​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 14 October 2025

சித்தன் அருள் - 1951 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!








27/9/2025 புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள். 

ஏன்?? இந் நன்னாள்? என்றே... இன்றைய தினத்திலும் நாராயணனுக்கு.. முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது???

அவ்வாறு எதை என்று புரியாமல் மனிதன் திரிந்தாலும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதப்பா.


அப்பனே இறைவனின் சில லீலைகள்.. அப்பனே தெரிந்து கொண்டால்... அப்பனே பாவங்கள் தொலைந்து.. புண்ணியங்கள்.. பெருகுமப்பா!!

ஆனாலும் இன்றைய கலியுகத்தில் பின் அவ் இறைவனின் லீலைகள்.. யாருமே உணர்வதில்லை!!!

நிச்சயம் பின் அவ்வாறு உணர்ந்தால் மட்டுமே பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும். 

இதனால்தான் என் பக்தர்கள் தெரியாமலும்.. என்னிடத்தில் வந்தாலும் அப்பனே... நல்விதமாக செல்லமாக அன்பாக நிச்சயம் பின் அறிந்தும் உண்மை நிலையை நிச்சயம் அதாவது.. தந்தையும் தாயும் ஒரு குழந்தையை... எவ்வாறு பின் கொஞ்சுகின்றார்களோ!!!

உங்களையும் அதாவது... பாவத்தில் செல்லாதே!! அப்பனே!!
பாவத்தில் செல்லாதே அப்பனே!!!
என்றெல்லாம் கருணை காட்டி கருணை காட்டி.. அழைத்து உங்களை மென்மேலும்.. பின் மேம்படுத்த!!!


ஆனாலும் உங்கள் விதியை... அதாவது மனிதனுடைய விதியை யாரும் அறிவதில்லை. 

ஆனாலும் சந்தோசம் அடைந்து கொண்டே இருக்கின்றான். 

இவ் சந்தோசம் நிலையானது இல்லை என்பது... தெரியவே இல்லை. 

இதனால் எப்படி ஏது... ஒவ்வொரு மனிதனிடத்திலும் பல பல பாவ மூட்டைகள் நிச்சயம் பின்... அறிந்தும் இவை என்று அறிய அப்பனே... பாவ மூட்டைகள் தான் கலியுகத்தில் சுமந்து கொண்டு!!


ஆனாலும் அப்பனே ஒவ்வொரு அப்பனே இறைவனின் லீலைகளை... அப்பனே நன்கு புரிந்து கொண்டோருக்கு அப்பனே.. ஒவ்வொரு நிச்சயம் தன்னில் கூட.. பாவ மூட்டையும் கூட கழன்று... தானாக ஓடிவிடுமப்பா!!!

இதனால்தான் அப்பனே இராமாயணம் என்றாலும்.. மகாபாரதம் இன்னும் அப்பனே... பல வகையிலும் கூட திருவாசகங்கள்... அப்பனே இன்னும் இன்னும்... அப்பனே எத்தனை ? எத்தனை?... சிற்றிலக்கியங்கள் அப்பனே. 

இதனை அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எவ்வாறெல்லாம்... இறைவனைப் பற்றி அப்பனே... நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட. 
அப்பனே இவையெல்லாம் ஓதிட்டு வந்தாலே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது..12 திருமுறைகளையும் கூட... அப்பனே ஏன் எதற்கு படைக்கப்பட்டுள்ளது... என்பதையெல்லாம் நிச்சயம்.. தெரியாதப்பா!!

இதனால் தான் சொல்ல வந்தோம் அப்பனே முதன்மை என்ன? என்று தெரியாமல்... கடைசியை பிடித்தாலும் அப்பனே பின் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

இதனால்தான் அப்பனே முதன்மையிலிருந்தே வரவேண்டும் என்பதையெல்லாம். 

இவ்வாறு அப்பனே பல பல ஞானிகள்... அப்பனே இயற்றியதை எல்லாம்... அப்பனே நிச்சயம் எதற்காக???

அப்பனே இதில் பல தத்துவங்கள் அடங்கியுள்ளது. 

அப்பனே நன் முறைகளாகவே இவ்வாறாக பல தத்துவங்கள் ஒவ்வொன் பின் ஒவ்வொன்றாக.. நிச்சயம் இதனை அறிந்து கொண்டு புரிந்து கொண்டு நிச்சயம் பின்... வாசித்து வந்தாலே ஒவ்வொரு பாவம் மூட்டையும் நிச்சயம் கீழே இறங்குமப்பா!!

அப்படி இல்லையென்றால் அப்பனே... நிச்சயம் அறிந்தும் புரிந்தும்... நீங்கள் அதாவது என்ன செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லையப்பா!!

இதுதான் அப்பனே இறைவனின்!!!

 அதாவது ஒரு தொழிலில் அப்பனே நீங்கள் செய்கின்றீர்களென்றால் அப்பனே அத்தொழிலைப்பற்றி நிச்சயம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். 

அப்பொழுதுதான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட சரியான வழியில் இயக்கி அப்பனே பெரும் பொருளை சம்பாதிக்கலாம் அப்பனே. 

ஆனாலும் சம்பாதித்து அப்பனே இவை.. ஒரு எடுத்துக்காட்டாகவே கூறுகின்றேன்..யான் இங்கு!!!

அப்பனே அதுபோலத்தான் அப்பனே... நிச்சயம் பின் இறைவன் யார்? என்று.. நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!

இறைவனைப் பற்றி அப்பனே தெரியாமல் கலியுகத்தில் பேசுகின்றார்கள் என்பேன் அப்பனே...

அது பேசுபவனுக்கு அப்பனே நிச்சயம் பாவம்!!
அதை கேட்பவனுக்கும் பாவம்!!.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட! 
எவ்வாறு என்பதையெல்லாம். 

இதனால்... அப்பனே அடுக்கடுக்காக அப்பனே... நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக.. இறைவன் இருப்பதை நிச்சயம்... கலியுகத்தில் மறைத்து வைக்கத்தான் பார்ப்பான்... மனிதன் என்பேன் அப்பனே. 

ஆனாலும் யாங்கள்... சித்தர்கள் விடுவோமா என்ன???

அப்பனே வாழ்க்கையின் தத்துவம் போராட்டம்... அப்பனே இப் போராட்டத்தில் அப்பனே... ஜெயிப்பவர்கள் மட்டுமே... வாழ்க்கையில்... இன்பம் அப்பனே பின் அதாவது... தொல்லையில்லா வாழ்க்கை அமைந்து... போராட்டங்களில் ஜெயிக்காதவன்... அதை கண்டு பயப்படுகின்றவன்.. அப்பனே நிச்சயம் பின்... பின்னே நிற்கின்றான் அப்பனே.. மனகுழப்பங்களில் ஆழ்கின்றான்!!
என்னடா?? ஏதும் நடக்கவில்லையே என்று பின்.. இறைவன் இருக்கின்றானா??.. என்ற சந்தேகம்!!

ஏனென்றால் அப்பனே கலியுகத்தின் கட்டாயம் அப்பனே... உண்மை அறிந்தும் புரிந்தும்... இவை என்று ஞானத்திற்கு... ஞானத்திற்கு அப்பாற்பட்டவை. அப்பனே. 

இதையென்று அறிந்தும் உண்மைதனை.. கூட அப்பனே இன்னும் ஞானங்கள் அப்பனே. 

அப்பனே எப்பொழுதெல்லாம் ஞானங்கள் அதிகமாகின்றதோ... அப்பொழுதெல்லாம்... புண்ணியங்கள் அதிகமாகுமப்பா!!!

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே.. ஞானங்கள் அப்பனே மனிதனுக்கு குறைவாகும் என்பேன் அப்பனே. 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட.. பாவங்கள் அதிகமாகும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் இவையெல்லாம் சொல்லித் தர.. உலகத்தில் ஆளில்லை அப்பா. 

அப்பனே மனிதன் கேட்பான் அப்பனே பணம்... எப்படி வருவது என்று????

அதற்கு சரியான அப்பனே பின் நிச்சயம்.. எடுத்துரைப்பானப்பா இவ்வாறு செய் என்று. 

அப்பனே தொல்லைகள் வந்து கொண்டே இருக்கின்றது என்று. 

அப்பனே பின் நிச்சயம் எவ்வாறு என்பதையெல்லாம்... அதற்கும் ஒரு அப்பனே...(தீர்வை) ஏதாவது ஒன்றை எடுத்து விடுவானப்பா!!

ஏனென்றால் மனிதனின் ஆசைகள்.. எவ்வாறு என்பது மனிதனுக்கே... புரிந்துவிட்டது. 

அவை சொல்லி இப்படி மாற்றலாம்.. என்று சொல்லிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் நம்புவார்கள் என்று. 

ஆனாலும் உண்மையைச் சொன்னால் அப்பனே இவ்வுலகத்தில்... ஏசுவார்களப்பா!!!

நிச்சயம் அவை பொய் இவை பொய்!!.. ஏன் என்றெல்லாம் அப்பனே 

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் விட்டுவிடுவோமா??? என்ன!! அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட ஞானத்தின் வழியே செல்கின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அப்பனே.. பாவங்கள் குறைந்து புண்ணியங்கள் பெருகுமப்பா.

அப்பனே இவ்வாறு புண்ணியங்கள் பெருகுகின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. உங்களை நீங்களே வெல்லலாம் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட.. பல வாக்கியத்தில் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே. 

உங்களை முதலில் நீங்கள் வெல்லுங்கள் என்பேன் அப்பனே. 

எப்படி வெல்வது அப்பனே??

போராட்டம் தான் வாழ்க்கை அப்பனே. 

போராட்டம் இறைவன் கொடுப்பான் என்பேன் அப்பனே. 

இதை நிச்சயம் அப்பனே எதிர்த்து நின்று அப்பனே.. நின்றுவிட்டால் அப்பனே கடைசியில்.. உங்களுக்கு அனைத்தும் புரியுமப்பா!! அனைத்தும் தெரியுமப்பா!!

அப்படி நிச்சயம் இறைவன் பின் போராட்டம் இறைவன் கொடுக்கின்ற பொழுது...

இறைவனை நம்பினேனே... போராட்டம் வந்து கொண்டே இருக்கின்றது என்று....

யார் ஒருவன்? பின் நிச்சயம் சொல்கின்றானோ !?!?

அவன் ஒரு படி கீழே இறங்குகின்றான் என்பேன் அப்பனே. 

இப்பொழுது நினைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

எப்படி மேலேறுவது??
எப்படி கீழே இறங்குவது என்பதையெல்லாம்... நிச்சயம் பின் நீங்களே.. காரணம் என்பேன் அப்பனே. 

இதனால்தான் மனிதன் பின் ஒன்றும் தெரியாமல்... அப்பாவி என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே ஏன்? எதற்கு? அப்பாவி என்று நிச்சயம்.. சொல்கின்றேன் என்றால் அப்பனே... அனைத்து தெளிவுகளும் கொடுத்து அப்பனே.. நிச்சயம் இறைவனே... மனிதனைப் பார்த்து!!!

நிச்சயம் ஐயோ!!!! ஐயோ!!!... பிழைத்துக்கொள்.!! பிள்ளையே பிழைத்துக் கொள்!!!

அனைத்து திறமைகளும் உன்னிடத்தில் உள்ளது.. உன்னை நீ செதுக்கு!!!

அப்பொழுது நீ உனை வெல்கின்ற பொழுது... அனைத்திலும் வெல்வாய் என்றெல்லாம். 

ஆனாலும் நிச்சயம் அதை பயன்படுத்துவதே இல்லை... இன்றைய காலகட்டத்தில்.. அப்பனே. 

ஏன்? எதற்கு? அப்பனே உண்மை நிலை இன்னும் இன்னும்... வாக்குகளில் பின் செப்புகின்ற பொழுது... அப்பனே நிச்சயம்.. அறிந்தும் புரிந்தும் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்.. அப்பனே! 

அனைத்தும் வென்று பின் நிச்சயம்... தேவையானதை அப்பனே. 

ஆனாலும்... அப்பனே ஒன்றின் பின் ஒன்றாக.. வருகின்றது அப்பனே அனைத்தும்.. வருகின்றது அனைத்தும் சென்று விடுகின்றது. 

ஏன் எதற்கு என்றால் அப்பனே நிச்சயம்.. பாவம் புண்ணியம் மாறி மாறி.. செயல்படுகின்ற பொழுது அப்பனே.. வரும் போகும். 

ஆனாலும்.. பாவத்தை எப்படி ?அடிப்பது? அப்பனே??..

அதாவது புண்ணியத்தை.. அப்பனே அனைத்து மனிதர்களும் தேக்கி வைத்துள்ளார்கள் அப்பனே. 

அவ் புண்ணியத்தை அனுபவிக்காமல் இவ் ஆன்மா முழுமை பெறாது என்பேன் அப்பனே. 

அடுத்தடுத்து அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும்..

ஆனாலும் எப்படி?? ஆனாலும் பாவம்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.. இன்றைய காலத்தில்!!

அதை எப்படி தடுப்பது??

அதை நிச்சயம் தடுத்து நிறுத்தினால் நிச்சயம்... புண்ணியம் என்ற பாதை வந்துவிடும். 

அப்பாதையில் சென்றால் இன்னும் புண்ணியங்களை பெருக்கி அவ் பாவத்தை.. நிச்சயம் அறிந்தும்.. அப்படியே நிறுத்தி விடலாம். 
நிச்சயம் எதை என்று புரிய. 

ஆனாலும் புண்ணிய பாதையில் சென்று கொண்டே இருந்தால்.. இன்னும் பின் புண்ணியங்கள் செய்து செய்து...அவ் பாவத்தை நிச்சயம் அதாவது.. அழித்துவிடலாம். பின் புண்ணிய கணக்கால்!!!

ஆனாலும் அவ் புண்ணியத்தை மனிதன்.. நிச்சயம் அனுபவிப்பதே இல்லையே!!!

அவை அனுபவிக்காமல் நிச்சயம் இவ் ஆன்மாவும் நிச்சயம் பின் இறைவனிடத்தில் சரணடையாது... துன்பங்களும் போகாதப்பா !!! நிச்சயம். 

செல்லக் குழந்தைகளே!!!



(இந்த இடத்தில் ஒரு விளக்கம்.... ஒவ்வொரு மனிதனின் ஆத்மாவும் பல கோடி பிறவிகளை கடந்து வந்துள்ளது.. இதில் ஒவ்வொரு பிறவியிலும் பாவம் புண்ணியம் என இரண்டையும் செய்துவிட்டு வருகின்றது... பாவம் புண்ணியம் இரண்டும் சேர்ந்ததுதான் மனித பிறவி என்று குருநாதர் பல வாக்குகளில் கூறியிருக்கின்றார்.


இப்படி பிறவி தோறும் மனிதர்கள் செய்த பாவம் புண்ணியம் அடுத்தடுத்த பிறவிகளில் வந்தடைகின்றது... சொல்லப்போனால் பாவம் புண்ணியம் இதற்கு ஏற்பத்தான் அடுத்த பிறவிக்கான நிலையே ஏற்படுகின்றது. 


ஒரு முறை குருநாதரிடம் சினிமா நடிகர்கள் பிரபலங்கள் அரசியல்வாதிகள் எல்லாம் பிறக்கின்றார்கள் இவர்கள் சாதாரண மனிதர்களை விட எங்கு சென்றாலும் முதல் மரியாதை இது எல்லாம் கிடைக்கின்றது இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டதற்கு 


குருநாதர் அப்பனே அவர்கள் அதிக அளவு புண்ணியங்கள் செய்தவர்கள்... அதாவது ஆறு குளம் ஏரி போன்ற நீர்நிலைகள் அமைத்து அனைத்து ஜீவராசிகளுக்கான நீர்தானங்கள் ஏழை மாணவர் மாணவியர்களுக்கு கல்விதானம் ஏழைகளுக்கு திருமண உதவி என பல புண்ணிய செயல்கள் செய்தவர்கள் புண்ணியத்தின் பலனாக இப்படி பிறப்பிக்கின்றார்கள் என்று சொல்லி இருந்தார். 



பாவங்கள் அதிகம் செய்து அதன் பலனாக நீச்சப் பிறவியை எடுத்து வந்து அனுபவிப்பவர்களும் உண்டு... புண்ணியங்கள் அதிகப்படியாக செய்து நற்பிறவியைப் பெற்று அனுபவிப்பவர்களும் உண்டு. 


