​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 20 June 2019

சித்தன் அருள் - 814 - சித்தமார்கத்தில் எளிய மருத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்கிற தொகுப்பில், மருத்துவம் பகுதியை தொட்டபொழுது, ஓரிரு அடியவர்கள், "சர்க்கரை நோய்க்கான" தீர்வு ஏதேனும் பற்றி அகத்தியப் பெருமான் கூறியிருக்கிறரா? என வினவியிருந்தனர். ஆம்! கூறியுள்ளார். அதை அடியேன் பின் பற்றுகிறேன், நல்ல பலன் உள்ளது. அவர் கூறியதை இத்தனை நாட்களாக, கூறலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.  சரி! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டுமே என்று, இன்று அதை தொகுப்பாக்குகிறேன்.

நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, அனைத்து பஞ்சபூதங்களும், மனிதனால் பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் வாழும் அனைத்து ஆத்மாக்களும், அதன் பாதிப்பிலிருந்து விடுபட, என்னென்னவோ செய்கிறது. ஓரளவுக்கு சில விஷயங்கள் உதவி செய்கிறது. நிறைய அளவுக்கு, பலன் கொடுப்பதில்லை. இதனால் மனித மனம் சோர்ந்து போகிறது. மருத்துவர்களால், சர்க்கரை வியாதி என்பது, பரம்பரை வியாதியாக கருதப்படுகிறது. இது ஓரளவு உண்மையாயினும், முற்றிலும் உண்மை இல்லை. அப்படி ஒரு நிர்பந்தமும் இல்லை. உண்ணும் உணவில் கட்டுப்பாடின்மை, உடல் வியர்க்காமை போன்றவைதான் முக்கிய காரணம். அடியேனின், தகப்பனாருக்கு, இந்த வியாதி இருந்து கடைசி வரை மாத்திரைகளை சார்ந்தே இருந்ததால், பல முறை இதை பற்றி யோசித்திருக்கிறேன். ஏதேனும் ஒரு வழி, சித்தர்கள் காட்டினால், அவருக்கும் நிம்மதியான உடல் நிலையை கொடுக்கலாமே என்று தேடியிருக்கிறேன். அவர் கடைசி காலம் வரை எதுவுமே கைவல்யமாகவில்லை. சித்தர்கள் எப்பொழுதுமே, ஒரு அனுபவம் வழித்தான் எதையும் நமக்கு உணர்த்துவார்கள். அப்பொழுதுதான், அதன் மகத்துவம் நமக்கு புரியும், சரியாக உள்வாங்குவோம். அப்படி ஒரு அனுபவம் அடியேனுக்கு ஏற்பட்டது.

மிகவும் அலைந்து, உடல் நொடிந்து போன நிலையில், ஒரு வியாழக்கிழமை காலை, அகத்தியப்பெருமானை, சென்று தரிசனம் செய்து, அருள் பெற்று வரவேண்டும் என விரும்பினேன். அன்று காலை எழுந்திருக்கும் பொழுது, முடியவில்லை. கைகால்கள் துவண்டது, தலைக்குள் ஒரு கனம். கையும், காலும் மிகுந்த வலி. மரத்துப்போன உணர்வு வேறு. சரி எதற்கும், ஒருமுறை ரத்த பரிசோதனை செய்துவிடுவோம் என்று பார்த்தால், சர்க்கரை அளவு வெறும் வயிற்றில், காலை எழுந்தவுடன் 450 புள்ளிகள் காட்டியது. கேட்கவேண்டுமா பிரச்சினைக்கு. வீட்டில் ஒரே களேபரம். சொன்னால் கேட்பதில்லை, ரொம்ப அலைச்சல், மருந்து சாப்பிட்டு குறைக்க வேண்டும் என நிறைய கட்டளைகள். அன்று அகத்தியர் தரிசனம் கிடைக்காமல் போயிற்று. அடங்கி ஒதுங்கி இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, ஞாயிறு அன்று மாலை அகத்தியரை தரிசனம் செய்வது என்று தீர்மானித்தேன்.

பூசை அறையில், அகத்தியரை, ஓதியப்பரை பார்க்கும் பொழுதெல்லாம், கேள்விக்கணைகள் தான்.

"என்ன? பெரியவர்களே! இந்த நோயை தந்து, அடியேனின் இரு கைகளையும், கால்களையும் எடுக்கப் போகிறீர்களா? சரி, ஆகட்டும், ஆனால், நீங்கள் போடுகிற உத்தரவுகளுக்கு ஓடி ஓடி உழைக்கனும்னா, இரண்டும் (கையும், காலும்) சரியாக வேலை பார்க்க வேண்டும். என்ன தீர்மானம் பண்ணியிருக்கிறீர்கள்?" என்று கேட்பேன்.

ஞாயிறு மாலை, வண்டியில் அகத்தியர் கோவிலுக்கு கிளம்பும் பொழுது, கால்களின் மரத்துப்போன உணர்வு போகவில்லை. எப்படியோ, சமாளித்து, வண்டியில் ஏறி, தனியாக பாலராமபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டேன்.

கோவில் திறந்திருந்தது. பூசாரி மட்டும் இருந்தார், கூடவே அடியேனும். சூழ்நிலை இப்படி அமைவது அடியேனுக்கு பிடிக்கும். ஏன் என்றால், நம் வேண்டுதல்களை, அவர் செவி சாய்த்து கேட்டுத்தான் ஆகவேண்டும். வேறு யாரும் இல்லையே. எதுவுமே ஞாபகத்துக்கு வரவில்லை. போய் அமர்ந்து, எப்பொழுதும் போல, "ஆதித்தய ஹ்ருதயம்" மூன்று முறை ஜபம் பண்ணி குருவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தபின், பூஜாரி பிரசாதம் தந்தார்.

கண் மூடி பிரசாதத்தை வாங்கி நெற்றியில் ஒற்றிக்கொள்ள, மிக சன்னமாக "என்னவோ கேட்கவேண்டும் என்று வந்தாயே, மறந்து போய்விட்டாயா?" என்று கேட்டது.

கேட்க வந்ததை, மறந்து போன அடியேனுக்கு, அவரே ஞாபகப்படுத்தினார். என்னதான், வீட்டில் இருந்து அவரிடம் கிண்டலாக பேசினாலும், அவர் முன் போய் நின்று, அவரே ஞாபகப்படுத்துகிற பொழுது, அடங்கிப்போய் விடுவோம்.

அமைதியாக அவரிடம் கூறினேன்.

"சூழ்நிலை இப்படி இருக்கிறது. ஓடி உழைத்தது, இறைவன், உங்கள் கட்டளைப்படி. எப்படி இது அடியேனுள் புகுந்தது என்று யாம் அறியேன். ஏதேனும் ஒரு வழி காட்டக்கூடாதா, இதிலிருந்து வெளியே வர!" என்று வேண்டினேன். அவ்வளவுதான்.

மறுநாள், ஒரு சித்த குருவிடமிருந்து தொலைபேசி வந்தது.

"ஏன்னு தெரியலை. இன்று காலை தியானத்தின் பொழுது, ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லச்சொல்லி உத்தரவு. அதை தட்டச்சு செய்து உனக்கு அனுப்பியிருக்கிறேன்.  படித்துப்பார்" என்று கூறிவிட்டு விடை பெற்றார்.

மெயில் பார்த்தால், இன்ப அதிர்ச்சி. "சித்த மார்கத்தில் எளிய மருத்துவம்" என்று சர்க்கரை வியாதியை பற்றி விரிவாக போட்டிருந்தார்.

அடியேனுக்கு ஆச்சரியம்.

