்த திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பெற்றவர்கள், அது வேகமாக இணைய வேண்டும், இல்லையேல் ஏதேனும் பிரச்சினை வந்துவிடும் உடலுக்கு என்று, எண்ணெய் தடவி குளிர வைப்பார்கள். அதுவும் குளிர்ந்து மிக குறைந்த காலத்திலேயே மூடிவிடும். ஒரு பிறப்பு காட்டித்தந்த அந்த பத்தாம் வாசலை நோக்கி, உள்ளிருந்து, கவனத்தால், மூச்சு காற்றால், தடவி, தடவி, சேர்ந்த மண்டையோட்டை கரைப்பதுதான், வாசி யோகத்தின் ஒரே முனைப்பு. இதற்கான முயற்சியை தொடங்கி நடந்து செல்லும் பொழுதே, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இறைவன், சித்தர்கள், வெளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ரகசியங்கள், அரிய விஷயங்கள், என ஒவ்வொன்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்தொடங்கும். காலம் செல்லச் செல்ல, அவனிடம் அத்தனை அரிய விஷயங்களும் சேர்ந்துவிடும். இத்தனையையும் சொன்னால் மனிதன் குழம்பிப் போய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பெரியவர்கள் "மூக்கின் நுனியை கவனி! உள்போகும், வெளிவரும் மூச்சை கவனி" என்றார்கள். என்ன செய்ய! அதுவும், இப்பொழுது நல்ல வியாபாரமாக ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னகைத்தபடியே நிறுத்தினார்.

"இதை, காலத்தின் கட்டாயம் என்று கூறலாமே" என்றேன்.

 "இல்லை! ஒருவனுக்கு என்ன தெரியவில்லை என்றுணர்ந்து, அதை இன்னொருவன் வியாபாரம் செய்கிறான்! அதை விடு! தொடங்கிய விஷயத்துக்கு வருவோம். ஒரு மனிதனின் மார்பு பாகத்தை "ஹ்ருதய கமலம்" என்பார்கள். த்யானத்தில், எவனொருவன், இறைவனை, தான் விரும்பிய ரூபத்தில் அங்கு அமர்த்தி மூச்சை உள்வாங்குகிறானோ, அவனுக்கு, ஒரு சில காலத்திலேயே, அவன் இருத்திய ரூபத்திலேயே இறைவன் அமர்ந்து இருப்பதை உணர்த்துவார், என்பது தெரியுமா? முடிந்தால், இறைவனின் எளிய ரூபமான "லிங்க ரூபத்திலேயே" முயற்சி செய்து பார். மார்பில், லிங்க ரூபம் உள்ளிருந்து வெளியே அழுத்துவது போன்று ஒரு சில காலத்திலேயே உணரலாம். சுழிமுனை வழி சஹஸ்ராரம் சென்று பார்த்த பெரியவர்கள், தசவாசலில், ஒரு லிங்கம் தலைகீழாக அமர்ந்து, ஆத்மாவை கரை ஏற்ற காத்திருப்பதை உணர்ந்தனர். அப்படின்னா! சிவபெருமானே, ஒவ்வொரு மனிதனையும் கரையேற்றி, தன்னையே வாகனமாக்கி, காத்திருக்கிறார், என்று கூறலாம் இல்லையா?" என்று புன் சிரிப்புடன் நிறுத்தினார்.

சற்று நேரம் அமைதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரிடம் பின்னர் கேட்பதற்காக விலக்கி வைத்திருந்த கேள்விகளில் ஒன்று "தலை கீழ் லிங்கம்". இதை ஒரு சித்தர் கோவிலில் பார்த்திருக்கிறேன். ஆவுடை மட்டும் தான் மண்ணுக்கு மேலே தெரியும். பாணம், பூமிக்குள், புதைந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்தை, அந்த விதமாக அமைத்ததே, ஒரு சித்தர்தான். அதை கண்டவுடன், இதன் அமைப்பே வித்யாசமாக இருக்கிறதே. இதன் வழி சித்த பெருமான் எதோ ஒரு செய்தி சொல்கிறாரே, என பல முறை யோசித்ததுண்டு. அந்த கேள்வியை அடியேன் இவரிடம் கேட்க்காமலேயே, கலந்துரையாடல் வழி மெதுவாக அந்த பெரியவர் விளக்கலானார். [அந்த சித்தர் கோவிலை பற்றி இன்னொரு நேரத்தில் தனி தொகுப்பாக, விளக்குகிறேன்!].

"என்ன? அப்படி ஒரு லிங்கத்தை கண்டவுடன், நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்து சென்ற உனக்கு விடை கிடைத்தது. ஆனால், உன் உண்மையான கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை! அல்லவா?" என்று கூறி என்னை, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சித்தன் அருள்................ தொடரும்!

16 comments:

 1. IYYA VANAKAM.
  UNGALAI THODARPUKOLLA VENDIYA MOBILE NO. OR EMAIL. ID THEIVIKKAVUM.
  NADI PARPATHAKAKA
  NANTRI
  MY NO.948925220

  ReplyDelete
 2. Replies
  1. என்னிடம் நாடி கிடையாது!

   Delete
 3. குருவின் குழந்தைகளுக்கு அற்புதமான செய்தி

  ReplyDelete
 4. அய்யா தங்களின் சித்தமார்கத்தின் பதிவு பயன் உள்ளதாக உள்ளது. நன்றி

  ReplyDelete
 5. Om Sri Madha Lobamudra sametha agatheesaya namah....

  ReplyDelete
 6. குருவடி சரணம்! முகம் மறந்து நம்மை வழி நடத்தும் அந்த நல்ஆத்மா யார் அய்யா!
  அந்த அய்யாவின் உணர்தல் மிக அற்புதம்தான்!
  "அந்த ஒருவனை நேர்வழிப்படுத்த மிக மிக ஆவலாக உள்ளனர்" உண்மைதான் நமக்கு எல்லாத்துக்கும் நேரம் இருக்கு. இறைவனை நினைக்க நேரம் இல்லை.
  எல்லாம் அவன் செயல்

  ReplyDelete
  Replies
  1. குருவடி சரணம்!
   அய்யா! இந்த கருத்துக்களை பகிரும் அந்த நல் ஆத்மாவை பற்றி தெரிந்து கொள்ளலாமா!
   9003195419

   Delete
  2. வணக்கம்!

   சுமார் இரண்டு வருடங்களாக, ஒருவர் வழி "அடியேன் வந்து பேசலாமா?" என தூதனுப்பி, அனுமதி வந்து, முதல் சந்திப்பில், ஒரு நிபந்தனையுடன் தான் என் கேள்விகளுக்கு பதிலளித்தார் அந்த பெரியவர்.

   "உண்மைகளை உரைக்கிறேன். எங்கள், பெயரையும், முகத்தையும் மறந்துவிடவேண்டும். எந்த காரணம் கொண்டும், யாருக்கும் காட்டிக் கொடுக்கக்கூடாது" என்றார்.

   செய்து கொடுத்த சத்தியத்தின் வேகத்தை கண்டு, உரைத்து, தெரிவிக்க அனுமதி அளித்தார். புரியும் என்று நினைக்கிறேன்.

   அடியேன்!

   Delete
  3. குருவடி சரணம்! குருவின் திருவடி சரணம்!
   நன்றி அய்யா! தங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்!பரவாயில்லை! அவர்களை எனக்கு காட்டி தர வேண்டாம்! ஆனால், அவர்களிடம் என் விருபத்தை சொல்லுங்கள்! அவர்கள் விருப்பபட்டால் பாக்கியம் கிடைக்கட்டும்!
   என்னுடைய தேடுதலுக்கான பதில் அவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன். நானும் உண்மையாக இருப்பேன் அய்யா!

   குருவின் பார்வை எனக்கு தேவை!

   நீங்கள் சொல்வது மாதிரி "எல்லாமே அவனுக்கு சொந்தம்" அவன் கருணை எனக்கும் கிடைக்க நீங்கள் வேண்டி கொள்ளுங்கள் அய்யா!

   Delete
 7. ஐயா தஞ்சாவூர் கணேசன் அவர்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி என்னும் பதிவிட அடியேன் வேண்டுகிறேன். ஐயா அகத்தியர் ஜீவ நாடி பார்ப்பதற்கு அவருடைய முகவரி தேவைப்படுகிறது. உதவி செய்யுங்கள் நன்றி....

  ReplyDelete
  Replies
  1. குருவடி சரணம்! அய்யா இப்போ கணேசன் அய்யா தனி நாடி சொல்வது இல்லை. இது அவருடைய வாட்சப் குருவின் அட்மின் (கணேசன் அய்யாவுக்கு வேண்டியவர்) எண்....9845025713.

   Delete
 8. ஐயா தஞ்சாவூர் கணேசன் அவர்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி என்னும் பதிவிட அடியேன் வேண்டுகிறேன். ஐயா அகத்தியர் ஜீவ நாடி பார்ப்பதற்கு அவருடைய முகவரி தேவைப்படுகிறது. உதவி செய்யுங்கள் நன்றி....

  ReplyDelete
  Replies
  1. திரு.ஹரிஹரன் அவர்களுக்கு வணக்கம்,

   http://arivumca.blogspot.com/2012/05/blog-post_2433.html

   கடந்த சில வருடங்களாக ஜீவநாடி படிப்பதை தற்காலியமாக குருவின் உத்தரவு கிடைக்காததால் நிறுத்திவைத்துள்ளார்.

   தற்பொழுது படிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ற விவரமும் இல்லை. கீழே அவருடைய முகவரி மற்றும் செல்லும் வழி இருக்குறது. முயற்சி செய்து பாருங்கள்.

   Mr. J.Ganesan
   Siddhar Arut Kudil
   No. 33/56,2nd street
   co-operative colony
   opp. co-operative bus stop
   Thanjavur-7
   தொடர்பு எண் : 9443421627

   பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவருக்கு உங்கள் பெயர் விவரங்களை அளித்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பின்னர் அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்.

   இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.

   சித்தர் அருட் குடிலுக்குச் செல்லும் வழி : தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.

   மற்றொரு வழி : பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே குடில் பார்வைக்குக் கிடைக்கும்.

   முக்கியமான விஷயங்கள்:
   அது ’அகத்தியர் அருட் குடில்’ என்பதால் அதற்கேற்றவாறு மனம், உடல் சுத்தத்துடனும் பக்தியுடனும் செல்வது நல்லது.

   பாத்திரத்துக்கேற்றவாறு நீர் நிரம்பும் என்பது போல பார்ப்பவர்களின் ஆன்ம பலத்துக்கேற்ப நல்ல, விரிவான பலன்கள், வழிகள் கிடைக்கும்.

   சித்தர்கள் கூறும் ஆலோசனைப் படி நடந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

   மிக்க நன்றி,
   இரா.சாமிராஜன்

   Delete
 9. தகவலுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 10. ஐயா, தலைகீழாய் இருக்கும் சிவலிங்க சித்தர் கோவில் பற்றிய பதிவின் முகவரி தர வேண்டுகிறேன்.

  ReplyDelete