​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 31 July 2026

சித்தன் அருள் - 2263 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 1!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 1

நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===============================================
# இவ் சத் சங்கம் குறித்த ஒரு விளக்க குறிப்பு.
===============================================

( குறிப்பு :- இந்த சத்சங்கத்தில் பங்கேற்ற யாத்திரை குழு அடியவர்கள், கடந்த பெங்களூர் சத்சங்கத்திலிருந்து தொடங்கி கந்தர் அனுபூதியை படித்தும் பாராயணம் செய்தும், அதை பொது மக்களிடம் எடுத்துச் சென்றும் வந்தவர்கள். 

மேலும், குருநாதர் கூறியபடி நவதானிய தீபங்களை முறையாக ஏற்றி வழிபாடு செய்தும், அறுபடை வீடுகள் மற்றும் பஞ்சபூத ஸ்தலங்களின் யாத்திரையையும் நிறைவேற்றியும் உள்ளனர். 

குருநாதர் உரைத்த வண்ணம் ஆலயங்களில் புண்ணிய சேவைகள் பல செய்தனர். அதுமட்டுமல்லாது, குருநாதர் அருளிய நவ கைலாயம், நவ திருப்பதி போன்ற புனித யாத்திரைகளையும் செவ்வனே செய்து முடித்துள்ளனர்.

அதன் பின், 3 அமாவாசை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தல், கடலில் பால், புனித நீர், தீபம் விடுதல், பித்ருக்களுக்கான தர்ப்பணங்கள் போன்ற அனைத்தையும் முறையாக செய்து முடித்தனர்.  

வெற்றி தரும் விஜயாபதியில் முறையாக வழிபாடுகள்…பிள்ளையார்பட்டி, கண்டமங்கலம், பெரிச்சி ஆலய வழிபாடுகள்…சென்னையில் கடலில் அமாவாசை பரிகார பூஜை, பார்த்தசாரதி ஆலம், சென்னை அஷ்டலக்ஷ்மி ஆலயம், and காளிகாம்பாள் ஆலயம் …முறையாக வழிபாடுகள்

கூட்டுப் பிரார்த்தனையில் சித்தர்கள் கூறும் அனைத்து பரிகாரங்களையும் வழிமுறைகளையும் முறையாக குழுவாக தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றவர்கள்…

இவ்வாறு குருநாதர் கூறிய உத்தரவுகளை முழுமையாக அனுசரித்து வந்த இந்த அடியவர்களை, குருநாதர் தனிப்பட்ட முறையில் அழைத்து, ஒவ்வொருவருக்கும் வாக்குகளையும் நல்லாசிகளையும் வழங்கினார்.

குருநாதர் ஏற்கனவே கூறியிருந்தார்:-  “யார் ஒருவர் சித்தர்களைப் பேச்சு நடக்கின்றார்களோ, அப்படியே பின்பற்றி வருகின்றார்களோ, அவர்களுக்கு எங்களுடைய வாக்குகளும் வழிகாட்டுதலும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.”

குருநாதருடைய வாக்குகள் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, குருநாதருக்கு நல்லோர், தீயோர் என்ற பாகுபாடு இல்லை. 

அனைவரும் குருநாதருடைய பிள்ளைகளே. ஆனால் குருநாதருடைய வாக்குகளை மிக பணிவுடன் யார் பின்பற்றி கேட்டு வருகின்றார்களோ, அவர்களுக்கு புண்ணிய பலன்கள் உயர்ந்து, வாக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். 

இதை அன்பு அடியவர்கள் நன்கு மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். குருநாதர் உரைத்த வாக்குகளை , விஷயங்களை அப்படியே செய்து வரவேண்டும். அப்படி செய்து வந்தால், புண்ணிய பலம் உயர்ந்து குருநாதருடைய சுவடி அவர்கள் இல்லம் தேடி வரும்….வாக்குகள் கிட்டும். 

அந்த உத்தரவின்படி நடந்த இந்த சத்சங்கத்தில் ,  அடியவர்களுக்கு, குருநாதர் வாக்குகளையும் அருளாசிகளையும் வழங்கினார். அந்த வாக்குகளில் உள்ள பொதுவான உபதேசங்களை இப்பதிவுகளில் நாம் தெரிந்து கொள்ள உள்ளோம். வாருங்கள் குருநாதர் வாக்கின் உள் செல்வோம்……) 

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

பின் நிச்சயம் தன்னில் கூட நீங்கள் எதை கேட்கப் போகின்றீர்கள் என்பவையெல்லாம் யான் அறிவேன். 

ஆனாலும் அனைத்தும் சொல்லிவிடுவேன். மீண்டும் அதைத்தான் நீங்கள் கேட்கப் போகின்றீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றாருன்னா, யார் யாருக்கு என்ன வேணுமோ… அதெல்லாம் வந்து எனக்கு தெரியும். நான் சொல்லிடுவேன். ஆனா கடைசில நீங்க என்ன பண்ணப் போறீங்க? 

அடியவர்கள் :- திரும்பியும் அதே கேள்விதான் நீங்க கேட்கப் போறீங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  திரும்பியும் அதே கேள்விதான் நீங்க கேட்கப் போறீங்க.  

======================================
# இறைவனை ஏன் வணங்குகின்றீர்கள்? 
======================================

குருநாதர் :- தாயே, எதை என்று புரிய, அதனால் பின் யான் உங்களை முதலில் கேட்கப் போகின்றேன், ஒரு கேள்வியை. நிச்சயம் தன்னில் கூட இறைவனை ஏன் வணங்குகின்றீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரியா போச்சு. எல்லாரும் நீங்க என்ன கேள்வி கேட்பீங்க, அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்க ஏன் இறைவனை வந்து வணங்குகிறீர்கள்? கேட்கிறேன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லுங்க…


அடியவர் 1 :- வழக்கம் ….அப்படியே பழகிடுச்சு, சின்ன வயசுல இருந்து.


குருநாதர் :-  எதை, எவை என்று அறிய தாயே, இவை நிச்சயம் சாத்தியமாகாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  இது கரெக்ட் இல்ல. வேற.

அடியவர்  :- எழுந்து நின்று சொல்லுங்கள் ….. 

அடியவர்2  :- இனி பிறவாமை 

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட இல்லை.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுவும் இல்லையாம்.


அடியவர் 3  :- படைத்தவர் அவர் தான்; அவனன்றி ஒரு அணுவும்  அசையாது.


குருநாதர் :-   தாயே, எவை என்று அறிய பின், அதாவது பின் இவள் சொன்னால் எதை என்று புரிய. நிச்சயம் பின் அப்படியே என்று. இதனால் யானும் சொல்கின்றேன், எவை என்ற கூற இவையெல்லாம் ஒரு மனப்பாடம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  காப்பி அடிக்குது தான் சொல்றார். இதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டேன். ஏற்கனவே சொல்லிட்டு இருக்குறது வந்து காப்பி.


அடியவர் 4   :- புதுசா சொல்லுங்க. ஏதாவது.


சுவடி ஓதும் மைந்தன் :-  புதுசா ஏதாவது சொல்லுங்க.
 
அடியவர் 5    :-  அவர் கிட்ட தானே நம்ம போகணும். 

அடியவர் 4   :-  ஒரு நம்பிக்கை தான்.


குருநாதர் :- எதை, எவை என்று கூற நிச்சயம் இல்லை. தாயே, ஒன்றை சொல்கின்றேன், இவையெல்லாம் நிச்சயம் புதிதாக சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, பழைய எல்லாம் சொல்லிடக்கூடாது வந்து. புதுசா சொல்லணும்.


அடியவர் 6    :- ஒரு அபிமானம். அதாவது இறைவன்ட்ட சொன்னா நமக்கு திருப்தி கிடைக்கும்னு ஒரு…. இப்போ வீட்டுல பேசுறோம் இல்லையா, சிலதெல்லாம் பேச முடியலன்னா அவர்கிட்டயே பேசிட்டு…….


குருநாதர் :- தாயே, எதை என்று புரிய இல்லை.


அடியவர் 7   :- அதுவும் இல்லையாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   அம்மா, சொல்லுங்கம்மா. ஐயா, இறைவன் கோவிலுக்குள்ள போறீங்க இல்லையா.

அடியவர் 8 :- இறைவனை கும்பிட்டா நல்லது நடக்கும் என்று நினைச்சுக்கிட்டே தான் கும்பிடுறோம்.


குருநாதர் :-  அப்பா, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய நிச்சயம். ஆனாலும் இப்படித்தான், நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படித்தான்ப்பா வந்து இருக்கிறாங்க, நல்லது நடக்கும்னு சொல்லிட்டு அடுத்து. இது இல்லன்னா அதுக்கு.


ஒரு அடியவர் :- ( ஆடியோ தடங்கல்கள் )


அடியவர் 7   :- அதுவும் இல்ல. அடுத்தது.


அடியவர் 9  :- இறைவனை அடையறதுக்கு தாங்க, ஐயா. இறைவனை அடையணும். அவர்கிட்ட இருந்து பிரிந்து வந்துட்டோம்.


குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட நீ வணங்கினால் என்ன, எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின். 

சுவடி ஓதும் மைந்தன் :-   நம்ப மட்டும், அதான். நம்ப மட்டும் வணங்கினா போதுமா?


அடியவர் 9  :-  எல்லாரும் வணங்கணும்….

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இவையும் ஆகாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவும் இல்ல. அடுத்து நெக்ஸ்ட் கொஸ்டின்.


அடியவர் 10   :-  அனைவரும் நல்லா இருக்கணும் என்றதுதான் இறைவன்.


குருநாதர் :-  அப்பனே, எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. படைத்தவன் பார்த்துக்கொள்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது படைத்தவர் வந்து பார்த்துக்கொள்வார். நீ நல்லா இருக்கணுமோ, நல்லா இல்லையோ என்று அது வந்து பார்த்துப்பார். அடுத்து.


அடியவர் 11 :- எல்லாத்துக்கும் அவரே பதில் சொல்றார். 

அடியவர் 12  :- ஆத்ம திருப்திக்காக. ….

குருநாதர் :-  எதை, எது என்று புரிய நிச்சயம் இல்லை.


அடியவர் 12  :-  இல்லையா.


அடியவர் 13  :- மனநிலை மாறட்டும். நல்ல வழியில நம்ம மனசை மாத்தணும்.


குருநாதர் :-  எதை என்று அறிய நிச்சயம் இறைவனை வணங்கினால் நிச்சயம் பின் எதை என்று கூற பின் மனம் மாறுமா? என்ன?

அடியவர் 13  :- மனம் மாறணும். உங்க அருள் இருந்தா மாறும்.


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் எம் அருள் ஆசிகள் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட, பின் சாக்கடை என்று சொல்கின்றேன். அங்கேயே தான் காலை வைக்கின்றான். என்ன செய்வது? 

அடியவர் 13  :- அய்யய்யயோ !!!!!

அடியவர்கள்  :- ( சிரிப்புடன் கை தட்டல்கள் …செம …) 
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எங்களோட அருள், கடவுளோட அருள் இருந்தாலும் சாக்கடைன்னு அங்க இருக்குதுடா.


சுவடி ஓதும் மைந்தன் :-  போகாத என்று சொன்ன உடனே என்ன பண்றாங்க?


அடியவர் 10  :- அங்கதான் போய் மிதிக்கிறாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  அங்க சாக்கடை தான் வந்து.


அடியவர் 14 :- சிற்றின்பங்களை மறந்து பேரின்பங்களை  அடையணும். அதுதான்.


குருநாதர் :-  அப்பா, இவையெல்லாம் மறக்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் மறக்க முடியாதுப்பா.


அடியவர் 15  :- அட, சிற்றின்பங்கள் எல்லாம் மறக்க முடியாது.


அடியவர் 14 :-  யாரும் இல்லனாலும் அப்போ நமக்கு ஒரு துணை இருக்காங்கன்ற ஒரு நம்பிக்கை வரும்.


குருநாதர் :-  அப்பனே, எதை என்று கூறப்பின் அம்மையே, இவையும் எதை என்று புரிய பின் சொன்னவையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் சொல்றது தான் இது வந்து எல்லாரும். புதுமையா சொல்லணும்மா.


அடியவர் 7 :- புதுமையா சொல்லணும்.

======================================
# அடியவருக்கு ஒரு வரம்…
======================================


அடியவர் 9 :- புதுமையா, ஐயா சொன்னா தாங்க, ஐயா எங்களுக்கு தெரியும் ( குருநாதர் வாக்கை தான்  சொல்ல முடியும்…எங்களுக்கு எதுவும் தெரியாது. குருநாதர் திருவடிகள் சரணம்….சரணாகதி…. ) 

அடியவர்கள் :- சூப்பர் ….ஹா.. ஹா.. ஹா.. ( சிரிப்பு )  

அடியவர்கள் :-  ( கை தட்டல் ) 


குருநாதர் :-  தாயே, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் நலங்களாகவே. அறிந்தும் கூட கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் நோய்கள், எது என்று புரிய பின் வரப்போகின்றது அதை மாற்றித் தருகின்றேன். 

( கருணை கடல் திருவடிகள் போற்றி !!!!!) 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு யாருக்கோ, உங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ என்ன பண்ண போறது வந்து.?


அடியவர் 9 :-  நோய்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- சில நோய்கள் வரும்போது…. இந்த கொஸ்டின் என்னை கேட்ட பார்த்தீங்களா, அதுக்காக நான் வந்து….


அடியவர்7  :- மாத்தி தரேன்.


சுவடி ஓதும் மைந்தன் :- மாத்தி தரேன்.


அடியவர் 7  :- அது இல்லாம பண்ணி தரேன்.


சுவடி ஓதும் மைந்தன் :- இல்லாம பண்ணி தரேன்றாருமா. ஓகேங்களா, உடம்பு சரியில்லையோ, ஏதோ வந்து, எது இருந்தாலும் அதை நான் பண்ணி தரேன் என்றாரு. 

======================================
#  இறை என்பது என்ன?  - அடுத்த கேள்வி 
======================================

குருநாதர் :-  எதை, எது என்று புரிய இதனால் இறைவன் எது என்று புரிய, இன்னும் எதை என்று அறிய பின் இறை என்பது என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறை என்பது என்ன?


அடியவர் 7  :-அடுத்த கேள்வி.


குருநாதர் :-  எது என்று புரிய பின் நிச்சயம் போதுமான இடத்தில் பின் சரியான நேரத்தில் என்ன வேண்டும் என்று, பின் உங்களுக்கு நிச்சயம் தன்னில் கூட, அறிந்து நிச்சயம் கொடுப்பவனே பின் அதாவது இறை. 