வேண்டிக்கொண்டோம்! இத்தனை வேகமாக பதிலா! அடடா! நம் குருநாதர், அவர்தான். இதை உடனடியாக செய்து பார்க்க வேண்டும், என மனம் கூறியது. வேலையில் இறங்கினேன். அதில் கூறியிருந்த மருத்துவ முறையை, சுருக்கமாக கூறுகிறேன்.

வேண்டிய பொருட்கள்:-

1. கருஞ்சீரகம் - 50 கிராம்
2. பார்லி - 50 கிராம்
3. கோதுமை - 50 கிராம்

ஒன்றரை லிட்டர் தண்ணீரில், மூன்றையும் கலந்து அடுப்பில், குறைவான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கியபின், பாத்திரத்தை இறக்கி வைத்து, நீரை குளிரவைக்க வேண்டும். அந்த கஷாயம் நன்றாக குளிர்ந்தபின், ஒரு கண்ணாடி குடுவையில் (பாட்டிலில்) வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினம் 50 மில்லி (இதற்கு மேல் எடுக்கக்கூடாது) வெறும் வயிற்றில் காலையில், அல்லது இரவில் உணவு உண்டபின் 1 மணி நேரம் கழித்து, உறங்க செல்லும் முன் ஒரு முறை 50 மில்லி கிராம் அருந்த வேண்டும். இந்த 50 மில்லி கிராமுக்கே ஒரு சிலருக்கு கழுத்தில் வியர்க்கும். அப்படியென்றால், அது எத்தனை வீரியம் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாள் பட, கண்ணாடி குடுவையில் உள்ள திரவம் புளிப்படையும். கவலை வேண்டாம். அது வயிற்றை கெடுக்காது. வீரியம் கூடும் அவ்வளவுதான். உணவில் சிறிது கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு, 14 நாட்கள் கழிந்தபின், ரத்த பரிசோதனை செய்தால், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எப்படி "சர்க்கரை" இப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று. நாமும் சாதாரண மனிதர்களை போல என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். தலை சுற்றல், அசதி, மரத்துப் போவது போன்ற அறிகுறிகள் விலகிவிடும்.

சரி! இது எப்படி வேலை செய்கிறது? உடலுக்குள் சென்ற கஷாயம், உடல் மிக ரகசியமாக சேர்த்து வைத்திருக்கும் சர்க்கரையை கூட எடுத்து, உடலை விட்டு விலக்கி விடுகிறது. உடலில் சர்க்கரை அளவு சமநிலை அடைந்ததும், உடல் புது தெம்பு பெறுகிறது. அசதி என்பதே இல்லை. இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், சர்க்கரை கட்டுப்பாட்டுக்காக சாப்பிடும், மருந்து, மாத்திரைகளை, இந்த நேரத்தில் நிறுத்திவிடவும். குறிப்பாக, "இன்சுலின்" எடுத்துக்கொள்பவர்கள் அதை நிறுத்திவிடுங்கள். இல்லையென்றால், சர்க்கரையின் அளவு உடலில், மிக குறைந்து, பல பிரச்சினைகள் வரலாம்.

இதில், இன்னொரு ஆச்சரியமான விஷயமும் அவர் கூறியிருந்தார். 14 நாட்களுக்கு பின் மற்றவர்கள் போல எந்த இனிப்பு சுவையையும் சாப்பிடலாம் என்று தொகுப்பில் போட்டிருந்தார். கைகாட்டினாலே, உடனேயே ஓடி போகிற மனநிலை உடையவன். அதையும் பரிசோதித்து பார்த்துவிடலாம் என்று, திருநெல்வேலி சென்ற பொழுது, 1 கிலோ "அல்வா" வாங்கி வந்து 250 கிராமை ஒரு நேரத்தில் சாப்பிட்டு பரிசோதித்தேன். ஆச்சரியம்! சோர்வு, தலை சுற்றல், மரத்து போவது என்கிற அறிகுறிகளை காணவே இல்லை. இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து "சூப்பர் இன்சுலின்" என்று நாமகரணம் செய்தேன்.

அடுத்தவாரம் அகத்தியர் கோவிலுக்கு சென்று அவருக்கு "மிக மிக நன்றியை" கூறிவிட்டு வந்தேன்.

அகத்தியப்பெருமானின், வழிகாட்டுதலில் நம்பிக்கை உள்ளவர்கள், இதை மற்றவர்களுடன் பகிருங்கள். உங்களால், ஒரு ஆத்மாவின் சிரமம் விலக்கப்பட்டால், அதுவே அவரின் ஆசிர்வாதத்தை உடனேயே உங்களுக்கு கொண்டு வந்து சேரவைக்கும்.

இந்த தொகுப்பின் நிறைவில் ஒரு சிறு கேள்வி. மேல் கூறியதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சற்று யோசித்து, உங்களுக்கு ஏதேனும் வழி தெரிந்தால், "agnilingamarunachalam@gmail.com"க்கு உங்களுக்கு தெரிந்த வழியை தெரிவியுங்கள். இந்த சூழ்நிலை மிக வித்தியாசமானது.

அடியேனின் நண்பருக்கு ஒரு உத்தரவு வந்தது.

"இந்த மலை அடிவாரத்தில் யாம் குடிகொண்டுள்ளோம். எம்மை கண்டுபிடித்து, எடுத்து, அந்த ஊர்காரர்களிடம் சேர்க்கவும். எமக்கு கோயில் கட்டி வழிபடச்சொல். யாம் அவர்கள் எதிர்காலத்துக்கு காவலனாக இருப்போம். கவனம், எனக்கு காவலாக சர்ப்பங்கள் உள்ளது."

இதை கேட்ட நண்பரிடம், மலையை கண்டுபிடித்து விட்டீர்களா? என்றேன். ஒரு புன்னகை பூத்து,

"மேலும் எவ்வழி செல்வது என்று புரியவில்லை" என்றார்.

அடியேனுக்கு தெரிந்த வழிகளை கூறிவிட்டேன். என்னிலும், குறைகள் இருக்கலாம், அல்லது யோசனைக்கே வராத விஷயங்கள் இருக்கலாம். 

அடியேனுடைய நிலையில் நீங்கள் இருந்தால், நண்பருக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள், அல்லது என் நண்பரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்.

உங்கள் யோசனையில் என்ன வருகிறது என்று கூறுங்களேன்.

சித்தன் அருள்........... தொடரும்!

Thursday, 13 June 2019

சித்தன் அருள் - 813 - அகஸ்தியர் லோபாமுத்திரை தரிசனம்!

[பிரதிஷ்டை தின அலங்காரம் ]


[வீதியுலா, அகத்தியர் மட்டும்] 
[ சன்னதியில், தாயாருடன் ] 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்தவாரம், புதன், வியாழக்கிழமை, இரண்டு நாட்களும், பாலராமபுரம் அகத்தியர் கோவிலில், "வேலை" பார்த்ததால், நேரமே கிடைக்காமல் போனது. ஆதலால், தொகுப்பை தட்டச்சு செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக, அவர் தரிசனத்தால் அடியேன் பெற்ற அருளை, அங்கு எடுத்த புகைப்படம் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் அவரை தரிசித்து அவரின் அருளை பெற்றுக்கொண்டு "சித்தன் அருளுடன்" நிறைவாக வாழவேண்டும், எனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்தவாரம் ஞாயிற்று கிழமைக்குள் தொகுப்பை வழங்கிட உதவுங்கள், என அகத்தியரிடம் வேண்டிக்கொண்டு வந்திருக்கிறேன். பார்க்கலாம், அவர் எப்படி அருளுகிறார் என்று.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday, 6 June 2019

சித்தன் அருள் - 812 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


"மனித உடலினுள் தங்கியிருக்கும், அமிலத்தில்தான் அனைத்து நோயும் வேர் ஊன்றி, உணவு தரும் சத்தை எடுத்துக்கொண்டு, நன்றாக வளருகிறது. இது எல்லா நோய்க்கும் பொருந்தும். உடலுள், அமிலம் அளவு அதிகமாக, அமிலத்தின் வீரியம் அதிகமாக நோய்க்கு கொண்டாட்டம்தான். தற்போதுள்ள ஆங்கில மருத்துவ முறையில், நோயினால் வரும் வேதனையை உணர முடியாதபடி செய்ய மருந்து கொடுக்கப்படுகிறதே தவிர, முற்றுமாக நோயை அறுத்து உடலை விட்டு போகச்செய்ய மருந்து கொடுக்கப்படுவதில்லை. உதாரணமாக, கண்டமாலை (புற்று நோய்) என்கிற நோய்க்கு இதுவரை, தெளிவான மருந்தை, அந்த மருத்துவ முறை கண்டு பிடிக்கவில்லை. ஏன்! "ஹச்"னு தும்முகிற தும்மலுக்கு கூட மருந்து கிடையாது. மனிதர்கள், நோயை கவனிக்கிறார்கள். சித்தர்கள், நோயின் ஆணிவேரை கவனித்தார்கள். ஆதலால், சித்தர்களிடம் அனைத்து வியாதிகளுக்கும் மருந்து உண்டு. ஒவ்வொரு மனிதனும், தன் உடலில் உருவாகும், உற்பத்தி செய்யப்படும், அமிலத்தை கவனித்து, குறைத்து வந்தாலே, நோயின்றி நிம்மதியாக வாழலாம். எப்படி என்று சொல் பார்ப்போம்!" என்று கொக்கி போட்டார்.

"அமிலத்தின் அளவை குறைத்தால் நல்லது என்று புரிந்தது. எப்படி என்று நீங்களே தெளிவுபடுத்துங்களேன்!" என்றேன்.

"உடல் ஒரு அற்புதமான ரசாயன தொழிற்சாலை. அதற்கு உள்வரும் உணவை எப்படிப் பிரித்து எதை எடுக்க வேண்டும் என நன்றாக தெரியும். அதே போல், எதை விலக்க வேண்டும் எனவும் தெரியும். விலக்க வேண்டியது அதிகமாகிவிட்டால், ஒவ்வாமை, வாந்தி, பேதி போன்ற வழிகளில், வெளியே தள்ளிவிடும். உணவுடன் உள்ளே செல்லும் அமிலமும், அமில உணவுகளும், உணவை பிரிக்கும் பொழுது உடலுள் உருவாகும் அமிலமும், ஒரு நேரத்தில், 50%விகிதத்துக்கு மேலே இருக்குமானால், அந்த உடல் "பித்த பிண்டம்" ஆகிறது. அப்பொழுது, உடலுக்குள் வளரும் நோய், தன் ஆணிவேரை இந்த அமிலத்தில் ஊன்றி, தன் இருப்பை பலப்படுத்திக் கொள்கிறது. இப்படி நமக்கே பிடிக்காத வலியை தருகிற நோயை இறக்குமாறு செய்ய வேண்டின், ஒரு மனிதன் செய்ய வேண்டியது, அளவுக்கதிகமான அமிலத்தை உடலை விட்டு நீக்குவது. அமிலத்தை நீராக்க, "அல்கலைன்" மிக சிறந்த மருந்து. இந்த அல்கலைன் எங்கு கிடைக்கும்? நம் வீட்டு சமயலறையில், நாம் தினமும் காணும் பழத்தில், காயில் உள்ளது.

1. சமையலுக்கு உபயோகிக்கும் "சோடா உப்பு" (சோடியம் பை கார்போனேட்) மிக சிறந்த அல்கலைன். இதை தினமும் ஒரு ஸ்பூன், இதமான நீரில், காலையில், ஒரு நேரம், வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், உடலில் உள்ள அமிலத்தை நீராக்கி மாற்றி வெளியேற்றிவிடும். ஒரு வாரத்திலேயே, உடல் எடை குறைந்து இளைத்துப் போகும்.

