​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 28 February 2026

சித்தன் அருள் - 2135 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள்-பகுதி - 7!


88. கலியுகத்தில் இறைவன் விதித்தபடி தான் விஷயங்கள் நடக்கப் போகிறது. இதில், நீங்கள் ஏன் தொண்டை தண்ணி வற்ற நீதி, நேர்மை என்று புலம்புகிறீர்கள்?

குருநாதர்: அப்பனே! இவனை சார்ந்த ஒருவனை வெட்டுகிறார்கள்! விட்டுவிடலாமா என்ன? கேள்!
 
89. கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விக்கிரகங்கள், கல் அல்லது உலோகத்தால் ஆனது. அதில், இறை எங்கிருந்து வந்து அமர்கிறது?

குருநாதர்; பெரியவர்கள் நிச்சயம் முட்டாள்கள் இல்லை. இறைவன் ஒரு காந்தம், அந்த காந்த சக்தியை இழுத்து வாங்கித் தரத்தான் கோவில்கள். பின்னர் மனிதன் ஆக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பே வரவில்லை அதற்குள் 11ம் வகுப்பு செல்ல வேண்டும் என்றால் எப்படி அப்பனே! ஒவ்வொன்றாக யான் தெரிவித்து வருகின்றேன்!  

90. திருவண்ணாமலை   கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் இரண்டிலும் நடக்கும் அட்டூழியங்களை பொருத்துக் கொண்டு இருக்கும் ஈசனுக்கும் சித்தர்களுக்கும், பொதுவாக நல்லதை செய் என்று மனிதர்களுக்கு உரைக்க தகுதி இருக்கிறதா?

குருநாதர்; நிச்சயம் தன்னில் கூட. யாங்கள் முடிவெடுத்துக் கொள்கின்றோம். இப்பொழுது அதை பற்றி தேவை இல்லை.

அடியவர்: அப்போ! அந்த கோவில்களுக்கு நாங்கள் எல்லாம் போக வேண்டாம்!

குருநாதர்; அப்பா! அனைத்தும் ஒன்றுதான். இங்கு மனிதன்தான் எதை எதையோ சொல்லி குழப்புகின்றான்.

அடியவர்: அதெப்படி பக்தனுக்கு நாட்டம் இறைவனிடம் தானே இருக்கின்றது!

குருநாதர்: நிச்சயம்! அப்பா! இறைவனே, இறைவனை பார்த்துக் கொள்வான். கவலை விடு.

அடியவர்: சென்று இறைவனை பார்க்க முடியவில்லை என்றால் எனக்கும் மனதுக்கு வருத்தமாக இருக்கும் இல்லையா?

குருநாதர்; அதாவது பின் இறைவனே உங்களை காண வேண்டும்! அவ்வளவுதான். கவலை விடு!

அடியார்: நிச்சயமாக! கோவில்களில் சென்று பார்க்கிறபொழுது, இதுதான் இறை ரூபம் என்று நம்பி, மனதார பேசுவோம். 

குருநாதர்; நிச்சயம் தன்னில் கூட! அனைத்தும் இறைவனே! எப்பொழுது எதை செய்ய வேண்டுமோ, அப்பொழுது அதை செய்வார்கள். கவலையை விடச்சொல். 

அடியவர்: சரி! எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுது வரச்சொல்லுங்கள்! அவ்வளவுதான்.

91. மூத்தோனுக்கு பூஜை செய்துவிட்டு எதையும் தொடங்கு, அங்கு போய் இங்கு போய் அபிஷேக பூஜைகளை செய் என்று சொல்கிற நீங்கள் தான் தவறு நடக்கிறதே என்று கேட்டால், இறைவனோ, நாங்களோ அபிஷேக பூஜைகளை செய்யச் சொன்னோமா?  உங்கள் ஆசைக்காக நீங்கள் செய்கிறீர்கள் என்கிறீர்களே! இது முரணாக தோன்றவில்லை?

குருநாதர்; அவ்வாறு செய்தால் ஆற்றல் கூடும். அவ் ஆற்றல் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவி செய்வதாக அமையும். உங்களுக்கு ஆற்றல் 10% இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு ஆற்றலை கூட்டி கொடுத்து, பெருகட்டும் என்று. சில ரகசியங்கள் உண்டு. அவைகளை எடுத்து சொல்லிவிட்டால், அப்படியே அக்கல்லை எடுத்து சென்று விடுவான். அதன் கீழே என்னென்ன உள்ளது என்பதை யாங்கள்தான் அறிவோம். ஒன்றை சொல்கின்றேன்! புத்திசாலியாக இருந்தால், ஆசிரியன் இதை படித்து வா என்றால் படித்து வருவான். ஏன் படிக்க சொல்கிறாய் என்று கேட்டால், அவனை விட முட்டாள் யாரும் இல்லை. 

அடியவர்: நாங்கள் என்னவோ! நல்லபடியாகத்தான் அபிஷேக பூஜைகளை செய்து வருகிறோம்! ஆனால் வேறு எவனோ அங்கு அமர்ந்து ஸ்வாமியை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறான்.

குருநாதர்; அப்பனே! பிரச்சினைகள் இல்லை! விட்டுவிடு!

92. மூவரை நம்பி சென்றால், வாழ்க்கை சக்கரத்துக்குள் சுழன்று கொண்டிருப்பீர்கள், மேல் ஏறி மோக்ஷத்தை அடைய முடியாது என்று கூறியிருப்பது உண்மை தானே?

குருநாதர்; தேவை இல்லை இவை எல்லாம்.

அடியார்: தனக்கு மட்டும் உபதேசம் பண்ணினது, ஆதலால், மனிதனுக்கு தேவை இல்லை! அப்படித்தானே!

குருநாதர்: !!!!

93. கண்ணுக்கும், செவிக்கும் எட்டிய/எட்டாத தூரத்தில்/இங்கு அருகில் கூட அநியாயங்கள் நடந்து கொண்டிருக்க, இப்படி நடத்துவதே இறைவன் தான் என்றால் வியாபாரம் ஆகாத தர்மத்தை இங்கு ஏன் விற்க வருகிறீர்கள்? இறைவனிடம் கூறி மொத்தமாக கலைக்க சொல்லலாமே? இன்னும் நிகழ்வுகள் என்னும் கொசு இறைவனை கடிக்கவில்லையோ?

குருநாதர்; அவ்வாறு அழித்தால் கூட இவ்வாறு பேசுகின்றார்கள். எப்படியாப்பா நியாயம்? ஒருவன் அவ்வாறு பேசுகின்றான், ஒருவன் இவ்வாறு பேசுகின்றான். அனைவரும் ஒன்றாக இணையுங்கள். அப்பொழுது யான் தெளிவுபடுத்துகின்றேன்!

அடியவர்: எங்க, அனைவரும் ஒன்றாக இணைவது?

குருநாதர்; அப்பனே! ஒருவனுக்கும் புத்தி இல்லை. இங்கு நான் பெரியவன், நீ பெரியவன் என்றெல்லாம். பக்தியை பெருக்கி, பின் இறைவனே இல்லை என்று சொல்லிவிடுகின்றான். ஒன்றை சொல்கின்றேன்! இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்! அனைவருக்கும் தெரியப்படுத்து. அடுத்து சனீஸ்வரன் குரு வீட்டில் உட்காரப்போகின்றான். அப்பொழுது தெரியும், உண்மையான பக்தன் யார் என்று!  அனைவரையும் ஒரு அடி  அடிக்கப் போகின்றான். பின் பொய் சொல்கிறவர்கள் பக்கத்துக்கு சனீஸ்வரன் வருகின்றான், வருகின்றான்! அதுவும் மீனா ராசிக்கே. அப்பொழுது தெரியும், இப்பொழுது கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்களே! அப்பொழுது எல்லாம் ஏற்படுத்துவான், சனீஸ்வரன் நீதிபதி என்பது தெரியும்! 

94. அன்னதானம் செய்யுங்கள் - நல்ல உத்தரவு! பிறர் செய்யும் அன்னதானத்தை சாப்பிட்டால் கர்மா வரும். எப்படி? தன் குழந்தை செய்தால் விளையாட்டு, பிறர் குழந்தை - எனக்கு தெரியாது என்ற மனநிலையா?

குருநாதர்; அப்பா! நிச்சயம் ஏமாற்றித்தான் செய்கின்றார்கள் அப்பனே! அதாவது, 10000 ரூபாய் வாங்கி அதில் மீதி 7000 ரூபாயை தான் சாப்பிடுகின்றான். இதன் பெயர் அன்னதானமா?

அடியவர்: சாப்பிடுகிறவனை பற்றித்தான் நான் கேட்டேன், பண்ணுகிறவனை பற்றி கேட்கவில்லை.