குருநாதர் இந்த இடத்தில் மனிதர்களிடத்தில் பாவங்கள் அதிகமாக இருப்பதால் பாவங்களை முதலில் அனுபவித்து தீர்க்க வேண்டும் அப்படி பாவத்தை அனுபவித்து அனுபவித்து தீர்ப்பதற்குள் பிறவி முடிந்து விடுகின்றது இறப்பு வந்து விடுகின்றது..

மனிதர்கள் செய்த புண்ணியத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுகின்றது. 

எப்படி பாவத்தை அனுபவிக்க வேண்டுமோ அதே போன்று புண்ணியத்தின் பலனையும் அனுபவிக்க வேண்டும். 

புண்ணியத்தின் பலனை அனுபவிக்காமல் அப்படியே புண்ணியம் சேமிப்பு கிடங்கில் கிடப்பது போல இருந்தால் அதற்காகவும் பிறவிகள் எடுத்து வர வேண்டி இருக்கும் ஆத்மாவும் முழுமை பெறாது... இறைவனிடத்தில் சரணாகதியும் அடைய முடியாது என்று... குருநாதர் கூறுகின்றார்...

இதற்கு ஒரே வழி புண்ணிய பாதையில் சென்று புண்ணியத்தை அதிகம் செய்து கொண்டே இருந்தால் பாவத்தை சீக்கிரம் அழித்துவிட முடியும் என்று குருநாதர் இங்கு உரைக்கின்றார்)





சொல்கின்றேன் நிச்சயம் இன்னும் இன்னும்!!

ஏன் எதற்கு சித்தர்கள் யாங்கள் வரவேண்டும்???

எதை என்று புரிந்து கொள்வதற்கே!!!!(இன்னும் தெரியவில்லை)

இதனால் கலியுகத்தில் இறைவன் இல்லை என்று தான்.. சொல்ல வேண்டும் என்பதெல்லாம் விதி. 

ஆனாலும் அதற்குள்ளே இறைவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை எல்லாம் விளக்கி.. மக்களுக்கு பின் புகுத்துவோம்.. உள் நுழைத்து!!!

யார் மூலம் ?? எதனை ஏற்ற வேண்டும்? எப்படி காக்க வேண்டும் என்பதையெல்லாம்... யாங்கள் அறிவோம். 

விட்டுவிடுவோம் செல்லுங்கள் என்று!!!

ஆனாலும் நிச்சயம் தீர்வு எங்களிடத்திலே!!

முதலிலோ கடைசியிலோ 
கடைசியிலோ நடுவிலோ.... எதை என்று தெரியாமல் வாழ்ந்து வாழ்ந்து நோய்களோடு துன்பங்களோடு மனிதன் கஷ்டம் எதை என்று அறிந்தும்... கஷ்டங்கள்.. அப்பனே மனிதனை சூழ்ந்து உள்ளது. 

அதிலிருந்து எப்படி வெளிவருவது?? என்பதையெல்லாம். தெரியாது!!

நிச்சயம் அறிந்தும் இவையன்றி எவை??.. யான் இங்கு குறிப்பிட???

இன்னும் வைராக்கியம் மனிதனுக்கு எதனுள்ளே..???.

இதன் பக்தி நிச்சயம்.. ஏன் ??எதற்கு?? இப் புரட்டாதி... திங்களில் யான் எடுத்துரைக்கின்றேன். 


அழகாகவே பின் நாராயணன் பக்தன் அதாவது... இங்கிருந்து சில மைல்... தொலைவிலே....

(திருப்பதி திருமலையில் இருந்து சில மைல் தொலைவில்)

இல்லத்தை அழகாக அமைத்து... நாராயணனே என்று நினைத்து வந்தான். 

நாராயணனே நம் துணை. 

ஆனாலும் ஆடு மாடுகள் தான் அவனுக்கு சொந்தம். 

இல்லத்தவள், இவன் அதாவது... ஆடு மாடுகளையும் கூட... இன்னும் பன்றிகளையும் கூட.. இன்னும் பின் நிச்சயம் பல ஜீவராசிகளையும் கூட... 

தன் அதாவது தன் மனைவியிடம் நிச்சயம் சொன்னான்!!!

இவையெல்லாம் இருக்கின்ற பொழுது... நமக்கு ஏன்? குழந்தை வேண்டும்? என்று!!!

(ஆடு மாடுகளே நம்மளுடைய பிள்ளைகள்) 

சரி!! என்று இவன் மனைவியும்.. ஒத்துக்கொண்டாள்!

நிச்சயம் தன்னில் இவ்வாறாக ஆடுகளும் மாடுகளும் பாசத்திற்கு நிச்சயம்... அடிமைப்பட்டு அறிந்தும்... இவன் மேலே பாசம். 

இவந்தனும்...அவ் ஜீவராசிகள் மேல் அடிமைப்பட்டு.. ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். 

ஆனாலும் எப்பொழுதும் நிச்சயம் தன்னில்... காலையிலும் மாலையிலும் எக்குறைகள்... எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட... எவை என்று புரிய நிச்சயம் பின்.... காற்று! மழை! கொடுத்த (கொடும்) காற்று என வந்தாலும்.. நிச்சயம் அவன் நினைப்பதுண்டு... வாயில்லா ஜீவராசிகள் எப்படி இதை ஏது எப்படி என்று கூட!!

நாராயணனே !! என்றெல்லாம்!!! இப்படி செய்தால் எப்படி என்று!!!

அனுதினமும் நிச்சயம் அதிகாலையிலும் மாலை வேளைகளிலும் நிச்சயம் எமக்கு ஒன்றும் கொடுக்கத் தேவையில்லை...

