வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
திரு.மா.சரவணன் என்கிற அகத்தியர் அடியவர் தனது நாடி வாசித்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறார். அவர் அனுப்பித்தந்த தொகுப்பை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
சித்தன் அருள் வாசகரில் ஒருவனும் அகத்தியர் அடியர்களின் தீவர பக்தர்களின் ஒருவனான எனக்கு கல்லார் ஜீவநாடியில் ஏற்பட்ட அனுவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை சித்தன் அருள் வலை தளத்தில் வெளியிடும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கையில் மனநிறைவு ஏற்பட்டு சமூகத்தில் நற்பெயர், நல்ல வேலை யில் இருந்தேன். ஆனால் விதியின் கொடுமையால் தற்போது வாழவும் நேராமல் சாகவும் இயலாமல் ஒர் நடை பிணமாக வாழ நேரிட்டது. யாரிடமும் இப்பிறவியில் எவ்வித தீங்கும் செய்யாமல் இருந்தும் கூட துன்பமும் துயரமும் என்னை வாட்டியது. ஏதோ ஒர் வினை தான் எனக்கு தோன்றியது. சித்தன் அருள் வலைதளம் மூலம் கல்லார் அகத்தியர் ஞானபீடம் தெரிய வந்தது. உடனடியாக அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் கூட விதியின் விளைவாக செல்ல முடியவில்லையே! ஒரு முறை மாதாஜி அவர்களை தொடர்பு கொண்டு சுவடி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை சொன்னேன். அவர்கள் முன்பதிவு செய்துள்ளதாக கூறினார். ஆனால் எந்தநாள் வரவேண்டும் என்பதை சொல்லவில்லை. தினமும் அகத்தியர் மந்திரம் கூறி வந்தேன். ஒருநாள் மாதாஜியை மீண்டும் தொடர்பு கொண்டு சுவடி பார்க்க நாள் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் 25/04/2015 அன்று வரும்படி கூறினார். நானும் அந்த நாளுக்காக காத்திருந்து அகத்தியரை தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு வந்தேன். அந்த நாளும் வந்தது. கல்லார் செல்ல விரைந்தேன். சத்தியமங்கலத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்து ஒன்றில் பயணித்தேன். என் நேரம் அரசு பேருந்து ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றது. ஒரு வழியாக காலை 11 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சென்றேன். இன்று நாடி பார்க்க முடியாமல் போய் விடுமா என்ற ஐயம் வந்து விட்டது. அகத்தியரை மனதளவில் வேண்டிய பின் கல்லார் செல்ல குன்னூர் பேருந்தில் ஏறினேன். அடுத்த 15 நிமிடத்தில் கல்லார் வந்தடைந்தேன்.
கல்லார் வந்தடைந்தாலும் ஆஸ்ரமம் இருக்கும் இடம் தெரியாததால் ஒரு வழியாக அங்குள்ளவரிடம் விசாரித்து ஆஸ்ரமம் இருக்கும் இடத்திற்கு சென்றிருந்தேன். அது கல்லார் இரயில் நிலையம் அருகில் இருந்தது.
கல்லார் அகத்தியர் ஞானபீடத்தில் எந்த வித அறிவிப்பு பலகையும் இல்லாததை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். மிக எளிமையான முறையில் அழகாகவும் இயற்கையான சூழலில் ஆஸ்ரமும் அமைந்துள்ளது. அகத்தியர் ஆஸ்ரமம் என்ற விளம்பர/வழிகாட்டி பலகை ஏதுமில்லை. நான் சென்று பார்த்த நேரம் ஆஸ்ரமம் கூட்டம் ஏதுமின்றி அமைதியாக இருந்தது. அகத்தியர் சிலை, முருகன் சிலை மிக நேர்த்தியாக அழகாக இருந்தது. வழிபட்ட பின்பு மாதாஜியை பார்க்க சென்றேன்.
மாதாஜி அவர்கள் காலையிலே உங்கள் பெயரை அழைத்தேன். 9 மணிக்கு வர வேண்டும் அல்லவா! என்றார். நான் இடம் தெரியாமல் தவித்தேன் எனவும் கிராமத்தில் இருந்து முதல் முறையாக வந்திருப்பதாக கூறினேன். இதை கவனித்த தங்கராசு சுவாமி சுவடி பார்ப்பதாகவும் சிறிது நேரம் காத்திருக்கவும் சொன்னார். இதனால் ஒரே மகிழ்ச்சி!
அரை மணி நேரம் கழித்து மாதாஜி என்னை அழைத்தார்.நான் மகிழ்ச்சியுடன் சென்றேன். தங்கராசு சுவாமி சாப்பிட்டீர்களா? என்றார். நானும் நாடி பார்க்கும் ஆவலில் ஆம் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் தாங்கள் சாப்பிட்டு வந்த பின் பார்ப்பதாகவும் அதுவரை காத்திருக்க சொன்னார்கள்.
நான் ஓய்வு கூடத்தில் அமர்ந்து அகத்தியரை தீயானித்து கொண்டிருந்தேன். பசி ஒருபக்கம் வயிற்றை கிள்ளியது. ஆஸ்ரம உதவியாளர் அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். சாப்பிட வரும்படி கூறினார். மகிழ்ச்சியுடன் சென்று சாப்பிட்டேன். மாதாஜியும்,தங்கராசு சுவாமியும் , இன்னும் இருவர் உட்பட அனைவரும் தரையில் அமர்ந்தே சாப்பிட்டது எளிமையான வாழ்க்கையை காட்டி உள்ளது.
சாப்பிட்ட பின்பு நாடி பார்க்க சென்றேன். தங்கராசு சுவாமி நாடி பார்க்க தொடங்கினார். நாடியை பிரித்தவுடன் நீங்கள் பட்டயக் கல்வி கற்றவராகவும் தற்போது நூல் சார்ந்த தனியார் நிறுவனத்தில் எழுத்தர் பணி செய்கிறீர்களா? என கேட்டதும் ஆச்சரியம் அடைந்தேன். மிக சரியாக இருக்கிறது என்றேன். பிறகு சுவாமி நாடியில் வந்ததை சொல்ல சொல்ல மாதாஜி தனியாக குறிப்பேட்டில் எழுதுகிறார். சுவாமி சுவடியை படித்த முடித்த பின் மாதாஜி நமக்கு புரியும் படி விளக்கம் தருகிறார். என் பிரச்சனைகளை முன் கூட்டியே தனியே தாளில் எழுதி கொடுத்ததால் கால நேரம் மிச்சப்படுவதும் தெளிவாக அரை மணி நேரத்திலே அறிய முடிகிறது.
சுவடியில் முன் ஜென்மத்தில் நாம் செய்த தீய செயல்களை பற்றி விளக்குகிறார். அதனால் இப்பிறவியில் நாம் எவ்வித துன்பத்தில் இருக்கிறோம் என்பது பற்றி சரியாக விவரிக்கிறார். இந்த துயரத்தை போக்க செய்ய வேண்டிய ஆலயங்கள், வழிபாட்டு முறைகள், பரிகாரம் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்கள். தங்கராசு சுவாமியின் பதில்கள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்தது. முருகனையும். அகத்தியரையும் வணங்கி வழிபட்ட பின் கல்லாரின் அழகை பார்த்தவாறு விடை பெற்று சென்றேன்.
மா.சரவணன்,ஈரோடு
tq thiru m.saravanan for sharing your experience at kallar.
ReplyDeleteWaiting to go there
ReplyDeleteWaiting to go there.
ReplyDeleteதிரு கார்த்திகையேன் சார் அவர்கள் mail id வேண்டும் கல்லார் ஜீவ நாடி எனக்கு ஒரு அனுபவம் நடந்து இருக்கிறது அதையும் சித்தன் அருள் வலைபூ வெளியிட வேண்டும் என் mail iD kmjorganic@gmail.com
ReplyDeleteDear muthamizh,
ReplyDeleteThiru.karthikeyan ayyas mail I'd is sgnkpk@gmail.com