குருநாதர்; அனைத்தும் இறைவன் ஏற்பாடே, விட்டுவிடு. 

அடியவர்: எல்லாவற்றையும் சொன்னதே நீங்கள் தான். 

குருநாதர்; அப்பனே! சொல்கின்றேன் அப்பனே, பின் கவலையை விடு! 

அடியவர்:  நான் பழைய கேள்விகளை எடுத்துவிட்டால், மிகப்பிரச்சினை ஆகிவிடும்!

குருநாதர்;அப்பனே! பிரச்சினைதான் வாழ்க்கை அப்பா! 

95. இறைவனை வைத்து பிரச்சினையை உருவாக்கும் மனிதர்கள் கையில் கோவிலை கொடுத்துவிட்டு, கூட்டு பிரார்த்தனை பண்ணு, அபிஷேகம் பண்ணு என்று ஆசையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பதில், தூண்டாமல் இருக்கலாம் அல்லது அவ் மனிதர்களை முடித்து விடலாம் அல்லது கோவில்களை  அழித்து விடலாம்.

குருநாதர்;நல்லோர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மோதினால் என்ன ஆகும் என்று தெரிவதே இல்லை அப்பனே! இதெல்லாம் பாபக்காரன்தான் செய்து கொண்டு இருப்பான்! எங்களுடைய உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது எங்களுக்கு தெரியுமப்பா. மனிதன் என்ன பேசினாலும், எது நடக்கப்போகிறதோ, அது நிச்சயமாக நடக்கும். அவனும் உடல் நிலை சரியில்லாமல் போய் கை ஏந்துவான். அப்பொழுது அங்கு வைத்து அவனை அடித்து சொல்கின்றேன்! 

அடியவர்: சரி! நடக்கட்டும்! யார்தான் கையேந்துவதில்லை இப்பொழுது. கெட்டவன் கையேந்தினாலும் கொடுக்கிறீர்கள். நல்லவர்கள் கையேந்தினாலும் கொடுக்கிறீர்கள். கடைசியில் பார்த்தால், நல்லவன் கையில் ஒன்றும் இருக்க மாட்டேன் என்கிறது. அதையும் கெட்டவன் பிடுங்கிக்கொண்டு போய் விடுகிறான்.

குருநாதர்; நிச்சயம் தன்னில் கூட! அதனால் தான் அவனுக்கு நல்லவன் என்று பெயர்!

அடியவர்: பேர் மட்டும் இருந்தால் போதுமா? 

குருநாதர்;அப்பனே! நல்லவனுக்கு எதற்கப்பா அனைத்தும். உணவிருந்தால் போதுமானது. 

அடியவர்: அந்த உணவுகூட கிடைக்காமல் திண்டாடுகிறான்.

குருநாதர்; அப்பனே கிடைக்காமல் இருந்தால் பரவாயில்லை!  அவன் தான் நல்லவன்! நல்லவன் அனைத்தையும் ஏற்றுக்கொள்வானப்பா! 

96. அகத்தியர் என்ற நாமத்தில் இங்கு வந்த சித்தர்கள் எத்தனை பேர்?

குருநாதர்; அப்பனே! நிச்சயம் சூரியன் ஒருவனே! இதை பற்றி யான் சொல்லப்போவதில்லை. 

அடியவர்: அந்த நாமத்தில் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் என்றுதான் கேட்டுள்ளோம்!

குருநாதர்: அப்பனே! ஏன் நீ கூட வைத்துக்கொள் நான் அகத்தியன் என்று, இவன் கூட வைத்துக்கொள்ளட்டும் அகத்தியன் என்று!

அடியவர்; ஏன்! அதற்கப்புறம், உங்களை திட்டியதெல்லாம், எங்கள் மேல் விழாவா?

குருநாதர்; அப்பனே! ஏமாற்றுவதற்காக என் பெயரை முதலில் வைத்துக் கொள்கின்றார்கள். இருக்கட்டும் அப்பா! கடைசியில் அனுபவிப்பது, அவ்வளவுதானா. அப்பனே, நீ கேட்டாய் அல்லவா! அடுத்தவன் கர்மாவை என் முதுகில் ஏன் ஏற்றி விடுகின்றீர்கள் என்று. என் பெயரை தன் பெயருடன் வைத்துக் கொண்டு அவன் கர்மாவை என் முதுகில் தானே ஏற்றிவிடுகின்றான்! இதை முதலில் தெளிவுபடுத்து!

அடியவர்: அப்படியென்றால், அவன் செய்கின்ற புண்ணியமும் வருமா?

குருநாதர்; அப்பா  பொய் சொல்லி திரிகின்றானே, அவனுக்கு மட்டும் பொருந்தும்!

97. அகத்தியப்பெருமானுக்கு கைலாயத்தை ஆண்ட பரமேஸ்வரன் என்கிற சக்கரவர்த்திதான் தமிழ் இலக்கணத்தை உபதேசித்ததாக கூறப்படுகிறதே! உண்மையா?

குருநாதர்; அப்பா! இவை எல்லாம் செப்பிவிட்டேனப்பா! யாரப்பா இவன், முதலில் இலக்கணத்தை படித்து வரச்சொல், பின்பு உரைக்கின்றேன்! கைலாயத்தின் சக்ரவர்த்தி யார்?

அடியவர்: பரமேஸ்வரன்!

குருநாதர்; அப்பனே! ஈசனே ஒரு சித்தன் தானப்பா! விட்டுவிடு!

98. ஒரு விஷயத்தை முற்றவிட்டு, புத்திகெட்ட மனிதன் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே இறைவன்!

குருநாதர்; அப்பனே! அதிலும் ஒரு சந்தோஷம் இறைவனுக்கு!

அடியவர்: ஆம் நீங்கள் சொலவ்து போல் அனைத்துக்கும் காரணம், இறைவன்தான்.  

99. நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால் கலியுகத்துக்கு பக்தி வேண்டாம், புத்தி இருந்தால் போதும்  என்று தோன்றுகிறதே!

குருநாதர்;நிச்சயம்! புத்தி இருந்தால் அதன்கூட திருட்டு தேவை. புத்தி இருந்தால், திருடத்தான் செய்வான் மனிதன். அத்திருட்டு வழி அனைத்தையும் இழப்பான், மனிதன். சரியான கேள்வி!

100. எத்தனை பக்தி செய்தும், எத்தனை பூஜைகள், அபிஷேகங்கள், கொண்டாட்டங்கள் செய்தும் இன்று இறைவனால் மக்களுக்கு தர்மம் நிறைந்த திரைப்படத்தை காட்ட முடியவில்லையே!

குருநாதர்; எத்தனை பக்தி செய்தாலும், எத்தனை விதமாக எதை செய்தாலும், இதுதான் என் பதில். முடியாது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 27 February 2026

சித்தன் அருள் - 2134 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள்-பகுதி - 6!


69. சிவபுராண கூட்டு பிரார்த்தனையில், கர்மபரிபாலனமன்றி, கர்மபரிவர்த்தனை தான் நடக்கிறது என்பது தெளிவாகிறதே. 

குருநாதர்: தீயவையா செய்கின்றார்கள்! நல்லவை தானே செய்கின்றார்கள். சில சில நல்லவைகளை செய்யச்செய்ய சில சில கர்மாக்கள் ஓடும், நிச்சயம்! இவ்வுலகத்தில் நல்லோர்கள் குறைவு. நல்லோர்களை வைத்து இவ்வுலகத்தை மாற்ற வேண்டும். அவரவர் எண்ணங்கள் அவரவரையே தாக்கும்.  

70. சித்தர்களை நம்பி இறங்கி வருபவர்களை, கைபிடித்து ஏற்றி விடுகிறீர்களா? அல்லது கைவிட்டு நடுத்தெருவில் விட்டு அனுபவிடா! என்று விடுகிறீர்களா?

குருநாதர்: நிச்சயம், முதலில் கை விட்டுவிடுவோம், பார்ப்போம் இவன் எண்ணம் என்னவென்று அறிய! அதற்கு சரியானவனாக இருந்தால் ஏற்றி விடுவோம். நிச்சயம் அடுத்தவனுக்கு உதவாத மனிதன் இருந்தால் என்ன லாபம்? அதனால் தான், எங்களை நாடி வருவோர்க்கு, முதலில் கஷ்டத்தை அளிப்போம். இதை அனைவரிடத்திலும் தெரியப்படுத்து! நிச்சயம் அக்கஷ்டத்தை தாங்கினால் உயர்த்துவோம், இல்லையெனில் விட்டுவிடுவோம் யாங்கள். சித்தனுடைய பண்பு, முதலில் கஷ்டப்படுத்துவதே, கஷ்டப்படுத்துவதே. இதற்கு தயாராக இருந்தால் வாருங்கள். 