குருநாதர் :-  எவை என்று கூற இறை  என்றால் பின் உணவு. அனைத்தும் அப்படித்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? இறைவன் யாரு.?

அடியவர் 9  :- சாப்பிடுற மாதிரி …

அடியவர் 7  :- இல்ல இல்ல …


சுவடி ஓதும் மைந்தன் :- இறை என்பது என்ன? இறை, இறை.


அடியவர் 5  :- இரை .


அடியவர் 6  :- இரைன்னா ஃபுட். உணவு 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஃபுட்ன்னு சொல்லலாம்.


அடியவர் 8  :- ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ரைஸ், சின்ன ரைஸ், பெரிய ரைஸ் எல்லாம் இல்ல அதுல வந்து. இறைன்னு சொல்றாரு அப்ப. அவங்க அவங்க உங்களுக்கு எந்த நேரத்துல.


அடியவர் 8  :-  என்ன சாப்பாடு.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சாப்பாடு வேணும்?  என்ன சாப்பாடுன்னா இங்க என்ன குறிக்குது வந்து.?


சுவடி ஓதும் மைந்தன் :- இன்பமும் ஒரு….


சுவடி ஓதும் மைந்தன் :- சாப்பாடுன்னா… சாப்பாடு இல்ல (இங்க).


அடியவர் 8  :-  சாப்பாடு இல்ல. எது எது தேவையோ.


சுவடி ஓதும் மைந்தன் :- எது தேவையோ அதை கொடுப்பவன் தான்.


அடியவர் 8  :-  இறைவன்.


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன். அம்மா புரியுதுங்களா. நீங்க ஏதாவது கேக்கணும்னா கேக்கலாம்மா.

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் அவன்தான் கொடுப்பான். 

பின் இன்பமாயினும்… 

துன்பமாயினும்… 

நோயாயினும்…. 

நிச்சயம் திருமணமாயினும்…. 

அனைத்தும் ஆயினும். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே யார் கொடுப்பாரு?


அடியவர் 8  :-  இறைவன் தான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் தான் கொடுப்பார். அவர் யார் அப்பன்னா வந்து? உங்களுக்கு இறைவன் என்பவர் யார்? இங்க சொல்றாரோ அது மாதிரி அடுத்து சித்தர் வேற மாதிரி சொல்லிடுவாருமா. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா அடுத்து வேற மாதிரி ( சொல்லுவார் ) ஏன்னா….. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா,,,,, நீங்க ஃபர்ஸ்ட் ஸ்டாண்ட்ல இருந்தா…. அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   10th ஸ்டாண்ட்ல இருந்தா….  அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   12th ஸ்டாண்ட்ல இருந்தா….  அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   PhDல இருந்தா….  அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுவாருமா. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப நம்ம என்ன பண்ணுவோம்? பக்குவம் பெற்றிருக்கணும்மா. பக்குவங்கள் அடைஞ்சிருக்கணும். நிறைய வந்து பக்குவங்கள்…. ஞானங்கள்…. அறிஞ்சிருந்தா மட்டும்தான் வந்து… என்ன ஆகும் வந்து.


அடியவர் 6   :-   ஐயா, இப்ப என்ன தேவைன்றது நமக்கே புரியல.

குருநாதர் :- தாயே, எதை என்று புரிய அதாவது நிச்சயம் தன்னில் அறிந்து கூட அதாவது நிச்சயம் ஒரு எவை என்று கூட பசிக்கின்றது.  இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் உணவத்துக்கு செல்கின்றாய் எதை என்று புரிய. உனக்கே எவை என்று அறிய பின் எவ்வாறு அதை சாப்பிடலாமா? இதை சாப்பிடலாமா? என்றெல்லாம் நிச்சயம் செல்கின்றாயா என்ன? நிச்சயம் உட்கார்கின்றாய். அங்கேதானே யோசிக்கின்றாய்.


அடியவர் 6   :-  உணவை பார்த்து தான் யோசிக்கிறோம். என்ன சாப்பிடலாம் என்ன.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுவும் மெனு கார்டு கொடுக்குறாங்க இல்ல… அது கூட வந்து.. நீங்க போன உடனே ஏதாவது சொல்லிடுறீங்களா? 


அடியவர் 6   :-  டேபிள்ல மெனு.


சுவடி ஓதும் மைந்தன் :-  டேபிள்ல வச்சு ஏன் வச்சுக்கிறாங்க சொல்லுங்கமா அகத்தியருக்கு? உங்களுக்கு கேக்குறது தான் சொல்றாரு அவரு.


அடியவர் 7  :- நீங்க கேட்டதுக்கு தான் கேக்குறாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க கேட்டதுக்கு தான் கேக்குறாரு.

======================================
#  பிரம்ம முகூர்த்தம்   - அடுத்த கேள்வி 
======================================

அடியவர் 10   :- ஐயா. பிரம்ம முகூர்த்தம் பற்றி.


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட “சுக முகூர்த்தம்” என்பதை எவை என்று அறிய, அதன் பொருள் மாற்றிவிட்டார்கள் அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- பிரம்ம முகூர்த்தம் என்பது.


அடியவர் 10   :- சுக முகூர்த்தம் .


சுவடி ஓதும் மைந்தன் :-  “சுக” முகூர்த்தம்.


அடியவர் 7   :- எந்த டைம் எந்த டைம் ஐயா காலையில?


குருநாதர் :- அப்பனே, இன்னும் அப்பனே நேரங்கள் இருக்கின்றது. இவையெல்லாம் சுலபமானவை சொல்கின்றேன் பின்பே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது சுலபமானவைப்பா இன்னும் பின்னாடி நான் சொல்றேன் அப்பான்றாரு இதை பத்தி.

======================================
#  இறைவன் எப்படி உங்களை வழிநடத்துவார் என்ற ரகசியங்கள்….
======================================


அடியவர் 9  :-  அப்ப இதெல்லாம் சிற்றின்பங்கள். இப்ப நம்ம சாப்பிடுறது.. இருக்கிறது.. வாழ்றது… எல்லாமே. அப்ப அதுதான் நமக்கு தேவைன்னு இறைவன் நினைக்கிறாரா? 


குருநாதர் :- எதை எவை என்று கூற தாயே சிறு சிறுதாக பின் ஊட்டினால் தான் அறிவும் வளரும். பின்பு எதை என்று அவனுக்கு தெரியும்.

சுவடி ஓதும் மைந்தன் :-   இதெல்லாம் வந்து ஊட்டி வளர்த்தா மட்டும்தான் அவருக்கு என்ன தெரியும்.


அடியவர் 7  :-  பின்னாடி என்ன தேவை.


சுவடி ஓதும் மைந்தன் :-  பின்னாடி என்ன தேவை என்று.


அடியவர் 7  :-  உண்மையான தேவை என்ன.


குருநாதர் :- எதை என்று கூற முதலில் எவையெல்லாம் கொடுக்க வேண்டுமோ அவையெல்லாம் கொடுப்பான். பின்பு அறிவை எதை என்று எதன் மூலம் எதை என்று கூற என்ன நினைக்கின்றான் என்ன நினைக்கின்றாள் என்பது எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. அதன்படியே இறைவன் அடுத்த நிலைக்கு நிச்சயம் எடுத்துச் செல்வான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு?  ஃபர்ஸ்ட் என்ன கொடுப்பாரு உங்களுக்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  சின்ன சின்னதா உங்களுக்கு தேவையானது கொடுப்பாரு வந்து. அப்ப என்ன பண்ணுவீங்க? நீங்க எதை நினைக்கிறீங்க?  எப்படி பண்றீங்க?  அதை நினைச்சு அடுத்து என்ன பண்ணுவாரு? 

அடியவர் 4  :- எங்க மனச பார்த்து..அடுத்த ஸ்டெப் 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. நெக்ஸ்ட் ஸ்டெப் எடுத்துட்டு போவாரு. 

======================================
#  உங்கள் வாழ்வில் அடுத்த நிலைக்கு முன்னேற்றம் காண…..
======================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு இல்லை என்றால் நீங்கள் அப்படியே இருக்க வேண்டியதுதான். 

குருநாதர் :- எதை என்று புரிய அடுத்த நிலைக்கு போக வேண்டியது, எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, நல் மனமும்… உயர்ந்த சிந்தனையும்… எவை என்று கூற  தர்மத்தையும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த நிலையை வந்து செல்லணும்னா என்ன பண்ணனும் வேணும்.


அடியவர் :- நல் மனம் இருக்கணும் உயர்ந்த சிந்தனை இருக்கணும்.

======================================
(இப்போது யாத்திரை குழு அடியவர்கள் உயர்ந்த நல் சிந்தனையுடன் மைந்தனுக்கு தாமரை மாலை மரியாதையாக அணிவித்தனர் ….சங்கு நாத்தத்துடன்….) 
======================================

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா இப்பதாங்க இதெல்லாம். ( சங்கோஜப்பட்டார் …)


அடியவர் :- நல்ல சிந்தனை.


அடியவர் 4 :- நல்ல சிந்தனை ஐயா.


அடியவர் 5 :- என்ன உயர்ந்த மனம்.


அடியவர் 7  :- ஐயா உயர்ந்த மனம்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா (தாமரை மாலை) இதெல்லாம் கடவுளுக்கு  போடுறது ஐயா.


அடியவர் 7  :-  இல்ல இல்ல.


அடியவர் 3  :-  அகதீசாய நாம …( சங்கு நாத்தத்துடன்….) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா இதெல்லாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா இங்க பாரு அம்மா. இது புதுசா இருக்கு எல்லாமே. அம்மா இதுவரைக்கும் யாருக்கும் போட்டது இல்லமா இதெல்லாம். இன்னைக்கு தான்யா (தாமரை மாலை) போட்டு இருக்காங்க.

அடியவர்கள் :- ( பரவசம் …கை தட்டல்கள் …) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அடுத்த கட்டம் போகணும்னா என்னமா பண்ணனும்.


அடியவர் :- நல் மனம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்ல மனசு.


அடியவர் :-  உயர்ந்த  எண்ணங்கள்.தர்ம சிந்தனை.


சுவடி ஓதும் மைந்தன் :-  உயர்ந்த எண்ணங்கள். தர்ம சிந்தனை. நல்ல மனசு இருக்கணும்மா. போதும். அடுத்த நிலை.

======================================
# ஏன் வாழ்வில் முன்னேற முடியவில்லை?
======================================


குருநாதர் :- நிச்சயம் அடுத்த நிலை செல்லாததற்கு காரணமே பின் தீய குணங்களே காரணம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்த நிலை.


அடியவர் :-  போறதுக்கு காரணமே தீய குணங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தீய குணங்கள் தான்மா. அது நம்ம மனசுல இருக்கக்கூடாது. அடுத்த நிலையில் நம்ம போகலைன்னா என்ன ஆகுது வந்து?  
………..
சுவடி ஓதும் மைந்தன் :- நம்ம மனசு நல்லது இல்லம்மா. 
………..
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா இல்ல. அடுத்து அடுத்த நிலை போகணும்னா என்ன ஆகுது? 
அடியவர் :- (நல்) மனம் தான் (வேண்டும்).


குருநாதர் :- தாயே!!! மனிதன் நிலைமைகள் மாறிக்கொண்டே போகின்றது. 

குருநாதர் :- போட்டி, பொறாமை நிச்சயம் தன்னில் கூட. அடுத்தவர் பின் கெடுப்பது நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  என்ன ஏது என்று பிறர் பற்றி பின் எவை என்று கூற குறை கூறி….  அவன்.. இவன்.. இப்படி எல்லாம்.. என்றெல்லாம்.. தாயே தேவையில்லை. நிச்சயம் உன்னை நீ அறி. உன்னை நீ சிந்தித்து பார்.


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :- நம்ம யார்?  மனிதன் ஏன் முன்னேறி போக முடியல? எல்லாம் போட்டி பொறாமை… என்னடா இவன் இப்படி… அப்படி இருக்கான் சொல்லிட்டு…. அப்படி போயிட்டு இருக்குது. ஆனால் நம்ம யாரு? 


அடியவர் :- நம்ம எதுக்கு வந்தோம்?


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம எதுக்கு வந்தோம்?  நீ உன்னை நீ வந்து. தெரிஞ்சுக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சுக்கணும். அப்ப யாரும்….. அம்மா புரியுதுங்களா? யாருமே தெரிஞ்சுக்கிறது இல்ல. 

======================================
# கஷ்டங்கள்/துன்பங்கள்  = வாழ்வின் முன்னேற்றங்கள்
======================================

குருநாதர் :- தாயே எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் உங்களுக்கு இறைவன் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் பின் ஒரு ஒரு பின் நிச்சயம் தன்னில் கூட, பின் இடத்தில், அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் பக்குவம் ஏற்படுத்தி, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அதாவது கஷ்டங்கள் வருகின்றது என்றால் நிச்சயம் ஏன் கஷ்டங்கள் வருகின்றது? எதை என்று புரிய அறிந்தும் கூட இதை நிச்சயம் அடுத்த நிலைமைக்கு நீ செல்ல. 

குருநாதர் :-  பின் இதை புரிந்து கொண்டால் தான் அடுத்த நிலைமைக்கும் நீ செல்வாய் என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- .ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார் சொல்லுங்க பார்ப்போம்?


அடியவர் 4 :-  அடுத்த நிலைமைக்கு.


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்த நிலைமைக்கு செல்வதற்கு.


குருநாதர் :-  ஆனால் அடுத்து அதற்குள்ளே மனிதன் நிச்சயம் அறிவாளியாக நினைத்துக்கொண்டு துன்பம் வந்து கொண்டே இருக்கின்றது. இதை மாற்று என்று. இதனால் அடுத்த நிலைமைக்கு செல்வதே இல்லை மனிதன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதுக்குள்ள என்ன பண்ணிடுறான்? டேய் துன்பம் வருதுடா நிறைய.. எனக்கு ரொம்ப கஷ்டம் வருதுன்னு சொல்லிட்டு என்ன பண்றாரு வந்து? 

சுவடி ஓதும் மைந்தன் :- அதை மாத்துங்கன்னு சொல்றாரு அப்ப வந்து அது பக்குவ நிலை அடைஞ்சு நீங்க என்ன கேக்குறீங்க அதை கொடுக்குறதுக்கு தான் அந்த துன்பமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்குள்ள என்ன நினைக்கிறோம் நம்ம வந்து ஏப்பா எனக்கு கஷ்டம் வந்துருச்சு. எனக்கு இது பண்ணி எனக்கு மாத்திருங்கன்னு சொல்லிட்டு நீங்களே சொல்லிடுறீங்க அப்ப எவ்வளவு பெரிய அறிவாளி நீங்க பார்த்துக்கோங்க. இது அறிவா இது? 

