[அகத்திய பெருமான் சொன்ன புளியமரம், நம்பிமலை.]
[கோவிலில் சுவாமியை தரிசிக்கும் நேர அறிவிப்பு!]
[நம்மிடம் ஒரு வேண்டுகோள்!]
அந்த பதினைந்து நிமிடத்தில் அகத்தியர் சொன்னதை எல்லாம் நினைத்து எத்தனை திகைப்போடு இருந்தேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். ஏன் இத்தனை பேருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைத்தது? மற்றவருக்கெல்லாம், ஏன் இத்தனை பெரிய பாக்கியத்தை அவர் கொடுக்கவில்லை என்று யோசித்தேன். சிறிது நேரத்தில் மழை விட்டது. மறுபடியும் அதே இடத்தில் வந்தமர்ந்து நாடியை வாசிக்கத் தொடங்கினேன்.
"விண்ணிலிருந்து விழுகின்ற சிறு துளிக்கே பயப்படுகிறார்களே, வாழ்க்கையை எப்படியடா கொண்டு செல்லப் போகிறார்கள் என்று நான் எண்ணவில்லை. அகத்தியன் ஏட்டை காக்கவே, அகத்தியனை மழையிலிருந்து காக்கவே நினைக்கிறார்கள். அகத்தியன் இறைவன் அடி பணிந்து, தலை தாழ்ந்து உள்ளே தானே அமர்ந்திருக்கிறேன். அகத்தியனை உயர்ந்த இடத்தில் உட்காரவைப்பதில் என்ன நியாயம்? அகத்தியனை உட்கார வைக்கலாமா? அகத்தியன் தான் உள்ளே அமர்ந்து கொண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டு இருக்கிறேனே. ஆக, விண்ணில் இருந்து விழுந்த இரு துளிக்கு இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெருமழையே பெய்தாலும், இடியே இடித்தாலும், மின்னலே கண்ணை பறித்தாலும், உங்களுக்குத்தான் ஏதுமே ஆகாது என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேனே. பின்னர் ஏன் இந்த பயம்?"
கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போய் விட்டனர்.
"அட ராமா! ராமா! அவர் கிண்டலடிப்பதுகூட திட்டுவது போல் தான் உள்ளது" என்றார் ஒரு நண்பர்.
நாடியை மேலும் படிக்கலானேன்.
ஆகவே ஒன்பது பிறவிகளில் இருந்து இவர்களை மீட்டுத் தந்திருக்கிறேன். அதுதான் உண்மை. ஆகவே நான் அடிக்கடி சொல்வதெல்லாம், முடிந்த அளவுக்கு நன்மை செய்யுங்கள், ஆனால் கெடுதல் பண்ண வேண்டாம். நீங்கள் அனைவரும் பூரணத்துவம் பெற்று விட்டீர்கள் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும். உங்களுக்கு எத்தனையோ சோதனைகள் தந்திருக்கிறேன், இன்னும் தந்து கொண்டு இருக்கிறேன். விதிமகளிடம் பலபேருக்கு பல காரியங்களுக்காக பேசிய போது விதிமகளுக்கும் எனக்கும் கடும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அன்று ஒருநாள் கொடுமுடியிலே, காவிரிக்கரை ஓரத்திலே கூறும் போது, எனக்கும், விதிமகளுக்கும், பிரம்மாவுக்கும் மாறு பட்ட கருத்துக்கள் எல்லாம் வந்திருக்கிறது. பிரம்மா சொல்கிறார் "நீ ஏகப்பட்ட பேர்களுக்கு பரிந்துரை செய்துவிடுகிறாய். அத்தனை