​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 10 August 2017

சித்தன் அருள் - 717 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 2


அகத்தியர் நாடியில் வந்து அருளலானார்.

"இறைவன் அருள் துணை கொண்டு, இறைவன் உத்தரவால், இந்த உலகத்துக்காக, வாழும் அனைத்து உயிர்களும் தன்னை உணர்ந்து, இறைவனை உணர்ந்து உய்வு பெறவும், இந்த இறைவன் காதை உனக்கு உரைக்கப்படுகிறது. இந்த காதையில் உள்ள முக்கியமான சத்துக்கள் மட்டும் பிறரை சென்று சேர்ந்தால் போதும். ஆதலால் இதை எழுத்து வடிவத்தில் வெளியிடும் பொழுது, இறை என்ன நினைத்ததோ அது மட்டும் வெளியிடப்பட வேண்டும். ஸ்ரீ ராம காதை முழுமையாக உனக்கு உரைக்கப்படும்.

இவ்வுலக மனிதர்கள் பூர்வ கர்மவினையினால் நிறையவே வருத்தங்களை, துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். என்ன தான் செய்தாலும், விதி அதன் பிடியை தளர்த்துவதில்லை. இறை மனம் கனிந்து, அந்த விதியை தளர்த்திட, சூசகமாக தன் அருளை ராமகாதையின் எந்தெந்த ஸ்லோகங்களில் மறைத்து வைத்திருக்கிறது என்பதை உனக்கு உரைக்கிறேன். அதை வெளியுலகுக்கு தெரியப்படுத்து. என் வாக்கில் ராமாயணம் முழுவதும் உனக்கு உரைக்கப்படும். அதை நீ உணர்வாய்!" என்றதும் 

நான் இடைமறித்து "ஒரு சிறு விண்ணப்பம். ராமாயணம் முழுவதும் நீங்கள் உரைக்கப்படப்போகிற அதே வார்த்தைகளில், வெளியிட்டால், உங்கள் பரிபூரண அருளுடன், ஆசைப்பட்டதை நடத்திவிட்டோம் என என் மனது திருப்திப்படுமே! அப்படிப்பட்ட அருளை தரக்கூடாதா?" என்று பெருத்த ஆசையுடன் அகத்தியப் பெருமானிடம் கேட்டுவிட்டேன்.

"உண்மை தான்! இந்த உலகம் ஸ்ரீராமனின் காதையை மேலும் உணர்ந்து மேம்படும். ஆனால், அதற்கு இறை அனுமதி அளிக்கவில்லை. அது தெய்வீக சூட்ச்சுமங்களை உட்கொண்டது. தற்போதைக்கு, சுட்டிக் காட்டப்படும் ஸ்லோகங்களை, அதை கூறுவதானால், ஒரு மனிதன் எப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்று தெரிவித்து, இறைக்கு, அவர் இட்ட கட்டளைக்கு அடி பணிந்து கொடுத்த வேலையை செவ்வனவே செய்து, உன் மன ஆசையை தணித்துக்கொள். நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் உண்டு. மனதை ஆசைக்கு உட்படாமல் அடக்கி, தெரிவிக்கின்ற விஷயங்களை அதன்படியே உள்வாங்கி, எதெது சுட்டிக் காட்டப்படுகிறதோ, அதை மட்டும் பதிவு செய்து, இந்த உலக நன்மைக்காக எழுத்துருவில் மாற்றி விடு. மற்றவற்றை இறைவன் அருளால், நான் பார்த்துக் கொள்கிறேன். 

அடேய் மைந்தா! இத்தனை யுகங்கள் ஓடிய காலத்தில், எத்தனையோ முறை விண்ணப்பித்தும், இறைவனே தன் சரிதையை, என் நாவால் கூற, இப்பொழுதுதான் அனுமதி தந்தான். எனக்கு அனுமதியை பெற இறைவனிடம் எத்தனை போராடினேன் என்று எமக்குத்தான் தெரியும். எனக்கு அனுமதி கிடைத்ததும், உடனேயே அது மானிட ஜென்மத்துக்கும் இவ்வுலகில் கிட்டட்டும் என்று உன் வழியாக அருளுகிறேன். இதன் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள். சித்தன் மனநிலை அப்போது உனக்கு புரியும்!" என்று ஒரே போடாகப் போட்டார்.

எனக்கு முழுவதும் புரிந்து போயிற்று. சப்த நாடியும் அடங்கிவிட்டது.

பொதுவாக, மனிதர்களுக்கு, துன்பம் வரும்போது, இது எதனால் வந்தது என்று உணரும்போது சப்த நாடியும் அடங்கிவிடும். ஒரு நல்ல விஷயத்தில், நடந்த உண்மை புரியும் பொழுது, சப்த நாடியும், நெஞ்சு அதிர அடங்கியதை அன்றுதான் உணர்ந்தேன்.

நாம் மனிதர்கள், எத்தனை தவறுகள், கட்டுப்பாடில்லாமல் செய்தாலும், நமக்கென இறைவனிடம் வாதாடி, இறை அருளை பெற்றுத்தர சித்தர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் இல்லையேல், அவர்கள் வேண்டுதல்களை இறை அனுமதிக்கவில்லையெனில், இவ்வுலகம் என்றோ மிருகக் குணம் நிறைந்த மனிதக் கூட்டமாகத்தான் இருந்திருக்கும். சித்தர்கள் நம்மிடம் எல்லோரிடமும் பேசாவிட்டாகிலும், நம்மை வழி  திருப்பி, திருத்தி, மன்னிக்க வைத்து, அமைதியாக வாழவைக்க, இறைவனிடம் கொண்டு சென்று நம்மை சேர்க்க, எத்தனை காலமாக, யுகம் யுகமாக, முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று அந்த நொடியில் எனக்கு புரிந்தது.

இது புரிந்த நொடியில், அமைதியாகிவிட்டேன். இனி அருள்வது அகத்தியர் செயல் மட்டும்தான் என்று தீர்மானித்தேன்.

ஸ்ரீ ராம காதையை தொடங்கும் முன், ராமரின் ஜாதகத்தை அலசி விரிவாக உணர்த்தினார். அதன்  பெருமைகளை,மனிதர்களுக்கு புரியவைப்பதற்காக, தான் ஏற்றுக்கொண்ட அவதாரத்தில் எத்தனை துன்பங்களையும், தாங்க தயார் என்று இறை தீர்மானித்து, எல்லா கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், இறையே தன் பிறவியை தீர்மானித்தது. அனைத்து கிரகங்களும் உச்சத்தில் இருந்தால், பொதுவாக  மிக உயர்ந்த வாழ்க்கைதான்  அமையும் என்று மனிதர்கள் நினைத்திருந்த காலத்தில், மற்றவர்கள், உயர்ந்தோர் எதிர்பார்க்காத நிலையில், தான் எத்தனை சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் என்பதை சூசகமாக உணர்த்துவதற்காக இந்த அவதாரம் எடுத்தார் என்றும் கூறினார்.

அவர் கூறுவதை அனைத்தையும் மிக கவனமாக கேட்டுக் கொண்டே வந்தேன். குறிப்பெடுத்தது மனதில் மட்டும் தான். எழுத்துருவில் கொண்டு செல்ல உத்தரவு கொடுக்கவே இல்லை. ஸ்ரீ ராமபிரானின் சரிதையை பால பருவத்திலிருந்து  தொடங்கி, கல்விக்கான குருகுல வாழ்க்கையை கூறி, ஸ்ரீ ராமாபிரானுக்கே தன் சக்தியை உணர்த்த விஸ்வாமித்ரர் அழைத்து சென்றது, அந்த காலத்திலேயே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்பது ஸ்ரீ ராமரை பொறுத்தவரை ஏன் என்று உணர்த்தியது, ஜனகன் மகள் சீதையை யார், எதற்கு அவதாரம் எடுத்தாள் என்று புரியவைத்தது எல்லாவற்றிலும் இறைவனின் முன் தீர்மானங்களை வெளிப்படுத்திய விதம், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. விஸ்வாமித்ரர் இத்தனை பாக்கியசாலியா என்று அன்றுதான் உணர்ந்தேன்.

விஸ்வாமித்ரருக்கு கிடைத்த அந்த பாக்கியத்தில், ஒரு சதவிகிதம் ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அடடா! அவன் நேராக மோக்ஷத்துக்கு சென்று,  பெருமாள் காலடியிலேயே கிடந்திருப்பான். அத்தனை பெருமைக்குரியது, என்று தோன்றியது.

ஸ்ரீ ராமகாதை வளர்ந்து கொண்டே சென்றது. அதிலேயே மிக கவனத்தில் இருந்த எனக்கு, என்னுள் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடியவில்லை. ஆனால் மனம் மிக மிக பஞ்சாக மாறியது என்று மட்டும்தான் கூற முடியும்.

"இத்துடன் இன்று நிறைவு செய்வோம்! மறுபடியும் வேறு ஒரு நல்ல முகூர்த்தத்தில்  உரைக்கிறேன். இனி நான் சென்று பூசை த்யானம் போன்ற நித்தியா கர்மாக்களை செய்ய வேண்டும். ஆசிகள் உனக்கு" என்று நிறுத்திக் கொண்டார்.

"ஒரே ஒரு விண்ணப்பம்!" என்று ஒன்றை கேட்க நினைத்தேன்.

"என்ன இதுவரை எதையுமே பதிவு செய்ய அனுமதிக்கவில்லை என்பது தானே உன் விண்ணப்பம். சரியான நேரம் வரும் பொது இறை அருளியதை யாம் கூறுவோம். அதுவரை பொறுமையாக கேட்டு வா! உனக்கென்ன தெரியும் இறைவனின் உத்தரவு. யாம் பார்த்து கூறுகிறோம். அப்போது போதும்" என்று கேள்வியை/விண்ணப்பத்தை என்னை கேட்கவிடாமல், அவரே பதிலை கூறினார்.

சரிதான்! நாம் கேள்வியை மனதுள் உருவாக்கும் முன்னரே, அதை கண்டுபிடித்து, அதற்கான பதிலையும் கூறுவதில் அவருக்கு நிகர், அவர்தான் என்று உணர்ந்து, மூத்தோனையும், அனுமனையும் வணங்கி நாடியை பூசை அறையில் இருந்த ஸ்ரீ ராமர் விக்கிரகத்தின் பாதத்தில் வைத்தேன். எழுந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன். பிறகு, த்யானத்தில் அமர்ந்து

"ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜெபிக்கத் தொடங்கினேன்.

சித்தன் அருள்................ தொடரும்!




36 comments:

  1. அய்யா பதிவிற்கு நன்றி.
    மகான் அகத்தியர் சிஷ்யருக்கு கீழ்கண்டவாறு உரைத்ததாக தெரிகிறது
    " தற்போதைக்கு, சுட்டிக் காட்டப்படும் ஸ்லோகங்களை, அதை கூறுவதானால், ஒரு மனிதன் எப்படிப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்று தெரிவி"
    மாமுனி அகத்தியர் ஸ்ரீ ராமாயணத்திலிருந்து அருளிய அந்த ஸ்லோகங்களை (அதன் பயனுடன்) மக்கள் நன்மைக்காக அருள் கூர்ந்து விரைவில் வெளியிடுங்கள்.
    வணக்கம்

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. குருவையும் சிஷ்யரையும் சேர்ந்து பார்க்கும் பொழுது மனம் சந்தோஷப்படுகிறது.
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா

    அற்புதம். உடல் சிலிர்த்து மனம் குரு அகத்தியரின் ராம காதையில் ஸ்ரீ ராமரின் பாதங்களில் ஒன்றிவிட்டது. ஒம் அகத்திசாய நமஹ. சீதாபதி ராமசந்த்திரகி ஜெய்....

    ஜெயராமன்

    ReplyDelete
  5. Guruji Saranam., Namaskaram.

    Om sri Lobamuthra matha sametha Sri Agastheesaya Saranam.

    Eagarly awaiting for the next issue guidance.

    thanking you

    g. alamelu + venkataramanan..



















































    Guruji, Saranam

    Om Sri Lobamuthra matha sametha Sri Agastheesaya namaha

    thanks and expecting eagarly for the next issue guidance.

    thanks

    g. alamelu + venkataramanan.






































    ReplyDelete
  6. ஈசன் அருள். எம்பெருமான் சித்தர் பெருமான் அருள் எல்லோரும் கிடைக்க அடியேனின் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  7. Sir
    A rare revelation by the Great Master to his Sishya which now is set to benefit those who tirelessly follow the Master.
    Could you please provide those slogas first so that many good souls caught in the grip of their past sins and destiny's effect thereof could heave a sigh of relief by reciting those slogas and see some sunlight in their lives.
    Regards/Ram

    ReplyDelete
  8. பிறவி பயன் பெற்றேன் அய்யா ... படிக்க படிக்க கண்களில் நீர் வருகிறது நான் நானாக இல்லை . அகத்தியர் அருகில் அமர்ந்து கேட்பது போல் ஒரு உணர்வு . இதனை நாட்கள் இதனை ஏன் தங்கள் சொல்லவில்லை . ஏனோ அகத்தியரே உங்கள் மனதில் தோன்றி எங்களுக்கு சொல்ல்வைதுள்ளர் என்று நினைக்கிறன் ....


    அய்யா முடிந்தால் அகத்தியர் கூறிய ராம காதையை இங்கே ஒரு தனி தொடராக எழுதுமாறு கேட்டுகொள்கிறேன் ....

    ReplyDelete
  9. அய்யா வணக்கம்,

    குருவின் அருளால் "சுகம் தரும் சுந்தர கண்டம்" நூலை வாங்கி படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    குருநாதர் அகத்தியர் அருளால் நானும் அந்த நூலை படிக்கும் பாக்கியம் பெற்றேன்.

    குரு வாழ்க! குரு நன்றாய் வாழ்க! குருவே துணை!

    நன்றியுடன்,

    மு. மோகன்ராஜ்,
    மதுரை.

    ReplyDelete
  10. ஸ்ரீ அகஸ்திய பெருமானின் அருளுரைக்காக காத்திருக்கிறோம் .

    ஓம் ஸ்ரீ லோப முத்ரா சமேத அகஸ்திய சித்த ஸ்வாமியே போற்றி!!

    ReplyDelete
  11. om Lobhamudra sametha agatheesaya namah.....

    ReplyDelete
  12. all the important slokas can be seen in his sugam tharum sundarakandam book

    ReplyDelete
  13. வணக்கம் அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயா.

    நான் சொல்லொன்னா துயரத்தில் தத்தளிக்கிறேன். தயவு கூர்ந்து எனக்கு ஒரு தீர்வு கூற் முடியுமா?

    உங்களை எப்படி தொடர்புகொள்வது என்று தயவு செய்து கூற முடியும?

    ராஜேஷ்

    ReplyDelete
    Replies
    1. BUY SUGAM THARUM SUNDARAKAANDAM AND CHANT THE RELEVANT SLOGA. YOU CAN OVERCOME THE BAD SPOT IN YOUR LIFE.

      Delete
  14. Om Lobamudra Samedha Agasthiyar Ayyane thunai .. ..