அடியவர் 4  :- இந்த துன்பத்தையே கடக்குறதுக்கு அவர் தானே ஹெல்ப் பண்ணனும்.


குருநாதர் :-  தாயே எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் முன்னே உட்கார்ந்து கொண்டிருக்கின்றாய்.

அடியவர்கள் :- ( சிரிப்புகள்..ஹா ..ஹா …ஹா … ) 


அடியவர் 7  :- எங்க உட்கார்ந்து பார்த்துட்டே இருக்கீங்க…


சுவடி ஓதும் மைந்தன் :- நீ எப்படி பார்க்கிற அதனாலதான் முன்னே உட்கார்ந்து இருக்கீங்க. அதனால வந்து 

குருநாதர் :-  எதை எவை என்று அறிய தாயே நிச்சயம் தன்னில் கூட துன்பம் ஒன்று எவை என்று கூட, இறைவன் பின் கொடுத்தால் எவை என்று அறிய, பின் இறைவனுக்கு பாதுகாப்பாகவும், பின் எவை என்று கூட, பாதுகாப்பையும் பின் ஏற்படுத்த தெரியும் தாயே. 

சுவடி ஓதும் மைந்தன் :- துன்பத்தை கொடுத்தா… எப்படி பாதுகாக்கிறது என்பது இறைவனுக்கு தெரியும்மா.


அடியவர்   :-  பாதுகாப்பையும் கொடுக்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன் :- பாதுகாப்பையும்.


அடியவர்   :- இறைவன் கொடுப்பார்.


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் கொடுப்பாருமா.

======================================
# ஏன் சித்தர்கள் வாக்குகள் அதிகமாக வருகின்றது ?
======================================


குருநாதர் :-  தாயே எவை என்று கூற இதனால் இக்கலியுகத்தில் அப்பனே பின் நிச்சயம் தர்மத்தை எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது இறைவன் ஏதோ தெரியாமல் வரத்தை கொடுத்துவிட்டான். பின் மனிதனிடத்தில் நிச்சயம். 

குருநாதர் :-  மனிதன் வீணாக்கிக் கொண்டே இருக்கின்றான். தர்மம் தலைகீழாக போய்க்கொண்டே இருக்கின்றது. இதனால் மனிதனிடத்திலே உண்மைகள் சொல்லி, தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம் அவ்வளவுதான்.


அடியவர் 7 :- நைஸ்.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றேன் தெரியுங்களா? 


அடியவர்:- தர்மத்தை.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( கலியுகத்தில் மனிதர்கள் உண்மையை அறியாமலே நடித்து, ஏமாற்றி, தவறான வழிகளில் செல்வதை நாம் பல இடங்களில் காண்கிறோம். இறைவன் இருக்கிறார்; ஆனால் மனிதன் நேர்மையான தர்ம வழியில் நடந்தால் மட்டுமே இறைவன் கை கொடுப்பார். மனிதன் வேண்டி வேண்டி இறைவனிடமிருந்து “ஆட்சி நம்ம கையில இருக்கணும்” என்று வரம் வாங்கிக் கொண்டான்; அதனால் கலியுகத்தில் இறைவன் “சரி, நீங்களே பார்த்துக்கோங்க” என்று ஆட்சியை மனிதனின் கையில் விட்டார். ஆனால் மனிதன் அந்த வரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஏமாற்றி, தப்புகளைச் செய்து, தர்மத்தை விட்டு வெளியே போனான். இதனால் இறைவன் அதை மீண்டும் மனிதனின் கையில் திருப்பி கொடுத்து, “இதைக் ஒழுங்காகப் பயன்படுத்திக்கோ” என்று மாற்ற வாய்ப்பு கொடுக்கிறார். அப்படியும் மனிதன் மாறவில்லை என்றால், இறைவன் கடுமையாகச் சுட்டிக் காட்டுவார் — அதுதான் ‘டமால் டுமில்’, அதாவது கடுமையான தண்டனை அல்லது விழிப்புணர்வு. )

======================================
# அபாய சங்கு - “சில ஆண்டுகளிலே வர உள்ள கடும் வறட்சி”….
======================================

குருநாதர் :-  எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகளுக்கு ஒரு முறை எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் வறட்சி என்பது வரும். வருங்காலத்தில் நிச்சயம் பின் அவை தன் வந்து கொண்டே இருக்கின்றது சில ஆண்டுகளிலே… 

சுவடி ஓதும் மைந்தன் :- சில எப்படி சொல்றது? 

அடியவர் 7 :-வறட்சி 

சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகளுக்கு ஒரு தடவை வந்து என்ன பண்ணும்? 

அடியவர் 7 :- வந்து வறட்சி என்பது வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அது என்ன ஆகுதுன்னா வந்து… அடுத்தடுத்து இது பண்ணிட்டு 

அடியவர் :- சில ஆண்டுகள் வரப்போகின்றது 

சுவடி ஓதும் மைந்தன் :- சில ஆண்டுகளிலே வந்து வரப்போகின்றது. 

குருநாதர் :-  அறிந்தும் அதற்குள்ளே மனிதனுக்கு எத்தனை எத்தனை எதை என்று புரிய, பின் என்ன பின் விஞ்ஞானம் பின் தெரிந்திருந்தாலும்…. அதை காக்க முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சிருந்தாலும் மனிதனுக்கு என்ன வித்தியாசங்கள் என்ன இது பண்ணினாலும்?..... 

அடியவர் 7 :- இல்ல விஞ்ஞானம் இருந்தா கூட, அதை காப்பாத்த முடியாது 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை காப்பாத்த முடியாது… 

அடியவர் 7 :-  இயற்கையை…

======================================
# சித்தர்கள் வாக்குகள் இவ்வுலகில் பலருக்கு செல்லும்…..
======================================

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் அதனுள்ளே பின் பல மனிதர்களுக்கு எவை என்று புரிய, பின் எங்களுடைய பின் வார்த்தைகள், பின் செல்லும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனுள்ளே என்ன பண்ணுவாங்களாம் வந்து? சித்தர்கள் வந்து.. 

அடியவர் :- அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் செல்லும் 

சுவடி ஓதும் மைந்தன் :- அவருடைய வார்த்தைகள் எல்லாம்… சொல்லி… அதுக்குள்ள எங்கேயோ அவரே பரவிச்சிருவாங்க. நம்ம படிக்க… நம்ம சொல்றோம்னா…. அவங்க எங்கெங்க வாக்குகள் போகணுமா அங்கங்க போயிட்டு…. அது சேர்ந்துரும்மா.  ஓகேங்களா 

======================================
# வாக்குகள் கேட்டாலே.. அது புண்ணியம்…
======================================

குருநாதர் :-  நல் விதமாகவே இதனால் நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு தேவையானதை யாங்களே கொடுப்போம் எதை என்று அறிய.  

குருநாதர் :-  அதனால் புண்ணியம் செய்தவர்கள் தான் எங்கள் வாக்கை கேட்பதற்கும் எவை என்று கூட அறிந்து கூட 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா….. உங்களுக்கு நீங்க கேட்டு தான் தர வேண்டிய அவசியம் இல்லை. வரங்கள் எல்லாம் சொல்லிட்டு… 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கள் வாக்குகள் கேட்டாலே.. அது புண்ணியம் தான்மா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால வந்து நாங்க என்ன பண்ணுவோம் உங்களுக்கு தேவையானதை நாங்கள் கொடுப்போம் 

======================================
# ஏன் இவ் சத்சங்க வாக்குகள் இப்போது ?
======================================

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைத்து ஆன்மாக்களும் பின் ஒரு முறையில் அழுது கொண்டே செல்லும் எதை என்று புரிய. 

குருநாதர் :-  யாங்கள் சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட எங்களை மீறித்தான் போக வேண்டும் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. பின் ஏற்கனவே பின் அதாவது முன் உரைத்தும் விட்டோம். 

குருநாதர் :- அறிந்து கூட இதனால் எங்களை பின் தாண்டித்தான் செல்ல வேண்டும். 

குருநாதர் :- அப்பொழுது சிறிய சிறிய தவறுகள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஐயோ!!!!! என்றெல்லாம் அழுது கொண்டே. பின் மானிட பிறப்பு வேண்டாம் வேண்டாம் என்று. 

குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நீங்கள் அனைவருமே அப்படி சென்றவர்கள் தான். 

குருநாதர் :-  யாங்கள் பின் நிச்சயம் தன்னில் கூட பின் பிறவி இருக்கின்றது அடுத்த பிறவில் யாங்கள் இழுத்துக் கொள்கின்றோம் என்று. அதனால்தான் யாங்கள் தான் உங்களை இழுத்துக் கொண்டிருக்கின்றோமே தவிர நீங்கள் பின் எவை என்று கூட பின் எது என்று புரிய பின்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால என்ன சொல்றாரு தெரியுங்களா?  நீங்க எல்லாம் வந்து?

அடியவர் 7 :-  தேடி வரல

சுவடி ஓதும் மைந்தன் :- தேடி வரலமா. நாங்க உங்களை இழுத்து… ஏதோ சின்ன சின்ன தவறுகள்… 

அடியவர் 7 :-   போன ஜென்மத்துல, (சித்தர்களை )  கிராஸ் பண்றப்ப அழுதுண்டு போணோமாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயோ அம்மா !!!! இது மாதிரி வந்து போயிடுச்சே. சின்ன தவறு பண்ணிட்டேனே. இனிமேல் வரக்கூடாது நான். என்ன பண்றதுன்னு சொல்லிட்டு அழுதுன்னு போனவங்க தான் வந்து… இந்த ஜென்மத்துல எல்லாம் வந்து…. கூப்பிட்டு… டேய் வேணாம்டா. தப்பு பண்ணிட்டாத. அதனால வந்து… அதை பாதுகாத்து… இதைவிட மோட்சம் மோட்சம் போடா. இந்த பிறவியிலாவது வந்து 

அடியவர் 5  :- மோட்சத்துக்கு 

சுவடி ஓதும் மைந்தன் :-  மோட்சத்துக்கு கூட்டிட்டு போறாரு கூட்டிட்டு போறேன்றாரு 

குருநாதர் :-  இதனால் எது என்று புரிய ஆனாலும் நிச்சயம் பின் அவ் சிறு வினையை தீர்ப்பதற்கு இவ்வளவு கஷ்டங்கள் நிச்சயம் தன்னில் கூட. பாருங்கள். நீங்களே எண்ணிப்பாருங்கள். 

அடியவர் :- அது தான் கேட்கலாம் என்று இருந்தோம் அய்யா..சின்ன தவறுக்கு …!!!!!!!!!!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- சின்ன தவறுக்கு எவ்வளவு பெரிய தண்டனை?

அடியவர் :- ஒரு பிறவியை கொடுத்து எவ்வளவு பெரிய 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு பிறவி கொடுத்து தண்டனை எவ்வளவு பெரிய தண்டனை பார்த்தீங்களா?  ஆனா இன்னும்…

அடியவர் 7 :-  தவறுதான் பண்ணிட்டு இருக்கிறோம் 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ? 

அடியவர் 7 :-  ( சிரிப்புடன் ) இன்னும் தவறுதான் பண்ணிட்டு இருக்கிறோம் 

குருநாதர் :-  இதனால் எதை என்று புரிய நிச்சயம் தன்னில், இன்னும் பின் எவை என்று புரியவில்லை என்றால், இன்னும் விஞ்ஞானம் மூலமாகவே உரைக்கின்றேன் அப்பொழுது புரியும் நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் இது புரியலைன்னா, என்ன பண்ணனும் நான் வந்து? 

அடியவர் 4 :- சயின்ஸ்… 

சுவடி ஓதும் மைந்தன் :-   சயின்ஸ் எடுத்துட்டு வராரு.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்குகள் தொடரும்.) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 29 July 2026

சித்தன் அருள் - 2262- அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10 ( நிறைவு பகுதி ) 

நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================


இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35532

===========================
# சிவபுராணம் - ஏன் 96 வரிகள் ?
===========================

குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக ஒவ்வொரு வரியும், அப்பனே, எது என்று அறிய அப்பனே, பின் எத்தனை வரிகள் அனைத்தும் உள்ளது? 

சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை வரிகள் அனைத்தும் உள்ளது? 

அடியவர்கள் :- 96

சுவடி ஓதும் மைந்தன் :- 96. 

குருநாதர் :- அப்பனே, எவை, ஏது என்று அப்பனே, நிச்சயம் இதற்கு, அப்பனே, எவ்வாறாக, அப்பனே, விளக்கம் கூறுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த 96க்கு முதல்ல விளக்கம் கூறுன்றார். 

அடியவர்கள் :- ( யோசனை ….) 

குருநாதர் :-  அப்பனே, எடு எழுதுகோலை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எடுரா  எழுதுகோலை…. ( வரை பலகையில்  எழுத எழுந்தார் ) 

அடியவர்கள் :-  ( சிரிப்புகள் ) 

அடியவர் :- எடுரா  பேனாவை. ( வரை பலகையில்  எழுத எழுந்தார் ) 

அடியவர்கள் :-  ( சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, தெரிஞ்சுக்கோங்க. உண்மையிலேயே தெரிஞ்சு வணங்குங்க. ஐயா, வேற ஒன்னும் இல்ல. வந்து ஏன்னா, நீங்க எப்ப எத்தனை காலம் தான் வந்து இறைவன் ஒரு சான்ஸ், அவ்வளவுதான். 

அடியவர் :-  96 ஓட ரகசியம் என்ன? அய்யா (அனைவரும் ) அமைதி (யாக இருங்கள். வாக்குகள் ஆரம்பம் ). 

குருநாதர் :- அப்பனே, பின் ஏது என்று புரிய. அப்பனே, ஒன்பதை மேலே இடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்பது?

அடியவர் :-  மேலே இடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( எழுது  பலகையில் 9 என்று எழுதினார்கள் மேலே ) 

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35605

குருநாதர் :- அப்பனே, கீழே அப்பனே, நிச்சயம் தன்னில் ஏது என்று ஆறை இடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( எழுது  பலகையில் 6 என்று எழுதினார்கள் கீழே ) 

அடியவர் :-  அப்பா….