பேர்களின் தலை எழுத்தை ஓலைச்சுவடி நோக்கி கண்டுபிடித்து மாற்றி எழுத 10 ஆண்டுகள் குறைந்த பட்சம் ஆகும். அத்தனை பேர்களையும் நீ இஷ்டப்படி பரிந்துரை செய்து மாற்றி காப்பாற்று என்று சொன்னால், வாங்கின கடனை எவன் கொடுப்பான் என்று வட்டிக்காரன் கேட்பது போல் நான் கேட்கிறேன். அவன் செய்த பாபத்துக்கான கர்மாவுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டாமா? என்று சொல்லி தண்டனையை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது என்று பிரம்மா என்னிடம் சொல்ல, நான்
"தண்டனை கொடுப்பாயோ, இல்லையோ. அதை யாம் அறியோம். என்னை நாடி வந்தான், அவனை காப்பாற்றுவதாக வாக்களித்திருக்கிறேன். அதாவது, அத்தனை பேர்களையும் காப்பாற்றவேண்டும், விதியை மாற்றவேண்டும் என்று தான் அகத்தியன் இன்றைக்கு கூட, கூறி வந்திருக்கிறேன். கூட்டம் அதிகம் என்பதால், அவன் பொதுவாக, மெதுவாக செய்கிறான். இது எனக்கு பிடிக்கவில்லை. ஒப்பவில்லை. இன்னும் இரண்டு பேர்களை போட்டுக் கொண்டுவிட்டால், அதிக உதவியாளர்களை வைத்து தீர்க்கச் சொல்லியிருக்கிறேன். கர்மாவை மாற்றி எழுத சொல்லியிருக்கிறேன். பிரம்மனுக்கு மட்டும் யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் இஷ்டப்படி செய்யலாம் என்று சட்டம் இருந்தால், அகத்தியனுக்கு இருக்ககூடாதா? என்று தான் மூவரிடமும் கேட்டு விட்டேன். அவர்களும் புன்னகை பூக்கிறார்கள். ஆகவே எல்லாருக்கும், எல்லா காரியமும் நல்ல சமயத்தில் நடக்கும். அதுவரை, "துன்புறுத்த மாட்டேன்" என்று அகத்தியன் அவர்களிடம் உறுதி மொழி வாங்கியிருக்கிறேன். உடனடியாக நல்ல காரியம் எதுவும் நடக்காவிட்டாலும், அவர்களை துன்பபடுத்தாமல், அவர்கள் மனதை எந்த கெடுதல் பண்ணாமல், புண்ணாக்காமல், நிம்மதியாக தூங்க விடுவதாக உத்தரவு வாங்கி இருக்கிறேன். ஆகவே, அந்த உத்தரவு படி தான் இன்றுவரை நடக்கிறது. ஏன் என்றால், இப்பொழுது கூட, என் வலது பக்கத்தில் இருக்கின்ற அன்னவனுக்கும், அன்னவன் கை பிடித்த நாயகிக்கும் அகத்தியன் மேல் இன்றுவரை சற்று கோபம் தான். சொன்னபடி நடக்கவில்லை என்று புண்ணாகி இருக்கிறான். அகத்தியன் அழைத்தான், திருக்குறுங்குடிக்கு வரட்டும் என்றும், அகத்தியன் என்னவேண்டு மானாலும் செய்யட்டும். அகத்தியன் எனக்கென்று ஒன்றுமே செய்யவில்லை, என்ற கேள்வி அவன் மனதுக்குள் எழுந்ததை, அகத்தியன் யாம் அறிவேன். ஏன் என்றால், அவன் எதிர் பார்த்த விஷயம் என்பது சாதாரண விஷயம். சாதாரண விஷயத்துக்கு கூட அகத்தியன் கை கொடுக்கவில்லையே என்கிற எதிர்பார்ப்பு அவனுக்குள் இருக்கிறது. வெளியே சொல்லவில்லையே தவிர, அதை அகத்தியன் கண்டு புன்முறுவல் பூத்துவிட்டுத்தான் வருகிறேன்.
"என்ன நடந்தது என்பது எனக்குத்தாண்டா தெரியும். சற்று முன் சொன்னேனே. எனக்கும், பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் இடையில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. கலைக்கெல்லாம் அதிபதியான சரஸ்வதி, பிரம்மா என்னிடம் கோபித்துக் கொண்டார் என்பதற்காகவோ, நான் பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டதற்காகவோ, சரஸ்வதி கூட சில சமயம் திசை மாறி போனாள். அதனால் ஏற்பட்ட விளைவடா இது. ஒருதலை பிரச்சினை என்பது தேவர்களுக்கு வரக்கூடாது. வந்து விட்டது. அது தவறு. இப்பொழுது அகத்தியன் சொல்கிறேன். அகத்தியனை தேடி யார் வந்தாலும் காப்பாற்றுவதாக சத்திய பிரமாணம் வாங்கி இருக்கிறேன். பிரம்மாவும் அதற்கு உடன்பட்டு கை எழுத்து இட்டது போல, புன் முறுவல் பூத்து, தலையாட்டி, கை கொடுத்து, ஆலிங்கனம் செய்துதான் எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த ஆலிங்கனத்தை வைத்து தான் அன்னவனுக்குச் சொன்னேன், நீ அங்கு போ, உனக்கு கலைவாணி அருள் இருக்கிறது என்று. ஆனாலும் கலைவாணிக்கு என் மேல் என்ன கோபமோ, தெரியவில்லை. நான் பரிந்துரைத்ததை வந்து பார்க்காமல் சென்றது ஏனோ தெரியவில்லை. ஆனாலும், அன்னவன், சோமபானம், சுராபானம் போன்றவற்றை பழகி, தன் தேர்வில் மதிப்பெண்கள் கணக்கை குறைத்துக் கொண்டு விட்டதாக விதிமகள் என்னிடம் கூறியதை நான் ஏற்கவில்லை. ஏன் என்றால் அகத்தியனே மாறுபட்டு, பொய் சொல்கிறான் என்று எண்ணிவிடலாம். தவறு செய்வது என்பது மனித இயல்பு. மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் ஏதும் சொத்து கேட்கவில்லை, சுகம் கேட்கவில்லை, வேறு எதுவும் கேட்கவில்லை. வாழ்ந்ததற்கு அடையாளமாக, வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு உயர் பதவி வேண்டும் என்றுதானே அகத்தியனை கேட்டான். அகத்தியன் வீடு தேடி வந்தான். அகத்தியன் மனம் திறந்து வாழ்த்தினேன். எல்லோரும் என் குழந்தைகள். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். ஆனால் கலைவாணி சற்று முகம் மாறிவிட்டதால் வந்த விளைவிது. கலைவாணியிடம் எனக்கும் கோபம் இருந்தாலும், அந்த கோபத்தைவிட பன்மடங்கு கோபம் இவர்கள் மனதில் இருக்கிறது என்பதை அகத்தியன் யான் அறிவேன். உண்மையை சொல்வதில் தவறில்லை. ஆனால் அதையும் தாண்டி அகத்தியனை நோக்கி வந்திருக்கிறானே, இவன் பக்தியை என்னவென்று சொல்வது. ஆகவே, அன்னவனுக்கோ, அவன் குடும்பத்தாருக்கோ, இனி எந்தவித வில்லங்கமும் இல்லாமல் சிறப்பாக அமைய, அதை விட பன்மடங்கு வாழ்க்கையில் முன்னேற அகத்தியன் நிச்சயமாக நல்வழி காட்டுவேன். ஆகவே அஞ்சிட வேண்டாம். இதை அவன் கை பிடித்த நாயகியிடம் போய் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாக்கை சொன்னேன். இது வெறும் முக அலங்காரம் அல்ல. அன்னவனை சமாதானப் படுத்த வேண்டிய அவசியம் அகத்தியனுக்கு இல்லை என்றாலும் கூட, உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசக்கூடாது என்பதால், அகத்தியனுக்கும், கலைவாணிக்கும் இடையில் நடந்த சம்பாஷணையை கூறுகிறேன்.
