​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 March 2014

சித்தன் அருள் - 167 - திருசெந்தூர் - முருகர், அனுமன் தரிசனம்!


உண்மையிலேயே முருகன் நீண்ட நாளைக்குப் பிறகு, இன்றைக்குத்தான் எட்டிப்பார்த்திருக்கிறான். அதுவும், அனுமன் தரிசனத்துக்காக இருக்குமோ என்று அகத்தியன் நான் ஐய்யுருகிறேன். ஏன் என்றால் கும்பாபிஷேகத்தின் போது முருகன் இங்கில்லை. அது தாண்டா எனக்கு மிக மிக வருத்தம். முருகனுக்கும் சற்று கோபம் அதிகம். ஒரு சிறு பழத்துக்காக தந்தையும் தாயையும் தூக்கி எறிந்துவிட்டு போன புராண கதைகள் எல்லாம் உங்களுக்கும் தெரியும். ஆனால், அப்படிப்பட்ட முருகனுடன் விளையாடி இருக்கிறார்கள். இதுவரை வராத சுனாமி கூட, முருகன் இல்லாத பொழுது உள்ளே நுழைந்தாலும் ஆச்சரியம் இல்லை. அடுத்து வரும் சம்பவங்கள், அப்படிப்பட்ட சம்பவங்களாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. ஆகவே, இன்றைக்கு எனக்கு என்ன பயம் என்றால், சற்று முன் முருகனை கண்டு பேசிய பொழுதெல்லாம், முகம், "செக்கச்செவேல்" என்று கோபத்திலே செம்பவழமாய் காட்சி அளித்தது. உங்களுக்கெல்லாம் அனுக்ரகம் பண்ணிவிட்டு அனுமனையும் கட்டி தழுவிவிட்டு, அமைதியாக நின்றாலும், மனதிலே இங்கு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு போதும் அவனுக்கு திருப்தியை தருவதாக தெரியவில்லை.

என்னப்பன் முருகனை, நீண்டநாள் கழித்துத்தான் இன்றைக்கு, அகத்தியன் யான் சந்திக்கிறேன். இதற்கு முன்னால், முக்கண்ணனும், மற்றவர்கள் பின்னாடியும் சென்று கொண்டிருந்தேன்.  ஒரு வேளை முருகப் பெருமானுக்கு என்னிடம் சிறிது கோபம் இருக்குமோ, இருக்காதோ? யான் அறியேன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், முருகன் கோபப்பட்டாலும் காரணத்தோடுதான் கோபப்படுவான், அவன் கோபப்பட்டாலும் அடுத்த நிமிடம் மாறிவிடுவான். திரும்பத் திரும்ப அன்றைக்கும் சொன்னேன், இன்றைக்கும் சொல்கிறேன், கோபம் என்பது வேறு, வருத்தம் என்பது வேறு. ஆக, முருகன் கோபப்பட்டால் நன்மையில் முடியும், வருத்தப் பட்டால் ஆபத்தில் முடியும். ஆனால், முருகன் கோபப்பட்டிருக்கிறானா, வருத்தப் பட்டிருக்கிறானா என்ற நிலையை அறிந்த பின் தான் உங்களுக்கு அருள் வாக்கை கொடுக்க வேண்டி இருக்கிறது. காரணம், நீங்கள் வந்த நாள் அருமையான நாள் என்று எப்போதுமே நான் சொல்லுவேன். இன்றைக்கும் அது பழுதில்லை, வினாயகனில் ஆரம்பித்து அனுமனில் முடிந்திருக்கிறது. 

புறப்படும் பொழுது விநாயகனுக்கு தேங்காய் வடல் போடச் சொல்லியிருந்தேன், உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ.  ஆனால், அங்கு பிரார்த்தனை செய்துவிட்டு, வந்தவுடன், விநாயக சித்தனை தானே முதலில் கண்டாய் நீ. விநாயக சித்தனையே, உன் ஆரம்பமாக வைத்துக் கொள். வினாயகனில் ஆரம்பித்து, அதாவது, பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது. இது தான் உண்மை. ஆக பிள்ளையாரை பிடித்தாய், அவனை கை பிடித்தாய், குரங்கு என்கிற அனுமன் இங்கு வந்திருக்கிறான், அவன் நட்சத்திரம் வந்து விட்டது. மூலம் நட்சத்திரம் அனுமனுடைய நட்சத்திரம், அனுமன் பிறந்தது புரட்டாசியில் தான் என்றாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் அவன் நட்சத்திரத்தின் போது, இங்கு வந்து முருகனை சந்தித்து, அவனுடன் மனம் விட்டு பேசி அளவளாவி, முருகனோடு, கை கோர்த்தது, ஆலிங்கனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இது வரலாறில் இல்லாத செய்தியடா! அந்த சமயத்தில் தான் நீங்களும் வந்திருக்கிறீர்கள், நானும் வந்திருந்தேன், அந்தக் கண்கொள்ளா காட்சியை நானும் பார்த்தேன். அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் பொழுதுதான், நீங்கள் ஐவரும் உள்ளே நுழைந்து வெளியே வந்தீர்கள். அங்கிருந்து வருகின்ற ஒளி வெள்ளம் உங்கள் ஐவர் மேனியிலும் பட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. அது முக்கியமான சம்பவம்.

இதற்கு முன்னர் நவக்ரகங்களை பற்றி சொல்லவேண்டும் என்று சொல்லியிருந்தேன். எனக்கு முன்னாலேயே, பிரளயம் எற்பட்டதர்க்கு பின்னாலும் கூட, 4000 வருஷங்களுக்கு முன்னால் கூட  நவ கிரகங்கள் அனைவரும் அங்கு தான் உட்கார்ந்திருந்து, தம் தம் மனைவியருடன் அமர்ந்து ஆனந்தப் பட்ட இடம், அந்த ஒரே இடம், அந்த இடம் தான். இதுவரை, புராணங்களிலோ, வரலாற்றிலோ, ஏதேனும் செய்தி கேள்விப்பட்டதுண்டா? நவக்ரகங்கள் எங்கு இருக்கின்றன? விஷ்ணுவை சொல்லுகிறான், சிவனை சொல்லுகிறான், பிரம்மாவை சொல்லுகிறான், மற்ற தெய்வங்களை சொல்லுகிறான். நவக்ரகங்கள் என்றைக்காவது, தம் தம் தம்பதிகளுடன் அமர்ந்து, ஆனந்தப் பட்ட காட்சி, எங்காவது வரலாறில் உண்டா? இல்லை. ஆனால், இங்கு தான், நீங்கள் சென்றீர்களே, அந்த கரும்குளத்தில் தான், நவக்ரகங்கள் இன்றைக்கும், தம்பதிகளோடு அமர்ந்து, பொது மக்களையும், முனிவர்களையும், முனி புங்கவர்களையும், சித்த புருஷர்களையும், இன்னும் பலர்களையும் வாழ்த்திக் கொண்டிருக்கிறது. அதுவும் ஒரு அற்புதமான பகலவன் தினம், ஞாயிற்றுக்கிழமை. மாலை பொழுதுதான் அவர்களுக்கு பலம் அதிகம். பகல் பொழுதில் நவக்ரகங்களுக்கு பலம் கிடையாது, சூரியன் ஒருவனை தவிர. மற்ற எல்லா கிரகங்களும், ராகு, கேதுவால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகுதான் அவர்களுக்கு பலம் ஏறும். நீங்கள் கரும்குளம் என்கிற புண்ணியத்தலத்துக்கு வந்த போதெல்லாம் அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்ததால், நவ கிரகங்கள் சந்தோஷத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நவக்ரகங்கள், கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, சாபம் இடப்பட்டு, அதன் மூலமாகத்தான், புண்ணிய பூமியில் பிறந்த அத்தனை பேர்களும் தொல்லை பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சனியும், ராகுவும், கேதுவும் ஒன்று சேர்ந்து சந்தோஷ முகத்தோடு பார்ப்பது என்பது மிகவும் அபூர்வம். அந்த காட்சியை நான் அகத்தியன் இன்று கண்டேன். அது உங்களுக்கு தெரியாது. எப்போழுதுக்கு எப்பொழுது, ஆங்கொரு மைந்தன் ஐந்து திரி போட்டு விளக்கு ஏற்றினானோ, இருண்ட நிலை வெளிச்சத்துக்கு வந்தது. எனப்பன் முருகனுக்கு, தந்தைக்கு தந்தையான முக்கண்ணனும் அங்கு அமைதியாக காத்திருந்தான். யாருமே வராத இடத்தில் தாண்டா பாம்பு இருக்கும். பட்ட பகலில் நாலு பேருக்கு நடுவில், பாம்பும், தேளும், பூரானும், இன்னும் கொடிய விஷம் கொண்ட எதுவும் நடமாடாது. எனவே, நீங்கள் வந்த நேரம், அமைதியான நேரம். யாரும் கால் எடுத்து வைக்காத நேரம். ஒரு இருண்ட சூழ்நிலையில் தான், அங்கு ராகு கேது பலம் அதிகம். நீங்கள் உள்ளே நுழையும் போது இருட்டாக இருந்தது, விளக்கேற்றியது நவ கிரகங்கள் அத்தனைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொண்டன. அந்த மகிழ்ச்சியோடு "தசாஸ்து" என்று ஒரு வார்த்தை சொன்னாலே போதும், உங்களுக்கு ஜாதகம் வேண்டாம், பரிகாரம் வேண்டாம், கோவில் வேண்டாம், குளம் வேண்டாம். என் முன் அமர்ந்திருக்கிற மேஷத்திரு மைந்தனுக்கோ, ஆத்மா என்பது உள்ளே தான் இருக்கிறது, கோவிலில் இல்லை என்ற விடாப்பிடியான குணம் உண்டு. அதற்கு ஏற்றார் போல் தான் இன்றைக்கும் செந்தூர் கோவிலில் நடந்தது. அவனுக்கு மட்டுமா நடந்தது? பக்தியோடு, ஆசையோடு ஓடி வந்தவர்க்கெல்லாம், இந்த மானிட மைந்தர்கள் செய்கின்ற பணத்தாசையின் காரணமாக, இறைவனை கூறு போட்டு விற்கத் தொடங்கிய போது, முருகனே அங்கில்லை என்று சொன்னேன். இன்றைக்குத்தான் முருகன் இருக்கிறான். இன்னும் சில நாழிகையில் அவனும் கிளம்பி விடுவான். இங்கு செந்தூரில் வைத்து முருகப் பெருமான் இல்லை என்று சொன்னால், அது பெரும் புரளியாகிவிடும். இவன் யார் சொல்வதற்கு என்றெல்லாம் என்னை திட்டுவான், என்னை வாழ்த்தி வணங்கி, அன்றாடம் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிற அகத்தியன் மைந்தனுக்கும் அவப்பெயர் ஏற்படும். அங்கு கோவிலிலே, இன்றைக்கு ஏகப்பட்ட பாபங்கள் நடந்திருக்கிறது. என்னென்ன நடக்கக் கூடாதோ அத்தனையும் நடந்திருக்கிறது. அத்தனையோடு தான் முருகப் பெருமானை சுற்றி வந்து வேஷம் போடுகின்றார்கள். 

அங்குள்ள அந்தணர்கள் அத்தனை பேருமே "அயோக்கியர்கள்" என்று சொன்னால் வருத்தப் படக்கூடாது. அகத்தியனுக்கும், அந்தணர்களுக்கும் ஒருகால் தற்சமயம் பிடிப்பதில்லை. அதன் காரணமாக, இங்கு நடந்த சில செய்கைகளை பார்த்து ஒன்று சொல்வேன். இந்த அந்தணர்கள் இருக்கும் வரை, முருகப் பெருமான் நிச்சயம் அங்கு இல்லை, என்று அகத்தியன் எண்ணுகிறேன். முருகப் பெருமானும் இதை ஆமோதிப்பான் என்று நினைக்கிறேன். ஆக, முருகப் பெருமான் வந்து, ஆங்கொரு கும்பாபிஷேகத்துக்காக வந்து பார்த்து, களங்கம் எற்பட்டதை கண்டு, பிறகு கோபித்துப் போனவன். முருகன் இல்லாமலேயே அந்த கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. அது தான் உண்மையான செய்தி. எல்லோருமே, கோபுரத்தை நோக்கி "அரோகரா" என்று சொல்லிவிட்டு போனார்களே தவிர, அந்த ஆத்மாவுக்கு சொந்தக்காரனான, முருகப் பெருமான் அன்றைக்கு அங்கு இல்லையே. இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் என்று சொன்னால், அகத்தியன் கணக்கிடமுடியாது. இப்பொழுது தான் முருகப் பெருமான் முகத்தைப் பார்த்து நான் தெரிந்து கொண்டேன்.  முருகப் பெருமானுக்கு இந்த கும்பாபிஷேகத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஏன் என்றால், பாபங்கள் செய்தவன், காமுகர்கள், கொள்ளை அடித்தவர்கள், அழுக்காறு உள்ளவர்கள், அத்தனை அந்தணர்களும் ஒன்று சேர்ந்துதான் அக்னியை மூட்டி இருக்கிறார்கள். அக்னிக்கு ஒரு குணம் உண்டு, அது பாபத்தை போக்குகின்ற குணம். அக்னியை மூட்டினார், சற்று சாந்தமாயிற்று. இல்லை என்றால், யாரெல்லாம் அந்த யாகத்தை செய்தார்களோ, அவர்கள் எல்லாம் வேறு விதமான தொல்லைக்கு ஆளாகப்பட்டிருப்பார். யாரெல்லாம் தவறு செய்தார்களோ, அவர்கள் எல்லாம் அக்னியின் கோபத்துக் ஆளாகப்பட்டு, சின்னா பின்னமாகி இருப்பார்கள். ஏனடா, என்னப்பன் முருகன் சன்னதியில் வந்து, அகத்தியன் இப்படி எல்லாம் பேசுகிறானே என்று எண்ணக் கூடாது. கண் கூடாக பார்க்கிறேன், ஏதேது நடக்ககூடாதோ அதெல்லாம் நடக்கிறது. என் அப்பன் முருகனே கோபித்துக் கொண்டு போன பிறகு, எனக்கு மட்டும் இங்கு என்ன வேலை? நல்லவேளை! அனுமன் வந்தானோ, நீங்கள் தப்பித்தீர்கள். இல்லை என்றால் உங்களை வரச் சொன்னது பயனற்றதாய் போயிருக்கும்.

இப்பொழுது மீண்டும் வருகிறேன், நவக்ரக கோயிலில், நெய் விளக்கு ஏற்றி ஆனந்தப் பட்டீர்கள்! உண்மையிலேயே பாராட்டத்தக்க செய்தி. என் வலது பக்கம் அமர்ந்திருக்கின்ற வேற்று மொழி பேசுகின்ற மாந்தன், அவன் இன்றல்ல, நேற்றல்ல, முன்  ஜென்மத்திலே ஏறத்தாழ 77 ஆண்டுகள் விளகேற்றியே வந்தவன் அவன். ஆகவே, விட்டகுறை, தொட்டகுறை என்பதினால் தான், அவன் அறியாமலே, இந்த விளகேற்றுகின்ற குணம் வந்து கொண்டிருக்கிறது. எத்தனை குடும்பங்களுக்கு விளக்கேற்றினான் என்பதல்ல, எத்தனை தெய்வங்களுக்கு விளக்கேற்றினான் என்பதுதான் முக்கியம். எதை பற்றியும், கவலைப்படாமல், யாரை பற்றியும் கவலைப் படாமல், அவன் விளகேற்றுவதர்க்கெல்லாம் காரணம், இவன் பிறக்கும் பொழுதே, கருவிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

சித்தன் அருள் ............ தொடரும்!

20 comments:

  1. om agastheesaye nama..sad...100 % true,agree with father agasthiyar

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  4. Ippohthu Adiyenukku Nandragave Purigirathu Aiya

    ReplyDelete
  5. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  6. Ayya manam varuthappattu kankalil kanneer varukirathu...

    thaengaai vadal- need meaning ayya,

    thanks for your postings.we came to know so many things from Magaan Siddhar Agasthiar.

    thanks

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையாருக்கு எந்த விஷயமும் தொடங்கும் முன் சதிர் தேங்காய் போடுவார்களே, அது தான் இங்கு தேங்காய் - வடல் என கூறப்பட்டுள்ளது.

      Delete
    2. Thank you for your kind reply Ayya.

      Delete
  7. Om Agastheesaya Namaha.
    Arul Gnana Jothiye Agathin Jothi. Thaniperum Kadavule Agatheesar avar...

    Ayya Naan andha Karunkulam sella virumbugiren Tirunelveli irundhu eppadi sella vendum ? If i go on Sunday Evening with my family is it good. Please advice

    Nandri

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலி > திருச்செந்தூர் வழித்தடத்தில், கரும்குளம் வலது பக்கத்தில் உள்ளது.

      Delete
  8. ஓம் அகஸ்தீஸாய நமக

    ReplyDelete
  9. நான் கரும்குளம் செல்ல விரும்புகிறேன் , கோவை -ல் இருந்து எப்படி செல்வது? வழி எவ்வாறு செல்வது?

    ReplyDelete
    Replies
    1. Follow this path:- Coimbatore>Madurai>Tirunelveli> Karumkulam > Tiruchendur

      Delete
  10. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி
    ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  11. அகத்தியர் சொல்வது அத்தனையும் உண்மை.
    ஓம் அகத்தீசாய நமஹ.

    ReplyDelete
  12. entha arulvakku athanaiyum sathyam enru naan nambukiren. entha jeevanaadi naan paarkka vendum. please let me know the contact address of agasthyamainthar.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      அந்த நாடி வாசித்தவர் இன்று இல்லை அம்மா. அந்த நாடியை வாசிக்க இன்று வரை ஒருவரையும் அகத்திய பெருமான் தெரிவு செய்யவில்லை.

      ஆனால், கல்லாரில் இருக்கும் அகத்தியர் ஆஸ்ரமத்தில், வேறொரு அகத்தியர் நாடியை வாசிக்கிறார்கள். அதன் தகவல், தொடர்பு, சித்தன் அருள் வலை பூவில் உள்ளது.

      கார்த்திகேயன்

      Delete
  13. கிரகங்கள் கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு சாபம் விடும் அளவிற்கு பூலோக மக்கள் என்ன தவறு செய்தார்கள். 1947 கணக்கின் படி இந்திய நாட்டின் ஜாதகத்தில் கூட கால சர்ப்ப தோஷம் உள்ளதே. இதற்க்கெல்லாம் என்ன காரணம்?

    ReplyDelete
    Replies
    1. என்ன தவறு செய்யவில்லை? நன்றாக கண்ணை திறந்து பாருங்கள். மனிதர்கள் இரக்கமே இன்றி செய்கின்ற தவறுகளும், அப்பாவிகள் படுகிற துன்பமும், கண் முன்னே விரியும். எங்கோ உட்கார்ந்து, இவர்கள் செய்கிற தவறுகளின் கர்ம வீரியத்தை, குறைப்பதே தங்கள் பணி என்று ஒரு மனதுடன் செய்கின்ற உயர்ந்த உள்ளங்களால் தான் இன்று இத்தனையெனும் வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது. எத்தனை சொன்னாலும் புரிந்து கொள்ளாத தலை தெரித்த ஜென்மங்களுக்கிடையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், என்பதே உண்மை. ஒரு சுனாமி அல்ல, கோடி சுனாமி வந்தாலும் போதாது. வரும். சித்தனுக்கு அதை உருவாக்க ஒரு வினாடி போதும்.

      Delete