அடியவர்: பார்த்துப்பா! நடக்க கால் இருக்கணும்! (ஜானகி ராமனிடம் - உனக்கு எத்தனை வயசாச்சு? முப்பது ஆச்சுங்க என்றார். உனக்கு 50 அல்லது 60 வயதாகட்டும்)

71. கால பைரவர் அம்சங்களுக்கு 3 ஆண்டுகளாக நல்வாழ்வு இல்லை. அவற்றை அழிக்கும் வேலை நடைபெருகிறது. அகத்தியர் பெருமான் இதை தவிர்க்க வழி காட்ட வேண்டும்.

குருநாதர்: காப்பாற்றச்சொல்! படையை உருவாக்கச்சொல்! அதுவும் இறைவன் அம்சம்தான். 

72. குருவே சரணம். ஏன் மனிதனின் தரம் ஜாதியால் நிர்ணயம் செய்யப்படுகிறது.இதற்கு முடிவே இல்லையா?

குருநாதர்: நிச்சயம் தன்னில் கூட, எங்களுக்கு அதெல்லாம் தேவை இல்லை. 

73. தந்தையே தங்கள் திருபாதங்களை பற்றி பணிந்து வேண்டுகிறேன், வெளிநாடுகளில் இருக்கும் தங்களின் குழந்தைகளாகிய நாங்கள் தந்தை வழிகாட்டும் கோயிலுக்கு செல்ல  இயலாதநிலையில் எப்படி வீட்டில் இருந்து வழிபடுவது என கருணையுடன் வழிகாட்ட வேண்டுகிறேன்.

குருநாதர்: நிச்சயம் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. அதுபோல், நினைத்தாலே யாங்கள் வருவோம், வழிகாட்ட. 

74. சித்தர்களை நம்பி வரும் சாதாரண மனிதனை அழைத்து சென்று, நடு வீதியில்  விட்டு விடுவார்களா? அல்லது அனுபவித்துவிட்டு வா என விலகி செல்வார்களா?

குருநாதர்: நிச்சயம், முதலில் கை விட்டுவிடுவோம், பார்ப்போம் இவன் எண்ணம் என்னவென்று அறிய! அதற்கு சரியானவனாக இருந்தால் ஏற்றி விடுவோம். நிச்சயம் அடுத்தவனுக்கு உதவாத மனிதன் இருந்தால் என்ன லாபம்? அதனால் தான், எங்களை நாடி வருவோர்க்கு, முதலில் கஷ்டத்தை அளிப்போம். இதை அனைவரிடத்திலும் தெரியப்படுத்து! நிச்சயம் அக்கஷ்டத்தை தாங்கினால் உயர்த்துவோம், இல்லையெனில் விட்டுவிடுவோம் யாங்கள். சித்தனுடைய பண்பு, முதலில் கஷ்டப்படுத்துவதே, கஷ்டப்படுத்துவதே. இதற்கு தயாராக இருந்தால் வாருங்கள். 

75. சித்தர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றுவார்களா?

குருநாதர்: நிச்சயம், முதலில், நாங்கள் சொல்வதை காப்பாற்றுவார்களா? 

76. தத்தோலி மகரிஷி, புலத்திய பிரம்மா மகரிஷியின் வம்சம். இவர் தான் முதல் மனுவாகிய சுவயம்புவ மனுவின் காலத்தில் அகத்திய மகரிஷியாக இருந்திருக்கிறார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

குருநாதர்: இதற்கெல்லாம் விஞ்சான படிப்பு படித்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் சொல்வேன். 

77. வணக்கம் அகத்தியரப்பா! பஞ்சபூத  ஸ்தலங்களுக்கு செல்லும் பொழுது வேறு கோயில்களுக்கும் செல்லலாமா ஐயா!

குருநாதர்: எதை உட்கொள்ள வேண்டுமோ அதைத்தான் உட்கொள்ள வேண்டும். இஷ்டத்துக்கு சென்றால் இஷ்டத்துக்குத்தான் நடக்கும். அனைவரும் தன் சந்தோஷத்துக்காகவே இறைவனை காண வருகிறார்கள். இறைவனே, ஒரு சந்தோஷப் பொருளாகிவிட்டான். 

அடியவர்: அது தப்பில்லையே!

குருநாதர்: அப்பா! எதற்காகப் போராடுகின்றோமோ, அதற்காகத்தான் போராட வேண்டும் முதலில். பின்பு வரட்டும் தேடி.

அடியவர்: சந்தோஷ மனநிலையில் இருக்கிற இறைவனை பார்ப்பது அடிப்படையான ஒரு ஆசை தானே?

குருநாதர்: சில திருத்தலங்கள் இருக்கின்றது. அதற்குமட்டும் சென்று பின் இல்லம் திரும்பி மறுபடியும் வேறு திருத்தலங்களுக்கு வந்தால், இறைவனே மகிழ்வான், இவ்வளவு பக்தியா என்று. 

78. அகத்தியர் ஐயாவுக்கு  வணக்கம் நன்றாக  இருக்கிறீர்களா அகத்தியரப்பா. நாங்கள் வெளிநாட்டில் வாழ்கிறோம் கூட்டுப்பிரார்த்தனை வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது,எங்களுக்கும் உங்களுடைய அருள் ஆசிகள்   வேண்டும் ஐயா!

குருநாதர்:நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை. அதுபோல், நினைத்தாலே நாங்கள் வருவோம்.1

79. Kindly tell us any remedy for intense tooth decay at the age of 20.

குருநாதர்:அப்பா! அனைத்தும் இருக்கின்றது. பின் சித்தன் அருள் என்று வலைத்தளம் உள்ளது. அதில் கூறியதை கடைபிடித்தாலே, நீடூழி வாழ முடியும். 

அடியவர்: ஏற்கனவே என் தலையை உருட்டி கொண்டு இருக்கிறார்கள், இதுல நீங்க வேறயா?

குருநாதர்: அப்பா! நல்லதை செய்யப்போனாலே இப்படித்தான் அப்பா! பிறர் கெடுக்கத்தான் பார்ப்பார்கள். ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் சொல்லிவிட்டான், இவன் சொல்லிவிட்டான் என்று மனம் மயங்க கூடாது எப்பொழுதும் தன்னில் கூட. இது யாங்கள் தேர்ந்தெடுத்து நடத்துவது. அப்பா! அனைத்தும் இறைவன் நடத்துகிறான் என்று உணர்ந்தவன், அனைத்தும் இறைவன்தான் நடத்துகிறான் என்று சொல்வான். பொறாமைக்காரன்தான் அவை, இவை என்று சொல்வான். பொறாமைக்காரர்கள்தான் பக்தி மார்கத்தில் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு யாங்கள் என்ன தண்டனை கொடுப்பது?  

80. Kindly tell us the ways of restoring liver from deceases like fatty liver, liver failure,etc  that too at 20s and 30s who never consume alcohol.

அப்பா! கலியுகத்தில் வரும், அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப! நிச்சயம் சொல்லிவிட்டேன்! அதெல்லாம் மாற்ற முடியாதது. ஏன் என்றால் நல்ல எண்ணம் இருந்தாலே போதுமானது. யாங்கள் வந்து மாற்றிவிடுவோம்! ஆனால், தீய எண்ணங்களை வைத்துக்கொண்டு, இறைவன் எங்கு இழுக்க வேண்டுமோ, அங்கு இழுப்பான். அதை காக்கவே நங்கள் ஓடோடி வந்து கொண்டு இருக்கின்றோம். இதையாவது செய்யுங்கள் அப்பா! ஒரு எல்லைக்குத்தான் பார்ப்போம், யாங்கள் கூட.

81. Hairfall, baldness treatment is a very big business an lot of money is spent by the suffering people. Kindly , please tell us the ways of getting rid of that. Thank You.

குருநாதர்: எதற்கும் ஆசை படாமல் இருந்தால், அவனுக்கு முடி வளரும். 

82. Please do something for srilankan tamils to enjoy their rights equally.

குருநாதர்: அதனால் தான் அங்கு சென்று இருக்கின்றேன் யான். 

83. Like regular kootu prarthanai, if all the Ahathia Bhavan devotees do prayer for the underprivileged, deceased orphans on regular basis at a  particular time, would it be helpful. Kindly direct the right people to arrange.

குருநாதர்: அப்பனே! இப்படிப்பட்ட எத்தனையோ பிரச்சினைகளை தீர்க்க வேண்டித்தான் கூட்டு பிரார்த்தனையை எடுத்து வந்தேன். அதனால் அப்பனே! திருமணம் ஆகாதவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், அனாதையானவர்களுக்கும் நிச்சயம் எடுத்து வருவேன். இதை யார் எதிர்த்தாலும், அவர்களுக்குத்தான் நிச்சயம் தண்டனை உண்டு என்பேன். இதனால் நல்லோர்களுக்கு உதவி செய்வதே இதன் நோக்கமாகும். இவர்கள் சாபமே, எதிர்ப்பவனை கொன்றுவிடும் என்பேன்.  

84. How the kalikkam treatment, putting drops on eyes by some vaithiars is helpful, useful. Please kindly direct.

குருநாதர்: அப்பனே! எடுத்துக் கொள்வது மனிதன் இயல்பு, அதை சரிப்படுத்துவது, இறைவன் இயல்பு.

85. Om Agatheesaya Namaha. concept of Multiverse, parallel universe theories proposed by quantum physics implies same personality/entity exist in parallel universe at the same point in time.  Is this concept  same as  multiple appearances of Siddhas and Gods at different places?

குருநாதர்:நிச்சயம் அப்பா! அனைத்து கிரகங்களிலும், மாந்தர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்களப்பா. இருந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை, நிச்சயம் உண்டு.

அடியவர்: அப்படியானால், இந்த கர்மாவை எல்லாம் எடுத்து அங்கு வைத்துவிட வேண்டியதுதானே! இப்பொழுது நான் முதலில் கேட்ட கேள்வி புரிந்ததா? கூட்டு பிரார்த்தனைக்கு வந்தால் ஒருவர் கர்மாவை மற்றவர் முதுகில் ஏற்றி விடுகிறீர்கள் என்பது உண்மை தானே.

குருநாதர்: அப்பா! கர்மா அழிவதே இல்லை. அப்பா! அதை நடத்துவதே நான். அனைத்து கர்மாவையும் யான் சுமக்க வேண்டும். 

அடியவர்: யார் முதுகு காலியாக இருக்கிறதோ அவன் முதுகில் ஏற்றி விட்டுவிடுகிறீர்கள்!

குருநாதர்: அப்பா! என் பக்தன் தாங்குவானப்பா, அனைத்தும்.

அடியவர்: உங்கள் பக்தர்கள், அடியேனிடம் வழி கேட்கிறார்கள், என்ன செய்வதென்று.

86. இவ்வுலகில் நல்லவர்கள் அமைதியாக வாழ யோசிக்கும் முன்னரே கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்து சென்று விடுகிறார்களே!

குருநாதர்: நிச்சயம் யார் சொன்னது. இவர்கள் பார்த்தார்களா என்ன?

அடியவர்: யார் சொன்னது என்று கூறினால், அதெல்லாம் நீங்கள்  பேசக்கூடாது என்கிறீர்கள். அது உங்கள் பழக்கமாகிவிட்டது.

குருநாதர்: கெட்டவன் வாழ்கின்றான் என்று சொல்கிறானே! அதை கூட ஒரு கெட்டவன்தான் சொல்ல முடியும். நல்லவன், எப்படியோ இறைவன் வாழ்க்கை கொடுத்துவிட்டான் என்றுதான் சொல்வான். தெரிந்துகொள் மகனே, நீயும் கூட!

அடியவர்: நான் தெரிந்து கொள்கிறேன்! ஆனால், நீங்கள் சொல்கிற எல்லா நல்லதையும் செய்து கொண்டுதான் இருக்கின்றேன்! 

குருநாதர்: கெட்டவனும் வாழட்டும், நல்லவனும் வாழட்டும். நல்லவனும், கெட்டவனும் இறைவன் செயலே. பாகுபாடின்றி அமைதியாக இரு. உண்மையான பக்தன் அனைத்தும் இறைவன் செயல்தான் என்று. குற்றம், குறைகள் எதுவும் இங்கில்லை. 

அடியவர்: சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

குருநாதர்: சொல்லிவிட்டேன். நல்லவனையும், கெட்டவனையும் உருவாக்கியது இறைவன். அப்படியென்றால், இறைவனைத்தான் கேள்வி கேட்க வேண்டும். அதனால்தான், கூட்டு பிரார்த்தனையில் பல உண்மைகளை உரைக்கப் போகின்றேன். அதை தெரிந்து கொண்டு செய்வார்கள், பல மாற்றங்கள் ஏற்படப்போவது உறுதி. 

அடியவர்: தனிப்பட்ட முறையில், என்னென்ன தவறுகள் எங்கெங்கு நடக்கிறதோ, அங்கெல்லாம் திருத்த வேண்டியது குருநாதர் கடமை. 

குருநாதர்: அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, அனைத்தையும் நல்லபடியாக உருவாக்குவேன், கவலைகள் வேண்டாம்.

87. பற்று அறுத்து இரு என்கிறீர்கள். கடமையை செய் என்கிறீர்கள். குடும்பத்துக்காக இவ்வுலக விஷயங்களை தேடி செல்லத்தான் வேண்டியுள்ளது. குடும்பத்தை வேண்டாம் என்று வைத்து, இறை வழியை தேர்ந்தெடுத்தால், மறுபடியும் ஜென்மத்தை கொடுத்து, கடமையை செய்து விட்டு வா என்று தானே இறை சொல்லும்.

குருநாதர்: உங்கள் ஆசைக்காக ஓடி ஓடி குடும்பத்தை அமைத்துக் கொண்டு நீங்களே செய்ததை, இறைவனை குறை சொன்னால் என்ன பயன்?

அடியவர்: இல்லையே! குடும்பத்தையும், குழந்தையையும் விதியில் எழுதிவிட்டது இறை தானே!

குருநாதர்: இறையே எழுதிவிட்டாலும், திருமணமே வேண்டாம் வேண்டாம் என்று யோசிக்க வேண்டும். சிறுவயதிலேயே பக்குவங்கள் கொடுத்து விட்டால் எல்லாம் தெரிந்து கொள்வான். ஆசைகள் அலையாய் மனதுள் ஓடி, ஓடுவான் பெண்ணை தேடி. அவஸ்த்தை படத்தான் வேண்டும். புரிந்துகொள்.

அடியவர்: அப்போ! குடும்பத்தை அமைத்துக் கொள்வதும் தவறு என்கிறீர்கள்!

குருநாதர்: நிச்சயம் தவறு என்று சொல்லவில்லை.

அடியவர்: அதேதான். இதைத்தான் பகவத் கீதையில் கிருஷ்ணனும் சொன்னார். எல்லாத்தையும் சொல்லிட்டு, நானா சொன்னேன், நானா செய்தேன் என்பார். அதைத்தான் நீங்களும் கூறுகிறீர்கள்.

குருநாதர்: அப்பா! இப்படித்தான் சொல்வேன். பெண்ணை தேடி ஓடுவது! தன் ஆசைக்காகவே அப்பனே. இறைவன் அனைத்தையும் கொடுக்கத்தான் செய்கின்றான் அப்பா! அதனுடன் பக்குவத்தை உணர்த்துகிறான், அப்பனே! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 26 February 2026

சித்தன் அருள் - 2133 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள்-பகுதி - 5!


62. இறைவன் விதித்த விதிப்படி தான் வாழ்க்கை நடக்கும். இது கலியுகம். நீங்கள் அனைவரும் இறைவனின் கலியுக நியதியைத்தான் நடைமுறை படுத்த வேலை செய்கிறீர்கள். யாரையும் திருத்தவும் முடியாது, திருந்தவும் மாட்டார்கள் என்று தெரிந்தே, இத்தனை உண்மைகளை ஏன் மறைக்கிறீர்கள்?

குருநாதர்: நிச்சயம் மறைப்பதில்லை. அதனால் தான் ராவணனை பற்றி தெரிவிக்கின்றேனே! இன்னும் எத்தனை ஞானிகளை பற்றி தெரிவிக்கின்றேன்! 

அடியவர்: ராவணனையும், ஞானிகளையும் பற்றி சொல்வதானால், ஒரு விஷயம் மாறுவதில்லை. இறைவன் விதித்த விதியை விட்டு எதிராக உங்களால் எதுவுமே செய்ய முடியாது. 

குருநாதர்: நிச்சயம் முடியும்! கலியுகத்தில் கெட்டதுதான் நடக்க வேண்டும் என்பது கட்டாயம். நாங்கள் வந்து நல்லோர்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோமே!

அடியவர்: அதைத்தான் நான் சொல்கின்றேன்! இப்ப கொஞ்சம் முன்னாடி சொன்னீர்களே, ஒருவர் கூட நல்லவர்கள் இல்லை என்று! 

குருநாதர்: அதனால் தான் நல்லோர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனே!

அடியவர்: எங்க உருவாக்கினீங்க?

குருநாதர்: அப்பா! அதை பற்றி நீ கேட்டுவிடாதே!

அடியவர்: இப்படியே சொல்லி, அதை பற்றி கேட்காதே, இதை பற்றி சொல்லாதே என்று கூறி அனைத்துக்கும் ஆப்பு வைத்து விடுங்கள்.

குருநாதர்: நிச்சயம் ஆசிரியனுக்கு தெரியும், மாணவர்களுக்கு என்ன சொன்னால் புரியும் என்று!

அடியவர்: மறுபடியும் சொல்கிறேன்! இறைவனுடைய திட்டத்தை, மறை முகமாக, மனிதர்களை கவர்ந்து இழுத்து, நடைமுறைப்படுத்துவதுதான் உங்கள் வேலையே தவிர, இறைவன் விதித்த விதிக்கு எதிராக, நல்லவர்களாக மாற்றுவது உங்கள் எண்ணமில்லை.

குருநாதர்: நிச்சயம்! எங்களால் முடியும். பின் சித்தன் வாக்கு, சிவன் வாக்கு! முடிந்தது!

அடியவர்: என்ன சொன்னாலும், சித்தன் வாக்கு சிவம் வாக்கு, சித்தன் போக்கு, சிவன் போக்கு என்று சொல்லிவிட்டு போயிட்டே இருப்பீங்க! எனக்கு ஒண்ணுமே புரியல!

குருநாதர்: புரிந்தால், நீ எதுவுமே கேட்க மாட்டாய்! ஓடிவிடுவாய், அப்பொழுது சொன்னாயே, அது போல் வேண்டாம் என்று கூறி ஓடி விடுவாய். அமர்ந்து விடுவாய் மூலையில். உன்னை கசக்கினால் தான் நீயும் வெளியே வருவாய்.

அடியவர்:  ஒரே ஒரு விஷயம் நான் கேட்க்கிறேன்! ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன் எதை பற்றியும் சிந்திக்காமல், யார் என்ன சொன்னாலும், இது உன் தலையெழுத்து, உன் விதி அனுபவித்துக்கொள் என்று கூறி, மிக அமைதியாக விலகி விடுவேன்! இருந்தேன். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அந்த நிலையிலிருந்து நான் இறங்கி வந்தேன்.

குருநாதர்: அப்பா! என்னுடைய பல்கலைக்கழகத்தில் காற்றாய் என்று சொல்லிவிட்டாய். நாங்கள் எப்படி விட்டுவிடுவோம். 

அடியவர்: இல்லை. அப்போது இருந்த நிம்மதி என்பது இப்போது இல்லவே இல்லை.

குருநாதர்: உன் ஆசிரியர்களுக்கே இங்கு நிம்மதி இல்லை. மாணவர்களுக்கு எங்கு இருக்கப்போகின்றது?

அடியவர்: உங்களுக்கு 1008 மாணவர்கள் இருப்பார்கள். அதில் நான் ஒருவன் மட்டும் நல்லபடியாக விலகி இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கும் விட மாட்டீர்கள்!

குருநாதர்: என்னிடத்தில் கற்றவனை, நான் விட்டுவிடுவேனா என்ன, சாதாரணமாக!

அடியவர்: அதன்! இளிச்சவாயன், வேறு யாரும் கிடைக்கவில்லை! அப்படித்தானே!

குருநாதர்: அப்படியே வைத்துக்கொள் அப்பா!

அடியவர்: உங்கள் கூட எல்லாம் குடும்பம் நடத்துவது...... அப்பா! முடியலை!

குருநாதர்: இப்பொழுது புரிகின்றதா அகத்தியனை பற்றி!
    
63. பாபநாசம், திருவண்ணாமலை, மதுரை போன்ற இடங்களில் நடந்த சத்சங்கத்தில் பங்குபெற்றவர்கள் இடையே, கர்ம பரிபாலனத்தை விட கர்ம பரிவர்த்தனம்தான் நடந்துள்ளது. ஒருவன் தன் நன்னடத்தையால் தன்னை, தன் ஆத்மாவை சுத்தம் செய்து கொண்டு, இப்படிப்பட்ட இடங்களில் அனைவருக்கும் நல்லது செய்வோம் என்று வந்தால், அவன் முதுகில் பிறர் கர்மாவை ஏற்றி விடுவது எப்படி நியாயம்?

குருநாதர்: நிச்சயம் அப்படி இல்லை. ஓரிடத்தில் நன் முறையாக கேட்டால்! சரி! 

64.   ஓம் அகத்தீசாய நம , வள்ளலார் இயற்றிய அருட்பெருஞ்சோதி அகவலை பற்றி சொல்லுங்கள் பெருமானே . 

குருநாதர்: முதலில் ஐந்து மாதங்கள் வடலூர் சென்று வரச்சொல். வள்ளலார் கூறிய நல்ல விஷயங்களை நூலாக வெளியிடச்சொல். பின்பு தெரிவிக்கின்றேன்!

65. இனி இவ்வுலகம், சித்தர்களாகிய எங்கள் ஆட்சியில் செல்லும் என்று கூறினீர்கள். தலைநகர் தில்லியில் வாகனம் வெடித்து பலர் மரணம். தமிழ்நாட்டில், கோவிலுக்குள் கொலை, கொள்ளை நடக்கிறது. எப்பொழுது கேட்டாலும், இவனெல்லாம் எங்கு கொண்டு போய் விடப்போகிறான் என்று உங்களின் எகத்தாளமாக பதில். நடக்கிற கெடுதல்களை தடுக்கிற வக்கில்லாமல் இருக்கிற சித்தர்கள் ஆட்சி பெருமைப்படுகிற அளவுக்கு இல்லையே!

குருநாதர்: தீயோர்களை அழிக்க வேண்டும். இங்கு தீயோர்கள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறே விட்டுவிட்டால், தீயோர்கள், நாலோர்களையும் கெடுத்து விடுவார்கள். அழிக்கவே வேண்டும்! அது மட்டுமல்லாமல், நல்லோர்கள் காக்கப்படவேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் என்றால், யாருமே கடைபிடிப்பதில்லை. கடைபிடித்திருந்தால் போதும்! போகன், தேரையன் சொன்னானே யார் என்ன செய்தார்கள். காலத்தின் கட்டாயமப்பா! இன்னும் புரியவில்லை மக்களுக்கு. எம் அருளை பெற்றவன் அரசாள்வான். அப்பொழுது எல்லாம் மாறும்!

அடியவர்: முதலில் அந்த நல்ல செயலை செய்யுங்கள்! 

குருநாதர்: இப்பொழுதுதான் வந்திருக்கின்றோம்............

அடியவர்: இத்தனை வருஷம் உட்கார்ந்து, நாங்கள் வந்தாச்சு, வந்தாச்சு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள். 

குருநாதர்: அப்பா! ஒவ்வொருவரையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். 


66. திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, பழனி, திருப்பரங்குன்றம், என அனைத்து கோவில்களிலும், இறைவன் அரசியல்வாதிகள், அறமில்லதுறை அதிகாரிகள், இது போக, தவறான முறையில் பக்தர்களிடமிருந்து காசு கொள்ளை அடிக்கிறவர்களிடம், கைதியாக, வேடிக்கை காட்டும் பொருளாக அமர்ந்திருக்கிறாரே! இப்பொழுது நடப்பது சித்தர்கள் ஆட்சி என்று கூறுகிற உங்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. கோவில்களை/இறைவனை பிடித்திருக்கிற இந்த ஏழரை சனி எப்பொழுது விலகும்?

குருநாதர்: நிச்சயம் இருக்கட்டுமே, இறைவனுக்கு தெரியும், யார் மூலம் எப்படி சரி செய்ய வேண்டும் என்று. வரும் காலத்தில் என்னுடைய பக்தன் ஆட்சி செய்வான். அப்பொழுது புரியும். 

67. மேலே சொன்ன நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது, ஆன்மீகமும் வேண்டாம், சித்த மார்க்கமும் வேண்டாம், பிறருக்கு உதவி கூட செய்ய வேண்டாம், அமைதியாக வாழ்ந்துவிடலாம் என்று பலருக்கும் தோன்றி விலகி விடுகிறார்கள். உங்களால், எதையும் சீர்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

குருநாதர்: போகச்சொல்.  இறைவன் என்ன எனக்கு இதை செய், அதை செய் என  கேட்டானா?

அடியவர்: பெரியவர்கள் முதல், அனைவரும், இதை செய், அதை செய் என்றுதான் கூறினார்கள்.

குருநாதர்: முதலில் தர்மத்தை கடைபிடிக்கச்சொன்னேன். முதலில் யாராவது அதை கடை பிடிக்கின்றார்களா, சொல்! தர்மத்தின் முதல் பாடம், பொய் பேசக்கூடாது என்று. ஆனாலும் என் பக்தன் பொய் பேசுகின்றான். பொறாமை படக்கூடாது என்று! ஆனாலும் பொறாமை படுகிறான். உண்மையான பக்தன், இறைவன் எதை செய்தாலும், நல்லதைத்தான் செய்வான் என்று இருக்க வேண்டும். இறைவனுக்கு யாரை பிடிக்குமோ அவனுக்குத்தான் சோதனைகள் வைப்பான். இறைவனே பொய் என்று சொல்கிற அளவுக்கு எவன் ஒருவன் வருகிறானோ, அவனே உத்தமன். 

அடியவர்: தகுதி இல்லாத ஒருவனுக்கு இறைவன் வரங்களை வாரி வழங்கி, மற்ற அனைவருக்கும் பிரச்சினையை வளர்க்கிறார்.

குருநாதர்: வரங்களை கொடுப்பது, தன் குழந்தை கேட்கிறதே என்பதால். கிடைத்த வரத்தை சரியாக உபயோகிக்காவிட்டால், அவனை அழிப்பதும் இறைவன் செயலே! இறைவனுக்கு தெரியும் அப்பனே! மக்களை வழி நடத்த! அவ்வளவுதான்!

அடியவர்: ஆம்! அதனால்தான் தவறானவனுக்கு வரத்தை கொடுத்து, வரம் பெற்றவனே தலையில் கை வைக்க வந்தான். 

குருநாதர்: அப்பா! நீயும் "கோவிந்தா" என்று சொல்லிவிடு! உனக்கேன் அப்பா?

அடியவர்: சரிதான்! எதை பற்றியும் யோசிக்காமல் அமைதியாக சென்று விட வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன்! ஆனால் முடியவில்லை. விட்டுவிட வேண்டும்!

குருநாதர்: நான் விடமாட்டேன் அப்பா!

அடியவர்: அமைதியாக இருந்த நிம்மதியை விட்டுவிட்டோமே என்று நான் நினைக்கிறேன்! எதையும் கண்டுக்காம இருக்க வேண்டும். இறைவனே இறங்கி வந்தால் கூட "இது உன் தலையெழுத்து" நீயே கவனி என்று சொல்லக்கூடிய நிலமைல இருந்தேன் நான். யாருக்கும் உபத்திரவம் இல்லை! அந்த மனநிலையை விட்டுவிட்டேன்! அன்னிக்கு தொடங்கியது பிரச்சினை. 

68. இது கலியுகம். அனைத்தும் இறைவன் விதித்தபடிதான் நடக்கும் என்றால், பின்னர் எதற்கு இத்தனை நீதி, நேர்மை, தர்மம், அதர்மம் பற்றிய விரிவுரைகளை சித்தர்கள் கூறுகிறீர்கள். மனிதர்கள், கொத்து கொத்தாக கொல்லப்படுவதை உங்களால் தடுக்க முடியவில்லையே. ஆகவே, நீங்களும் இறைவன் விதித்த விதியை நோக்கித்தான் எங்களை அழைத்து செல்கிறீர்களோ என்ற தெளிவான எண்ணம்தான் வருகிறது.

குருநாதர்:அப்பனே ஒருவனாவது எங்களுக்கு தேவை. அதற்க்காகத்தான்! உயர்ந்த பதவியில் அமர்த்தி அனைவருக்கும் சேவை செய்ய! ஒருவன் தேவை எங்களுக்கு, இந்த உலகத்தை மாற்ற. போதும் எங்களுக்கு. அவ் ஒருவன் தர்மத்தை பற்றி கேட்டாலே போதுமானது. அப்பா! துரதிருஷ்டவாதிகளும் இருக்கின்றார்கள் ஐம்பது சதவிகிதம். நல்லோர்கள் சொல்வதை இவன் கேட்கமாட்டான். இவ்வுலகில் நல்லோர் ஒருவன் இருக்கின்றான் என்றால் துரதிருஷ்டசாலி ஒருவன் வருவான், அவனை அழிப்பதற்கு. இவன் பாம்பை விட விஷமுள்ளவன். மனிதன் நாக்கே அனைவரையும் அழித்துவிடும். மனிதன் சொல்லே அனைவரையும் அழித்துவிடும். இதனால், இறைவனை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது. அனைத்தும் இறைவன் செயலால்தான் நடக்கின்றது. நேரில் வரச்சொல், மறைமுகமாக நின்று கேட்ப்பானேன், யான் பதில் கூறுகிறேன்! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 25 February 2026

சித்தன் அருள் - 2132 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!








23/2/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. 

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

========================================
# கலியுகத்தில் பல அற்புதங்களை நாராயணன் நிகழ்த்தி உள்ளானப்பா
========================================

அழகான, அப்பனே, நிச்சயம் கலியுகத்தில் பல அற்புதங்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது நாராயணன் நிகழ்த்தி உள்ளானப்பா.

அவையெல்லாம் யாருக்கு தெரியும்??? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

அதனால் தான், அப்பனே, பின், தெரியாததால் தான், அப்பனே, பிரச்சனையே.!!

அப்பனே, தெரிந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் எதையும், அப்பனே, பின் கேட்க மனது வராதப்பா. 

பின், அதாவது தெரியாமல் இருந்தால், அப்பனே, நிச்சயம் அப்பனே, இறைவன் தந்திடுவான் என்றெல்லாம், அப்பனே,!!!

கேட்டு கேட்டு, அப்பனே, சலித்து சலித்து, அப்பனே, பின், கடைசியில், அப்பனே, நிம்மதி இல்லாத வாழ்க்கை.

அதனால்தான், அப்பனே, பல மனிதர்களுக்கு எடுத்துரைத்து கொண்டே வருகின்றேன், அப்பனே!!

எப்படி ?? இருந்தால், அப்பனே, நலமாகும் என்பவையெல்லாம். அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட.

இதனால், அப்பனே, அழகாகவே, பின், எவ்வாறு ஆசிகள் பெறுவது என்பதையெல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் எடுத்துரைப்பேன், அப்பனே.

==================================================
# சுயநலத்திற்காக மட்டுமே கடவுளைத் தேடும் மனிதர்கள்!
=====================================================

இதனால்தான், அப்பனே, ஏன்?, எதற்கு?, பின், அதாவது திருத்தலங்கள் என்பவையெல்லாம் மனிதனுக்கு இன்னும்  புரியவே இல்லை.

ஏன்?, எதற்காக? இறைவனை வணங்குகின்றோம் என்பதையெல்லாம்.
ஆனாலும் தன் சுயநலத்துக்காகவே.

ஆனாலும் மனிதனுக்கு இன்னும், அப்பனே, பின், புத்திகள் வளர வளர, அப்பனே, நிச்சயம், ஆனாலும், அப்பனே, பின், அதாவது தாழ்ந்து தான் சென்று கொண்டிருக்கின்றா.

====================================================
# அறிவை அழிவில் செலுத்தி இறைவனையே மறுக்கும் மூடத்தனம்!
=======================================================

ஏனென்றால் அப் புத்திகளை  சரியாக மனிதன் பயன்படுத்துவதில்லை.

சரியாக தெரிந்து கொள்வதும் இல்லை.

அப் புத்தியை  எதற்கெதற்கோ??? பயன்படுத்தி, நிச்சயம் கடைசியில் கெடுத்து, கெடுத்து, நிச்சயம் தன்னையும் கெடுத்து, மற்றவரையும் கெடுத்து. அப்பனே,

இதனால், அப்பனே, பைத்தியமாக திரிந்து, இறைவன் இல்லை, இறைவனை, பின், வணங்கி என்ன பிரயோஜனம்????? என்றெல்லாம், அப்பனே, சில பைத்தியங்கள்.

ஆனாலும் இப்படியே சென்று கொண்டிருந்தால், அப்பனே, அவந்தனக்கு எது என்று புரிய அழிவுகள் ஏற்பட்டு!!

ஏன்?, எதற்கு? என்றால், அப்பனே, அவன் மட்டும், பின், அழியாமல், மற்றவரையும் கூட, பின், அழிவுபடுத்துகின்றானே, அதுதான், அப்பனே, நிச்சயம் தீங்கு.

இதனை நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் யாங்கள் விட்டுவிட போவதில்லை. நலங்களாகவே.

==========================================
# உலகம் அறியாத பகவான் நாராயணர் லீலை வாக்கு ஆரம்பம் 
==========================================

இதனால், அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின், அதாவது, பின், நிச்சயம் தன்னில் கூட, பின், நிச்சயம் நாராயணனைப் பற்றி இப்பொழுது எடுத்துரைக்கப் போகின்றேன், அப்பனே.

எதை என்று புரிய, அப்பனே. இதனால், அப்பனே, பின், அனைவருக்கும், வருவோருக்கெல்லாம், அப்பனே, வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தானப்பா. நிச்சயம் தன்னில் கூட நாராயணன். 

என்ன வரங்களை??, அப்பனே, கேட்டாலும் உடனடியாக கொடுத்து விடுவான் என்பேன், அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவ்வாறாக கொடுத்து கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல மக்கள் நலங்களாகவே இருந்தனர் என்பேன், அப்பனே. 

==================================================
# பக்தர்களைச் சோதிக்க பிச்சைக்காரனாக உருமாறிய நாராயணன்!
====================================================

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. அதாவது நிச்சயம் இவ்வாறாக. பத்மாவதி, பின், தாயாரும் நல்விதமாகவே, நிச்சயம் இவ்வாறு வருவோருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றாயே, !!!....

நிச்சயம், பின், எதற்கு?, ஏன்? என்று.

அதனால் நிச்சயம் அறிந்தும் கூட. எவ்வாறு என்பதையெல்லாம் அதனாலே உன் பக்தர்களிடம் போய் நிச்சயம் அதாவது இல்லம்' இல்லமாக சென்று பார்!!!

எப்படி செய்கின்றார்கள்?? என்றெல்லாம்!!!

நாராயணனும் இதனால் நிச்சயம் பார்க்கின்றேன் என்று.

இதனால் அழகாக பின் அதாவது பின் அறிந்தும் கூட இங்கிருந்து அதாவது ஒரு பத்து வயது சிறுவனாக மாறிட்டு... நாராயணனும்.... நிச்சயம் பின் தர்மம் ஏந்துபவனாக அதாவது ஒரு பின் பிச்சை பாத்திரத்தை கையில் ஏந்தினான்.

அதாவது நிச்சயம் அறிந்தும் கூட. இதனால் எதை என்று புரிய அனைத்து பக்தர்களிடத்தும் சென்றான். 

==================================================
# "உனக்கு உணவளித்தால் என் செல்வம் குறைந்துவிடும்!" - அதிர்ச்சியளிக்கும் போலி பக்தி!
======================================================

முதலில் ஒரு பக்தனிடம் சென்றான். நிச்சயம் எதை என்று புரிய !!!...

அதாவது தாயே!!!! யாராவது உள்ளே இருக்கின்றீர்களா??? உணவு கொடுங்கள் என்று. 

நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பெண்மணி வெளி அப்பெண்மணி பின் வெளியில் வந்து அதாவது நிச்சயம் எங்களுக்கு பெருமான் கொடுத்தான்!!! அதை யாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்!!!

அதாவது இப்பொழுது உனக்கு உணவு அளித்துவிட்டால் அது எங்களுக்கு குறைந்துவிடும் அதனால் பின் வேறு வீடு பார்!! என்று.

அடடா !!! என்றெல்லாம் அதாவது நிச்சயம் பின் மனம் வருந்தினான் பின் பெருமான். 


சரி!!!... போவோம்!! என்று நிச்சயம் மறுவீட்டுக்குச் சென்றான். 

பின் தாயே!!! எவராவது??? இருக்கின்றீர்களா?? உணவு வேண்டும் என்று. 

======================================
# நாராயணனுக்கே தனது சொந்த பூஜை அறையில் நுழையத் தடை!
========================================

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட உணவு இல்லையப்பா.

பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது வீட்டில் வேலை செய்கின்றாயா என்று.

நிச்சயம் எதை என்று கூற பின் நாராயணனும் அதாவது இறைவன் ஆயிற்றே!! நிச்சயம் செய்கின்றேன் என்று.

இதனால் நிச்சயம் தன்னில் கூட!!! பின் அதாவது துணிகளை பின் துவை!!!!
இல்லத்தை பெருக்கு!!!!! என்றெல்லாம்!!!

(நாராயணனுக்கு அதாவது நாராயணன் சிறுவன் ரூபத்தில் அவருக்கு வீட்டு வேலைகள் செய்யச் சொல்லி)

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற ஆனாலும் பின் உள்ளே சென்று விடாதே!!! பூஜை அறை இருக்கின்றது!!! அங்கு சென்று விடாதே!!!!
அங்கு நீ சென்றால் தரித்திரம் ஏற்பட்டுவிடும்!!!

ஏனென்றால் நாராயணன் அழகாக பின் எங்கள் நாராயணன் அழகாக அமர்ந்திருக்கின்றான்!!!

யாங்கள் சிறுவயதிலிருந்தே நாராயணனுடைய பக்தர்கள் அவர்கள் இல்லாமல் யாங்கள் இல்லை அதனால் நீ அங்கு சென்று விட்டால் தரித்திரம் உண்டாகிவிடும் என்று!!!

=================================================
# சொந்த சன்னதியிலேயே நாராயணனுக்குக் கிடைத்த அடி!
====================================================

ஆனாலும் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே உண்மையான பக்தி இருந்தால் அப்பனே பின் இறைவன் அப்பனே யார்?? என்று கண்டுகொள்ளலாம் என்பேன் அப்பனே!!

உண்மையான பக்திகள் இல்லாததால்தான் அப்பனே அதாவது மனதில் அழுக்குகள் வைத்துக்கொண்டு அப்பனே எவை என்று கூற அப்பனே பின் வெளியில் தேடுவதா????? அப்பனே !! 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரி!!!!! நம் பக்தர்கள் தானே என்று அப்பனே பின் துணியையும் துவைத்தானப்பா!!! இல்லத்தையும் கூட அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சுத்தம் செய்தான் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய கடைசியில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரியாமல் பின் அதாவது உள்ளே சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட பூஜை அறையில் அப்பனே பின் சுத்தம் செய்தான் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட!! அறிந்தும் கூட!!!

அதாவது அப்பெண்மணி வந்து நிச்சயம் """"பளார் !! என்று பின் தவடையில் (கன்னத்தில்) அப்பனே பின் அடித்து பின் ஏனடா???????? பின் பிச்சைக்காரனே!!! எதை என்று அறிய அதாவது யான் சொன்னேன் அல்லவா முதலில்!!!

பின் பூஜை அறையில் நுழைந்து விடாதே என்று!!

நிச்சயம் வெளியே செல்!! 

உனக்கு உணவும் கிடையாது நிச்சயம் பின் அதாவது எது என்று புரிய எதுவும் கிடையாது என்று!!!

யான் சொல்லியதை  என் பேச்சு கேட்கவில்லை எதை என்று புரிய என்றெல்லாம்!!!
செல் வெளியே!!!

ஆனாலும் நாராயணன் நிச்சயம் தன்னில் கூட மனம் வருந்தினான் எதை என்று புரிய!!

நிச்சயம் எதை என்று அறிய எவை என்று புரியாமல் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் தாயே!!! ஏதாவது பின் அதாவது துணியை துவைத்தேன் அல்லவா!!! நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட ஏதாவது கொடு!!!

நிச்சயம் தன்னில் கூட யான் உண்ணவில்லை என்று!!!

நிச்சயம் பின் நீ  நீ பின் செய்தது சரியா?????? நிச்சயம் தன்னில் கூட அதாவது வெளியே செல்லடா !!  

நிச்சயம் வேண்டாம் பின் அதாவது உன் போல் பின் பிள்ளைகள் இருப்பதனால்தான் பின் அனைத்தும் கெட்ட பெயர் என்று!!

ஆனாலும் நிச்சயம் பின் அவள் தனக்கு ஒரு பிள்ளை!!! நிச்சயம் தன்னில் ஓடோடி வந்து நிச்சயம் அவன் பாவம் என்று!!!

அவள் தன் பிள்ளையை பார்த்து!! அட  பாவி!!!!! நிச்சயம் பின் அனைவரையும் இப்படி பார்த்தால் நீ வாழ முடியாதடா!!! நீ நிச்சயம் உள்ளே செல் என்று!!!

========================================
# ஒரு ஆசிரியன் வீட்டிற்கு சென்ற நாராயணன் 
========================================

ஆனாலும் நாராயணன் மனம் வருந்தி நிச்சயம் அடுத்த வீட்டிற்கு சென்றான்!!

பின் அங்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது ஒரு ஆசிரியன்  பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அறிந்தும் கூட அதாவது நிச்சயம் தன்னில் ஒரு நாராயணனைப் பற்றி எல்லாம் பேசி!! பேசி!!! பேசி கொண்டு இருந்தான்!!