அடியவர் :-  பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பூமியை சுத்தி  படிச்சிருக்கிறார் அவரு ( மாணிக்கவாசக பெருமான் ) 

குருநாதர் :-  அப்பனே, அறிவுள்ளவர்களை இதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று பின் கூறச்சொல் பார்ப்போம். இத்தனை வருடமாக நமச்சிவாய என்று சொன்னார்களே, 

சுவடி ஓதும் மைந்தன் :-   அறிவுள்ள மனிதர்களே…….

அடியவர்கள் :- ( பல உரையாடல்கள்……….. ) 


அடியவர் :- எப்படி பார்த்தாலும் ஒன்பது தான்யா. கீழ பார்த்தாலும், மேல பார்த்தாலும் ஒன்பது. 

குருநாதர் :- அப்பனே,  ஒவ்வொரு பைத்தியனும் ஒவ்வொன்றாக கூறட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (சிரித்துக்கொண்டே) என்ன சொல்றார் தெரியுங்களா? 

அடியவர் :- (சிரித்துக்கொண்டே) பைத்தியங்கள் எல்லாம் வரிசையா, சொல்லுங்க …

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொன்றாக கூறட்டும். சொல்லுப்பான்றாரு. 

அடியவர் :- எல்லா பைத்தியங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரப்படும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது ஆறு சொல்லிட்டாரு. இங்க ஒன்பது எல்லாமே இங்க. ஐயா, இப்படி போட்டாலும், இப்படி போட்டாலும், இங்க ஒன்பது தான் வரப்போறது. தலை கீழ (போட்டாலும், இங்க ஒன்பது தான் வரப்போறது…..)  

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இவ்வளவு உருவம் வரப்போகுது. 

அடியவர் :-  நேரா போட்டாலும், ஒன்பது வரப்போகுது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது இங்க போட்டா ஆறு வரப்போகுது. 

https://youtu.be/q8Hs63mXjrc?t=35665 

சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா  பார்த்தீங்களா? இது என்னது? படிங்க. 

ஒரு அடியவர் :-  நேரா வந்தா ஒன்பது, தலையில வந்தா ஒன்பது. 

அடியவர் :-  அதை தான் சொன்னாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் அதுதான், அதுதான் சொல்றாரு. அறிவுள்ள பைத்தியக்காரர்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொன்னு சொல்லட்டும் என்று சொல்லிவிட்டார். 

குருநாதர் :-  தாயே, எது என்று புரிய, நிச்சயம்…… 

அடியவர் :-   இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, யார் யாரெல்லாம் சயின்ஸ் படிச்சிக்கிறீங்க? ஐயா, ஐயா, யாரெல்லாம் சயின்ஸ் கிளாஸ் படிச்சிருக்கீங்க? யாராவது இருக்காங்களா? ஐயா, 

ஒரு அடியவர் :- நவகிரகத்தை வெல்லலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா ? 

அடியவர் 6 :- நவகிரகத்தை வெல்லலாம் ( என்று சொல்கின்றார் அத ஒரு அடியவர் ). 

தனசேகர் ஐயா, 

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற இணை எவை இரண்டும் 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்போது 9 மற்றும் 6 இரண்டையும் இணைந்தார்கள் )

அடியவர் 6 :-  ஐயா இன்பினிட்டி. ஐயா ( ஒரு பதில் )

அடியவர் 10  :-  ஆறு வந்து…. முருகர். 

அடியவர்  :- ஆறுபடை வீடு . 

அடியவர் 10  :-  இல்ல, மேல ஒன்பது நவகிரகங்கள். 

குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது புத்தியை நசுக்கு. 

அடியவர்  :-  புத்தியை, புத்தியை நசுக்குங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா வந்து யோசிங்க. இது என்ன தெரியுதுன்னு சொல்லுங்க. ஐயா, அதெல்லாம் ஆறு எல்லாம் முடிஞ்சு போச்சு. குடுங்க, ஐயா. இதெல்லாம் இணைக்க சொல்லிட்டாருங்க, ஐயா. 

அடியவர்  :-   ஐயா, ஆற்றல், ஆற்றல் உருவாகி மேலிருந்து கீழ் வந்து திருப்பி வந்து கீழிருந்து மேல போகுது……. சுருண்டு (மேல போகுது).... 

குருநாதர் :-   அப்பனே, இவ்வாற்றலில் தொடங்கின்ற பொழுது, அப்பனே, சிவபுராணத்தை ஓதினால், அப்பனே, நிச்சயம் பாதி வயதிற்கு மேலே உங்களுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உண்மை நிலை புரியும். அப்பனே, அப்பொழுதுதான் பலன்கள் ஏற்படும். 

அடியவர்  :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது இங்க ( மேல் உள்ள 9 )  வந்து இங்க தொடங்கினீங்கன்னா, ( பூபியை சுற்றி ) நீங்க இந்த இதை எடுத்துட்டு வந்து இதை எடுத்து இப்படியே வந்துச்சுன்னா, ( மேல் உள்ள 6 ) இங்க வந்தாதான் உண்மையான பொருள் தெரியும். 

அடியவர்  :- கிட்டத்தட்ட ஒரு 40, 50 வருடங்கள் சிவபுராணத்தை சொன்னாதான்….. 

சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை வருடம் சொல்லணும்? 

அடியவர்  :- 40, 50 வருடங்கள், 

சுவடி ஓதும் மைந்தன் :- 30 வருடங்களாவது சொல்லணும். குறைந்தபட்சம், 

அடியவர்  :- குறைந்தபட்சம் 30. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? அப்ப, இது வந்து பார்த்துக்கோங்க. 

அடியவர்  :- 60 வயது வாழ்ந்தான்னா 30 வருடம் சுத்து. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலே 9 அங்கிருந்து கீழே 6 வரை நேர் கோடிட்டார் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 

===========================
# ஆதி ஈசனார்  9 - 6 ….இதனை பிடித்து பூமியை சுற்றும் ரகசியங்கள்..
===========================

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35798

குருநாதர் :-  அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, அடிக்கடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று கூற, இதைப் பிடித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, ஈசன், அப்பனை பின் இழுப்பான் அப்பா, அதிவேகமாக.  அப்பனே, சமநிலையில் பூமி, அப்பனே, சுற்றும் அப்பா….

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த இப்படி…. அதுக்கு என்ன பண்ணுவாராம்? திருப்பியும் இங்க புடிச்சு, இங்க வரும்பொழுது, இப்படி பிடிச்சு இழுப்பாரு. இப்படி வரும்பொழுது, ஐயா, புரியுதுங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிடித்து  அடிச்சு, அடிச்சு, இழுத்துனே வருவார். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, எதை என்று அறிய, அப்பனே, இவையும் கூட, அப்பனே, பின் அறிவில் வழியாகவே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவும் ஒரு அறிவியல் தான் வந்து… அந்த ஒரு விசையானது. இந்த லிங்கம் இருக்குறதுல வந்து விசையானது, வந்து என்ன ஆகும்? வந்து 

அடியவர்  :-  கடிவாளம் மாதிரி, 

சுவடி ஓதும் மைந்தன் :- கை போல மாறி, இழுத்து புடிச்சு இருக்கும்ன்றார். வந்து இதுவும் 

அடியவர்  :-   வேகம் குறையறப்போ, வேகம் அதிகமாகும். 

குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக, அப்பனே, மீண்டும், அப்பனே, பின் எதை என்று கூற, 

சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் 96. 

குருநாதர் :-  அப்பனே, சந்தர்ப்பத்தை தருகின்றேன். ஐந்து நிமிடங்கள்..

சுவடி ஓதும் மைந்தன் :- ஐந்து நிமிடம்… பரவாயில்லை. 

அடியவர்  :- ஐந்து நிமிடம், அனைவருக்கும் வாய்ப்பு என்னங்க அய்யா சொல்லணும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  96 இது என்ன பண்ணுவீங்கன்னு சொல்றாரு. இது வந்து 

அடியவர்  :-  96. நீங்க எப்படி வேணாலும்… ஒரு காம்பினேஷன்ல…. என்ன அர்த்தம் சொல்லுங்க 96க்கு அப்படின்றாரு…. 9+6… 6+9… அந்த டைரக்ஸன்ல  யோசிங்க. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, ஆறை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று குறைந்த, அப்பனே, பின் நிச்சயம் சக்தி 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆறு என்பது? 

அடியவர்  :-  குறைந்த, 

சுவடி ஓதும் மைந்தன் :- குறைந்த 

அடியவர்  :-  சக்தி, 

அடியவர்  :-   குறைந்த 

சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அது போலே எழுதினார்கள்)

சுவடி ஓதும் மைந்தன் :-  சக்தி. ஒன்பது குறைந்த சக்தினா, இங்கிலீஷ்ல லோ எனர்ஜி,  

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35909

குருநாதர் :-  அப்பா, பூஜ்ஜியத்தை எடுத்துவிடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( 96 என்று எழுதியிருந்தார்கள். அதனில் 9 ல் உள்ள “0” அதனை நீக்கி விட்டார்கள். இப்போது 16 போல கட்சி அளித்தது….நேரலையை அவசியம் பார்க்கவும்…. ) 

===========================
# 16 வயது வரை… உங்கள் குழந்தைகளின் கல்வி ரகசியங்கள்…
===========================

குருநாதர் :- அப்பனே, எது என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு மனிதனுக்கு, அப்பனே, நிச்சயம் 16 வயது வரை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, ஒன்றும் புரியாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த 16 வயசு வரையும் ஒருத்தருக்கு என்ன ஆகும் வந்து? 

அடியவர்  :-  புரியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  குறைந்த எனர்ஜி, லோ எனர்ஜி வந்து இருக்கும். ஐயா, புரியுதுங்களா? ஒருத்தருக்கு வந்து 16 வயசு வரையும் என்ன வரும்? லோ எனர்ஜி, குறைந்த சக்தி, மனுஷனுக்கு, குழந்தைக்கு வந்து இருக்குமாம். 

குருநாதர் :- அப்பனே, இவ் குறைந்த சக்தியில், அப்பனே, நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ, அதுதான், அப்பனே, இவ்  16க்கு மேல் 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த குறைந்த சக்திகள்ல, நீங்க என்ன கத்து, ஒரு பசங்களுக்கு வந்து, நீங்க என்ன கத்துக்கொடுக்கிறீங்களோ, அதுதான், 

அடியவர்  :-   அதுதான் பிற்கால வாழ்க்கையில உங்களை வந்து செயல்படுத்தும்ன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 

அடியவர்  :-   16 வயசு வரைக்கும் குழந்தைங்க மனசுல என்ன எண்ணத்தை பதிக்கிறோம்ன்றது முக்கியம்ன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா…

https://youtu.be/q8Hs63mXjrc?t=35975 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய அடுத்து, அப்பனே, எது என்று அறிய, எது என்று ஒன்பது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து, ஒன்பது இடு. இங்க “0” எடுத்துட்டோம். இந்த இதை வந்து… இந்த ஜீரோ இங்க இருக்குது வந்து ( தனியாக “0” என்று எழுதினார்கள் )  

===========================
# 16 வயது வரை சிவபுராணத்தை சொல்லிக் கொடுத்துவிட்டால்… இறைவனை காணலாம்
===========================

குருநாதர் :-  அப்பனே, ஏது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் இவ்வாறாக ஒரு 16 வயது எவை என்று புரிய, நிச்சயம் தன்னிலே கூட, சிவபுராணத்தை பின் சொல்லிக் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது ஏது என்று புரிய… 

குருநாதர் :- இறைவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முடிவில்லாதவன் அப்பனே. 

குருநாதர் :- பின் எதை என்று கூற, பூஜ்ஜியம் என்பேன் அப்பனே.  அதாவது எது என்று கூறிய பின், நிச்சயம் இப் பூஜ்ஜியத்தில் இறைவனை காணலாம். 

அடியவர்  :- சிவாய நம. 

அடியவர்  :-  16 வயசுல…. 

சுவடி ஓதும் மைந்தன் :- முடிவில்லாதவன் 

அடியவர்  :- சிவபுராணத்தை சொல்லிக் கொடுத்துரலாம்ன்றாங்க. 
சொல்லிக் கொடுக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பண்ணலாம்? 

அடியவர் :- இறைவன் முடிவில்லாதவன். வட்டத்துக்கு முடிவில்லை. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று அறிய. அப்பனே, பின் அதாவது 96. அப்பனே, திருப்பி இடு. 

https://youtu.be/q8Hs63mXjrc?t=36030 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, 96 திருப்பி இடுனா எப்படிங்க ஐயா?  96, இது இப்படி 69. இப்படியும் போடலாம். வேற எப்படிங்க திருப்பி போடுறது? 

அடியவர் :-  ஐயா, இதை திருப்பி போட்டா ஆறு, இதை திருப்பி போட்டா ஒன்பது. அவ்வளவுதானே. வேற 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? ஐயா, 

அடியவர் :-  கரெக்ட்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படி போட்டாதான் 96 தான் வருது. 

அடியவர் :-   96, ஆறு, ஆறு, ஒன்பது. அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி போட்டா ஒன்பது ஆயிடுச்சு. இது கரெக்ட். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய இன்னும் 19 வரை, அப்பனே, மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தருகின்றான் இறைவன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப…. ( 19 என்று எழுதினார் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  19 வரை மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறார். 

அடியவர் :- 96 தலைகீழ போடுங்க. திருப்பி, திருப்பி 69 ஆகுதா? அதுல அந்த முட்டையை எடுத்துடுங்க. எடுத்துட்டா?  19. 

சுவடி ஓதும் மைந்தன் :-  19 மீண்டும் ஒரு அந்த லோ எனர்ஜி மீண்டும் வந்து என்ன பண்றாரு? 

அடியவர் :-  16 லிருந்து இன்னொரு மூணு வருஷம். 

===========================
# LOVE - Low Energy
===========================

குருநாதர் :-  அப்பனே, இதற்கு என்ன பதில்? அப்பனே, நிச்சயம் ஆங்கிலத்தும் இருக்கின்றது. அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆங்கிலத்தில் லோ எனர்ஜி. இதுக்கு என்ன பதில்? லோ எனர்ஜி. ( Low Energy என்று எழுதினார்கள் )

குருநாதர் :-  அப்பனே, இதற்கு அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இதற்கு என்ன பின் ஆங்கிலத்தில், அப்பனே, பல ஞானிகள் கண்டுபிடித்துதான் உள்ளார்கள். அப்பனே, பின் ஆங்கிலத்தில் பல ஞானிகள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  இதில் தவறு செய்யாதே என்று அப்பனே.  இதற்கு எவை என்று கூற, மனிதன் மாற்றிவிட்டான் அப்பனே.  

