​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 14 March 2013

சித்தன் அருள் - 115


யாருக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளது, அது எப்பொழுது நடக்கும் என்பதை இறைவனும், சித்தர்களையும் தவிர வேறு ஒருவராலும் கூற முடியாது.  சித்தர்களை உருவாக்குவது இறைவன் செயல், சித்த மார்கத்துக்கு அழைத்து செல்வது சித்தர்கள் அருள் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.  எக்குடி பிறக்கினும், உயர் நிலை விதிக்கப்பட்டிருந்தால், அந்நிலை அடைவது உறுதி.

அந்த சிறுவன் பெயர் "முனி".  கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் வளர்ந்து வந்தான்.  பள்ளிக்கூடம் அனுப்பி அவனை கல்வி கற்க வைக்கிற அளவுக்கு வருமானம் இல்லாத குடும்பம்.  தாய், தந்தையரின் உத்தரவால் கிராமத்தில் உள்ள ஆடு மாடுகளை காட்டிற்கு மேய்த்து சென்று , சுள்ளி பொருக்கி, விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையையும், குடும்பத்தையும் கவனித்து வந்தான். கிராமத்தில் மற்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது வேடிக்கை பார்க்கும் அவன், நமக்கு மட்டும் ஏன் பள்ளி சென்று படிக்க முடியவில்லை என்று ஏங்குவான்.  இருப்பினும் நிகழ்கால வாழ்க்கையின் உந்துதலால், தொடர்ந்து ஆடு, மாடு மேய்த்து வந்தான்.

ஒருநாள், காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தூரத்தில் மேயும் விலங்குகளை பார்த்தபோது அவனுள் ஒரு புதிய சிந்தனை உருவானது.

"நான் ஏன் இந்த காட்டிலேயே நிரந்திரமாக தங்கி, இங்கு உலவும் மிருகங்களை போல் சுதந்திரமாக வாழக்கூடாது?  அவை செய்த அளவுக்கு கூட நாம் புண்ணியம் செய்யவில்லையா?  அப்படியே ஏதேனும் தவறு செய்திருந்து அதனால் இந்த ஜென்மம் என்றால் அதை கடவுளிடம் வேண்டி மாற்ற வழி தேடலாமே!" என்று நினைத்தான்.
.
அவன் சிந்தனை சரியான பாதையில் தான் சென்றது.  அது அவன் கர்மா.  ஆனால் படிப்பறிவில்லாத ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்த அளவுக்கு உயர்ந்த சிந்தனைக்கு காரணம், அவன் பூர்வ ஜென்ம வாசனைதான்.  இறைவன் எங்கு எப்படி யாரிடம் விளையாடுவான் என்று யாருக்கு தெரியும்.  இறைவன் உத்திரவால் சித்தர்களும் அவனிடம் விளையாட தீர்மானித்தனர்.  சித்தர்கள் விளையாட்டு முதலில் குழப்புவது போல் இருந்தாலும் நல்ல முடிவைத்தான் எவருக்கும் கடைசியில் அருளுவார்கள்.

ஒருநாள், சுள்ளி பொறுக்க உள் வனத்துக்குள் சென்ற பொது ஒன்றும் கிடைக்கவில்லை.  ஏதேனும் சுள்ளி கிடைத்தால் தானே. அதை விற்று வீட்டிற்கு சாப்பிட ஏதேனும் வாங்கிச்செல்ல முடியும்.  மேலும் மேலும் உள்வனத்துக்குள் சென்றான்.  அவன் சென்ற பகுதி மிக அடர்த்தியாக இருந்தது.  சூரிய வெளிச்சம் கூட எட்டிபார்க்கமுடியாத அளவுக்கு மரங்கள் வானத்தை பார்வையிலிருந்து மறைத்தது.  பகல் கூட இரவு போல் தோன்றும் இடம்  எவ்வளவு தேடியும் ஒன்றும் கிடைக்காமல், அசந்து போய் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டான்.  கண் விழித்தபோது இருட்டத்தொடங்கியதை உணர்ந்து, திரும்பி செல்ல வந்த வழியை தேட அடர்த்தியான காடு இருளை கலந்து வைத்துக்கொண்டு அவனை மிரட்டியது.  அவனுள் ஒரு பயம் மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது.

தொலைவில், கொன்று தின்ன ஒன்றும் கிடைக்காத கொடிய மிருகங்களின் கோப குரல் அவன் காதில் விழத்தொடங்கியது.  பயந்து போய் ஒரு மரப் பொந்துக்குள் தஞ்சம் அடைந்து இரவை அங்கேயே கழிக்க எண்ணினான்.  போதாதைக்கு அவனுக்குள் பசி விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியது. எங்கு தேடியும் எதுவும் கிடைக்காமல் சற்று தூரத்தில் சல சலக்கும் நீர் ஓடையின் சப்தம் கேட்டது.  அதை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

நடந்த பாதையில் ஓரிடத்தில் எதோ ஒன்று காலை தட்ட, குனிந்து பார்த்தவன் அது காட்டில்  விளையும் ஒருவகை அபூர்வ பழம் என்பதை உணர்ந்தான்.  அது மிகுந்த மணத்துடன் இருந்தது.

பழத்தை உண்டான்.  அது அவனது ருசிக்கு ஏற்றவாறு இருந்தது.  பசி அடங்கியது.  அருகில் ஓடும் நீரோடையிலிருந்து தண்ணீரை தாகத்துக்காக அருந்தினான்.  அலைந்து திரிந்த அசதியில் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிப்போனான்.

கண் விழித்தபோது விடிந்து விட்டிருந்தது.  இரவு முழுவதும் பெற்றோர்கள் தேடியிருப்பார்கள் என்று தோன்ற கிராமத்துக்கு திரும்ப நினைத்தான்.  செல்லும் முன் நீரோடையில் முகம் கழுவி, சிறிது நீரை குடித்தான்.

அப்பொழுது ஒரு குரலை அவன் கேட்க நேர்ந்தது.

"நான் கொல்லிமலை சித்த்தன் சொல்கிறேன்.  நீ கிராமத்துக்கு திரும்பி செல்ல வேண்டாம்.  இந்த காட்டிலேயே தனித்திருந்து தவத்தில் இரு!" என்ற அசரீரி கேட்டது.

அவன் சப்தம் வந்த திசையை நோக்கினான்.  அங்கு யாரும் தென்படவில்லை.

அசரீரி மேலும் தொடர்ந்தது.

"உனக்கு பசிக்கிறதா?"

"இல்லை."

"காட்டில் தனியாக இருக்க உனக்கு பயமாக இருக்கிறதா?"

"ஆமாம்!"

"அப்படியானால் நான் சொல்வதை போல் செய்!  உன் அருகில் சிவப்பு நிறத்தில் கனிகளுடன் ஒரு செடி இருக்கிறதே!  அதிலிருந்து மூன்று கனிகளை மட்டும் சாப்பிடு.  அந்த செடியின் இலையை பறித்து அதை உன் உடல் எங்கும் பூசிக்கொள்." என்றது 

"அப்படி செய்வதினால் என்ன பயன்?" அவன் கேட்டான்.

"அந்த செடியின் மூன்று பழத்தை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் இனி வரும் நாற்பது ஆண்டுகளுக்கு பசிக்காது.  உனக்கு சாப்பாடே தேவை இல்லை.  அந்த செடியின் இலையை உடல் முழவதும் பூசிக்கொண்டால், அதன் வாடைக்கு எந்த மிருகமும், விஷ பூச்சிகளும் உன் அருகில் வராது.  நீ சுதந்திரமாக இந்த காட்டில் உலா வரலாம்!" என்றது.

அவன் அந்த குரல் சொன்னபடியே செய்தான்.

அந்த குரல் மேலும் தொடர்ந்தது.

"இந்த காட்டிலேயே "சிவபெருமானை" நினைத்து தவத்தில் இருந்தால் ஒருநாள் உனக்கு அவரே பிரத்யட்சமாக காட்சி தந்து அருள்வார்.  இந்த காட்டில் வளரும் அபூர்வ மூலிகைகள்  முதல் அனைத்து மூலிகைகளை பற்றியும் உன்னால் புரிந்துகொள்ள முடியும்.  இறையனாரின் தரிசனம் கிடைத்த நிமிடம் முதல் நீ சித்தனாக மாறுவாய்.  அன்று முதல் நீ "மூலிகை சித்தன்" என்று அறியப்படுவாய்.  அதன் பின்னர் நீ கிராமத்துக்கு சென்று மருத்துவ சிகிற்சை செய்யலாம், அனைத்தும் வெற்றியாகும்." என்றது.

சற்று நேரம் யோசித்து விட்டு அவன் "சரி!" என்று தலையாட்டினான்.

காலம் வேகமாக அவனுக்கு உருண்டோடியது.

அடுத்த இருபது வருடங்கள் தனித்திருந்து, தவத்திலிருந்து, காட்டை, மூலிகைகளை பற்றி நன்றாக ஆராய்ந்து, அதன் முடிவில் தவப்பயனால் இறை தரிசனம் பெற்று, "மூலிகை சித்தன் " எனப் பெயர் பெற்று, சித்தர்கள் உதவியுடன் இன்றும் அந்த மலையின் கீழுள்ள கிராமங்களுக்கு சென்று நோயினால் வருந்துவோர்களுக்கு மருத்துவ சிகிர்ச்சை செய்து வருகிறார்.  அவரை உணர்ந்தோர்கள் தெய்வமாக போற்றி வழிபட்டுவருகின்றனர்.

இன்றும் அவரை தேடி சென்றால், மருத்துவ உதவி கிடைப்பதாக பலரும் கூறுகின்றனர்.

இறைவன் சித்தர்களை உருவாக்குவதும், நம்மிடை உலவ விட்டிருப்பதும், நம் நலனை கருத்தில் கொண்டுதான்.  நாம்தான் அவர்களை உணர்ந்து நல்லது செய்து வாழ வேண்டும்.  நம் ஆத்மார்த்தமான வேண்டுதல்களுக்கு செவி சாய்த்து அவர்கள் ஓடி வந்து உதவக் காத்திருக்கிறார்கள், என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

சித்தன் அருள்.................. தொடரும்!

அகத்தியர் அருளியவை:-

சித்தன் அருள் - 7 - பழனி நவபாஷாண சிலையின் மகத்துவம்:-

"அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷான முருக பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்து விட்டது. எந்த விஷத்தை அருந்தினானோ, அதுவே நவபாஷாண விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.

சித்தன் அருள் - 9 - கண் பார்வை குறைபாட்டை சரி பண்ண:-

"நேத்திர தோஷ நிவர்த்தி புஷ்பம்" என்று ஒன்று மூணு வருஷத்துக்கு ஒரு முறை கொல்லி மலை காட்டில் விளையும். அந்த புஷ்பத்தை எடுத்து அதன் சாற்றை பிழிந்து தினமும் ஒரு சொட்டு கண்ணில் விடவும்.  தலையிலும் தேய்க்கணும். இதோடு வேறு சில மூலிகைச் சாற்றையும் அந்த கொல்லிமலைச் சித்த வைத்தியர் கொடுப்பார்.

இந்த வைத்தியத்தை சரியா தொண்ணூறு நாட்கள் செய்து வந்தால் போதும், கண் பார்வை துல்லியமாக தெரியும். கடைசிவரை ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.

1 comment: