சித்தன் அருள் - 1944ன் தொடர்ச்சியாக.....
என்னடா ஒப்பந்தம் புதுப்புது ஒப்பந்தம் வியாபார ஒப்பந்தமா ? லாபத்தை நோக்கிய சென்றுகொண்டிருக்கிறான் என்று கேட்காதே, இறைவர்கள் எல்லாம் தமது கடமையெல்லாம் செய்து பார்த்து, அலுத்துப்போய்விட்டார்கள். மக்கள் திருந்துவதாக காணவில்லை. எல்லாம் சுயநலத்தின் மொத்த உருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எதிர்கால வாழ்கை பற்றி கவலை இல்லை, இன்றைக்கு தான் வாழவேண்டும், தன் குடும்பம் .வாழவேண்டும் என்பதற்கு மீறி எதுவுமே செய்வதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலைகள் எல்லாம் மாற்றி எத்தனையோ இடர்பாடுகள் இருந்த போதிலும், ஏமாற்றங்கள் இருந்த போதிலும், எதிர்பார்த்த காரியங்கள் நடக்காத போதும் கூட, இன்னும் அகத்தியனை நம்பியோ, காலாங்கிநாதனை நம்பியோ, எல்லாத்தொழிலையும் விட்டு வந்திருகிறார்களே, இவர்களுக்கு ஏதேனும் நினைவு பரிசு கொடுக்கவேண்டும் என்று சொல்லித்தான் காலாங்கிநாதன் அதை செய்தான். அனால் உண்மை ஒன்று இருக்கின்றது, நீங்கள் அத்தனை மனதையும் தாண்டியும் மனது இங்கு ஓடி வந்திருக்கிறது. மனம் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. அது எங்கோ சென்றாலும் கூட, பேரளவுக்காவது உட்கார்திருக்கிறீர்களே ? அந்த பேருக்கு நாம் எதாவது செய்ய வேண்டும் என்றுதான் காலாங்கிநாதனும் நினைக்கிறான், நானும் நினைக்கிறன். அதன்படி இனி எதிர்காலத்தில், இனி சித்தர்களே இந்த உலகத்தை ஆட்சி செய்யப்போகிறார்கள் ! அதற்கான முடிவு இப்பொழுது தான் ஏற்பட்டிருக்கிறது. எதற்காக காலாங்கிநாதன் உங்களை வரச்சொன்னான் என்று இப்பொழுதாவது புரிகிறதா? இன்றுமுதல் சித்தர்களின் காலம் என்று ஏற்கனவே எழுதி வைத்தாகிவிட்டது. மூன்று தெய்வங்களும் தங்கள் பொறுப்பைகளை எல்லாம் எங்கள் இருவரிடம் ஒப்படைத்துவிட்டு இப்பொழுது அமைதி காத்து கொண்டிருக்கிறார்கள்.
ஒய்வு எடுக்க சென்றுவிட்டதாக எண்ண வேண்டாம், சற்று ஒதுங்கி கொண்டிருக்கிறார்கள். ஆக அந்த பொறுப்புகளையெல்லாம் காலாங்கிநாதன் அய்யன் தலைமையில், காலாங்கிநாதன் முன்னிலையில் இன்று முதல் இன்று மதியம் 4 மணி 22 நிமிடங்களுக்கு பிறகு இந்த பூலோகத்தில் எங்கள் ஆட்சி தான் இனி நடக்கப்போகிறது. ஆட்சி என்றவுடன் அரசியல் பண்ணுகிறேன் என்று எண்ணாதே, நாங்கள் தான், நாங்கள் என்பது நாங்கள் அல்ல, சித்தர்கள் தான், இனி உங்கள் கோரிக்கைகளை எங்களிடம் வைக்கலாம். இறைவனிடம் வைக்கக்கூடாது என்று சொல்லமாட்டேன், இறைவனிடம் போய் சேர்ந்தாலும் அது எங்களிடம் தான் திரும்பி வரும். நாங்கள் தான் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் உட்படுத்தியிருக்கிறோம்.
ஆக உங்கள் வேண்டுகோள் எது வேண்டுமென்றால், எந்த சித்தர்களையும் நம்பலாம். எந்த சித்தர்கள் உண்மையான சித்தர்களை என்று கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அதைப்பற்றி பின்பு விளக்குவோம். ஆகவே பதினேழு சித்தர்களும் என்முன் அமர்ந்திருக்க, என்னப்பன் முருகன் முன்னிலையில், இந்த நல்லதொரு செய்தியை சொல்லுகிறேன், இன்றுமுதல் சித்தர்கள் காலம் ஆரம்பமாகிவிட்டது!
ஆகவே சித்தர்களை நம்புங்கள் என்று கட்டாய படுத்த மாட்டேன், தெய்வத்தை நம்புங்கள் என்று சொல்லுவது போல, உங்களை கட்டாய படுத்தவே மாட்டேன். ஆனால் நீங்கள் எப்போதாவது எந்த நிமிடமாவது, எந்த சூழ்நிலையிலாவது எங்கு இருந்தபோதிலும், எந்த நிலையிலிருந்த போதிலும், அது குளித்துவிட்டுத்தான் அல்ல, சுத்தமாகத்தான் அல்ல, ஆன்மீக எண்ணத்தோடு, சுத்தமான எண்ணத்தோடு, ஒருசொட்டு கண்ணீர் விட்டாவது, அல்லது ஒரு சிறிய பூவை, புஷ்பத்தை வீசியாவது என்னை காப்பாற்று என்று சொன்னால், சித்தர்கள் பறந்து ஓடி வருவார்கள். ஆக அந்த நிலை இன்றைய தினம் ஆரம்பமாகியிருக்கின்றது. ஆக தெய்வத்திடம் போங்கள், கோயிலிருக்கு செல்லலாம், கோயிலில் தெய்வம் இல்லை என்று சொன்னேன், தெய்வங்களே அங்கிருந்து விலகி விட்டது. காரணம், கோயிலில் நடக்கின்ற அட்டூழியங்கள், அபச்சாரிங்கள் நிறைய நிறைய இருந்தாலும், நம்மை நாமே துப்பி கொள்ளக்கூடாது. ஆகவே அதனையும் குறை சொல்ல மாட்டேன், குறைகள் - அது கலியுகத்தின் உச்சக்கட்டம் அப்படிதான் இருக்கும். கலிபுருஷன் தன் வேலையே நல்லபடியாக செய்து கொண்டிருக்கிறான். அவனை தட்டிக்கேட்க இந்த உலகத்தில் யாருமே இல்லை. கலியுகம் முற்றபோகிறதடா, இதைவிட மோசமான நிலைமைக்கு வர போகிறது. இன்னும் சில ஆண்டுகளில் பிறக்கின்ற குழந்தைகளெல்லாம் மூளைவளர்ச்சி இல்லாமலே பிறக்கலாம். இன்னும் பிறக்கின்ற குழந்தைகளெல்லாம் தலைமுடி இல்லாமலே இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளெல்லாம், வெளிநாட்டில் செய்திகள் வரும் பார், எல்லோரும் மூன்று அடிக்கு மேல் உயரமாக இருக்கமாட்டார்கள். ஆங்காங்கே பூகம்பம் வெடிக்கும், ஆங்காங்கே எரிமலை குமுறும். சில தீவுகள் பூமிக்குள்ளே சென்றுவிடும், மறைந்துவிடும். சில தீவுகள், கண்ணுக்கு எட்டாத தூரத்தில் எங்கோ மறைத்துவிட்டு இடம்மாறலாம். இனி எத்தனையோ பல அதிசயங்கள் எல்லாம் நடக்க போகின்றது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

Om Agatheesaya Namaha!! Thanks for sharing the great post to all of us!
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஇந்த நிகழ்வு எந்த ஆண்டு நடந்ததுங்க?