​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 3 April 2014

சித்தன் அருள் - 169 - அறிவுரை!


இனிமேல் ஏதேனும் ஒட்டிக்கொண்டால், வேறு விதமாக ஒட்டிக் கொள்ளுமே தவிர, மூன்று ஜென்ம கர்மாக்களில், பாப கர்மா கழிந்திருக்கிறது. இருந்தாலும் இவர்கள் செய்த புண்ணிய கர்மாக்கள் நிறைய இருக்கிறது. அதை பற்றி யாருமே, அகத்தியனிடம் விவாதிக்கவில்லை. கர்மா என்றால் எல்லோருமே, பாபம் என்று எண்ணியே பேசுகிறார்கள்.  அகத்தியனிடம், யாராவது ஒருவர், என்றைக்காவது, கர்மா என்றால் என்ன என்று கேட்பதைவிட, கர்மா என்றால் பாபம் என்று இவர்களே முத்திரை குத்தி விடுகிறார்கள். முத்திரை குத்திவிடுவதில் தவறில்லை. அவர்களுக்கு தெரிந்த வரை முத்திரை குத்திவிடுகிறார்கள். தப்பான வாக்குகளை அவர்கள் சொல்லவில்லை. ஆனால் புண்ணிய கர்மாக்களை அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். இன்றைக்கு காலையிலே, மலையில் உட்கார்ந்துகொண்டு, ஆனந்தமாக நீராடிய போதெல்லாம், புண்ணிய கர்மா சேர்ந்தது. பகலிலே, 12 மணி பொழுதிலே, பையப்பைய ஆங்கொரு பாறையிலே அமர்ந்து கொண்டு, முங்கிக் குளித்த பொழுதுதான், வேறு சில புண்ணியங்கள் கிடைத்தது. அந்தப் புண்ணியங்களிலே  33.1/3 விழுக்காடு அவர்கள் குடும்பத்துக்கு அகத்தியன் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அகத்தியன் எப்பொழுதடா பாகப்பிரிவினை செய்தான் என்று எண்ணாதே. சில சமயம் எல்லோருக்குமே, சுயநலம் உண்டு. புண்ணியங்கள் உங்களுக்கு அதிகமாக ஒட்டிக் கொள்ளக் கூடாது. பகிர்ந்து உங்கள் குடும்பத்துக்கு கொடுத்து, அவர்கள் நல்லபடியாக இருக்கட்டுமே. ஆக, எல்லா ஏழைகளுக்கும், இந்த புண்ணியம் வர வேண்டும் என்றுதான், இந்த பாபநாசத்தில், முக்கண்ணனிடம் போராடி, நீராடச் சொல்லியிருக்கிறேன். ​இருக்கட்டும்.

இன்றைய தினம், எட்டு நதிகளும் ஒன்று சேர்ந்து, உங்களை எல்லாம், வாழ்த்தியிருக்கிறது என்பது மிகப் பெரிய புண்ணியம். இதன் விளைவை பாருங்கள். இன்னும் மூன்று மாதத்திற்குள், யாம் குறிப்பிட்டேனே, அந்த நதிக்கரை, சென்று, நீங்கள் நீராட வேண்டிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கிறது. ஏன் என்றால், நதிகள் உங்களை அழைத்திருக்கிறது. அப்பொழுதே, இங்கு தாமிரபரணியிடம் சொல்லிவிட்டார்கள், "உனக்கு மட்டும், இந்த புண்ணியமா? எங்களுக்கும் கிடைக்க வேண்டாமா? எங்களுக்கும் கிடைக்கட்டும் என்று அகத்தியனே சொல்லிவிட்டான்" என்று உரிமையோடு சண்டை போட்டிருக்கிறார்கள். சற்று முன்தான் எனக்கே இந்த தகவல் கிடைத்ததால், அகத்தியன் யாம் இதை சொன்னேன். உங்கள் ஐந்து பேருக்கும் அந்த புண்ணிய நதிகளில் நீராடுகிற பாக்கியம் உண்டு. அந்த நீராடுகிற நேரத்தில் சில அற்புதமான நிகழ்ச்சிகள் நடக்கும். நிகழ்ச்சிகள் என்று சொன்ன உடனே, நடக்கவில்லை என்று கோபப்படக்கூடாது. சில விஷயங்கள், உங்கள் கண்ணுக்கு தெரியாமலேயே நடக்கும். சில சமயம், உங்கள் முதுகுக்கு பின்னாலேயே நடக்கும். சில சமயம் உங்களுக்கு நேரடியாகவே நடக்கும். நீங்கள் உணர முடியாத சூழ்நிலையில் கூட இருக்கலாம். உங்கள் தப்பல்ல. அகத்தியன் நடத்திக் காட்டுவேன்.