2. சோடா உப்பு ஒத்துக்கொள்ளவில்லை என்று நினைப்பவர்கள், ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி (பிழிய வேண்டாம்) ஒரு பாத்திரத்தில் இட்டு, சூடு நீரை அதன் மேல் விட்டால், 10 நிமிடத்தில் அந்த நீர் அல்கலைன் ஆக மாறியிருக்கும். அதை அருந்தலாம். அது குணப்படுத்தும்.

3. இதுவும் சரியாகாது என்பவர்கள், மூன்று தேங்காய் கீற்றெடுத்து, ஒரு பாத்திரத்தில், சூடு நீர் ஊற்றி வைத்தால், அந்த நீர் 10 நிமிடத்தில் அல்கலைன் ஆக மாறும். அதை உபயோகிக்கலாம்.

4. இல்லை என்றால், "சிறியாநங்கை" என்கிற மூலிகை இலையை பொடித்து, ஒரு வெள்ளி பாத்திரத்தில், பசும்பால் கலந்து ஒரு நாழிகை வைத்திருந்து பின்னர் குடித்தால், கண்டமாலை நோய்கூட ஓடிப்போய்விடும். ஆனால், இது மிகுந்த கசப்பானது. சிலவேளை, வாந்திவரும். அவரவர் நிலை அறிந்து உபயோகிக்க வேண்டும்.

"சரி, இந்த அல்கலைன் மருத்துவ முறை எப்படி நோயை விரட்டுகிறது? உடலில் அதிகமாக உள்ள அமிலத்தை நீராக்கி மாற்றிவிட, உடல் அந்த நீரை வெளியேற்றிவிடுகிறது. அமிலத்தில் வேரூன்றி நிற்கும், நோய்க்கு, உணவு கிடைப்பதில்லை. நோய்வாய்ப்பட்ட செல்கள் உணவின்றி இறந்து போகிறது. நோய் படிப்படியாக, உடலை விட்டு விலகிவிடுகிறது. கண்டமாலையை கூட உடலை விட்டு விரட்டி அடிக்கும் சக்தி அல்கலைனுக்கு உண்டு. ஆனால், இந்த வியாதி விலக, இறை அருள் வேண்டும். ஏன், எல்லா வியாதியும் விலக இறை அருள் வேண்டும். ஆகவே, இறைவனை பிரார்த்தித்து இதை மருந்தாக உட்கொள்வது நல்லது!" என்றார்.

[நிற்க! இந்த மருத்துவ முறையை, அடியேன், இவ்வாழ்க்கையில் பரிசோதித்து பார்த்தேன். மிக சிறந்த பலனளித்தது. இறை அருளால், 6 பேருக்கு இருந்த கண்டமாலை விலகியது என்பதே உண்மை. அந்த ஆறு பேரின் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அல்கலைன் மகத்துவத்தை உணர்த்தி எடுத்துக்கொள்ள செய்து, உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டு இருந்ததோ, அந்த இடத்தில், சோடாஉப்பை, ஆமணக்கு எண்ணெயில் கலந்து, தினமும் இரவில் புரட்டி வர செய்த பொழுது, நல்ல பலனளித்தது, என்பதே உண்மை. இதனுடன், கோடகநல்லூர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு, மஞ்சள் பொடி வாங்கி வந்து தினமும் உண்டு வர, அவரில் மூன்று பேருக்கும்  இறை அருளால் உடனேயே பலன் கிடைத்தது.]

"உணவு முறையை, நம் முன்னோர்கள், மிகுந்த பலனளிக்கக்கூடிய முறையில்தான் அமைத்தார்கள். உதாரணமாக, ஒரு திருமணத்தில், அன்னம் பாலிக்கப்படுகிற முறையை பார்ப்போம். வாழை இலையில், முதலில் உப்பு, பின்னர் பலவித காய்கறிகள், ஊறுகாய், ஒரு பழம், கிச்சடி, பச்சடி, பின்னர் சாதம், நெய், பருப்பு. சாப்பிடுபவர், முதலில், பருப்பு கலந்த சாதத்தை சாப்பிட வேண்டும். இது உள் சென்று வயிற்றில் அதிகப்படியாக சேர்ந்துள்ள அமிலத்தை குறைக்கும். பின்னர், சாம்பார் விட்டு சாதம். இந்த சாம்பார் என்கிற உணவு, சுட்ட புளியில்தான் செய்வார்கள். அதன் பின்னர், மல்லி போட்ட ரசம். ஜீரண சக்தியை தூண்டும். பின்னர் வெல்லம் போட்டு தயாரிக்கப்பட்ட பாயாசம். உடலுக்கு தேவையான சக்தியை உடனேயே கொடுக்கும். பின்னர் மோர் கலந்த சாதம். குடலின் உள்ளே குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதனுடன், ஊறுகாய். உமிழ்நீரை நிறைய உற்பத்தி செய்து உணவின் ஜீரணத்தை எளிதாக்கும்."

"இதில், இன்றைய உணவுமுறையில் மனிதர்கள் எங்கெங்கு தவறு செய்கிறார்கள், என பார்ப்போம். முதலில், இலைக்கு பதில், உலோக தட்டு. பல வேளைகளில் பருப்பு என்பதே இல்லை. காரமாக, புளிப்பாக சாம்பார், ரசம். எல்லா காய்கறிகளிலும், பட்டாணி. வயிற்றை கெடுக்கிற முதல் உணவே இதுதான். உடனேயே பாலில் செய்த பாயாசம். அது முடிந்த பின் மோர் விட்டு சாதம். மிகப்பெரிய தவறே இது தான். பாலில், மோர் விட்டு உறைய விடும் பொழுது அதில் எவ்வளவு சக்தி உபயோகிக்கப்பட்டு தயிராக மாற்றப்படுகிறது என்பது மனிதனுக்கு தெரியாது. உங்கள் விஞ்சான முறைப்படி அணுஉலைகளில் உருவாகிற fusion அங்கு நடக்கிறது. இது ஒரு பாத்திரத்துக்குள் நடந்தால் பிரச்சினை இல்லை. பால் உணவு சாப்பிட்டு, உடனேயே மோர் சாப்பிட்டால், நம் வயிற்றுக்குள் அது நடக்கும். நல்லதே இல்லை. Fusionனை தாங்குகிற சக்தி குடலுக்கு கிடையாது. அதுவே பின்னர் பலவித நோய்கள் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுக்கிறது, என்பதே உண்மை." என்றார்.

"அடடா! ஒரு வேளை சாப்பாட்டில் இத்தனை விஷயங்கள் கவனிக்க வேண்டியுள்ளதா! நம் முன்னோர்கள், ஆரோக்கியத்துக்கு, முக்கியத்துவம் கொடுத்து, எத்தனை வழிகளை கொடுத்து சென்றுள்ளார்கள். இதில், எப்பொழுது இந்த மனித சமூகம் தவறிப்போனது?" என்று யோசித்து அதையே கேள்வியாக்கினேன்.

"மேலை நாட்டவர் நம்மை படையெடுத்து, நம் சமூகத்தின் கட்டமைப்பை, சிதறடித்த பொழுது, வேறு வழியின்றி, நம் வாழ்க்கை முறையை கைவிட்டு, அவர்கள் வாழ்க்கை முறையை நம் வாழ்க்கை முறையில் நடை முறைப் படுத்திய காலத்திலிருந்து" என தெளிவாக பதில் வந்தது.

சித்தன் அருள்.................. தொடரும்!