இவை ஒரு புறம் இருக்க, இப்பொழுது வந்த காரணங்கள், இப்பொழுது அபிஷேகம் முடிந்து பாத பூசை முடிந்து, நதிகள் எல்லாம் நம்பிதனை வணங்கி விட்டு செல்லுகின்ற காலம். கீழே விஸ்வாமித்ரர் இருக்கிறார், அவர் பின்னாலே, வசிஷ்டர் வருகிறார், ஜமதக்னி வருகிறார். துர்வாசர் வருகிறார். அத்தனை பேர்களும் உள்ளே நுழைகிறார்கள் இப்போது. அனைவரும் நம்பிதனை பார்த்து வாழ்த்துக்களை கூற, அவரும் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறார். ஆகவே, இந்த கலியுகத்தில், மகாபாரதம், ராமாயணம் போன்ற நடந்த நிகழ்ச்சிகளை பகுதி பகுதியாகத்தான் படித்திருக்கிறீர்கள். ஆனால், அத்தனை பேர்களும், அத்தனை மகரிஷிகளும், முனிவர்களும் நம்பிபெருமானை வணங்கிவிட்டு ஆசி வாங்கிக்கொண்டு செல்வதை அகத்தியன் ஓரமாக நின்று பார்க்கிறேன். எப்படிப்பட்ட மகான்கள், எத்தனை தபசு செய்தவர்கள். எத்தனை தபசுகளை வளர்த்து, பிரளயத்தையே உண்டு பண்ணக் கூடிய அளவுக்கு இருக்கிறது? அதோ காகபுசுண்டர் வந்திருக்கிறார். பிரளயத்துக்கு அப்பால் நிற்கக்கூடியவர் அவர். 4000 ஆண்டுகளுக்கு முன நடந்த பிரளயத்தின் போது காக்கை உருவத்தில் அமர்ந்திருந்தாரே. காகபுசுண்டர் வந்திருக்கிறார். ஆக, பிரளயத்தை கண்டிருந்த எல்லோரும் ஒன்று சேர்ந்திருந்த காலத்தில், மனித சித்தர்களாய் இருக்கிற உங்களையும் வரவழைத்தேனே. அவர்கள் முன் இங்கு உட்கார்ந்தாலே போதும். அவர்கள் அத்தனை பேர்களின் கடைக்கண் பார்வை உங்கள் மீது விழும். உங்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த மாபெரும் புண்ணியம் கிடைக்கும்.
உங்களுகெல்லாம் அடிக்கடி சொல்வதுண்டு. சொத்துக்களை சேர்ப்பது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், சொத்துக்களை சேர்ப்பதை விட புண்ணியத்தை சேருங்கள். அந்த புண்ணியம் தான் உங்கள் தலைமுறையை காக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் அதற்கும் மீறி, நீங்கள் பாபம் செய்தாலும், செய்யா விட்டாலும், புண்ணியம் செய்தாலும், செய்யாவிட்டாலும், இந்த அருமையான தருணத்தில் உங்கள் அனைவருக்கும் 333 ஆண்டுகளுக்கு உங்கள் குலம் செழிக்க, உங்கள் வாரிசு செழிக்க, உங்கள் வாழ்க்கை செழிக்க அகத்தியன் நல்ல படியாக வாழ்த்துகிறேன். (இந்த ஆசிர்வாதம், சித்தன் அருளை வாசிக்கும் உங்களுக்கும் சேர்த்துத்தான்).
சித்தன் அருள்......... தொடரும்!
Yenna Adhisaiyam! Agatheesaa Nin Karunaiye Karunai!
ReplyDeleteபிரம்மா சொல்கிறார் "நீ ஏகப்பட்ட பேர்களுக்கு பரிந்துரை செய்துவிடுகிறாய். அத்தனை பேர்களின் தலை எழுத்தை ஓலைச்சுவடி நோக்கி கண்டுபிடித்து மாற்றி எழுத 10 ஆண்டுகள் குறைந்த பட்சம் ஆகும். அத்தனை பேர்களையும் நீ இஷ்டப்படி பரிந்துரை செய்து மாற்றி காப்பாற்று என்று சொன்னால், வாங்கின கடனை எவன் கொடுப்பான் என்று வட்டிக்காரன் கேட்பது போல் நான் கேட்கிறேன். அவன் செய்த பாபத்துக்கான கர்மாவுக்கு ஒரு தண்டனை கொடுக்க வேண்டாமா? என்று சொல்லி தண்டனையை வேண்டுமானால் குறைத்துக் கொள்கிறேன், தண்டனை கொடுக்காமல் இருக்க முடியாது
நன்றியுடன் வணங்குகிறோம்.
ReplyDeleteஓம் அகத்தீஸாய நம,
ReplyDeleteதிரு.வேலாயதம் கார்த்திக் அவர்களுக்கு வணக்கம், இந்த நம்பிமலை தொடர் படித்துக் கொண்டு வரும் போது நமக்கும் அகத்திய பெருமானின் அருள் கிடைத்து இருந்தால் நன்றாக இருக்குமே என்று நின்னைத்துக் கொண்டு இருக்கும் போது (இந்த ஆசிர்வாதம், சித்தன் அருளை வாசிக்கும் உங்களுக்கும் சேர்த்துத்தான்) என்பதை என்னும் போது அகத்தியரின் அருளைக் கண்டு வியக்கிறேன்.ஓம் அகத்தீஸாய நம.
nandri iyya ungal moolam engalukkum valzhthu kidaichathuku
ReplyDeleteOhm agathiyar Thiruvadigal potri. Thayayi,thanthaiyayi irundu vazlikatum Agathiyar perumanuku palla kodi nandrigal.
ReplyDeletekarthikeyan iyya. Thangalukum nadrigal .ungalal indai padikum bagyam petrom.
Om Agatheesaya Namaha
ReplyDeleteOm Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
ஓம் அகத்தீசாய நம:
ReplyDeleteஇதை படிப்பதற்கே புண்ணியம் செய்து இருக்கே வேண்டும்.
மிக்க நன்றி
பெ. நாராயணசுவாமி
Om Agastheesaya Nama
ReplyDeleteOm Agastheesaya Nama
Om Agastheesaya Nama
ஓம் அகத்தீசாய நமஹ....
ReplyDeleteபடித்ததும் உடல் சிலிர்க்குதய்யா....
ஓம் நமசிவாய..
ஓம் அகத்தீசாய நமக...
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக...
ஓம் அகத்தீசாய நமக...
rommba nanri karthikeyan umadu pani thodarattum.
ReplyDeleteஎனது தந்தை பக்கவாதம் வந்து மிகவும் கஷ்டபட்டு கொண்டு இருக்க்கும் இந்த சமயத்தில் இந்த அகத்தியர் அருள் பதிவு எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது .திரு .கார்த்திகேயனுக்கு மிக்க நன்றி
ReplyDeleteரா.சிவக்குமார் ,ஹுப்ளி
கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஅகத்தியரின் கருணையால் எங்களுக்கு கோடகநல்லூர் ப்ரஹன் ஸ்வாமி மற்றும் கார்கோடகன் சிறந்த தரிசனம் கிடைக்க பெற்றோம். ஏராளமான சித்தன் அருள் வாசகர்களை காண பெற்றோம் . அகத்தியரின் அருளால் சித்தர்களின் ஆசியையும் உணரமுடிந்தது. எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அகத்தியன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ பிரார்த்தனை செய்கிறேன்
https://plus.google.com/photos/110978610403846775350/albums/5946871981396512753?authkey=CIzav6fkgtOUiQE
ReplyDeleteஎல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். ஓம் அகத்தீசாய நமஹ!
ReplyDeleteநன்றியுடன் வணங்குகிறோம்.
ReplyDeleteஒம் லோபமுத்ரா சமெத அகதீசாய நமக!