குருநாதர் :-  இதற்கு பெயர், அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, அதாவது விருப்பம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (LOVE)  லவ் என்றாரு. எல் ஓ வி இ… லோ எனர்ஜி தான் லவ் என்றாரு. 

அடியவர் :-   சூப்பர்…… லோ எனர்ஜினா லவ்வாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  லவ்வாம். ஆங்கிலத்துல ஒரு ஞானி கண்டுபிடிக்கிறார். இது லோ எனர்ஜி தான். 

அடியவர் :-  அதாவது அறியாத புரியாத வயதுல தான் காதல் வருதுன்னு சொல்றாங்க. இல்ல, அதைத்தான் குருநாதர் சொல்றறார்.

சுவடி ஓதும் மைந்தன் :- லோ எனர்ஜி சொல்றாரு. இது லோ லோ எனர்ஜி தான். லவ், லோ எனர்ஜி. லவ். 

===========================
# உங்கள் குழந்தைகள் காதல் வலையில் சிக்காமல் காக்கும் கவசம் - சிவபுராணம் ….
===========================

குருநாதர் :-  அப்பனே, இதில் கூட, அப்பனே, நிச்சயம் இவ் 19, 20 அப்பனே, வயதுகளில்  அப்பனே, தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுக்காமல், அப்பனே, ஒருவன் எது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எது என்று அறிய, அப்பனே, சிக்காமல் இருக்க, இவ் சிவபுராணம் உதவுகின்றது. 

அடியவர் :-  சிவாய நம. சிவாய நம. 

அடியவர்கள்  :- ( கைதட்டல்கள் )  

சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம் எதுக்கு உரைகிறது முதல்ல?
……….
……….
……….
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவங்க மேல, உங்க அப்பா மேல லவ் பண்ணனும். அம்மாவை லவ் பண்ணனும். இறைவனை லவ் பண்ணனும். எல்லாம் நல்லது தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் ? 

அடியவர் :- சிவபுராணம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம் முதல்ல படிக்கணும். தேவைப்படுகின்றது. 

===========================
# பெற்றோர்களே ! சொல்லிக்கொடுங்கள் சிவபுராணத்தை உங்கள் குழந்தைகளுக்கு இன்றே…தினமும் பலமுறை பாட வையுங்கள்… 
===========================

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற, அப்பனே, இவ்வாற்றலை ஒழுங்காக பயன்படுத்தாத ஆணோ அல்லது பெண்ணோ வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு தவித்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே.

அடியவர் :-  சிவாய நம. சிவாய நம.

சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் முடிஞ்சது. ஐயா, வாழ்க்கை 

அடியவர் :-  இந்த 19 வயசுக்குள்ள, 

சுவடி ஓதும் மைந்தன் :-  19, 20 வயசுக்குள்ள, 

அடியவர் :-  20 வயசுக்குள்ள இந்த சிவபுராணத்தை சரியா பயன்படுத்தல. அப்படின்னா எல்லா பிரச்சனைகளும் சிக்கி அழிஞ்சு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  லோ எனர்ஜில வந்து… லோன்னா என்னது? 

அடியவர் :-  லவ்…

சுவடி ஓதும் மைந்தன் :-  லவ். ஆணோ பெண்ணோ லவ்ல வந்து இறங்கி, அவங்க வாழ்க்கையை க்ளோஸ் அழகாக வந்து…. யாரு க்ளோஸ் பண்ணிக்கிறாங்க வந்து? 

அடியவர் :-  அவங்க வாழ்க்கையை அவங்களே க்ளோஸ் பண்ணிப்பாங்க. 

===========================
# உங்கள் 59 வயதில் ….
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=36203

குருநாதர் :-   அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அப்பனே, இவை என்ற, அப்பனே, பின் அதாவது அறிந்து கூட 40 வருடங்கள் கழித்து தான் அப்பனே, பின் அதே இடத்திற்கு பூமி வருமப்பா. 

அடியவர் :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அது திருப்பி என்ன பண்ணும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  40 வருடங்கள் ஈக்குவல் என்ன இருக்கணும்? 59. அப்போ, திரும்பியும் அந்த இடத்துல வந்து வந்துவிடும். 

குருநாதர் :-  அப்பனே, இவ் அன்பு 50 அப்பனே, பின் ஒன்பது வயதில் (59) , அப்பனே, அப்பொழுதுதான் யோசிப்பான். 

குருநாதர் :-  ஐயயோ, பின் இறைவன் மீது காதலிக்கவில்லை. 

குருநாதர் :-  பின் அம்மாவும் காதலிக்கவில்லை. 

குருநாதர் :-  எது என்று புரிய. நிச்சயம் அப்பாவையும் காதலிக்கவில்லையே. 

குருநாதர் :-  இப்படி ஆகிவிட்டதே. 

குருநாதர் :-  அனைத்தும் நோய் வந்துவிட்டதே எது என்று புரிய. 

குருநாதர் :-  அப்பொழுதுதான் யோசிப்பான். எதற்காக வந்தது என்றெல்லாம் அப்பனே, நோய்கள், நொடிகள், கஷ்டங்கள் என்றெல்லாம். 

அடியவர் :-  மனிதன் எப்போ அந்த இயலாத வயது வருது பாருங்க. அப்பதான் அந்த ஞானம் எல்லாம் வரும்ன்றாரு. ஐயயோ, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பதான் 59, 

அடியவர் :-  59, 60 வயசுல . 

குருநாதர் :- அப்பனே, இயற்பியல் வேதியியல், அப்பனே, அனைத்தும் உரைக்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னை கூட.  

குருநாதர் :- புரிந்து கொண்டால், பிழைத்துக் கொள்ளுங்கள் கலியுகத்தில். 

குருநாதர் :- புரியாவிடில், கஷ்டத்தோடு வாழ்ந்துட்டு செல்லுங்கள். அவ்வளவுதான். 

அடியவர் :-  அம்மா, உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு தராரு குருநாதர். தயவு செஞ்சு இந்த உண்மைகளை புரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுகிட்டா பொழைச்சிப்பீங்க. இல்லைன்னா, கஷ்டத்தோட வாழ்ந்து கடைசில யோசிப்பீங்களாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   எந்த வயசுல யோசிப்பீங்களாம்?

மற்ற அடியவர் :-  60 வயசு…

சுவடி ஓதும் மைந்தன் :-   59, 60 வயசு, 

அடியவர் :-  50 வயசு, 60 வயசு தான் யோசிப்பீங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   என்னடா இது?  வாழ்க்கையோட உண்மையை பத்தி தெரிஞ்சுக்காம  ஜாலியா இருந்தோம்… ஆட்டம் பண்ணோம், குடிச்சோம், கொண்டாடினோம், லவ் பண்ணோம். அந்த நேரத்துல இறைவனை மறந்துட்டோம். நரம்பு சுருங்கும்போது, நரம்பு சுருங்கும்போது என்ன ஆகுமாம்? 

அடியவர் :-  ஒன்னும் பண்ண முடியாது.

===========================
# எச்சரிக்கை:-  59 வயது முதல் 80 வயது வரை ….
===========================

குருநாதர் :- அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று கூற இதிலிருந்து அப்பனே, ஆரம்பமாகிவிடும் , அப்பனே, 80 அப்பனே, நிச்சயம் 

சுவடி ஓதும் மைந்தன் :-   அடுத்து திருப்பியும் வரதுக்கு என்ன ஆகும்? வந்து 80 ஆயிடும். 

குருநாதர் :-  அப்பனே, இதற்குள்ளே, அப்பனே, எதை என்று கூற நிச்சயம் மரணம் ஏற்படும் அப்பா ஒருவனுக்கு சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, இந்த வயதிலிருந்து 59ல தொடங்கி, திருப்பியும் இந்த பூமி வந்து அதே திருப்பியும் இந்த சுற்றத்துக்கு வந்து, அது சொல்லுவார். காலநிலை சொல்லுவார். இப்பதான் ஒன்னொன்னா சொல்லி இருக்காரு. இந்த 80க்குள்ள என்ன ஆகுமாம்? வந்து ?

சுவடி ஓதும் மைந்தன் :-  மரணம் ஏற்பட்டுவிடும். 

குருநாதர் :-  ஆனாலும், அப்பனே, பின் சொன்னேனே… பின் அது நிச்சயம் அப்படியே இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சென்சார். அப்ப, என்ன சொன்னாரு? அது என்ன ஆகும்? 

ஒரு அடியவர் :- அது அப்படியே தான் இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அது அப்படியே தான் இருக்கும். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று அறிய , எப்படி மீண்டும் அப்பனே, பின் நிச்சயம் ஒருவர், அப்பனே, ஐந்து வருடமோ, பத்து வருடமோ, எதை என்று கூற மீண்டும் அப்பனே, அவ் உடம்பு எவை என்று சுற்றுகின்ற பொழுது, அந்நேரத்தில் வருகின்ற பொழுது, இத் திரை ஈர்த்துக்கொள்ளும். அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த சென்சார் திருப்பி என்ன ஆகும்? வந்து இது ஒரு ரவுண்டு 80-ல, 79-ல, 70-ல இறக்குறாங்கன்னா, இது ஒரு ஐந்து, இது ஒரு ஐந்து வருடங்கள்ல எனர்ஜி இங்க வரும் பொழுது, திருப்பி என்ன பண்ணுவாருன்னா, 

அடியவர் :- சென்சார் வந்து திருப்பி ஒரு சுத்தி வர்றப்போ, 

சுவடி ஓதும் மைந்தன் :-  மெமரி உங்களுக்கு என்ன ஆயிருக்கும்? 

அடியவர் :-  அடுத்து ஒரு உடம்பு எடுத்துரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து உடம்பு எடுத்துரும். 

அடியவர் :-  ஒரு பொம்மை. 

===========================
# பிறந்த குழந்தை ********* ஆ !!!!!! *********  என்று ஏன் கத்தும்?
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=36365 

குருநாதர் :-  அப்பனே, பிறக்கின்ற பொழுது, அப்பனே, குழந்தைக்கு தெரியும். ********* ஆ !!!!!! *********   என்று கத்தும். அப்பனே, இதற்கு என்ன அர்த்தம்? 

அடியவர் :-  ( சிரிப்புடன் ) ஐயயோ, 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயயோ, திரும்பியும் பொறந்துட்டோமேடா. ********* ஆ !!!!!! *********   அப்பா, என்னதான் நடக்க போகுது? என்ன 

அடியவர் :-  குழந்தை முதல் பிறந்த உடனே ********* ஆ !!!!!! *********  என்று கத்துது பாருங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா தெரியுமா யாருக்காவது? குழந்தை பெத்தவங்க எல்லாம் சொல்லுமா? ஆமான்னு… அகத்தியர் சொல்ல எனக்கும் தெரியாது ********* ஆ !!!!!! ********* னு கத்துமா? 

அடியவர் :-  ஐயயோ, வந்து பிறந்துட்டேனே. இந்த ஆன்மா கத்துமாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கத்துமாம்…. அப்புறம் என்ன பிரயோஜனம்பா? 
…….
…….
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? 

அடியவர் :-   இறைவன் வாய்ப்பு கொடுக்கிறாரு. புரிஞ்சுக்கோங்க. 

குருநாதர் :- அப்பனே, அதனால்தான் மறைமுகமாக, அப்பனே, நிச்சயம் ஆங்கிலத்தில், அப்பனே, ஒரு ஞானி இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக, அப்பனே, ஒரு எழுத்தை சேர்த்து விட்டான். அப்பனே, அவ்வளவுதான். இதற்கே பொருள் தெரியவில்லை. அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, இழவுக்கு…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த லவ்வுக்கே பொருள் தெரியல. 
இழவு என்றார் அகத்தியர். 

அடியவர் :-   லவ் என்றது இழவாம்.  

சுவடி ஓதும் மைந்தன் :-  இழவாம்….. இந்த லவ்வுக்கே பொருள் தெரியல. 

அடியவர் :-    லைப் முடிச்சிருவோம்ன்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, ஒரு அறிஞர், ஒரு ஞானி என்ன பண்ணிருக்காரு? இந்த லவ்ல வந்து பார்க்கிறான். எத்தனை பேர் பொழைச்சிக்கிறாங்கன்னு நடுவுல ஒரு எழுத்து சேர்த்து விட்டாராம். ஆக, மட்டும் இது வந்து லோ எனர்ஜி. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( “Lo  E” என்று எழுதினார்கள். அதாவது low energy ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, மனுஷன் இதை உணர்ந்துக்கணும். எப்படி உணர்ந்துக்கிறான் சொல்றதுக்கு இங்க வி போட்டார். முடிஞ்சு போச்சு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( Lo “V” E என்று எழுதினார்கள். அதாவது “LoVE”) 

குருநாதர் :- அப்பனே, இறைவனிடத்தில் செல்ல வேண்டுமென்றால், அனைத்தும் அங்கங்கு  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பேருந்துகளில் செல்கின்றீர்கள் அல்லவா? அப்பனே, அங்கங்கு எதற்கு? அப்ப, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மட்டை போட்டு இருக்கின்றார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மட்டைன்னா, ஸ்பீட் பிரேக் எதுக்கு போட்டுக்கிறாங்க? அங்கங்க நீங்க போறதுல கார்ல போறீங்களா? எதுக்கு மட்டை போட்டுக்கிறாங்க? ஐயா, ஸ்பீட் பிரேக் பத்தி சொல்றாருங்க. ஐயா, எதுக்குயா? 

அடியவர் :-   ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்கிறதை பத்தி சொல்றாங்க குருநாதர். 

குருநாதர் :-  அப்பனே, இறைவன் அப்படித்தான். அப்பா, நிச்சயம் தன்னில் கூட ஒரு வாய்ப்பை கொடுக்கின்றேன். அதில் திருந்திக்கொள், திருந்திக்கொள் என்றெல்லாம் , அங்கங்கு மட்டை இடுகின்றான். ஆனாலும், மனிதனுக்கு புரியவதே இல்லை. 

அடியவர் :-   எங்கெல்லாம் வேகம் அதிகமாகுதோ, ஸ்பீட கண்ட்ரோல் பண்றதுக்கு இறைவன் ஒரு தடுப்பு போடுறாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- டேய், உன் நிலைமை சரியில்ல. 

அடியவர் :-   வாய்ப்பு கொடுக்கிறேன். திருந்திரு….

சுவடி ஓதும் மைந்தன் :-  திருந்திரு…

அடியவர் :-  இல்ல அப்படின்னா, சிக்கிப்ப. அவ்வளவுதான். எங்கயாவது  போய் இடிச்சிப்ப. 

குருநாதர் :- அப்பனே, இவ்வாற்றலை மாற்ற அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஆற்றல் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் இவையும் சொல்கின்றேன் அப்பனே. இப்பொழுது ஆற்றலை பெருக்க, அப்பனே, ஏதாவது ஒரு பைரவரின் பாடலை பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சில அறிவுரைகள் வழங்கினார்கள் ) 


ஓதுவார் அடியவர் :- சிவா, சிவபுராணம் வந்து பார்த்தீங்கன்னா, மொத்தம் புத்தகத்துல 95 லைன் தான் இருக்கும். சிவபுராணம் வந்து பார்த்தீங்கன்னா, புத்தகத்துல 95 லைன் தான் இருக்கும். ஆனா அகத்தியப் பெருமான் 96 சொல்லி இருக்கிறார். அது என்னன்னு இப்ப ஐயா பார்த்தாரு. பார்த்தா, சிவபுராணம் படிக்கிறதுக்கு முன்னாடி, தொல்லை இரும்பிறவி சூடும் தலைநீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மறுவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன். அப்படின்னு முதல் அந்த நாலு வரிகளை படிச்சிட்டு தானே நம்ம சிவபுராணம் படிப்போம். 

===========================
# “மாணிக்கவாசகர் பெருமான்” - உலகின் சிறந்த பாடகர்
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=36963

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய . அப்பனே, மூச்சு விடாமல், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மூச்சு விடாமல் பாடி இருக்காரு அவர் வந்து. எப்படி?.....

குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, இது ஒரு எவை என்று கூட நிச்சயம் சொல்ல. அடுத்து, நிச்சயம் தன்னில் கூட இவ் பாடல் எவை என்று கூற பின் எவை என்று மூச்சு விடாமல் 

சுவடி ஓதும் மைந்தன் :-   இதை முடிச்சிட்டு ஒரு மூச்சு விட்டார். ஐயா, புரியுதுங்களா? இதை முடிச்சிட்டு ஒரு மூச்சை விட்டாரு. அடுத்து, நமச்சிவாய என்றது வந்து மூச்சு விடாமல் கடைசி வரை பாடுறார். 

குருநாதர் :- அப்பனே, இவனைப் போன்று பாடகன் யார் இங்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசகர் பாடல் பாடல். ஐயா, இந்த உலகத்தில் ஆளு கிடையாது. அப்பனா, ஐயா, மூச்சை புடிச்சு பார்க்கிறோம். மூச்சு விடாம, நமச்சிவாய. ஃபர்ஸ்ட் என்னது? தேன், அது முடிச்சிட்டாரு. அடுத்து என்ன வந்தாரு? 

அடியவர் 4 :- மூச்சு விட்டுட்டு, நமச்சிவாய ஆரம்பிச்சு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆரம்பிச்சு, அதுல வந்து, 

குருநாதர் :-  அப்பனே, எவை என்று அறிய  அப்பனே, இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் மாணிக்கவாசகன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகள் அப்பனே, நிச்சயம் பின் இதற்கு பொருள் புரிந்தால் என்று…. மூச்சை கூட விடவில்லை என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன தெரியுமா புரியுது. என்ன சொல்றாரு தெரியுமா இது?  பல வருடங்களா, நமச்சிவாய வாழ்க. நாதன்  தாள் வாழ்க  சொல்லிட்டு, அவர் மூச்சை விடல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகள் சிந்தித்து, திருப்பி என்ன பண்ணாரு? அப்புறம்தான் அடுத்த வரி. அப்பா, 

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் நீண்டு அவன் பெயர் இருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உலகம் அழிவரையும், சிவபுராணம் அழியாது. அவர் பெயரும், அவர் பெயரும் அழியாது. அப்ப, ரெண்டு வார்த்தை. ஐயா, புரியுதுங்களா? நமச்சிவாய, நாதன் தாழ் நிறுத்திட்டாரு. அடுத்து என்ன பண்ணாரு? 

குருநாதர் :-   எது என்று அறிய, இன்னும் இவ் ஞானியைப் பற்றி வருங்காலத்தில் சித்தர்கள் உரைப்பார்கள். சிறிது சிறிதாக தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவ் சக்தி இல்லை. அவ் சக்தி இல்லாமல் சொன்னால், நீங்கள் பொய் என்று சொல்லிவிடுவீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால கொஞ்சம் கொஞ்சம் தான் சொல்லுவாராம். அந்த சக்தி இருந்தா மட்டும்தான், நீங்க வந்து சொல்றதை புரிஞ்சுக்க முடியும். சக்தி இல்லைன்னா, அது பொய்ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்களாம். 

காளி அன்னை உபாசகர் :- ( காசி பைரவர் பாடல் பாட ஆயத்தம் ஆனார்கள் ….) 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, நெகட்டிவ் எனர்ஜி அதிகமா இருக்குது. இவர் பாடுறாரு. எல்லாம் போகட்டும். அண்ணாமலையாரை  வேண்டிக்கோங்க. ஐயா, கெட்டதெல்லாம் போட்டோம். நல்லதே நடக்கட்டும்னு. 

===========================
# காசி - காலபைரவாஷ்டகம் பாடல் 
===========================

காளி அன்னை உபாசகர் ( காசி பைரவர் பாடல்) நேரலை :- 

 https://youtu.be/q8Hs63mXjrc?t=37128


காளி அன்னை உபாசகர் :-  ஓம் அகஸ்தீஸ்வர நமஹ. சக மக தாத பாருங்க. ஐயா, சகம சரி. சகம தான தமக சகம மரத சகம 

https://youtu.be/q8Hs63mXjrc?t=37255 

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ் ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த வந்தினம் திகம்பரம்
காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             1
……………
……………
……………
……………
……………
……………
ஓம் ஸ்ரீமத் சங்கராச்சாரிய கிருதோ ஸ்ரீ கால பைரவாஷ்டக ஸ்தோத்திர மந்திர பாடம்  ஸ்ரீ அகஸ்தீஸ்வரார்ப்பணம் அஸ்து…ஓம் காளி !!!!!!!!! 

காளி அன்னை உபாசகர்:- ( காலபைரவாஷ்டகம்  பாடி முடித்தவுடன் …..) 


குருநாதர் :-  அப்பனே அறிந்தும் எவையென்று கூற அப்பனே அனைவருக்குமே அப்பனே ஆற்றல் இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் இன்னும் ஏற்றிக் கொடுக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாடலை பின் அதாவது கர்ஜிக்கும் எவை என்று கூற பின் எது என்று கூறிய முறையில் பாடு 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் உங்களுக்கு ஆற்றல் ஏத்தணும் அதனால வந்து ஒரு கட்சிக்கும் முறையில பாட சொல்றாரு 

அடியவர் 7:- ( அதனை மொழிபெயர்த்து காளி அன்னை உபாசகரிடம் எடுத்துரைத்தார்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எனர்ஜி இதுதான் இப்படித்தான் பண்ண முடியும் நீங்க கெட்டதையே பார்த்திருந்தா என்ன பண்ணுது? ஒரு டிவி பாக்குறீங்க அழுகை அழுகை யா வருது…. அதேதான்.  ஓகேங்களா.  நீங்க எதை வந்து நினைக்கிறீங்களோ… எனர்ஜி ஏத்துனாதான் நீங்க சொல்றது புரியும்ன்ற ரகசியம் வந்து 

குருநாதர் :- அப்பனே பல வகைகள் கூட 95 96 அப்பனே 97 98 அவரவர் அப்பனே விருப்பப்படி அமைத்துக் கொள்கிறார்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்தை 95 96 97 98 அவரவர் விருப்பத்துக்கு 

குருநாதர் :-  ஆனாலும் அப்பனே எப்படி பார்த்தாலும் இப்படித்தான் வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த கால்குலேஷன் இப்படி போட்டாலும் இப்படி வந்தாலும் இப்படித்தான் வரும்பா 

குருநாதர் :-  அப்பனே இன்னும் பின் நிச்சயம் இன்னும் விவரிக்கின்றேன் பொறுத்திரு மகனே.

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் அதை பற்றி நானு விவரமா சொல்றேன்பா. 95 கொண்டு வாங்க 96 97 98 99 எல்லாம் போட்டாலும் இப்படித்தான் கால்குலேஷன் வரும் அது இன்னும் நான் பண்ணி உங்களுக்கு காமிக்கிறேன்றாரு அதனாலதான் சந்தேகம் கேட்கணும்ன்றது அகத்தியர் வந்து ஏன்னா நமக்கு தெரியாது எல்லாம் வந்து 

காளி அன்னை உபாசகர்:-  ( ….அங்குள்ள அடியவர்களுக்கு சில உபதேசங்கள் ) 

साथ में संकीर्तन करिए सब लोग ओम नमः शिवाय का संकीर्तन करेंगे मैं जैसे जैसे बोलूंगा वो सब बोले 

(எல்லாரும் சேர்ந்து சங்கீர்த்தனம் செய்யுங்கள்.‘ஓம் நமசிவாய ’ என்று நான் சொல்லும் போதெல்லாம், நீங்கள் எல்லாரும் அதையே சொல்லுங்கள். ) 

அடியவர் 7:- ( அதனை மொழிபெயர்த்து காளி எடுத்துரைத்தார்கள் ) 
இறைவனுடைய திருநாமங்களை சொல்லும் பொழுது அதைப் பின்பற்றி நீங்களும் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார் 

===========================
# “ஓம் நமசிவாய” - நாம பாராயணம் அங்கு ஓங்கி ஒலித்தது…..
===========================

காளி அன்னை உபாசகர்:-  ஓம் நமசிவாய ஹர ஹர ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர 

அடியவர்கள் :- ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஹர ஹர 

…………….
……………
……………

அடியவர் 7:-   அனைவரும் சேர்ந்து நன்றாக ஒலி எழுப்புங்கள் 

https://youtu.be/q8Hs63mXjrc?t=38264 

ஓம் நமசிவாய. 
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா……


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( ஒன்று கூடி இறைவனை அழைத்தனர் ) 

தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி 
காலம் வெல்லுரானாய் போற்றி 
பராய்த்துறை மேவிய பரனே போற்றி 
அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
அண்ணாமலை கடலே போற்றி 
காவாய் கனகத் திரளே போற்றி
கைலை மலையானே போற்றி போற்றி 
எங்கள் கைலை மலையானே போற்றி போற்றி 
கைலை மலையானே போற்றி போற்றி 
எங்கள் கைலை மலையானே போற்றி போற்றி. 


( இதனை தொடர்ந்து வேல் பூசை வாக்குகள் ஆரம்பமானது. சித்தன் அருள் - 2241 - வேல் பூஜை வாக்கு! )

===========================
# சுவடி ஓதும் மைந்தன் நிறைவு வாக்குகள் 
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=41866

சுவடி ஓதும் மைந்தன்:-  வாங்கிட்டு, எல்லாம் அவ்வளவு சந்தோஷமா. இறையருள் பெற்று, போங்க. வாங்கிட்டு, நல்ல இறையருள் பெற்று, அண்ணாமலை அம்மையாரை வந்து நல்லா அருளாசிகள் கொடுத்துட்டோம். உங்கள் விருப்பங்கள் எல்லாம் வந்து, உங்கள் முதல்ல வந்து சில வியாதிகள், சில மனக்கஷ்டங்கள் போகட்டும். அப்புறம் ஈஸியா அது வந்து, வர்றது வந்துரும், வந்து. அதையே வந்து போக முடியலன்றார் வந்து. அதனால, அகத்திய பெருமானே, எல்லாருக்கும் சித்தர்களுக்கும்  வந்து வேண்டிக்கிறோம் வந்து. ஐயா, எல்லாரும் வேண்டிக்கோங்க வந்து. நல்லதே நடக்கும் எல்லாருக்கும். வாங்கிட்டு, அகத்தியர் என்னென்ன சொல்றாரோ அதெல்லாம் செய்யுங்க. 

===========================
# அடுத்த கூட்டுப் பிரார்த்தனை - திரிசூலம் தொடர்பான வாக்குகள்… 
===========================

சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்த திரிசூலத்தை வச்சு, அடுத்த முறை  எக்ஸ்பிளைன் பண்ணுவார் வந்து, உலகத்தை வச்சு. அதனால இதெல்லாம் பயன்படுத்திக்கோங்க. நாலு பேருக்கு வந்து, உங்கள் ஆற்றலை ஏறிக்கிச்சுன்னா, நாலு பேருக்கு நீங்க நல்லதை செய்வீங்க வந்து. அந்த நல்லது செஞ்ச நல்ல செய, அப்படியே அப்படியே போயிட்டே இருக்கும். அவ்வளவுதான். சரிங்களா? சந்தோஷம்ங்க ஐயா, சந்தோஷம். 

……………………
……………………
===========================
# மூகாம்பிகை அம்மையின் காலடியில் வைத்த காசு…..
===========================

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, கொஞ்சம் பொறுங்க. மூகாம்பிகை அம்மையின் காலடியில் வைத்த ஒரு காசு உங்களுக்கு கிடைக்கும். அதை என்ன பண்ணுங்கன்னா, பூஜை ரூம்ல வச்சிருங்க. போதும். ஓகேங்களா? பூஜை ரூம்ல வச்சிருங்க வந்து. இதை வந்து படிக்கும் பொழுது, பூஜை ரூம்ல வச்சிருங்க. அடுத்தடுத்து அகத்தியர் உங்களுக்கு வந்து சில விஷயங்கள் எல்லாம் சொல்வாரு. எல்லாருக்கும் சொல்லுங்க. அவங்களும் பயன்பெறட்டும். உங்களால வந்து. சரிங்களா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  நல்லது செஞ்சுகிட்டே இருப்போம். 

===========================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் நிறைவு அடைந்தது. 
===========================

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 28 July 2026

சித்தன் அருள் - 2261- அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9

நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================


===========================
வேல் பூசை வாக்குகள் அருளினார்கள்…அவ் வாக்குகள் முன்பே அடியவர்கள் பயன் அடைய முன்னர் வெளியிட்டு …அதன் பதிவு விபரங்கள் பின் வருமாறு 
===========================
சித்தன் அருள் - 2241 - அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் வேல் பூஜை வாக்கு! https://siththanarul.blogspot.com/2026/07/2241-28062026.html 
===========================

( இவ் வேல் பூசை வாக்கின் இடையே குருநாதர் , மாணிக்க வாசகப் பெருமான் எப்படி எல்லாம் சிவபுராணம்  பாடலுக்கு விளக்கம் அறிய அரும் பாடு பட்டர்கள் என்ற விபரங்களை அழகாக எடுத்துரைத்தார்கள். அவ் அமுத அருள் வாக்குகளை காண்போம் இப்போது இங்கு. வாருங்கள்…..) 


===========================
# சிவபுராணம் பாடலின் பொருள் உணர்ந்து ஓதல் வேண்டும்
===========================
# சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ் 
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=34694 



குருநாதர் :- அப்பனே, அறிந்தும். அப்பனே, இச் சிவ புராணத்திற்கு அனைத்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பொருள் உணர்ந்து ஓதல் வேண்டும் என்பேன், அப்பனே. 

ஆனால் ஓதவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் கஷ்டம் தான், அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம் பாடுறாங்க இப்போ வந்து, அதை வந்து என்ன பண்ணனும்? 

அடியவர்கள் :- பொருள் உணர்ந்து பாடணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பொருள் உணர்ந்து பாடணும்.  பொருள் உணர்ந்து படிக்கணும், அப்பதான் கஷ்டங்கள் வளராது. 

குருநாதர் :-  எதை, ஏன் எடுத்த சிவபெருமானுக்கும், நிச்சயம் மாணிக்க வாசகனுக்கும். ஏது என்று புரிய, நிச்சயம் பின் பலத்த, பின் சண்டைகள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசக பெருமான் யாருமா? சொல்லுங்கம்மா.
அம்பிகை வேடத்தில்  ஞான சிறுமி :-  ( பதிலுரைத்தார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப என்ன பண்ணாங்க வந்து, திருவாசகத்தை இயற்றியவர் யாரு? 

அம்பிகை வேடத்தில்  ஞான சிறுமி :-   மாணிக்கவாசகர்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன ஆச்சாம்? யாரு? மாணிக்கவாசக பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் சண்டையாகுதாம். 

குருநாதர் :- எதனால் என்பது எல்லாம் நிச்சயம் மாணிக்கவாசக பெருமானும். எது என்று புரிய, நீதான் நான், நான்தான் நீ என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் என்ன சொல்றாரு?
எப்படி சொல்றாருன்னா, நீதான் நான், நான்தான் நீ என்றார். 

===========================
# ஆதி ஈசனார் கொடுத்த வரம்.
===========================

குருநாதர் :- எதை, எவை என்று அறிய. இதனால் நிச்சயம். அப்படி என்றால், எதை என்று அறிய, நிச்சயம் பார்ப்போம். 

குருநாதர் :- பின் இதில் தன், அதாவது சில வரிகளிலே, எதை என்று புரிய, நிச்சயம் நவகிரகங்களே, பின் அனைத்தும் அடக்கும். 

குருநாதர் :- பின் இதை, ஏது என்று புரிய, அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இப்பாடலை, அதாவது பின் கஷ்டமான எவை என்று அறிய, பின் பாடலை, நிச்சயம் தன்னில் உன்னால் முடிந்தால், நிச்சயம் விளக்குக. 

குருநாதர் :- எதை என்று கூறப்பின், அதாவது பின் வரத்தை கொடுத்துவிட்டான். அப்படி விளக்கினால், நிச்சயம் இவ்வுலகமே, நிச்சயம் பின், அதாவது எவை என்று கூற பின், உலகத்தின் கீழ் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார்  தெரியுங்களா?

…….

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பாடலை, கஷ்டமான பாடல். எது? 

அடியவர்கள் :- சிவபுராணம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம் வந்து, இவர் ஈசன் சொல்றாரு. யாருகிட்ட? 

அடியவர்கள் :- மாணிக்கவாசக பெருமான் கிட்ட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசக பெருமான் கிட்ட.  எல்லாம் ஒன்னுதான் சொல்றாரு. அதை அப்புறம் எடுத்துட்டு வராரு. சின்ன சின்னதா நடு நடுல இணைப்பார். அகத்தியர் ஏன்னா சித்தர் பெருமக்கள் இல்ல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சரி, இது ஒரு கடுமையான, இந்த பாடலை யார் ஒருத்தர் பொருள் தெரிஞ்சுகிட்டு பாடுறாரோ, அவர் வந்து என்ன பண்ணுவாராம்? 

அடியவர்கள் :- …………………..

https://youtu.be/q8Hs63mXjrc?t=34849

சுவடி ஓதும் மைந்தன் :-  நவகிரகங்களுக்கு கீழ, இந்த உலகத்துக்கு என்ன பண்ணுவாரு? அந்த பவர் இருக்குது பார்த்தீங்களா? கீழ இருந்து ஒரு பவர் போகுதுங்களா? அதை வெல்லலாம். அங்க இருக்கலாம். 

குருநாதர் :- எதை என்று அறிய, நிச்சயம் சரி என்று பல ஆண்டுகள் ஆயிற்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரி, இது நான் விளக்கம்  வந்து கண்டுபிடிக்கிறேன்னு யாரு போறாரு? 

அடியவர்கள் :-  மாணிக்கவாசகர் 

சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் வந்து போறாரு. பல வருஷம், பல ஆண்டுகள்… ஓடி போயிடுது. 

குருநாதர் :- ஆனாலும் எப்படி ஏது என்று புரிய, காடுகள், மேடுகள், அதாவது நிச்சயம் எங்கெங்கோ எவை என்று அலைந்து திரிந்து, கைலாயத்தையும், ஆனாலும் பொருள் விளங்கவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கெங்கோ போறாரு. காடுகள், மேடுகள், கடைசில எங்க போறாரு? 

அடியவர்:-  கைலாயம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கைலாயத்துக்கு போறாரு. என்ன பண்ண முடியல? 

அடியவர்கள் :-  கண்டுபிடிக்க முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவரால பொருள் கண்டுபிடிக்க முடியல. 

குருநாதர் :- மீண்டும் பின் ஈசனிடத்தில், அதாவது அண்ணாமலையில் தான் இது நடந்தது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்க நடந்தது இது? 

அடியவர்:-  இதெல்லாம் நடந்ததெல்லாம் திருவண்ணாமலை. 

சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் நடந்தது. விளையாட்டு இங்கதான் நடந்தது. 

குருநாதர் :-  எது என்று அறிய, நிச்சயம் பின் ஏது என்று புரிய, நிச்சயம் அதாவது பின் பார்வதியும் மகனும் வந்துவிட்டான். எப்படி சொல்லி சமாளிக்க போகின்றீர்கள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எங்கேயும் கண்டுபிடிக்க முடியல. சிவபுராணம் இந்த வரிகளுக்கு வந்து ( அர்த்தத்தை ) . ஓகேங்களா? அப்ப வந்து வந்துறார். திருப்பியும் பார்வதி அம்மா சொல்லுது, யார்கிட்ட? 

அடியவர்கள் :-  சிவபெருமான்ட்ட

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபெருமான்ட்ட. எப்பா வந்துட்டான். நீ இப்ப எப்படி சமாளிக்க போற அவர வந்து? ஐயா, புரியுதுங்களா? அவர் ஒரு பதில் சொல்லுவாரு. நீ எப்படி சமாளிக்க போறான்றாரு. 

குருநாதர் :- முதலில் பின் பார்வதி, நீ வாய் திறக்காமல் இருந்தால் போதும். பின் நிச்சயம் தன்னில் கூட அவனே வாயை திறக்கட்டும். 

அடியவர்கள் :- ( இப்படி ஒரு உரையாடல் வாக்கை  கேட்டு ஆச்சரியம் தாங்காமல்….. சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன அவர் சொல்றாரு வந்து, நீ வாய் திறக்காதம்மா. நீ அமைதியா இரு. அவன் என்ன வந்து கேட்கிறானோ, பார்ப்போம்ன்றாரு. 

குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, என்னுள் கலந்தவனே, உன்னில் இருப்பவனே, என்னால் கண்டு உணரவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு? 

அடியவர்கள் :-  …….

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னோடு கலந்தவனே, நான் உன்னுள் நான் இருப்பவனே, என்னால? 

அடியவர் :- கண்டுபிடிக்க முடியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   கண்டுபிடிக்கவில்லை. 

குருநாதர் :- அறிந்தும் பார்வதி தேவியும் பின் வாயை விட்டு விடுகின்றாள். எது என்று கூற, உன் அப்பனை போற்றி பாடு என்று. 

அடியவர் :- சிவாய நம 

அடியவர்கள் :- ( இப்படி ஒரு உரையாடல் வாக்கை  கேட்டு ஆச்சரியம் தாங்காமல்….. சிரிப்புகள் ) 

https://youtu.be/q8Hs63mXjrc?t=34970


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யார் சொல்றாரு? 

அடியவர்கள் :- பார்வதி அம்மையார். 

சுவடி ஓதும் மைந்தன் :-   பார்வதி அம்மையார்.  எப்பா, உன் தந்தையை போற்றி பாடிட்டு போ. நீ போற்றி பாடுனேன்னா, உனக்கு வந்து கொடுத்துட்டு போறாரு. அவர் என்ன பண்றாரு? 

குருநாதர் :-  நிச்சயம் எதை, ஏது என்று புரிய, ஈசனுக்கும் வந்தது கோபம். பார்வதியே, யான் நில்லு என்று சொன்னேன். பின் ஏன் இவ்வளவு பேச்சுக்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  பார்வதி அம்மா, அவர் சொல்றாரு, ஈசன் வந்து. 

அடியவர் :-  நான்தான் சொன்னேன்ல, எதையும் பேசாதன்னு சொன்னேன்மா. நீ ஏன் பேசுற?


சுவடி ஓதும் மைந்தன் :-   எதுவும் வந்து பேசன்னு சொல்லக்கூடாதுன்னு சொன்னேன். நீ ஏன் வந்து … எப்படி?


அடியவர் :-  நீ ஏன்மா பேசுன்னு அப்படிங்கிறாரு. ஈசன் கேக்குறாரு.

===========================
# சிவபுராணத்தின் உண்மை அர்த்தம் புரிந்தால் , ஆதி ஈசன் பாதத்தில் எப்போதும் இருக்கலாம்
===========================


குருநாதர் :-   எதை என்று அறிய, நிச்சயம் பின் ஈசனாரும் எவை என்று அறிய. இதனால் நிச்சயம் பின், அதாவது உன்னில் நானே, என்னுள் நீயே என்று சொல்லிவிட்டாய். யானும் அப்படியே சொல்கின்றேன். 

குருநாதர் :- ஆனால் நிச்சயம் தன்னில் கூட இப்பாடல் வரிகளுக்கு பின் அர்த்தம் தெரிந்தால், நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று கூற, கிரகங்களும் சரியாகிவிடும். அனைத்தும் வென்று, நிச்சயம் தன்னில் கூட என் காலடியிலே இருந்திருப்பான். நிச்சயம் அனைத்தும் வெல்லலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாருங்க, ஐயா? 

ஓதுவார் ஆடியவர் :- காலடியே இருந்திருக்கலாம். இப்படி சிவபெருமான் காலடியிலேயே இருந்திருக்கலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இல்ல, இல்ல, மாணிக்கவாசக பெருமான் சொல்றாரு. 

அடியவர் 4 :- மாணிக்கவாசக பெருமான் வந்து இந்த பாடலுக்கு பொருள் தெரிஞ்சிருந்தா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இதுல போயிடும். எழுத்துக்கு வந்து என்னதான் அந்த நேரத்துல, அந்த நேரத்துல இருந்தா, அதனாலதான் ரெக்கார்ட் பண்றது இல்லன்னா, எழுதிக்கணும் வந்து. அந்த நேரத்துல ஓடி போயிடும். எழுத்துக்கள் வந்து. 

அடியவர் 4 :- சிவபெருமான் வந்து சொல்றாரு, பார்வதி அம்மா கிட்ட, நீ அவரை வந்து போற்றி பாடுன்னு சொல்லிட்ட. நீ சொல்லாம இருந்திருந்தா, அவன் பொருள் எப்படியாவது கண்டுபிடிச்சு, என் காலுக்கு அடியிலேயே இருந்திருப்பான். அப்படின்னு சொல்லி, சிவபெருமான் சொல்றாரு. வந்துட்டு, நவகிரகத்தையும் வென்று, என் காலுக்கு அடியிலேயே அவன் இருந்திருப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவன் இருப்பான். எதுக்கு? எதுக்கு வந்து? 

அடியவர் 4 :-  நீ சொல்லிட்ட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீ சொல்லிட்ட.  சொல்லிட்டேன்றாரு. 

குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் உன்னுள் இருப்பவனே, என்னுள் இருப்பவனே, அனைத்தும் நீயே, அனைத்தும் நானே. இதனால் உன்னை எப்படி யான் போற்றி பாடுவது? 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்னன்றாரு? எல்லாம் உனக்கு தெரியும்பா. எல்லாமே உனக்கு தெரியும். என்னுள் இருக்கிற எல்லாத்தையும் இருக்கிறார் வந்து… அப்புறம் நான் வந்து எது? 

அடியவர் 4 :- எப்படி உன்னை நான் போற்றி பாடுறது? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி உன்னை நான் போற்றி பாடுறது?  மக்களுக்கு எப்படி நான் தெளிவுபடுத்துறேன்றாரு. 

குருநாதர் :-  கலியுகத்தில் மக்கள் திருந்து போவதில்லை. இதனால் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நீயும் அங்கங்கு எதை என்று புரிய. பின் எவ்வாறு என்பது எல்லாம் திருத்தலம், திருத்தலமாக சென்று, நிச்சயம் பின் பொருள், பின் நீயே புரிய வை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்லிட்டாரு? கலியுகத்துல 

அடியவர் 4 :-  யாரும் திருந்து போறதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்துக்கு யாரும் திருந்து போறதில்லை. உண்மையான பலத்தையும் வந்து? 

அடியவர் 4 :- அடைய போறதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடைய போறதில்லை. அதனால நீ திருத்தலம், திருத்தலம், திருத்தலமா போ. 

அடியவர் 4 :-  போய் எல்லாருக்கும் எடுத்து சொல்லு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் எடுத்து சொல்லு. பார்ப்போம், நீயே புரியவை என்று சொல்லறாரு. 

குருநாதர் :-  எதை என்று புரிய, மாணிக்கவாசகனும் எதை என்று அறிய, ஏது என்று புரிய. பின் அதாவது எனக்கே பொருள் தெரியவில்லை. பின் நான் எப்படி புரிய வைப்பது? பின் தாயே, தந்தையே என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன சொல்றாரு? 

