​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 23 August 2018

சித்தன் அருள் - ​766 - ஒரு வேண்டுதல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், ஒரு இடத்தில், நாடியில் வந்து, நம் குருநாதர் அகத்தியப் பெருமான் இவ்வாறு உரைத்தார்.

"இந்த லோகமானது மிக மிக சிரமமான நேரத்துக்குள் மாட்டிக்கொண்டுள்ளது. பூமியும் அதில் ஒன்று. இறைவன் அருளால், அனைவரின் பிரார்த்தனையும் அதனுடன் சேர்ந்தால், மிகப் பெரிய சோதனைகளிலிருந்து தப்பிக்கலாம். ஆகவே, என் சேய்களிடம், எந்நேரமும் பிரார்த்திக்கச்சொல். இறைவன் சன்னதியில் விளக்கேற்றி, இந்த லோகமும், எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாக காப்பாற்றப்பட்டு, கரை ஏற்றி விடவேண்டும் என வேண்டிக் கொள்ள சொல்" என்றார்.

அகத்தியர் அடியவர்களே! இதற்கு முன் ஒருமுறை எல்லோரும் வேண்டிக்கொண்டு விளக்கு போட்டது நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அதற்கு பலன் இருந்ததால்தான், இம்முறையும், நம்மை அகத்தியர் அழைத்து செய்யச் சொல்கிறார் எனவும் நினைக்கிறேன். வாருங்கள்! அவரவர், வீட்டருகில் உள்ள கோவிலில், லோக ஷேமத்துக்காக ஏதேனும் ஒரு நாளில், மாலை நேரத்தில் விளக்கேற்றுவோம், வேண்டிக் கொள்வோம். இயற்கை சீற்றங்கள் மிக மிக வேகம் கொள்கிற இந்த காலத்தில், சித்தர்கள் துணையுடன், இறை அருளை பெற்று, இந்த லோகம், இப்படிப்பட்ட, சோதனை காலத்திலிருந்து விடுபட வேண்டும், என எல்லோரும் பிரார்த்திப்போம்.

ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!


சித்தன் அருள்............. தொடரும்!

37 comments:

  1. சித்த மார்கத்தில் சென்ற மதிப்பிற்குரிய திரு. கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    மதிப்பிற்குரிய திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    நானும் செய்து, எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் செய்ய சொல்கிறேன் அய்யா.

    குருவே துணை

    மிக்க நன்றி.
    இரா.சாமிராஜன்

    ReplyDelete
    Replies
    1. நல்லது. மிக்க நன்றி. அகத்தியர் அருள்வார் உங்கள் அனைவருக்கும்!

      Delete
  2. நாங்கள் பிராத்தனை செய்கிறோம் அய்யா

    ReplyDelete
    Replies
    1. நல்லது. மிக்க நன்றி. அகத்தியர் அருள்வார் உங்களுக்கு!

      Delete
    2. தங்களின் அருளாசி மூலம் அகத்தியர் அய்யன் அருள் வாக்கு கிடைத்தது.... கோடானுகோடி நன்றி ஐயா

      Delete
  3. இறை சீற்றம் இல்லாமல் இருக்க இறைவனையே வேண்டுகிறேன்.எல்லா புகழும் இறைவனுக்கே

    ReplyDelete
    Replies
    1. நல்லது. மிக்க நன்றி. அகத்தியர் அருள்வார் !

      Delete
  4. பஞ்செட்டியில் ஆயில்ய பூஜை அன்று பொது நலனுக்கான வேண்டுதல் செய்து தீபம்ஏறினோம் அய்யா

    ReplyDelete
    Replies
    1. நல்லது. மிக்க நன்றி. அகத்தியர் அருள்வார் !

      Delete
    2. நன்றி அய்யா

      Delete
  5. உலக மக்களுக்காக கோவிலில் தீபம் ஏற்றி பிராத்தனை செய்து விட்டேன் அய்யா இனி எல்லாம் அவன் செயல்

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய நம!
    வணக்கம் ஐயா! நானும் பிரார்த்திக்கின்றேன். என்னால் முடிந்தவரை இந்த செய்தியை பரப்புகிறேன். மிக்க நன்றி

    ReplyDelete
  7. இன்று 26ஆகஸ்ட்2018 மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள பொகளூரில் ஓம் ஸ்ரீ அகத்தியர் சித்தர்கள் பீடத்தில் குருமுனி அகத்திய பெருமானுக்கு சிறப்பான முறையில் யாகம், அபிஷேகம், அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு, அடியவர்களுக்கு மதிய உணவு அன்னதானம் ஆகியவை செய்யப்பட்டன.

    பூசை முடிவில் அகத்தியர் அய்யாவிடம் பொது நாடி வாக்கு, அனைவர் முன்னிலையிலும் திரு. இறை சித்தன் செந்தில் அவர்களால் கேட்கப்பட்டது. அகத்தியரின் வரிகள் கீழ் வருமாறு :

    சிங்கார திருத்தாண்டவம் புரியும் சிவ சிவனே போற்றிசீர்மிகு உலகை படைத்த பரனே போற்றிசிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவதேவா போற்றிசிரம் தாழ்ந்தே பொதிகை வாழ் அகத்தியன் யானேஆனந்தத்திருத்தாண்டவம் ஆடும் என் அப்பன் நடராசரை தொழுதுஅருள் தனை உரைக்கிறேன் பொது தனிலே கேள் மகனே இன்னவனே, அன்றுரைத்தேன் பிரம்ம முகூர்த்தம் தன்னிலே பூமி தேவி அவள் களங்கம் கற்பித்ததால் ஆக்ரோஷம் கொண்டாளே யாம் வளர்த்த தமிழ் மொழிக்கும் நச்சு பட்டதால் நிலை குலையுமே எண்ணிக்கையில் மூன்று திங்கள் தொண்ணூறு நாள் இன்றுரைக்கும் இடம் தன்னிலே இயற்கை சீற்றம் அது கோர தாண்டவம் ஆடுமப்பா தாண்டவம் சதிராடும், கடல் மட்டம் உயரக்கடவுமே, மழை நிய்யாது பெய்யும் வருண பகவானை மனமுருகி தொழுங்களேன் ஏன் அப்பன் ஈசன் ஆலயம் சென்று காலபைரவனுக்கு அகலிட்டு, மனை தனிலே அகலிட்டு, மனமுருகி தொழுதாலே வினை விட்டொழிந்து சகஜ நிலை திரும்புமப்பா. அண்டை மாநிலமதில் மீண்டுமோர் நிலத்தடுமாற்றம் நிகழுமேகர்மம் அது தலை தூக்கியதால் தர்மம் அதை நிலை நாட்டஇறைவனின் ஆட்டமே இதுவப்பா நான் தவமீன்ற என் அப்பன் பத்மநாப சுவாமி ஆலயம் தன்னிலே பொற்கதவை திறந்திட்டானே கள்ளனவன். கோவம் கொண்டானே இறைவனுமே, கோரத்தாண்டவமே நிறைவேறியதே ஆளுயர அலை வருமே அண்டமெல்லாம் நிலை நடுங்கும்தொழுவோனை விட்டொழிவானே ஆட்டமது நிலைக்குமப்பா, ஆட்டும் பால் அவனே அறிவானே முச்சொலுக்க நாட்டமொன்று முறையுடனே யாம் உரைப்போம், விழியுடனே கேள் மகனே வினையது விட்டொழியும் மனமது தளராதே மங்கையவள் செண்பக பூவினால் உமையவளை அர்ச்சித்து, நல்லெண்ணெய் தீபமிட்டு வெள்ளிக்கிழமை அன்று தொழுது வந்தாலே வினையெல்லாம் விலகி நிற்கும். வருண பகவான் மனமுருகி நிலை பெறுவானே. அன்றுரைத்தேன் அரசியல் துறை சார்ந்த பெரும் தலை உருளுமப்பா என்று மீண்டும் உரைப்பேன் கேள் மகனே, மீண்டுமோர் அரசியல் துறை சார்ந்த பெரும் தலை மீண்டும் ஒன்று உருளுமப்பா தடுமாற்றம் நிலை பெறுமே. பாவங்களை சர்வ நாசம் செய்யும் பாவநாசம் தனிலே மூழ்கும் நிலை உருப்பெருமேகால பைரவரை கனிவுடனே தொழுதாலே கஷ்டமெல்லாம் தீருமப்பா.வாழ்வது சிறக்க உமையவளின் நல்லாசி கிட்டுமே. - முற்றே - .

    ReplyDelete
    Replies
    1. ஓம் அகத்தீசாய நம

      ஐயா, தங்கள் அனுமதியோடு இதை புரிந்து கொள்ளும் மனம் உடையவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமா, நன்றி

      Delete
    2. அங்கே இருப்பது அகத்தியர் ஜீவ நாடி அல்ல.நம்பி ஏமாற வேண்டாம்.

      Delete
    3. Thiru Erai Siththan sollum thagaval veru oru sittharudaiyadha..thiru Agnilingam avargale satru vilakkungal.Nandri

      Delete
    4. Thank you Mr Subramani Ravi Mohaneswaran I would also like to hear from Thiru Agnilingam as I felt if it was not genuine he would not have approved the comment by Mr Venkatesh Rajaguru.
      Om Agatheesaya Nama.
      Aum Sairam

      Delete
    5. வணக்கம்!

      நாடியில் வந்து உரைத்தது அகத்தியப் பெருமான் தானா, நாடி வாசிப்பவர் எப்படிப்பட்டவர், அவரிடம் தவறு இருக்கிறதா என்றெல்லாம் அடியேன் யோசிப்பதில்லை. அதே சமயம், மிக உயர்ந்த நிலையில் நின்று அகத்தியருக்கு அடியவனாக இருந்து அவர் வகை உரைக்கின்றார் ஒருவர் என்றால், அவருக்கு குருவுக்கு சமமான மரியாதை கொடுக்கவும் அடியேன் தயங்குவதில்லை. மிக மிக உண்மையாக இருந்து நாடி வாசித்த அகத்தியர் மைந்தனையே, மிகத் தவறாக பேசிய பலரையும் அடியேன் பார்த்துள்ளேன். முதலிலிருந்தே அடியேன் கூறுவது ஒன்று தான். பிடிக்கவில்லை என்றால், அமைதியாக விலகிவிடுவதுதான் நல்லது. அவ்வாறல்லாமல், குறை கூறுவதை அகத்திய பெருமான் ஒரு பொழுதும் விரும்புவதில்லை. எப்படி நாம் வாழ்ந்தால், அகத்தியருக்கு பிடிக்குமோ, அப்படி வாழ் முயற்சி செய்வோம். அவரவர் பரீட்ச்சை எழுதுகிற விதத்திற்கு ஏற்ப, அகத்தியப் பெருமான் நின்று காப்பாற்றுவார்.

      மேலும், இரண்டு வருடங்களுக்கு முன்னால், அகத்தியப் பெருமானின் உத்தரவின்படி கோவில்களில் பலரும் விளக்கு போட்டது நினைவிருக்கும். அப்பொழுது வந்த உத்தரவிலும் "லோகஷேமம்" முக்கிய பங்கு வகித்ததை கவனித்திருப்பீர்கள். அன்றும், இந்த முறை இவர் கூறிய அத்தனை கொடிய சூழ்நிலைதான் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சித்தன் அருளில், அதை மறைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் தான் குறிப்பிட்டு வெளியிடப்பட்டது. கெடுதலை, நேரடியாக தெரிவிக்கக் கூடாது என்பது முன்னோர் வாக்கு. மனிதர்களால், தாங்கிக் கொள்ளமுடியாது. எந்த நாடியில், எந்த விதத்தில், எந்த சித்தர் வந்து கூறினாலும், அவர் கட்டளையை நாம் தலை வணங்கி ஏற்றுக் கொள்வோம்.

      பத்மநாபர் கோவிலே அகத்தியர் சமாதி என்பர். இந்த முறை நடந்த இயற்கை சீற்றத்தில், அடி வாங்காமல் போனது அந்த மாவட்டம் மட்டும்தான். இன்னமும் பெருமாள் பொறுமை காக்கிறார், மனிதனுக்கு யோசிக்க நேரம் ஒதுக்குகிறார், என்பது யாருக்கும் புரிபடவில்லை.

      இதுவரை வந்து உத்தரவுகள் அதே போல நடக்கக்கூடாதே, என்று அனு தினமும், அவரை வேண்டிக்கொண்டு தான் இருக்கிறேன். ஒரு சிறு தகவல். அனந்தபத்மநாபர் தலைக்கு கீழே, தெற்கு பாகத்தில் வசிக்கிறேன். இப்படி எல்லாம் வாக்கு வந்து, அதை படித்தபின், ஒரு நிமிடமாவது நிம்மதியாக இருக்க முடியுமா? சற்று யோசியுங்கள். அப்பொழுதும், இறைவனிடம், எல்லா ஜீவ ராசிகளையும் காப்பாற்று என்றுதான் வேண்டிக்கொள்ள முடிகிறது. இங்கே வாழும், இறை வழியில் உயர்ந்த நிலையில் இருக்கும் என் நண்பர்களும் வந்து சொல்லிவிட்டு போகிறார்கள், என்னவென்று சொல்வது. "பகலிலும், இரவிலும் குறிப்பிட்ட நேரங்களில் இருக்கும் மயான அமைதி நல்ல சகுனமாக தெரியவில்லையே, நீங்கள் கவனித்தீர்களா!" என்கின்றனர்.

      இப்படிப்பட்ட சூழ்நிலையில், இறைவனிடம், சித்தரிடம், எல்லா நல்ல உள்ளங்களிடமும், பிரார்த்தனையை சமர்ப்பிக்கத்தான் முடியும். செய்வதை, நல்லதாக செய்துவிடவேண்டும். கெடுதலை விட்டு, அதன் கூட இருக்கும் நல்ல செய்தியை மட்டும் எடுத்துக் கொள்வோம். இங்கு நல்ல செய்தி என்பது, "விளக்கு போட்டு வேண்டுதல்" மட்டும் தான்.

      யோசியுங்கள் அடியவர்களே!

      அக்னிலிங்கம்!

      Delete
    6. விளக்கு போட்டு பிரார்த்திக்க தெரிவியுங்கள். அதுதான் முக்கியம்!

      Delete
    7. ஐயா தங்கள் விளக்கத்திற்கு நன்றி
      இங்கு நல்ல செய்தி என்பது, "விளக்கு போட்டு வேண்டுதல்" மட்டும் தான்.
      விளக்கு ஏற்றுவதை பின்பற்றி எல்லோருக்கவும் பிரார்த்திக்கின்றோம்

      Delete
  8. ஓம் அகத்திசாய நம அகத்தியபெருமான் கருணை கிடைக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அகத்தியப் பெருமான் அருள் உங்களுக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

      Delete
  9. கோயிலில் விளக்கேற்ற தடை போட்டிருக்கிறது உயர் நீதி மன்றம். அருகிலிருக்கும் கோயிலில் கூட விளக்கேற்ற அனுமதிப்பதில்லையே. என்ன செய்வது. இந்த செயலாலும் இறைவன் கோபம் கொண்டிருக்க கூடுமோ . அசோக் குமார்

    ReplyDelete
    Replies
    1. எந்த கோவிலில் விளக்கு போட அனுமதிக்கிறார்களோ, அங்கே அனுமதி வாங்கி போடுங்கள். அகத்தியரிடம் வேண்டிக்கொள்ளுங்கள், அவர் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருவார்.

      Delete
    2. வணக்கம் ஐயா,
      சென்ற ஞாயிறு அருள்மிகு புஷ்பத்தீஸ்வரர் சொர்ணாம்பிகை சமேத, தனி சன்னதியாக ஸூர்ய பகவான் இருக்கும் ஞாயிறு கிராமத்தில் தீபம் ஏற்றி வணங்கி எல்லோருக்கவும் பிரார்த்தித்து சங்கு அபிஷேகத்தில் கலந்து கொள்ள வாய்ப்பை தந்து அருளினார் மகாமுனி அகத்தியர்.

      நன்றி

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. குரு வாழ்க! குருவே துணை! !

    ReplyDelete

  12. குருவின் அருளாலே..

    கடந்த இரண்டு மாதங்களாக அமாவாசை அன்று மோட்ச தீபம் கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில்
    ஏற்றி வருகின்றோம். கீழ்க்கண்ட தொகுப்பில் விபரங்கள் பெறலாம்.

    ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

    முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

    வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

    21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html

    மோட்ச தீபம் காணொளி - https://www.youtube.com/watch?v=tBlFQZV1M9Y&t=34s

    குருவின் தாள் பணிந்து,

    ரா.ராகேஷ்
    கூடுவாஞ்சேரி
    7904612352

    ReplyDelete
  13. TUT & AVM - 108 நெய் தீபம் ஏற்றும் விழா

    இப்பூவுலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் சகல வளங்களும், நலங்களும் பெற்று வாழவும்,இப்பூமியில் இயற்கை சீற்றங்கள் குறையவும் 108 நெய்தீபம் ஏற்றி சித்தர்களையும், முருகப் பெருமானையும், வருகின்ற 15/09/2018 அன்று ஷஷ்டி திதியில்,காலை 8 மணி முதல் பெருங்களத்தூரில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் வழிபாடு செய்ய உள்ளோம்.அனைவரும் வந்து இந்த வழிபாட்டில் ஈடுபட்டு சகல வளங்களும் பெற வேண்டி அன்புடன் வேண்டுகின்றோம்.

    தொடர்புக்கு : 7904612352/9677267266
    tut-temple.blogspot.in
    https://www.facebook.com/thedalullathenikalaai/

    இந்த வழிபாடு ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும்.மேலும் விபரங்களுக்கு

    http://tut-temple.blogspot.com/2018/09/tut-avm-108.html

    குருவின் தாள் பணிந்து,

    ரா.ராகேஷ்
    கூடுவாஞ்சேரி
    7904612352

    ReplyDelete
  14. TUT & AVM - 108 நெய் தீபம் ஏற்றும் விழா


    சென்ற வாரம் சனிக்கிழமை அன்று சித்தர்களின் அருளால் மிக சிறப்பாக மலேசியாவிலும்,சென்னையிலும்
    108 நெய் தீபம் ஏற்றும் விழா நடைபெற்றது. நிகழ்வின் துளிகளை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

    http://agathiyarvanam.blogspot.com/2018/09/nei-deepam-yetrum-vizha.html

    குருவின் தாள் பணிந்து,

    ரா.ராகேஷ்
    கூடுவாஞ்சேரி
    7904612352

    ReplyDelete