இவ் ஜீவராசிகளுக்கு நாராயணனே... நிச்சயம் நீயே பார்த்துக்கொள்!!!

அதாவது உன்னுடைய குழந்தைகள் அல்லவா!!
என்றெல்லாம் நிச்சயம் 
காலையிலும் மாலையிலும் வேண்டிக் கொள்வதுதான் இவன்.

ஆனாலும் அமைதி காத்து!! அமைதி காத்து!!
இவ்வாறாகவே!!

ஆனாலும் இதை புரிந்து கொண்டான்.. நாராயணன். 

நிச்சயம்..நாம் படைத்ததில் அறிந்தும் இவ்வாறாகவே!!!

ஆனாலும் அப்பனே அனைவருக்கும் அப்பனே... படைக்கும் பாக்கியத்தை நிச்சயம் பிரம்மாவாயினும் நிச்சயம் விஷ்ணுவாயினும்... ஈசனாயினும் அப்பனே எவ்வாறாக நிச்சயம்... இவர்கள் மூவரும்.. ஒருவரே!!!

ஆனாலும் எவ்வாறு பிரிதல்???.. பிரிந்து புரிதல் எவ்வாறு என்றெல்லாம்.. அப்பனே இப்பொழுது விளக்கங்கள்... அவசியமில்லை!!

நிச்சயம் இதிலிருந்து பிரிகின்றது... பல பல பின் வேடங்கள்... அவையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைப்பேன் யான். 
நிச்சயம் தன்னில் கூட. 

அதாவது.. ஈசனிடத்திலும் கூட நிச்சயம்.. பிரம்மாவிடத்திலும் கூட..
நிச்சயம் இங்கிருக்கின்றானே!! இவ் ஏழுமலையானிடத்திலும் கூட அனுமதி பெற்று.. உரைக்கின்றேன்.

மனிதர்கள் நிச்சயம் அதாவது அதையெல்லாம் நீங்கள்.. அறிந்து கொள்வதற்கு நிச்சயம் தன்னில் கூட... பின் முதலில் இருந்தே அனைத்து விஷயங்களையும் கூட... பின் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றதப்பா ‌!!

நிச்சயம் என்னை நம்பினோர் அப்பனே நிச்சயம்... எதை என்று புரிய அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும். 
அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அப்பனே.. நிச்சயம் இதனால் அப்பனே.. அறிவாளியாக இருங்கள் அப்பனே..

அறிவை வைத்துக்கொண்டு அப்பனே இருப்பின் அறிவாளியாக இருங்கள் அப்பனே.. நிச்சயம் அறிவை வைத்துக் கொண்டு.. முட்டாளாக இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
இப்பொழுது..... எப்படியப்பா???..

 நிச்சயம் பாசத்தை காட்டி காட்டி அப்பனே அப்பனே என்றெல்லாம் என்றெல்லாம் சொல்லி அப்பனே.. எதை என்று புரிய அப்பனே அழைத்து வந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

இன்னும் அப்பனே இவ் ஆன்மாவிற்கு என்னென்ன??? அப்பனே, இவ் ஆன்மாவுக்கு என்னென்ன கதி,??? என்னென்ன அவசியம்,????? என்னென்ன,??? இவ் ஆன்மாவுக்கு கொடுத்தால், பின் சந்தோஷம் அடையும் என்பவை எல்லாம் விளக்கங்களாக யான் கூறுகின்றேன். அப்பனே,


 ஆன்மாவிற்கு, அப்பனே, எதுவும் கிடையாது. அப்பனே,

 அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் பெயரும் கிடையாதப்பா,

 ஆனாலும், அப்பனே, வித்தியாசம் காட்டவே, பெயர் அவரவர், (மனிதர்கள் பெயர் சூட்டிக் கொள்வது) நிச்சயம், நிச்சயம், எது என்று புரிய. அப்பனே



 இவ்வாறாக, அப்பனே, நிச்சயம், பின் அவ் பெருமான் பக்தன், அப்பனே, நாராயணா!!!, நாராயணா!!!, நிச்சயம், என் யானே!!!! எதை என்று அறிந்து கூட, ஆனாலும், இவ்வாறாகவே, நிச்சயம், எதை என்று கூற நாராயணனும் சோதனை செய்ய ஆரம்பித்தான்.
 நிச்சயம், தன்னில் கூட


, இவ்வாறாகவே, நிச்சயம், மீண்டும், நாராயணனே, நிச்சயம், மாடுகளை மேய்க்க, மாடுகளை , மேய்க்க, பின் மேய்த்தால் போல்
(நாராயணன் பசு மேய்ப்பாளன் போல் வேடமிட்டு)

, பல மாடுகளை, நிச்சயம், அதாவது, பின் அவ்விடம் இருக்கின்றதே.
 இங்கிருந்து சில மைல்களிலே, நிச்சயம், தன்னில் கூட, அனைத்து மாடுகளையும் கூட அழைத்து வந்து, நிச்சயம், அதாவது, பின் அவன் இல்லத்திற்கு சென்று, அதாவது, பின் அவ்பக்தனிடத்தில் சென்று, நிச்சயம்,


 அதாவது, யார் இது? யார் இங்கே???
 இவ்விடத்திலே. (இல்லத்தையும் கோ பராமரிப்பு சாலையையும்) சரியாக அமைத்துக் கொண்டு இருக்கின்றீர்களே என்று நாராயணன் கூட,


 ஆனாலும், அவர்களும் வெளியே வந்து, இங்கு யாருமே வருவதில்லையே,!!!


 நீங்கள் மட்டும் ஏன்? இங்கு வந்திருக்கின்றீர்கள்?? என்று!!!

ஆனாலும், நிச்சயம், அதாவது, ஆடுகளையும் மாடுகளையும் யான் மேய்ப்பவன்.

 இதனால், நிச்சயம், எங்கு வேண்டுமானாலும், நிச்சயம் செல்வேன்.

 இதனால், எந்தனுக்கு நிச்சயம் தன்னில் நீர் தாகமாக இருக்கின்றது. நிச்சயம், பின் கொடுங்கள் என்று!!!



அவ் பக்தனும் இல்லத்தாளும்!!!

இவ்வாறாக யாருமே இங்கு வந்ததில்லை!! யாருமே இப்படி எங்களை கேட்கவில்லை. 

இது உங்கள் இல்லம் போல் என்று,!! நிச்சயம், நீங்களே உள்நுழைந்து, நிச்சயம், பின் நீர் அருந்துங்கள் என்றெல்லாம்.


 ஆனாலும், வேண்டாம். யானோ, பின் மாடு மேய்ப்பவன். 

ஆனாலும், நீங்களோ நன்றாக, பின் இல்லத்தையும் அனைத்தும் அமைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்

ஆனாலும், யானோ, ஒரு பரதேசி,!!!

 இவ் மாடுகள் தான் எந்தனக்கு சொந்தக்காரர்கள். அனைத்துமே கூட, அதனால், பின் எங்கெங்கோ செல்வேன். இவ் மாடுகளும் என்னுடன் வரும் !! (நாடோடி போல)

அங்கங்கு உறங்குவேன். பின் எதை என்று அறிய, அறிய !!!



அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்றெல்லாம் பக்தன் கூட.


 அதனால், நிச்சயம், யாங்களும் அதுபோலத்தான்!!! இருப்பினும், நாராயணன் இருக்கின்றான். அத் தைரியத்தில் தான் இருக்கின்றோம்.

 இதோ, இவ்வாறு மாடுகள் ஆடுகள் , பின் இன்னும் பல பல ஜீவராசிகள் தான். எங்களுக்கு சொந்தம் என்று, !!


ஆனாலும், நாராயணன், பின் மறைமுகமாக எடுத்துவிட்டான். நிச்சயம், நீங்கள் இருவர்கள் மட்டும் தானே,!!! (இருக்கின்றீர்கள்)

 அம்மையே, நிச்சயம், உம்மை பார்த்தால், நிச்சயம், தன்னில் கூட, பின் லட்சுமி தேவி மாதிரியே இருக்கின்றீர்!! அல்லவா? 

நிச்சயம், இவ்வாறாக, நீங்கள் இருவரும், நிச்சயம், இதை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றீர்கள்

நீங்கள் இறந்துவிட்டால், யார்? ஆடு மாடுகளை பாதுகாத்துக் கொள்ளுவது??? என்று,


 ஆனாலும், இரண்டு பேரும், பின், நிச்சயம், ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து பார்த்து, எவ்வாறு?? என்று,!!


 அதனால், நாராயணனே, மீண்டும், அதனால், நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அக்குழந்தை, நிச்சயம், எதை என்று கூற, பின், அவ்வாறு, குழந்தை, நிச்சயம், இவையெல்லாம் பார்த்துக் கொள்ளும் என்றெல்லாம்!!!

 ஏன், எதை என்று கூற இதனால், மீண்டும், அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.

 ஆனாலும், இதை சொல்லி விட்டு நாராயணன் சென்றுவிட்டான்.

 ஆனாலும், இருவரும், ஆனாலும், இதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார்கள். 


ஆனாலும், நாம் இருவர்தான் இருக்கின்றோம்.
 ஆனாலும், அறிந்தும், இன்றும் கூட.


 ஆனாலும், நாராயணன் மறைந்திருந்து இங்கேயே பார்த்தான்.

 இவர்கள் என்ன தான்???முடிவெடுக்கின்றார்கள் என்று, 

ஆனாலும், எதை, எவை என்று புரிய, நிதானத்துடனே, இருவரும் நிச்சயம் பேசிக்கொண்டார்கள்.

 ஆம்!!!, இவ் ஜீவராசிகள் நம்மையே நம்பிக் கொண்டிருக்கின்றன!!!

. நாம் இருவர்கள், நாம் இருவர், நிச்சயம், பின் அதாவது சாவு!!! என்பது, நிச்சயம், ஒரு நாள் வரும்!!!

 நாம் சென்று விட்டால், நிச்சயம், இவைகள் எல்லாம் எப்படி பார்ப்பது? இன்னும், இன்னும் என்றெல்லாம்!!


 இதனால், அவனும், அதாவது பக்தனும், நாராயணனையும் பார்த்து!!! (ஏழுமலையை பார்த்து நாராயணனாக நினைத்துக் கொண்டு)


, நாராயணனே, ஏன் இந்த சோதனைகள்? நிச்சயம், ஏன் பந்த பாசங்களோடு இவ்வாறு இணைத்து விட்டாயே? ஏன், எதற்கு? என்றெல்லாம் !!

யான் என்ன செய்வது??? என்று,

 ஆனாலும், இல்லத்தவளும், நிச்சயம், பின் நாம் குழந்தையை பெற்றுக்கொள்வோம். நிச்சயம், தன்னில் கூட என்றெல்லாம்,


 ஆனாலும், இவந்தனும் இல்லை. யான் நாளும் மீது பற்றுக் கொண்டிருக்கின்றேன். அதாவது, நிச்சயம், பின் குழந்தைகளே, வேண்டாம். ஏதாவது குழந்தைகள், நிச்சயம், நாம் இறந்தாலும், எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. என் நாராயணன், இவைகளை எல்லாம் பார்த்துக் கொள்வான் என்று, 


இதனால், வேண்டாம். பந்த பாசங்களோடு என்று, 


ஆனாலும், நாராயணன் மறைந்திருந்து பார்த்துக் கொண்டே இருந்தான். நிச்சயம்


, ஆனாலும், அதாவது, நிச்சயம், பின் நிச்சயம் தன்னில் கூட, மீண்டும், சூரியன் மறைகின்ற பொழுது, ஓடோடி வந்தான்.