ஆக, எத்தனையோ பேர்கள், எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு வந்திருக்கிறார்கள். எத்தனையோ பணிகளை விட்டுவிட்டு, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு, எதையோ நம்பி ஓடி வந்திருக்கிறார்கள். நேற்று இரவு நள்ளிரவு நேரத்தில் 3.20க்கு அங்குள்ள ஒன்பது சித்தர்களும், இவர்களை வந்து வாழ்த்தியதெல்லாம் அகத்தியன் கண் கொண்டு ரசித்தேன். "ஆஹா! அகத்தியன் சொல்லை கூட, இப்பொழுது அருமை சித்தர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்களே" என்று, எனக்கு நானே முதுகிலே கிள்ளிக் கொண்டேன், ஷொட்டு போட்டுக் கொண்டேன். இதை எதற்காக சொல்லுகின்றேன் என்றால், எல்லாமே, எல்லா இடத்திலும் நடக்கக் கூடியது. அகத்தியன் சொல்படி, இந்த ஐந்து மைந்தர்களுக்கும், எத்தனை பாக்கியங்களை, அகத்தியன் வழங்கி இருக்கிறான் என்று எண்ணும்போதெல்லாம், இதெல்லாம் சற்று அதிகமாகவே தோன்றுகிறது என்று போல் தோன்றும். அத்தனை பாபங்களிலும், பெரும் பாபங்கள் எல்லாம் கழிந்துவிட்ட நாளடா இன்றைக்கு. ஆகவே, இனி, புண்ணிய கர்மாக்கள் நிறைய இருக்கிறது. ஆக, என்றைக்கும், எவரும் ஒரு பொழுதும், தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். தங்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று நொந்து போகக்கூடாது. நினைத்த காரியம் நடக்கவில்லை என்று, சில சமயம் அவதிப் படலாம், மன அவதிப்படலாம், அகத்தியனை திட்டலாம். காரணம் இல்லாமல், அகத்தியன் எதுவுமே செய்ய மாட்டேன். எப்போதைக்கு எப்போது என்னை முழுமையாக புரிந்து கொண்டு விட்டீர்களோ, உங்களுக்கு காரிய தாமதமோ அல்லது காரிய தடங்கலோ, நினைத்து விழுந்து விடக்கூடாது. ஏன், எதற்காக சொல்லுகிறேன் என்றால், எத்தனையோ புண்ணிய கர்மாக்கள் உங்கள் உடம்பை பாபம் செய்யவிடாமல் தடுத்திருக்கிறது. அதனால் தான் சில காரணங்கள். சில சமயம், சில அதிகார பலம் கிடைக்கலாம்.  சில உயிர்கள் உடனே காப்பாற்றப் படலாம். அல்லது உடனே பதவி என்பது தான் இப்போது. பணம் வரலாம். சில சமயம் அந்த பணங்களும், பதவிகளும் பாவப்பட்டதாகிவிடும். தவறாக செய்கையை செய்துவிட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் சற்று அணைபோட்டு தடுத்து, பார்த்துப் பார்த்து உங்களை அனுப்பி வைக்கிறேன். ஏன் என்றால், என் குழந்தைகள், என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லாம், எந்த விதத்திலும் துன்பப் படக்கூடாது. நினைப்பது நடக்கவில்லை என்பதில் அகத்தியனிடம் ஒரு சில வருத்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வருத்தம் இருக்கும் வரை அகத்தியன் உங்களோடு இருப்பேன். அந்த வருத்தம் விலகிவிட்டால், நீ அகத்தியனை நினைக்கமாட்டாய். விட்டுவிடுவாய், அதுவும் தெரியும். காரியம் முடிந்துவிட்டது, இனி அகத்தியனுக்கு என்ன வேலை? எங்கேயாவது பார்த்தால், அகத்தியனை நோக்கி கை காட்டி "அகத்தியா! நன்றாக இருக்கிறாயா?" என்று கை காட்டிவிட்டு சென்று விடுகிற தன்மை வந்துவிடும். சித்தர்களும் பலமுறை பலரிடம் விளையாடி, அகத்தியன் மைந்தனிடம் கூட விளையாடி காணாமல் போயிருக்கிறார்கள். இதை எல்லாம் எதற்குச் சொல்லுகிறேன் என்றால், நீங்களும் மனிதர்கள். உணர்ச்சிக்கு அடிமை பட்டவர்கள். ரத்தம் இருக்கும் வரை, வியர்வை இருக்கும் வரை, இந்த பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். குடும்பம் இருக்கும் வரை இந்த பிரச்சினை வரத்தான் செய்யும். இன்னும் சின்ன சின்ன காரியங்கள், அலுவலகத்திலோ, சுற்றுவட்டாரத்திலோ, அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் வரை, உணர்ச்சி வசப்படலாம், ஏமாந்து போகலாம், மனம் நொந்து போகலாம். ஆனால், மனம் நொந்து போனால், அதற்கும் காரணம் மனம் தான். ஆகவே, உங்கள் மனம் ஒரு போதும் நொந்து போகாமல், அகத்தியன் நான் கலங்கரை விளக்கமாக நின்று காப்பாற்றுவேன். என் இரு கையை கொடுத்து, விளக்கு அணையாமல், வருண பகவானே வந்து வேகமாக வீசினாலும் கூட, அந்த வருண பகவானின் கோபத்தை தாண்டி, அவனை விலக்கி விட்டு, எப்படி கை அணைப்பேனோ, ஒரு புலி தன் குட்டியை அழகாக கவ்விக்கொண்டு, ஆனந்தமாக, பொறுப்பாக, பக்க பலமாக, பாதுகாப்பாக எடுத்து வைக்கிறதோ, அது போல யான் செய்வேன். என்னடா, எல்லாம் பேசிவிட்டு புலியை பற்றி பேசுகிறாயே என்று சொல்கிறாயே, நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா? இன்னவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு 47 அடிகளுக்கு பின்னால், அந்த பொல்லாத புலி தங்கி இருந்தது என்பதே உண்மை.

[அகத்தியர் அடியவர்களே! தவிர்க்க முடியாத ஒரு சில காரணத்தால் அடுத்த வாரம் சித்தன் அருளுக்கு இடைவெளி விட வேண்டி உள்ளது. முயற்சி செய்கிறேன்! அவர் அருள் இருந்தால் அடுத்த வாரம் சித்தன் அருளை தொகுத்து தருகிறேன், இல்லை என்றால் இரு வார இடைவேளைக்குப் பின் தட்டச்சு செய்து தருகிறேன். வணக்கம்!]

சித்தன் அருள்.......... தொடரும்!

16 comments:

 1. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 2. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 3. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 4. உங்கள் மனம் ஒரு போதும் நொந்து போகாமல், அகத்தியன் நான் கலங்கரை விளக்கமாக நின்று காப்பாற்றுவேன். என் இரு கையை கொடுத்து, விளக்கு அணையாமல், வருண பகவானே வந்து வேகமாக வீசினாலும் கூட, அந்த வருண பகவானின் கோபத்தை தாண்டி, அவனை விலக்கி விட்டு, எப்படி கை அணைப்பேனோ, ஒரு புலி தன் குட்டியை அழகாக கவ்விக்கொண்டு, ஆனந்தமாக, பொறுப்பாக, பக்க பலமாக, பாதுகாப்பாக எடுத்து வைக்கிறதோ, அது போல யான் செய்வேன்.

  ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

  ReplyDelete
 5. om agatheesaya namah
  om agatheesaya namah
  om ahatheesaya namah

  ReplyDelete
 6. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 7. இனி அகத்தியனுக்கு என்ன வேலை? எங்கேயாவது பார்த்தால், அகத்தியனை நோக்கி கை காட்டி "அகத்தியா! நன்றாக இருக்கிறாயா?" என்று கை காட்டிவிட்டு சென்று விடுகிற தன்மை வந்துவிடும்.

  (பட்டவர்த்தனமான உண்மை.)

  ReplyDelete
  Replies
  1. உலக மாந்தரின் இயல்பு ...

   Delete
 8. How to type my comment in Tamil?

  ReplyDelete
  Replies
  1. Hello Pani,

   1. In this link you can type in tamil and copy to our comment box.
   http://www.google.com/inputtools/try/

   2. In this link install google chrome extension, after install you have to enable this extension and then see the right top corner, down arrow button. click and change to tamil font mode and directly type in the comment box.

   https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab?hl=en

   I hope this will help you. If not please let us know.

   Thanks,
   Swamirajan

   Delete
 9. I want your contact no... Plzzzz

  ReplyDelete
 10. Pls sent your contact no.. Indiranu0024@gmail.com. Pls sent no...

  ReplyDelete
 11. அகத்தியர் மிகவும் உணர்ச்சிபொங்க பேசுகிறார் என்னதான் கடும் தவத்தால் சித்த நிலை ஏய்தினாலும் கூட அவர்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் என்று வாழவேண்டும் என்று ஆசை இருக்கதான் செய்யும் இதை சிவா பெருமான் புரிந்துகொண்டு அகத்தியரின் ஆசையை நிறைவேற்றவேண்டும் ... பல கோடி பேரின் வாழ்வில் ஒளி ஏற்றும் அகத்தியர் வாழ்வில் ஒரு மங்களம் நிழகவேண்டும் என்று சிவபெருமானை நான் மனதார பிராத்திக்கிறேன் ....

  ReplyDelete