அடியவர் 4 :-   எனக்கே புரியல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் எப்படி?  எனக்கே இந்த புரிய புரியல. வந்து அப்ப மக்களுக்கு நான் புரிய வைக்கிறது என்னன்னு சொல்றாரு. 

===========================
# அன்னை பார்வதி தேவியின் கவலை 
===========================

குருநாதர் :-  பின் அப்படி எது என்று புரிய சரி, உனக்கு ஒன்று உத்தரவை கொடுக்கின்றேன். எனை யாரெல்லாம் அழைக்கின்றார்களோ, அவரிடத்தில் சென்று புரிய வை முதலில் என்று. நிச்சயம் பார்வதி தேவியும். ஐயயோ, இப்படி ஒரு எவை என்று கூற பின், வேலையா இவனுக்கு என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசன் சொல்றாரு. யாருகிட்ட? 

அடியவர் :-  மாணிக்கவாசகன் கிட்ட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீ தெரிஞ்சுக்கணும்ல, உன்னெல்லாம் யாரெல்லாம் நமச்சிவாயன்னு சொல்றாங்களோ, அவன் கையில போயிட்டு என்ன பண்ண சொல்றாரு? 

அடியவர் 4 :-  புரிய வை. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரிய வை. இப்ப இவர் நமச்சிவாய சொல்றாரா? இவருகிட்ட ஓடிடு. இவர் அவர் நமச்சிவாய சொல்றாரா? இப்ப நீங்க நமச்சிவாய சொல்றாரா? யாரெல்லாம் என் பேர் நமச்சிவாயன்னு சொல்றாங்களோ, நீ அவன் கையில போயிடுப்பா. போயிட்டு 

அடியவர் 4 :-  இதை புரிய வை. புரிய வை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரிய வை என்றாரு. 

குருநாதர் :-   எதை, ஏது என்று புரிய நிச்சயம் இப்படியே பல ஆண்டுகள் ஆயிற்று. புரிய வைக்க முடியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படியே மாணிக்கவாசகர் யாரெல்லாம் கூப்பிடுறாரோ, இப்ப நீ கூப்பிட்டாலும் வந்து, அவர் கூப்பிட்டாலும் வந்து, இவர் கூப்பிட்டாலும் வந்து, நீங்க கூப்பிட்டாலும் வந்து, நமச்சிவாயன்னு சொல்லிட்டாரு. என்னது? 

அடியவர் 4 :-  போயிடுறாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  போயிடுறாரு. மாணிக்கவாசகர். 

===========================
# இன்றளவும் சிவபுராணத்தின் பொருள் புரிய வைக்க மாணிக்கவாசகர் பெருமான்  போராடி வருகின்றார்கள்….
===========================

குருநாதர் :- அப்பனே, இன்றளவும் அப்பனே, பின் இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

அடியவர் 4 :-  இப்ப வரைக்கும் நடக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப வரைக்கும் நடந்துட்டு இருக்குது. நடந்து தான் இருக்குதாம். வந்து 

அடியவர் :- எங்கெல்லாம் நமச்சிவாயர் பேரை சொல்றாரோ, மாணிக்கவாசக பெருமான் அங்க நேரா போயி புரிய வைக்க முயற்சி பண்றாரு. முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியவைக்க  முடியல. 

அடியவர் :- திருப்பி வந்துறாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- முடியல. 

குருநாதர் :- அறிந்தும் எது என்று அறிய. ஏனென்றால் பின் மீண்டும் பின் அண்ணாமலைக்கு வந்து, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், பின் எதை என்று புரிய வைக்க முடியவில்லை என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் திருப்பி வந்துட்டாரு திருவண்ணாமலைக்கு. எப்பா, என்னால புரிய வைக்க முடியல. ஆனா இன்றளவும் என்ன பண்ணிருக்காரு? வந்து 

அடியவர் 4 :-இன்னும் போய்க்கிட்டே இருக்கிறார். 

சுவடி ஓதும் மைந்தன் :- போய்க்கிட்டே இருக்கிறார். வந்து 

அடியவர்  :- (ஆச்சரியத்தில்) அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- போய்க்கிட்டே இருக்கிறார். 

===========================
# களைத்து போய்விட்ட “மாணிக்க வாகனம்”
===========================

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மாணிக்கவாசகன் எவை என்று கூற பின், அதாவது மாணிக்க பின் வாகனம் என்றே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அவர் என்ன சொல்றாங்க? வந்து மாணிக்க வாகனம். 

அடியவர்  :- மாணிக்க வாகனம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்க வாகனம். வாகனம். இன்னும் அந்த வாகனம் என்ன ஆயிட்டு இருக்குது? 

அடியவர் 4 :- போய்க்கிட்டே இருக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ரிப்பேர் ஆகல. ஒன்னும் ஆகல. என்ன ஆயிட்டு இருக்குது? 

அடியவர் :- அவருக்கு வாகனம் ஆக்கிட்டாங்க. அவரையே வாகனம் ஆக்கிட்டாங்க. அவர் பேரே மாணிக்க வாகனம் தான். ஓடிக்கிட்டே இருக்கிறார். யாரெல்லாம் நமச்சிவாயர் பேரை சொல்றாங்களோ, அந்த வீட்டுக்கு போயிட்டே இருக்கிறார். அர்த்தத்தை புரிய வைக்க அவரும் முயற்சி செய்றார். யாரும் புரிஞ்சுகிட்ட பாடு இல்லை. திருப்பி வர்றாரு. ஈசன்ட்ட கம்ப்ளைன்ட் பண்றாரு. 

குருநாதர் :- எதை, எது என்று புரிய ஆனாலும் இவ்வாறாக அறிந்தும் அங்கங்கே சென்று எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கைலாயத்தில் சென்று எதை என்று புரிய. என்னால் முடியாது. நிச்சயம் எவை என்று கூற பின், உயிரை விட்டு விடுகின்றேன் என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா, என்னால புரிய வைக்க முடியாதுப்பா. 

அடியவர் :-  போதும்பா, விட்டுரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன் சொல்லுக்கு எனக்கு முடியாது. உன்னால என்னை நீ சொல்லிட்ட எல்லாம் நானேன்னு சொல்லிட்ட. உன்னை புரிஞ்சுக்க என்னால முடியாதுப்பா. முடியல. கைலாயத்துக்கு போய் என்ன பண்றது? வந்து 

அடியவர் :-  புரிஞ்சுக்கவும் முடியல. புரிய வைக்கவும் முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  முடியல. 

அடியவர் :- என்னை விட்டுருப்பா. நான் முடிச்சுக்கிறேன். அப்படின்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னது? வந்து?  

அடியவர் 4 :-  உயிரை விட்டுறேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-   உயிரை எடுத்துருப்பான்றாரு. 

குருநாதர் :- அது, அது எப்படி எது  என்று புரிய. உயிரை எடுக்க முடியும். எவை என்று அறிய  நீதான் கேட்டாய் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன் :-   அது எப்படி உயிர் நான் எடுக்க முடியும்? நீதானே கேட்ட? இதுக்கு மாணிக்கவாசகர் வந்து இப்படி எல்லாம் வந்து இதெல்லாம் பாடணும்னு நீதானே கேட்ட? இப்ப இதுல நீ வந்து தோல்வி அடைஞ்சுட்டா, உயிர் எடுத்து… நீ கண்டுபிடிக்க முடியலன்னா, 

அடியவர் :- அது எப்படி எடுக்குறது? நீதான்  வந்த…

சுவடி ஓதும் மைந்தன் :-  நீதான் அது அப்படி என்னது? உயிர் எடுக்க சொல்ற. எப்படி நியாயம்ன்றாரு? வந்து 

குருநாதர் :- எதையும் அப்பொழுது கூட பார்வதியும் மனம் இரங்கி. மகனை, இவ்வாறு எல்லாம் சோதிக்காதே. எவ்வளவுதான் தாங்குவான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாரு? 

அடியவர் :-  அம்மா, நடுவுல வந்து உன் பிள்ளையை சோதிக்காதப்பா. அப்படின்றாங்க. 

ஓதுவார் அடியவர் :- மகனை சோதிக்காதே. 

அடியவர் :-  ஆமா. 

===========================
# நமச்சிவாய வாழ்க !!!!!  நாதன் தாள் வாழ்க !!!!!
===========================

குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அறிந்து கூட இவ்வாறாக சோதிக்காதே என்றெல்லாம்… நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பின் நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப பாடுறாரு. எப்பா, என்ன சொல்றாரு? 

அடியவர் 4 :-  நமச்சிவாய வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீ வாழ்க. 

அடியவர் 4 :-  நாதன் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- நாதன் தாள் யாரு? 

அடியவர் 4 :- நமது ஈஸ்வரன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா, உன்னை நான் கையெடுத்து வணங்குறேன்டா. 

அடியவர்  :- சிவனுடைய பாதத்தை போற்றி வணங்குறார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  போற்றி உன்னை பாடுறேன். நான் வந்து எனக்கு வந்து பொருள் விளங்க வை. 

குருநாதர் :- நிச்சயம் விளக்கி வைக்கிறேன். ஆனால் உன் பக்தர்கள் நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பொருள் உணர்ந்து தான் படிக்க வேண்டும் என்று எது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் உனக்கு நான் விளக்கம் சொல்லிடுறேன். ஆனால் உன் பக்தர்கள் என்ன பண்ணனும்? கடைசில வந்து?.... 

அடியவர் 4  :- பொருள் உணர்ந்து தான் படிக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொருள் உணர்ந்து தான் படிக்கணும். 

அடியவர்  :-  படிக்கணும் .

சுவடி ஓதும் மைந்தன் :- பொருள் உணராமல் படித்தால்?

அடியவர்  :- பிரயோஜனம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிரயோஜனம் இல்லை. 

https://youtu.be/q8Hs63mXjrc?t=35398

குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதேபோல் பலமுறை நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க என்றெல்லாம். பின் நிச்சயம் இப்படியே பல ஆண்டுகள் கூறிக்கொண்டே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ ரெண்டு எழுத்துக்கு ( வரிக்கு )  அவர் வந்து எத்தனை வருஷமா?

அடியவர்கள் :- ( பல ஆண்டுகளாக …) 

சுவடி ஓதும் மைந்தன் :-   நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. நமச்சிவாய. இப்படியே தான் இருக்கிறாராம். பல ஆண்டுகள். 

===========================
# இப்பாடலை பாடினால் ஈசன் நிச்சயம் இறங்குவார் . 
===========================

குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்பாடலை பாடினால் ஈசன் நிச்சயம் இறங்குவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால்தான் இந்த பாடலுக்கு?

அடியவர்  :- சிவபுராணத்திற்கு அவ்வளவு சக்தி. அவ்வளவு சக்தி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்கள் பாடினால் 

அடியவர்  :-   நிச்சயம் ஈசன் இறங்குவார். ஈசன் இறங்குவார். என்ன சொல்றாரு? மாணிக்கவாசக பெருமான் என்ன குட்டி சொல்றாரு? அப்படியே நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. நமச்சிவாய வாழ்க. இப்படியே சொல்லிக் கொடுக்கிறார். சொல்லிக்கொண்டே இருக்கிறாராம். வந்து 

அடியவர்  :-  எது புரியுதோ, அதை தான் சொல்றாரு. 

குருநாதர் :-  அப்பனே, அடுத்து அப்பனே, நிச்சயம் பல ஆண்டுகள். அப்பனே, அடுத்த வரி வருவதற்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அடுத்து நமச்சிவாய வாழ்க. 

அடியவர்  :-   நாதன் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   நாதன் தாள் வாழ்க. 

அடியவர்  :-   இமைப்பொழுதும், 

சுவடி ஓதும் மைந்தன் :-   இமைப்பொழுதும் 

அடியவர்  :-   என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப என்ன விட்டு போயிடாதடா. அப்பான்னு சொல்லிட்டு, அடுத்து என்ன பண்றாரு? 

அடியவர்  :-   அடுத்த வரி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த வரியை திருப்பி சொல்றாரு. 

அடியவர்  :-   ரெண்டு பல வருடம் கழிச்சு இதை சொல்றாரு….

சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகள் படிச்சு, 

அடியவர்  :-    படிச்சு நமச்சிவாய வாழ்க. நான் சொல்லி சொல்லி 

===========================
# சிவபுராணம் - பூமி அழியும் வரை இருக்கும். 
===========================

குருநாதர் :-  அப்பனே இவ்வாறாக பல நூறு ஆண்டுகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே உருகி உருகி படித்தது நிச்சயம் பின் எவை என்று கூற, பூமி அழியும் வரை இருக்கும். 

அடியவர்  :-   அப்பா!!!!! சிவாய நம!!!!! 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப, இதெல்லாம் ஒரு வரியில சும்மா எழுதுனது கிடையாது. வந்து இதெல்லாம் வந்து 

அடியவர்  :-   அப்பா, அப்பா, 

அடியவர் 4 :-  பல நூறு ஆண்டுகள், 

சுவடி ஓதும் மைந்தன் :-   பல நூறு ஆண்டுகள் தவம் இயற்றி ….

அடியவர்  :-  இந்த பாடல் முழுசா படிச்சிருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அவர் என்ன பண்றாரு? 

அடியவர்  :-  ரெண்டு வரியை பல வருடங்கள் படிக்கிறாங்க. அதுக்கப்புறம் ரெண்டு வரியை பல வருடங்கள் படிக்கிறாங்க. 

குருநாதர் :-   அதனால்  அப்பனே, நீங்கள் பின் ஒரே நாளில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒருமுறை படித்துவிட்டு நலங்கள் ஆகவில்லையே என்று  அப்பனே, நியாயமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-    அப்ப, 

அடியவர்  :-  நாலு நிமிஷம், அஞ்சு நிமிஷம் படிச்சிட்டு எனக்கு ஒன்னும் கிடைக்கலன்னா…. கிடைக்குமா? என்னன்னு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் படிச்சிருக்கிறார். 

சுவடி ஓதும் மைந்தன் :-   கிடைக்குமா? 

குருநாதர் :-  அப்பனே, இப்ப கலியுகத்தில் பலர், அப்பனே, படித்து படித்தும் ஒன்றும் நடக்கவில்லையே என்றெல்லாம். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இதை படிச்சு, படிச்சு மனுஷன் இந்த கலியுகத்துல என்ன சொல்றானாம்? சும்மா சொல்லிக்கிறான். 

அடியவர்  :-  நான் படிக்கிறேன், என்னால பிரயோஜனம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- பிரயோஜனம் இல்லைன்றாரு. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!