    பதிவிற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  15. @Abiash.... already book was published....by Hanumandhasan ayya....

    I read about that holy book in our sithanarul and bought the book from Chennai...

    But all these days I forgot and didn't receive ..

    Now I will start ... thanks

    ReplyDelete
    Replies
    1. @manonmani velliangiri
      Thanks for the information

      Delete
  16. super sir
    .awaiting for the next

    ReplyDelete
  17. வணங்குகிறோம் யாம் அகத்தீசர் திருவடிகளை .ஓம் ஓம் ஓம்

    ReplyDelete
  18. வணக்கம் வணங்குகிறோம் யாம் சித்தர்கள் அடியார்கள் அனைவரையும்.

    ReplyDelete
  19. இப்போது நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்தப் படம் மிகவும் வித்தியாசமான படம். இதற்கு முன்னர் இந்தப் படத்தைப் பார்த்திருக்க முடியாது. இந்தப் படத்தில் அப்படி என்ன விசேஷம் என்றால், இது அகத்திய மாமகரிஷியின் திருமணக் காட்சியாகும்.

    காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார். அந்த தரிசனம் தான் இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் படம்.

    அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.

    1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு 'தேவதாரு மரம்'.
    2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் 'திருத்தோடகன்' என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
    3. அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் 'திரிபூரணம்' என்பதாகும். இது கௌதம முனிவரால் கொடுக்கப்பட்டது.
    4. அகத்தியரும், லோபமுத்திரா அன்னையும் அணிந்திருக்கும் பூமாலையானது வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய 4 விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும். இந்த மாலையை தொடுத்துக் கொடுத்தவர் லோபமுத்ரா அன்னையின் தோழியான 'பர்வதினி' என்பவர்.
    5. லோபமுத்ரா தேவியானவர் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மிகப் பெரிய சக்தி உபாசகி. அம்பாளின் மிகப் பெரிய சிஷ்யையாக லோபமுத்ரா தேவியைப் பற்றி 'லலிதா திரிசதை' யில் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் சிவப்பு நிற பட்டு உடுத்துவர். அதனால் சிவப்பு நிற பட்டு தான் லோபமுத்ரா அன்னைக்கு திருமண ஆடையாக நெய்யப்பட்டது.
    7. லோபமுத்ரா அன்னை அம்பாளையே அடைய வேண்டி நின்றதால் 'லோபா' என்று பெயர் வந்தது. 'முத்திரா' என்றால் ஆனந்தத்தைப் பெற்றவள் என்று பொருள்.
    8. லோபமுத்ரா அன்னை காலில் அணிந்திருக்கும் மெட்டியானது 'சரளி' எனப்படும் ஒரு அபூர்வ வகையான வைரக்கல்லால் ஆன அணிகலானாகும். இதைக் கொடுத்ததே அகத்தியர் தான்.
    9.லோபமுத்ரா அன்னையின் அருகில் உள்ள மயிலானது, அவரது தோழியான 'சேதத்தரணி' என்பவராவார்.
    10. அகத்தியர் அருகில் உள்ள மான், அவரின் முதன்மைச் சீடரான புலஸ்தியர் மகரிஷியே ஆவார்.
    11. லோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கும் கிளியானது மிகவும் விசேஷமானது. அன்னையினால் கண்டறியப்பட்ட மகாவித்தை ஒன்று உண்டு. அது 'ஹாதி வித்தை'. அந்த வித்தைக்குரிய தேவியே லோபமுத்திரை தான். அந்த வித்தையை உபாசனை செய்து யோகநிலையில் வந்த ஒரு பெண் தான் 'மயூஷினி'. அவரே கிளி உருவத்தில் அமர்ந்திருக்கிறார்.
    12. லோபமுத்ரா அன்னையின் கையில் உள்ளது 'அமிர்தக்கலசம்'. இது பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டது.
    13. அன்னையின் கூந்தலில் 'பொற்காந்தல்' எனப்படும் ஒரு மலர் சூடியிருக்கிறார்கள்.

    இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இந்த அபூர்வ திருமணக் காட்சியானது பொதிகை மலையில் உள்ள வடகிழக்கு பகுதியில் இருக்கும் 'பூமண் மேடு' என்னும் இடத்தில் தான் நிகழ்ந்தது.

    இந்த அரிய நிகழ்வுகள் அனைத்தும் அகத்தியரின் தலைமைச் சித்தரான புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்டது.

    ஸ்ரீ அகத்தியர் சிறு குறிப்பு 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இவருக்கு பிடித்த பூ மல்லிப்பூ பிரசாதம் தயிர் சாதம் ஈம் என்ற பிஜட்சார மந்திரம் இவருடையது ஓம் அகத்திசாய நமஹ நாமம் சொன்னால் அருள் புரிவார். இவருடைய பெயரில் உள்ள ஊரை பற்றி நமக்கு தெரியும். ஒரு நாடே இவர் பெயரில் இருந்தது. அதன் பெயர் ஆஸ்திரேலியா. பழைய பெயர் அகஸ்தியராலயா. மூல நட்சத்திரத்தின் கோத்திரம் ஸ்ரீ அகஸ்தியர் ஆவார்

    ReplyDelete
    Replies
    1. அருமையான தகவல்கள் !!
      நீங்கள் குறிப்பிடும் படம் எங்கே உள்ளது ?

      Delete
    2. வணக்கம். மிக அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி. குரு அகத்தியர் திருமணக்காட்சி புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் பதிவேற்றி உள்ளேன். தரவிறக்கம் செய்து பாருங்கள்.

      https://i.imgur.com/ezY3ZJs.jpg

      மிக்க நன்றி,
      இரா.சாமிராஜன்

      Delete
    3. Many thanks for the detailed information. Really Great to share! May the guru Bless You.

      Delete
    4. அகஸ்தியர் திருமண கோலம் தெளிவான குறிப்புகளுடன் . நல்ல தகவல் . நன்றி

      Delete
  20. ஐயா வணக்கம்.
    சுகம் தரும் சுந்தர காண்டம் நூல் சென்னையைத் தவிர வேறு எங்கு கிடைக்கும். .

    ReplyDelete
    Replies
    1. SEARCH AT ANY BOOK STALL WHICH SELLS SUCH TYPE OF DIVINE BOOKS.

      Delete
    2. அம்மன் பதிப்பகம் சென்னையில் வாங்கலாம் - Mobile Number - 9445952585.You can transfer money in online by getting their bank account number.
      ஆன்லைனில் வேறு சில கடைகளிலும் கிடைக்கிறது .
      முயற்சி செய்யவும்.

      Delete
    3. மெரினா புக்ஸ்
      2வது மாடி, 429/257, பூந்தமல்லி நெடுஞ்சாலை
      அமைந்தகரை, சென்னை - 600 029

      044-4207 4207 88834 88866
      marinabooks@congotech.com
      marinabooks.com /marinabookstore
      சுகம் தரும் சுந்தரகாண்டம் அம்மன் பதிப்பகம் ஆசிரியர் ஸ்ரீ ராமசாமி . புத்தக விலை ரூபாய் : 190

      Delete
    4. Thanks for your information

      Delete
  21. Othiyappar birthday . This year 19 aug or 13 see?
    Can I pray any other temple too?

    ReplyDelete
    Replies
    1. 20/08/2017 -ஆவணி மாதம் - சதுர்தசி திதி மறுநாள் காலை 02.25 வரை, பூசம் நட்சத்திரம் அன்று இரவு 06.04 வரை . YES YOU CAN PRAY AT ANY TEMPLE

      Delete
    2. Thank u so much sir. But one doubt thuvathasi thithi? Or sathurthasi thithi?

      Delete