தாயே!!!தந்தையே!!! என்று,!!

 அதாவது, அனைத்தும் (அவருடைய மாடுகளை) அழைத்து கொண்டு.

 ஆனாலும், எந்தனுக்கு சிறிது பசிக்கின்றது. ஏதாவது உணவு தாருங்கள் என்று, நாராயணன் கூட.


 ஆனாலும், நிச்சயம் வாருங்கள்!!!

, எங்களில் நீயும் ஒருவனாக, அதாவது, பழகியது போலவே உள்ளது.

 காலையில், பின் நீரை  கேட்டாய், கொடுத்தோம். இப்பொழுது, பின் அதாவது, பசிக்கின்றது என்று சொல்கின்றாய். நிச்சயம் தருகின்றோம் !! அதாவது எதை என்று புரிய, 

அதாவது, மீண்டும், யான் இங்கேயே உறங்கலாமா??? என்று,


 தாராளம் !!! தாராளமாக,  நீங்கள் இங்கே உறங்கிக் கொள்ளலாம் என்று,
பக்தனும் கூட. 


  நாராயணனும், நிச்சயம், தன்னில் கூட மகிழ்ந்தான். 

அதாவது, அவன் சொல்வதைக் கேட்டு, நிச்சயம், மனம் மகிழ்ந்தார்கள். இருவரும்!!


 அவர்கள் மனத்தில் என்ன உள்ளது??? என்பதை கூட கண்டு உணர்ந்தான் நாராயணனே!!.

 நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறுத்தான் மனம் நன்கு இருக்க வேண்டும். நன்கு, நன்கு, நிச்சயம், தன்னில் கூட, எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.

அனைத்தும் இறைவனே என்று இருக்க வேண்டும். அதனால், இறைவன், நிச்சயம், மனதிலே தங்குவான். 

இதனால், நாராயணன் அவர்கள் இல்லத்திலே தங்கிவிட்டான். அதிகாலையில், மீண்டும் எழுந்து, அதாவது, பின் ஒரு நாள் இருந்தது, இருந்துவிட்டேன்.


 ஆனால், மீண்டும், யான், அதாவது, மாடுகள் எல்லாம், நிச்சயம், அங்கங்கு சென்றுவிட்டது. இதனால், அதை பார்த்து, அனைத்தும் ஒன்றாக இணைத்து, பின், மீண்டும், அங்கங்கு, அதாவது, நீயும் கூட, இங்கே இருந்து விடாதே. பின், உன் மாடுகள் எல்லாம், இங்கே, அழைத்து கொண்டு இணைத்துக்,  கொண்டு, அதாவது நிச்சயம், நீயும் இளைஞனாகவே இருக்கின்றாய் அல்லவா?

 அதனால், யாங்கள் எங்களுக்கு வயதாகிவிட்டது. இதனால், அறிந்தும், இவையெல்லாம் , பார்த்துக் கொள்கின்றாயா????? என்று,

(மாறுவேடத்தில் வந்த நாராயணனின் மாடுகளுடன் இந்த தம்பதியரின் கால்நடை செல்வங்களையும் சேர்த்து நீயே பார்த்துக் கொள் எங்களுக்கும் வயதாகிவிட்டது என்று)

 அவ் பக்தனும் கூட,!!


 நிச்சயம், நாராயணன் கூட சொன்னான். ஒரு வார்த்தை என்னால் முடியாதப்பா.!!!


 அறிந்தும், ஏன்,? எதற்கு? என்றால், நிச்சயம், அவை, அதாவது, யான் எதை என்று கூட, அவை மேய்க்கவே, அவை மேய்க்க பல சிரமப்படுகின்றேன்.

(என்னிடம் இருக்கும் மாடுகளையே வைப்பதற்கு சிரமப்படுகின்றேன் இன்னும் மாடுகள் அதிகமானால் முடியாது)

 ஆனாலும், இவையெல்லாம் உங்களிடத்தில், பின் அதிகம் உள்ளது. இவையெல்லாம் என்னால் மேய்க்க முடியாது. 

யான் தான் உங்களுக்கு சொன்னேனே, குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

 நிச்சயம், அவ்வாறு குழந்தை பெற்றுக்கொண்டால், இன்னும் நீங்கள் பின் பலமாக ஆகி விடுவீர்கள் என்றெல்லாம். 


ஆனாலும், நிச்சயம், மீண்டும், நாராயணன், நிச்சயம், தன் சோதனையை, சோதனை கூட, எவ்வாறாக என்பதெல்லாம்,

 இதை அறிந்து, நிச்சயம், மீண்டும், அவர்கள் அவர்வர் முகத்தை பார்த்து.


 ஆனாலும், நிச்சயம், ஆனாலும், நாராயணன் உணர்ந்து கொண்டான். இவர்கள், நிச்சயம், தன்னில் எதை, எவை என்று புரிய. ஆனாலும், நிச்சயம், தன்னில் எவை என்று அறியாத வகையில் கூட, நிச்சயம், இவர்கள் இருவரும் இப்படித்தான் இருக்க போகின்றார்கள்.


