​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 19 May 2012

சித்தனருளை பற்றிய ஒரு தகவல்!

சித்தன் அருளை படிக்கிற அடியவர்களுக்கு..........

இந்த தொடரை குருவுக்கு மரியாதை செய்யும் விதமாக, வியாழனன்று தொகுத்தளிக்கிறேன்,  ஒரு தொகுப்பு அளிக்கப்பட்டதும் மறு தொகுப்பு எப்பொழுது என்று தேடாமல், வியாழனன்று வந்து பார்த்தால் இருக்கும்.  இந்த தொகுப்பை அளிக்க பெரியவர்கள் நிறையவே ஆசி கூறியுள்ளார்கள்.  அவர்கள் ஆசியுடன் முடிந்தவரையில் பிரம்ம முஹுர்த்தத்தில் அளிக்க விரும்புகிறேன்.  இருப்பினும், சில நாட்களில் எனக்கே தெரியாமல், வியாழனன்று தாமதமாகி விடுகிறது.  அதுவும் அவர்கள் விளையாட்டு என்று எடுத்துக்கொண்டு, படித்து மகிழுங்கள்.  வாழும் முறையில் எப்படி எல்லாம் அறம் வளர்க்கலாம், தர்மம் செய்யலாம், நேர்மையாக இருக்கலாம், ஏன் எப்படி இறை தரிசனமும் அருளும் பெறலாம் என்றெல்லாம் அகத்தியர் பல நேரங்களில் சொல்லியுள்ளதை, தருகிறேன்.  புரிந்து வாழ்க்கையை செம்மையாக்கி கொள்ளுங்கள்.  அனைவரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல், வேறொன்றும் அறியேன் பராபரமே என்று கூறி, நிறைவாக, நலமாக எல்லோரும் வாழவேண்டி...........

நன்றி!

8 comments:

  1. we expect more articles about getting blessings of god

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ அகத்திய சித்தசுவாமியே போற்றி!
    _/\_ஓம் சிவசிவ ஓம் _/\_

    வணக்கம் ஐயா!

    தகவலுக்கு நன்றி! அப்படியே ஆகட்டும்!

    பசிக்கிற குழந்தை தாய் உணவளிக்க தாமதமாகும் போது குழந்தை அழுவது இயற்கை. அதுபோல் பசிக்கும் போது பார்க்கிறோம், தங்கள் உணவளித்தால்(பதிவு) உண்கிறோம். இல்லையெனில் இனி அழாமல் தங்கள் உணவுக்காக காத்து(பதிவு) இருக்கிறோம். எல்லாம் அவன் திருவிளையாடல், அவனின்று அணுவும் அசையாது! அவன் ஆசைப்படி நடக்கட்டும்.

    வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ அகத்திய சித்தசுவாமியே போற்றி!
    _/\_ஓம் சிவசிவ ஓம் _/\_

    இறை தேடும்...
    சிவனடிமை அருண்

    ReplyDelete
  3. ஸ்ரீ அகஸ்தியர் குரு சமர்ப்பணம்!

    வேண்டபடுவோர்க்கு கிடைக்க செய்திட்ட
    இது போன்ற கருணை மிக்க தொடரை
    பற்றி கூற வார்த்தைகள் இல்லை...

    அருமையான,அன்பார்ந்த தொகுப்புக்கு உன்னதமான நன்றிகள்.

    என்றென்றும் நன்றியுடன்
    ஜோதிமுருகன்

    ReplyDelete
  4. PLEASE GAVE ME YOUR CONTACT DETAILS I WANT TO ASK SOME LIFE SECRETS THROUGH GURU AGASTHIYAR BY YOUR HELP.

    THANKS & REGARDS ,
    S.MANIVANNAN

    ReplyDelete
  5. மிகவும் ஆனந்தமாக எனது குருநாதரின் ஆசியுடன் தங்களின் பதிவுகளை, இன்று (21/06/2012) குருவாரத்தில் கிடைத்தருளியதற்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். சதுரகிரியில் 2007ம் ஆண்டு மாசி மாதம் கிரகணத்துடன் கூடிய முழுமதி நாளில், அவர் அடியேனுக்கு காட்சி கொடுத்ததை பின்வரும் காலங்களில் அவரின் ஆசியுடன் விளக்குகிறேன். தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் - பல அன்பர்கள் சமீப காலமாக மகாலிங்கத்தை காண்பதற்காக, பல சுமைகளை சுமந்துகொண்டு சதுரகிரி மலையேறுவதை கண்டிருக்கிறேன். அவர்களின் சுமைகளை முடிந்த அளவு குறைப்பதற்காக, அடிவாரமாம் தாணிப்பாறையிலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்), கடந்த 25வருடங்களுக்கும் மேலாக, பிரதோஷம் முதல் பெளர்ணமி நாள் வரை, சந்தான மகாலிங்கத்திற்கு அருகில் இருக்கும் அன்னதான கூடத்தில், அன்னதானம் செய்துவரும், இடுப்பில் மஞ்சள் துண்டை மட்டும் உடுத்தியவருமான, திரு. சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், குளியல் மட்டும் பாத்ரூம் வசதி இலவசமாக செய்துள்ளார். வியாபார நோக்கமில்லாமல், இலவச சேவையானதால், பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருவதற்கு ஒரு சில நாட்களுக்குமுன் 9443324583/ 9444492998 என்ற எண்ணிற்கு தெரியவடுத்துவது நலம் தரும். சதுரகிரி செல்ல முடியுமா என்று ஏங்குபவர்கள், ஒருமுறை முதியோர் காப்பகத்திற்கு வந்து, அங்கு எழுந்தருளியுள்ள லோபாமுத்திரையுடன் கூடிய குருமுனி மற்றும் மகாபிரத்தியங்கராதேவியை மனதார பிரார்த்தித்து, மலையேற அதிசயத்தை கண்டிப்பாக காண முடியும். நன்றியுடன் - சிவஹரிஹரன்.

    ReplyDelete
  6. அருமையான,அன்பார்ந்த தொகுப்புக்கு உன்னதமான நன்றிகள்.ungal thirupani thodarattum,hanumathasan ippo illathapothilum avar aasium,agasthiyar aasium nam yellotium kaakattum
    sivakumar

    ReplyDelete
  7. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  8. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete