​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 9 August 2012

சித்தன் அருள் - 84


மனித மனது விசித்திரமானது.  தலை புகைகிற விஷயங்களுக்கு எங்கேனும் விடை கிடைக்குமா என்று எப்பொழுதும் தேடிக்கொண்டே இருக்கும்.  அப்படி தேடி கிடைத்தால், அது கிடைத்த இடத்துடனும், அதற்கு காரணமாக இருந்தவரிடமும் நிறைய பரிவும் அன்பும் ஏற்படும். அதனுடன் சேர்ந்து இருக்க எப்பொழுதும் விரும்பும். அப்படித்தான் அவனும் இருந்தான், விடை கிடைக்காத கேள்விகளை சுமந்து சென்றவனுக்கு, அங்கிருக்கும் பெருமானே விடை கொடுக்க, இவர் தான் நமக்கு சரியானவர் என்று தீர்மானித்தான். அங்கிருந்து ஏதேனும் நல்லது செய்யவேண்டும் என்று விரும்பினான்.  அவரும் ஆசிர்வதித்தார்.

அங்கே நிறைய பேர் குழுவாக அல்லது தனியாக இருந்து, வந்து போகும் பக்தர்களுக்கு அன்னதானம் நடத்திக்கொண்டிருந்தனர்.  இவனும் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவில் சேர்ந்தது பணியாற்ற தொடங்கினான்.  கூடவே வளர்ச்சிப் பணிகளும் சேர்ந்து கொண்டது.  மிக குறுகிய காலத்தில், நேர்மையாக எல்லாவற்றையும் கவனத்துடன் செய்ததால், அந்த குழு வேகமாக வளர்ந்தது, மற்ற குழுக்களுக்கு போட்டியும் பொறாமையும் ஏற்படத்தொடங்கியது.  அன்னதானம் சிவ பெருமான் அருளால் நடக்கிறது, அவர் சார்பாக நாங்கள் செய்கிறோம் என்பதே குழுவின் வாக்கியமாக இருந்தது.   அன்னதானம் இல்லா மற்ற நேரங்களில் தனிமையில் இருப்பதும், த்யானம் செய்வதும், காட்டுக்குள் சென்று தனிமையில் அமர்ந்து, அல்லது நண்பர்களுடன் சென்று ஆராய்வதும் அவனது முக்கிய வேலையாக இருந்தது.

அந்த மலையும், கோவிலும் வெளி உலகுக்கு  தெரியவேண்டும். இங்கிருக்கும் இறை அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில், குழுவின் தலைவரின் அனுமதியுடன் வலைப்பூவை உருவாக்கி, அங்கிருக்கும் தெய்வத்தின் பெருமைகளை உலகறிய செய்தான். இன்டர்நெட்டில் எங்கும் இந்த மலை விவாதிக்கப்பட்டது. இறைவன் பெயர் எங்கும் பரவ தொடங்கியது.  பக்தர்களின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. பத்திரிகையாளரை கொண்டு வந்து அந்த மலையை காட்டிக்கொடுத்து, விரிவாக தொடர் எழுத, மலையின் பெருமைகள் உலகெங்கும் பரவியது.  ஒரு சில கிராமத்தாரால் பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்ட மலையின் பெருமை உலகின் பல மூலைகளுக்கும் சென்று சேர தொடங்கியது.  எங்கும் அந்த குழுவின் பெயர் பேசப்பட, பிரச்சினைகள் ஆரம்பமானது.

அவன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.  யார் அன்னதானம் செய்தாலும் வரவேற்றான்.  ஆனால் மற்ற குழுவில், தனிப்பட்ட மனிதரில் இருந்த குறைவுகளால், இவர்கள் நடத்தும் அன்னதானத்திற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டினார்கள்.  கூட்டம் இவர்களிடம் சேர தொடங்கியது.  வந்த பக்தர்கள் ஒவ்வருவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்தனர்.  எந்த நேரம் வந்து கதவை தட்டி "பசிக்கிறது" என்று யார் கேட்டாலும், இல்லை என்று சொல்லக்கூடாது என்பதே அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட கட்டளை. 

ஒருநாள், தனிமையில் அமர்ந்து, இறைவனை அவன் சன்னதியில் கண்டு மனம் குளிர்ந்து இருக்கும் பொழுது, ஒரு பெரியவர், மெதுவாக அருகில் வந்தது அமர்ந்தார்.  அதற்கு முன் அவரை கண்டதில்லை.  யாரோ வந்து அமைதியாக அமர்ந்து இறை தரிசனம் பெற உட்கார்ந்திருக்கிறார் என்று நினைத்தான்.

அவரே மெதுவாக பேச்சை தொடங்கினார்.

"என்ன சாமி! த்யானத்தில இருக்கீங்களா?"

அவனிடம் ஒரு புன் முறுவல் மட்டும் வெளிப்பட்டது, பதில் எதுவும் சொல்லவில்லை.

"எல்லாமே நல்ல போயிட்டு இருக்குங்கிறதுல ரொம்ப மன அமைதில இருக்கீங்க போலிருக்கு?"

தொடங்கிய பேச்சு எங்கேயோ போகிறது என்பதை உடனேயே உணர்ந்த அவன், சற்று கனிவுடன்

"சொல்லுங்க! நீங்க சொல்லவந்ததை சொல்லிடுங்க" என்றான்.

சற்று தீர்க்கமாக பார்த்தவர் "எப்படி சொல்வதென்று தெரியவில்லை.  ஆனால் உண்மையை அப்படியே உரைப்பது தானே நல்லது? இல்லையா?" என்று பீடிகை போட்டார்.

சற்றே நிமிர்ந்து உட்கார்ந்த அவன் "இங்கு நடப்பதெல்லாம் அதோ இருக்கிறாரே அவர் அருளால் நடக்கிறது" என்று எதிரே இருந்த சிவ லிங்கத்தை சுட்டிக் காட்டினான்.

"உண்மை.  அவனன்றி ஒரு அணுவும் அசையாது.  அதை உணர்ந்தது தான் உங்கள் குழு அனைத்தையும் செய்கிறது.  இருப்பினும் அவன் விளையாட்டுக்கு அளவேது.  அது எங்கு இழுத்து செல்லும் என்று அவன் ஒருவனுக்கு தான் தெரியும்".  என்றார்.

"நீங்க என்ன சொல்ல வரீங்களோ, அதை அப்படியே சொல்லி விடுங்களேன்.  எதற்கு இத்தனை அச்சாரம் போடறீங்க" என்றான் சற்று எரிச்சலுடன்.

அவன் எரிச்சலை உணர்ந்தவர் "சரி விஷயத்துக்கு நான் நேரடியாகவே வருகிறேன்! அதை சரியாக எடுத்துக்கொள்வதும், விட்டு விடுவதும் உங்கள் விருப்பம்.  ஆனா, அது நடக்கும்.  அது தான் அவன் ஆடும் சதுரங்கம்".

"இப்போது அன்னதானமும், வளர்ச்சிப்பணிகளும் நல்ல விதமாக உங்கள் குழுவின் தலைமையில் நடக்கிறது.  ஆனா இன்னம் கொஞ்ச நாட்களில் இவை எல்லாவற்றையும் உங்கள் கையை விட்டு இழந்து நிற்கப் போகிறீர்கள்.  இந்த சிவ பெருமான், நாம் நினைக்கிறார் போல் இல்லை. எல்லாம் அருளவும் செய்வான், வேண்டி வந்தால் அனைத்தையும் அழித்துவிட்டு தனியாகவும் அமர்வான்.  அவனை பற்றி உங்களுக்கு தெரியாது.  திடீரென்று ஒரு நாள் எல்லாம் தலை கீழாக ஆனால் உங்கள் மனது மிக வருத்தப்படும்.  தாங்க முடியாது.  அதனால், எனக்கு தெரிய வந்ததை உங்களுக்கு தெரிவித்தேன்.  அவர் காலை பிடிங்க.  போய் கதறுங்க.  இதை இழக்காமல் இருக்க, வேறு ஏதாவது மாற்று வழி இருக்கானு கேளுங்க. அவன் ஒருத்தனால் தான் மாற்று வழியை காண்பிக்க முடியும்." என்று தீர்க்கமாக கூறியவர்

"இந்த விஷயத்தை வெளியே சொல்வது நல்லதில்லை.  சொல்லி நடந்தபின், "எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்னு உங்க தலை மேல வெச்சுடுவாங்க.  அதனால பத்திரமா பாத்து நடந்துக்கோங்க" என்று சொல்லி,

"அவனருள் இருந்தால், என்றேனும் நாம் எங்கேனும் சந்திக்கலாம்.  நான் வரேனுங்க!" என்று சொல்லி மெதுவாக இறங்கி காட்டுப் பாதையில் நடந்து மறைந்து போனார்.

அவர் நடந்து போகிற வழியை அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, அதிர்ச்சியை விட்டு வெளியே வரவே வெகுநேரமாகியது.   அப்படிப்பட்ட மலையில் யார் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து செய்தி தருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். வந்தது சித்தனாக இருக்குமோ என்கிற எண்ணம் கூட அவனுக்குள் நுழைந்தது.  மறுபடியும் அவர் சென்ற பாதையை நோக்க அங்கு யாருமே இல்லை.

"அவன் ஒருத்தனால் தான் மாற்று வழியை காண்பிக்க முடியும்" அவர் சொன்னது காதில் ஒலிக்க  நேராக சிவபெருமான் சன்னதிக்கு சென்று த்யானத்தில் உட்கார்ந்தான்.  கண் மூடி அமர்ந்தவனுக்கு அந்தப் பெரியவர் பேசியது எல்லாம் மனதுக்குள் ஓடியது.  

"சொல் இறைவா! அத்தனையும் இழக்க போகிறோம் என்று ஒருவர் சொல்லி போகிறார்.  இதற்காகத்தான் இத்தனை நாட்களாக உன் கோவிலில் வந்து வேலை பார்த்தோமா.  ஒன்றும் இல்லாமல் இருந்த நிலையிலிருந்து, இன்று வரும் அனைவரையும் அவர்கள் திருப்தி அடைகிறவரை உபசரிக்க நீ கொடுத்த வசதிகள் அனைத்தும் கை விட்டு போனால், எப்படி உன் உத்தரவை நிறைவேற்றுவோம்?  சரி! நடக்கப்போவதை தடுத்துவிடு.  உனக்கு உன் சன்னதியில் மூன்று குறிப்பிட்ட நாட்களுக்கு நெய் விளகேற்றுகிறேன்.  அதை ஏற்றுக்கொண்டு இழப்பிலிருந்து காப்பாற்று" என்று முறையிட்டு அமைதியானான்.

"உன் கூட இருப்பவர்களே உன்னை விளக்கு போட விடமாட்டார்கள்!" எங்கிருந்தோ யாரோ சொல்வது போல் கேட்டது.

"நீ இருக்கிறாய் அல்லவா! அதை நீ கவனித்துக்கொள்! முயற்சி செய்வது மட்டும் தான் என் செயல்." என்று கூறி மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.

சொன்னது போல் இரண்டு முறை விளக்கு போட முடிந்தது.  மூன்றாவது முறை அந்த கோயில் பூசாரியே விளக்கு போட விடாமல் தடுத்துவிட்டார். சரி அப்பன் சொன்னது தான் நடந்தது.  அவன் தீர்மானம் செய்து வைத்திருப்பது தான் நடக்கும், என்று உணர்ந்தான்.

நாட்கள் சென்றது.  உண்மையை மறைத்து வைத்துக்கொண்டு, பொறுமையுடன் இறைபணியில் ஈடுபட்டான்.  த்யானத்தில் அமர்ந்து, அல்லது தெரிந்த ஜெபங்களை செய்யும் போது அங்கு அடிக்கடி வந்து போகும் மனிதர்கள் தாங்கள் பிரச்சனைகளை சொல்லத்தொடங்க, ஏதோ ஒரு உந்துதலில் "அப்பனுக்கு பின்னாடி போய் உட்கார்ந்தது உங்க பிரச்சனைய சொல்லுங்க.  சீக்கிரம் சரியாகிவிடும்" என்று சொல்ல அவர்கள் பிரச்சனைகள் விலகியதால், மெதுவாக செய்தி வெளியே கசிய தொடங்கியது.  அவனிடம் போய் சொன்னால் நம் பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும், நல்லது நடக்கும் என்று சொல்ல தொடங்கினார்கள்.

அப்படி ஒருவனை உயர்ந்த நிலைக்கு செல்ல விடுவதா, சரி பார்த்துவிடலாம் என்று குழுவுக்கு வெளியே இருந்து எதிர்ப்பு வந்தது.  அவனை பற்றிய தவறான தகவல்கள் எங்கும் பரப்பப்பட்டது.  குழு தலைவரிடம் "அவன் பாட்டுக்கு சும்மா  காட்டுக்குள்ள   போய் சுத்திண்டிருக்கான்.  ஏதாவது நடந்தா யார் பொறுப்பு.  நாங்க தான் உதவிக்கு வரணம்.  இப்படி ஒரு பிரச்சினை தேவையா?" என்று உசுப்பி விடப்பட்டது.

தலைவரின் வார்த்தைக்கு நிறையவே மதிப்பு கொடுப்பவன் என்று தெரிந்துதான் அவரிடம் போட்டு விட்டார்கள்.  அவரும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினார். 

"அங்கு செல்ல கூடாது, இங்கு போககூடாது.  அவனிடம் பேசக்கூடாது, வந்தோமா, அன்னதானத்தை பார்த்தோமா, போனோமா என்று இருக்கவேண்டும்"  என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

தன்னை சுற்றி ஒரு வலை விரிக்கப்பட்டிருப்பதை, அது இறுக தொடங்கியபின் தான் அவன் உணர்ந்தான்
சித்தனருள்.......... தொடரும் 

6 comments:

 1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
  ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

  எல்லாம் அவன் செயல் என்றாகிவிட்டால், ஈசன் நம்மை படுத்தி விடுவான். அவனை நம்பியோர் கைவிடுவதில்லை என்றாலும், அன்பை சோதிக்கிறேன்/கர்மா விலகும்போது, இப்படி, நம்மை துவசம் செய்து விடுவான் போல் இருக்கிறது. அந்த அன்பரின் சொல்லும் செயலும் அவரின் தூய அன்பை நாம் தெரியும் போது , ஈசனுக்கு ஏன் அந்த அன்பரின் நம்பிக்கை தெரியாமல் போய் விட்டது. அவன் மேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை அதற்கும் கரணம் உண்டு என்றுதான் சொல்கிறது. பொருத்து இருப்போம்.

  ஈசனின் திருவிளையாடலை பொருத்து இருந்து பார்ப்போம். நண்பர் திரு. கார்த்திகேயனிடம் எந்த கோவில் என்று கேட்டால் இது தெய்வ ரகசியம் என்பார். அதனால், அவரிடம் கேட்க வேண்டாம். எல்லாம் ஈசன் திருவிளையாடல் என்று அவனிடம் அன்பு வைப்போம்.

  சிவமயம்,

  _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
  ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

  ReplyDelete
 2. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
  ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

  அன்பரே! வலைப்பூவின் விலாசம் கிடைக்குமா? சும்மாதான்.. தெரிந்து கொள்ளலாமே?!!!

  சிவமயம்,

  _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
  ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

  ReplyDelete
 3. Replies
  1. i want to know my jadi jothidam. pls send address my mail id adivya3688@gmail.com

   Delete
 4. வணக்கம் அய்யா,
  நானும் எனது ந்ண்பர்கள் மூன்று பேரும் கடந்த (08-08-2012)புதன் கிழமை அன்று சித்தர்கள் வாழும் பூமியாம் சதுரகிரிக்கு முதல்முறையாக யாத்திரை சென்றோம்.அற்புதமான பக்திபரவசமான பயணம் அது.ஓம் நமசிவாய நாமத்துடன் உற்சாகத்துடன் மலை ஏறினோம்.போகும் வழியிலேயே சித்தர்கள் அருள் கிடைத்ததாக எண்ணினோம்.உதாரணமாக போகும் வழியில் ஒரு வயதான சாமியார் திரு.காகபுசுண்டர் முனிவரின் படத்துடன் பிரசாதம் கொடுத்தார்.சித்தனே கொடுத்ததாக பக்தியுடன் வாங்கி மகிழ்ந்தோம்.மீண்டும் ஒரு மணி நேரம் மலை ஏறியதும் ஒரு இளம் சாமியார் மூலிகை விபூதி கொடுத்தார் மேலும் 108 சித்தர்கள் பூஜை செய்த முனிவர்கள் தவம் செய்யும் மர கை தண்டத்தினை காட்டி ஆசிர்வதித்தார்.பயபக்தியுடன் தொட்டு கும்பிட்டோம்..சுந்தர மஹாலிஙக சாமியை தரிசித்து மாலையில் கீழே இற்ங்கினோம்..வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் ஆகும்.ஒம் நம சிவாய...

  ReplyDelete
 5. ஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாயஒம் நம சிவாய

  ReplyDelete