 ஆனாலும், நிச்சயம், எதை என்று புரிய. ஆனாலும், நாராயணனுக்கு தெரியும். நாராயணனுக்கு நன்றாக தெரியும்.!!!

 ஆனாலும், எதை என்று புரிய. இவ்வாறாக, நல் மனதாக, நிச்சயம், குழப்பங்கள் இல்லாத, பொறாமை இல்லாத, அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும். தான் தம் உயிர் போல் மற்ற உயிர்களையும் எண்ண வேண்டும் என்று!!!

, நிச்சயம், பின் எவை என்று புரிய. இவ்வாறாக இருந்துவிட்டால், லட்சுமி தேவி வந்துவிடுவாள் என்று, நாராயணனுக்கு தெரியும். 


ஆனால், நாராயணனே, இவை உணரவில்லை. ஆனாலும், நிச்சயம், அறிந்தும், புரிந்தும் கூட, அதாவது, திடீரென்று, நாராயணன் பார்த்துக் கொண்டே இருந்தான். எதை என்று புரிய.

 ஆனாலும், இவன் நிச்சயம், தன்னில் கூட, அதாவது, பின், சிறு குழந்தையாகவே, அதாவது, லட்சுமி, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நீதான், பின், மறைந்திருந்து பார்ப்பாயா???? என்று, யான், எதை என்று கூட, நாராயணனின், பின், அதாவது, எதை என்று, நினைவில், பின், மறைத்துவிட்டு, திடீரென்று, குழந்தை, எதை என்று புரிய.

(நாராயணன் மாடு மேய்ப்பாளன் போல் இந்த கணவன் மனைவி இடையே நடத்தும் திருவிளையாடலை பார்த்து நீங்கள் மட்டும் தான் விளையாடுவீர்களா? நானும் வந்து லீலை புரிகின்றேன் என்று நாராயணனுக்கே தெரியாமல் ஒரு சிறு குழந்தை வடிவம் எடுத்து நாராயணனுடைய சிந்தனையை மாற்றி அவரும் திருவிளையாடல் புரிய லட்சுமி தேவியார் வந்துவிட்டார்)





 ஆனாலும், பின், நாராயணனுக்கு ஆச்சரியங்கள்.!!!
 அடடா,!!! என்ன குழந்தை!!!
இக, குழந்தை, எங்கிருந்து வந்தது?

(லட்சுமி தேவி வந்தது நாராயணனுக்கும் ஆச்சரியம் ஏனென்றால் நாராயணனுடைய மூளையை செலவு செய்து தேவியார் வந்துவிட்டார்)

பின், அதாவது, பின், இப்பொழுது பின் இப்பொழுது தானே இவர்களிடம் கூறினோம்,

 நிச்சயம், ஒரு குழந்தை வேண்டும் என்று.


 ஆனாலும், குழந்தை அழுகின்றதே என்று,
(வீட்டிற்குள்ளே)


 நாராயணனுக்கே.. திகைப்பு!!! 

ஆனாலும், அனைத்தும் உணர்ந்தவன் நாராயணன்.


 ஆனாலும், நிச்சயம், லட்சுமி தேவி சிறிது பின் எவை என்று அறிய நாராயணனை மயக்கி, அதாவது, நாராயணன் மூளையை நசுக்கி!!
(நாராயணரை யோசிக்க விடாமல் லஷ்மி தேவியார் செய்துவிட்டார்)

, இதனால், நிச்சயம், நாராயணனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இக்குழந்தை யார்???? என்பதை எல்லாம், நிச்சயம், அதாவது, லட்சுமி தேவிதான், எதை என்று கூட, அவ் மூளையிலும் கூட, நிச்சயம், சி எவை என்று புரிந்து கொள்ள. அதாவது, மதி மயக்கி!!


 ஆனாலும், நாராயணன் மீண்டும், அடடா!!!, என்ன இது???, ஏது விளையாட்டு??? என்றெல்லாம்.

 ஆனாலும், எவை என்று புரிய.  அக்குழந்தை அழுதது!

(குழந்தை வடிவில் லட்சுமி தேவியார்)


எதை என்று அறிய. ஆனாலும், அப்பனே, ஓடோடி வந்தார்கள். பின், நிச்சயம், அவ்வக்தர்களும்,!!!

 குழந்தை அழுது கொண்டே இருக்கின்றதே!!!. எதை என்று புரிய, அழுது கொண்டே இருக்கின்றதே.!!!

 நிச்சயம், தன்னில் எதை என்று புரிய என்றெல்லாம்!!!

 யார் ?? இக் குழந்தை என்றெல்லாம்!!!


. நிச்சயம், தன்னில் கூட யாராவது பின் இருக்கின்றீர்களா??? சத்தம் கேட்டு இன்னும் ஓடி ஓடி, அதாவது, அதாவது, இல்லத்தவளை, அதாவது, நீ இங்கே இரு. இக்குழந்தை வைத்துக்கொள்.

யாராவது தெரியாமல் இக்குழுதையை இங்கு விட்டு விட்டு சென்று விட்டார்களா.. என்றெல்லாம் யான் நிச்சயம்... சமநிலைப்படுத்தி அங்கும் இங்கும் சென்று.. பார்த்து வருகின்றேன். 

ஏனென்றால் நிச்சயம் யாராவது.. இங்கு மாடு மேய்ப்பவர்கள் கூட இங்கு விட்டு விட்டு சென்றிருக்கலாம் என்று!!!

எல்லா இடங்களுக்கும் ஓடோடி பார்த்தான்!!

ஆனாலும் யாருமே இல்லை!!!


குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த புரட்டாசி சனிக்கிழமை வாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: