​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 19 April 2013

சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்!


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஒதிமலை பற்றிய சில குறிப்புகளை முன்னரே ஒரு பதிவில் பதித்திருந்தேன்.  சமீபத்தில் ஒரு நாள் என்னவோ யோசனை வர மறுபடியும் அதை ஒரு முறை படித்துப் பார்த்தேன்.  அப்போது ஒரு எண்ணம் உதித்தது.  அகத்திய பெருமான் ஒதிமலையை பற்றி என்ன சொல்லுவார்.  தற்போது அவர் யாருக்காகவும் நாடியில் வந்து சொல்வதில்லையே.  நம் அனைவருக்கும் ஒதிமலையின் மகத்துவத்தை பற்றி அகத்தியரின் அருள் வாக்கினால் அறியும் வாய்ப்பு கிடைக்குமா?  என்றெல்லாம் தோன்றியது. எப்போதும் போல அவரிடம் வேண்டிக் கொண்டேன்.

"சித்தன் அருள்" தொடரை வாசிக்கும் அகத்தியர் அருள் பெற்ற ஒரு அடியவர், திரு குரு மூர்த்தி என்பவர் அகத்தியர் நாடியில் வந்து ஒதிமஅலையின் புகழை சொன்னதாக சொல்லி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.  அதை படித்ததும், அந்த மலையின், ஒதிப்பரின் புகழை படித்து யான் பெற்ற இன்பத்தை நீங்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கில் கீழே தருகிறேன்.  அதற்கு முன் திரு.குருமூர்த்திக்கு மிக்க நன்றியுடன்......... அகத்தியரின் அருள் வார்த்தைகளை கீழே தருகிறேன்.

சங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி
சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி
சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி
சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி
சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி
சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி
சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்,
பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி
சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி
அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி
நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி
கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள்ஓதினாலும்,
கட்டிய மனைவி ஒதுகிறாளே என்று தாய்ஓதினாலும்,
உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதைஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு.சுயநல நோக்குண்டு
பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக 
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.

ஞானத்தை நல்கும் கிரி
அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி
பேதத்தை நீக்கும் கிரி
வேதத்தை உணர்த்தும் கிரி
சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி
நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி
வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி
எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி
கர்ம நிலைகளை மாற்றும் கிரி
அக உளைச்சல் ஒழிக்கும் கிரி
பேதம் காட்டா வேத கிரி
ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி
இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி
அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி
ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி
ஓதும் கிரி அது ஓதிய கிரி
பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி

ஓம் நமகுமாராய !

22 comments:

  1. நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
    நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி

    தமிழின் அழகுக்கு நிகர் ஒன்றும் இல்லை! இதனால் தான் என்னவோ ஒரு நிமிடம் குருவாயூரப்பன் போல் கண்களுக்கு தெரிகிறார்!

    ReplyDelete
  2. Very many thanks to Shri Gurumurthy and also to you... OM AGATHEESAYA NAMAHA!!!

    ReplyDelete
  3. அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம். ஒதிமலையைப்பற்றி அகத்தியர் அருளியது தஞ்சை திரு.கணேசன் அவர்களிடம் உள்ள ஜீவனாடியில்தான்.
    தஞ்சை அருட்குடில் வலைதளத்தில் வெளியானதைத்தான் திரு.கார்த்திகெயனுக்கு அனுப்பினேன். எனவே நன்றி அகத்தியருக்கும் தஞ்சை சித்தர் அருட்குடில்லுக்கும்தான்.

    ReplyDelete
    Replies
    1. திரு குரு முர்த்தி அவர்களே,
      தயவு செய்து தஞ்சாவூர் அருட் குடில் வலை தள முகவரியை தர இயலுமா? முடிந்தால் அவருடைய போன் நம்பர் தருகிறீர்களா? அவர்களை skype இல் தொடர்பு கொள்ள இயலுமா ? Thank you. Valli.

      Delete
    2. https://groups.google.com/forum/?fromgroups#!forum/agathiar
      You have to sign in with google account. you will be allowed by the moderator to participate in discussions. It is a divine forum.
      Mr. J.Ganesan
      Siddhar Arut Kudil
      No. 33/56,2nd street
      co-operative colony
      opp. co-operative bus stop
      Thanjavur-7
      தொடர்பு எண் : 9443421627
      Remember it is a holy place,where Sage Agaththiyar personally guiding his devotees. It is not a business place to give you remedy over all nonsense technical advancements. You should have enough faith, belief,inclination, patience, tolerance, forgiveness and above all, fullest desire to adhere HIM.

      Delete
    3. திரு குருமூர்த்தி அவர்களே,
      மிகவும் நன்றி. நானும் வெளி நாட்டில் இருப்பதால், skype இல் தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டேன். எனக்கும் அகஸ்தியர் மேல் மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உள்ளது.
      நாடி பார்க்க எனக்கும் கொடுத்து வைத்துள்ளதா என்று தெரியவில்லை.
      தகவலுக்கு மிக்க நன்றி. valli.

      Delete
    4. சித்தர் அருட் குடில் இ - மெயில் முகவரி : arut.kudil@gmail.com

      சித்தர் அருட் குடில்
      கலந்துரையாடல் வலைதள இணைப்பு : https://groups.google.com/forum/#!forum/agathiar

      சித்தர் அருட் குடில்
      கலந்துரையாடல் வலைதள இ-மெயில் முகவரி : agathiar@googlegroups.com

      Delete
    5. gurumoorthy sir that forum doesnt exist nu varudhae , yeppadi member aguradhu . how to read those articles .. ipo ganesan sir padikirara ?

      Delete
    6. Hi.. Ganesan Ayya is available in WhatsApp and Telegram. Send me email Maheswari.Murthy@gmail.com

      Delete
  4. வணக்கம்,
    இந்த பதிவ நீங்க பதியும் போது நான் ஓதிமலைல இருக்கேன்...பிறவிபயன் அடைந்த சுகம் வார்த்தையால் விவரிக்க முடியா அனுபவம் :)

    ReplyDelete
  5. your blog message quite interesting, i am reading every week
    Regards
    Ramesh
    Lagos, W.Africa

    ReplyDelete
  6. I read this with tiers in my eyes. Thanks for sharing! Agathiyar Adi pOtri!!

    ReplyDelete
  7. Hello Namashkarm this is swaminathan (a) karthi. Shri Our OOTHIYAPPAR GIVEN A GREAT CHANCE TO ME TO POOJA HIM. I am very proud of myself about to pooja to OOTHIYAPPAR while all the information and explanation given by our guru gi Shri AAGATHIYAR SWAMIGAL.
    OOTHIAPPARUKKU AROKARA...

    ReplyDelete
  8. வணக்கம் சாமிநாதன் (எ)கார்த்தி சாமி ..
    உங்கள இந்த ப்ளாக்...ல பாக்கறதுல மிக்க சந்தோசம் :)

    ReplyDelete
  9. oom namo kumaaraaya.
    othiyapaer koviluku eppadipovathu. naan eppouzhthu baharainil ullen. next month I comining to imdia. address plz.

    ReplyDelete
  10. oom nama kumaaraaya.
    enakku othiyapar kovil address vendun. naan next month india varugintren.

    ReplyDelete
  11. Chk this link for more info about othimalai

    https://sites.google.com/site/othimalai/home

    ReplyDelete
  12. To reach Othimalai you have to come to coimbatore. from there u have to reach Pulliampatti abt 45 km from coimbatore. Just 8 kms from pulliampatti. Climbing hill is very difficult. but once u see Othiyappar u will forget everything. such a beautiful GOD u will feel as Lord subramaniya is really giving darsan.He is Great.

    velayudham sir,
    Thanks for giving Guru Agathar Namam .Thanks a lot. The chat gives a divine feeling in the home with full of positive vibration.kodi nandrigal.

    ReplyDelete
  13. GURUMOORTHY AYYA AVARKALUKKU NAMASKARAM.NAAN MURALI POLLACHI, UNGALIDAM ORUMURAI PESI IRUKKIREN,THANGAL 19M THETHI THIRUCHI - URAIYOOR SATHSANGATHIRKKU VARUGIREERKALA.NAAN SELLALAM ENDRU MUDIVUU SAITHULLEN.
    AGASHIAPPERUMAANIN SIDDHAM EN BAGIYAM.
    NANDRI.

    ReplyDelete
  14. i want to see sri hanaumanthasan aiya picture

    ReplyDelete
    Replies
    1. திரு.Jack Selvan வணக்கம்,

      நீங்க 2014-ஆம் வருடம் கேட்டது இந்த வருடம்(2017) ஜூலை 28-ஆம் தேதி தான் அகத்தியர் அருளால் நம் மரியாதைக்குரியவர் திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா மூலமாக நமக்கு கிடைத்திருக்கிறது.

      நீங்கள் இன்னும் சித்தனருள் படித்து வருகிறீர்கள் என்றால் ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள், இல்லை என்றால் "notify email" செய்து இருந்தால் உங்களுக்கு என் ஈமெயில் ரிப்ளை வரும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.

      சித்தன் அருள் - 715 - திரு.ஹனுமந்ததாசன் அய்யா அவர்களின் புகைப்படம்!
      https://siththanarul.blogspot.kr/2017/07/715.html

      மிக்க நன்றி,
      இரா.சாமிராஜன்

      Delete