ஆனாலும் சிறுவனும் கூட நிச்சயம் அதாவது நம்தனைப் பற்றி தான் பேசுகிறார்கள் நிச்சயம் அவ் ஆசிரியனிடம் செல்வோம் !!

நிச்சயம் அதாவது இவ்வாறு பேசுகின்றான் என்றால் நிச்சயம் அவனும் எதை என்று புரிய!!!

அதாவது வேண்டாம் இப்பொழுதெல்லாம் பின் சுலபமாக முடித்து விடுகின்றேன் அறிந்து கூட!!!

இதனால் நிச்சயம் சென்றான்!!.. பின் அதாவது நிச்சயம் பின் நின்றான் பின் ஆசிரியனிடத்தில்!!

நிச்சயம் பின் இவ்வாறு குழந்தைகளோடு யானும் குழந்தைகளாக இருக்க ஆசைப்படுகின்றேன் என்று !!

ஆனாலும் அவ் ஆசிரியன் சொன்னான் பின் ஒரு பிச்சைக்காரனுக்கு இவ்வளவு ஆசையா???? என்றெல்லாம்!!!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறிய அறிய!!

அதனால் வெளியே வேண்டுமானால் நில்!! என்று நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அனைவரும் பாடம் பின் படித்துக் கொண்டிருந்தனர்!!

===============================================
# நாராயணனைப் பற்றி பாடம் எடுத்தவன் நாராயணனையே தண்டித்த விந்தை!
==================================================

ஆனாலும் நிச்சயம் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் நாராயணனும் எண்ணினான் பின் எவ்வளவு பக்திகள்?? அதாவது வந்திருக்கின்றோம் நம்தனை கூட உணரவில்லை!!!

ஆனால் முதலிலே சொல்லிவிடுகின்றான் ஓம் நமோ நாராயணா என்று!!!!

என்ன லாபம்?????

அதனால் நிச்சயம் அதாவது நிச்சயம் அதாவது நாராயணன் சொன்னான் அதாவது எதற்கு இவ்வாறெல்லாம் பாடம் கற்றுக்  கொடுத்துக் கொண்டிருக்கின்றாய்??????

அதாவது நாராயணன் யார்? என்று தெரியுமா??? என்று!!

நிச்சயம் பின் கேட்டான் அச்சிறுவன்!!
அதாவது நாராயணனே!!

நிச்சயம் வெளியே செல்லடா!!!! மரியாதை!... அதாவது நிச்சயம் தன்னில் கூட அடுத்த முறை இவ்வாறு நிச்சயம் கூறினால் பின் நிச்சயம் மரியாதை இல்லாமல் பேசிவிடுவேன் என்று நிச்சயம் கொம்பை எடுத்து பின் அடித்துவிட்டான்!!! நாராயணனை கூட!!

எதை என்று புரிய மீண்டும் அதாவது நிச்சயம் இவையெல்லாம் கலியுகத்திற்கு  தொடங்குவதற்கு தான் எதை என்று கூற!!!...

பின் அதாவது கலியுகம் தொடங்குவதற்குள்ளே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!

====================================
# மற்றொரு வீட்டிற்கு சென்ற நாராயணன் 
====================================

ஆனாலும் இவ்வாறாக பின் அடுத்த வீட்டிற்கு சென்றான்!!! ஆனாலும் அவர்கள் பின் நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் உணவை பின் அளித்துக் கொண்டிருந்தனர் அங்கு நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் அதாவது பின் தாயே!! தந்தையே!! நிச்சயம் யான் உண்ணவில்லை பின் உணவு அதாவது நீங்களாவது கொடுங்கள்!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட !!

ஆனாலும் அவர்களும் கூட நிச்சயம் அதாவது பின் உன் தாய் தந்தையர் எங்கே??? என்று!!!

அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் தாய் தந்தையர் யாருமில்லை!!! ஏதோ உணவை கொடுப்பார்கள் உண்ணுவேன் உறங்குவேன் என்று!!
பின் அவ்வாறு!!!

ஓ !!!!!.... நீ தர்மம் ஏந்துபவனா???? அநாதையா??????? என்றெல்லாம்!!!!! நிச்சயம் தன்னில் கூட!!!

=========================================
# எச்சில் இலையை எடுத்த இறைவனுக்கு விழுந்த கொடூர அடி!
===========================================

ஆனாலும் அதற்கும் நாராயணன் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் தன்னில் எவை என்று புரிய எதை என்று அறிந்தும் கூட முதலில் இவரெல்லாம் உண்ணுகின்றார்கள் அல்லவா!!! 

பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட (அவர்கள் சாப்பிட்ட) இலையெல்லாம் எடுத்துவிட்டு கடைசியில் நீ உண்ண வா!! என்றெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய. 

அதாவது நிச்சயம் பின் அதாவது இலையெல்லாம் எடுத்தான்!!! நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரும் இலையெல்லாம் எடுத்தான்!!!

ஆனாலும் கடைசியில் பின் ஒருவனுக்கு நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய பின் இலைகள் போதவில்லை!!! நிச்சயம் தன்னில் கூட. 

அதனால் நிச்சயம் தெரியாமல் ஒரு இலையை நிச்சயம் பின் எடுத்து வந்து இதோ உண்ணுங்கள் என்று நிச்சயம் எதை என்று புரிய அறிந்தும் கூட எது என்று கூற நாராயணன் வந்து இட்டான்!! இதோ உண்ணுங்கள் என்று!!!

ஆனால் நிச்சயம் அதாவது அவ் பின் பக்தன் அதாவது பக்தன் என்று சொல்லவில்லை ஆனால் மனிதர்கள் இப்படித்தான் கலியுகத்தில் சொல்லுவார்கள்!!

பின் நீயே ஒரு பிச்சைக்காரன் நீ எனக்கு இலையை அளிக்கின்றாயே என்று பின் அங்கும் ஒரு அடி!!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

============================================
# உண்மையை உணர்த்தும் சித்தர்கள்: திருந்தாவிட்டால் தண்டனை நிச்சயம்!
==============================================

நிச்சயம் இறைவனே அப்பனே பின் வந்து மனித ரூபம் அதாவது பின் எடுத்து அப்பனே எவ்வளவு?? கஷ்டங்கள் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் நீங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!!

அப்பனே அவனே அவ்வளவு கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருந்தான்.. கஷ்டங்கள் பட்டுக் கொண்டு எதை என்று அறிய!!! அப்பனே அதாவது மனிதர்கள் நீங்கள் அப்பனே எப்படித்தான்??? நீ கலியுகத்தில் வாழப்போகின்றீர்கள்??? என்பவை எல்லாம் ஆச்சரியத்துக்குரியதே!!!!!

அதனால்தான்  சித்தர்கள் யாங்கள் வந்து நிச்சயம் பல வகையிலும் கூட பல மனிதர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி அப்பனே திருந்தினால்  திருந்தட்டும்!!!!

இல்லையென்றால் நிச்சயம் யான் அடி வாங்கியை தீருவேன் என்றெல்லாம்!!!

அப்பனே இருந்தாலும் அப்பனே ஆனாலும் பின் நிச்சயம் மற்றவர்களை அடி வாங்காமல்  இருக்க வேண்டும் பின் அப்படி எண்ண வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!!

இதனால் மற்றவர்களையும் கெடுத்துவிட்டால் அப்பனே உடனடியாக பின் நிச்சயம் யாங்களும் எதை என்று கூற  என்ன? ஏது? செய்ய வேண்டுமோ அதை நிச்சயம் செய்வோம்!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நாராயணனே அப்பனே பின் நிச்சயம் பிச்சை எடுத்து!!! அப்பனே எவ்வாறெல்லாம்!!!

ஆனால் மனிதன் இன்றோ!?!?!?! நிச்சயம் யாங்கள் பின் எவை என்று அறிய அறிய பின் சுலபமாக பின் உண்ண வேண்டும் என்றெல்லாம் அப்பனே மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

இதனால் எவ்வாறு?? நியாயம்??

அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அப்பனே பின் நாராயணனைப் பற்றி தெரியாதப்பா!!!!

==============================================
# அடுத்த வீட்டிலும் உணவு கிடைக்கவில்லை நாராயணனுக்கு!!!
==============================================

அப்பனே பல அப்பனே நிச்சயம் தன்னில் கூட பலவழிகளிலும் கூட இதனால் அப்பனே அடுத்த வீட்டிற்கு எதை என்று புரிய அப்பனே அதாவது அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அங்கும் உணவு கிடைக்கவில்லை நிச்சயம் நாராயணனுக்கு!!!

ஆனாலும் நிச்சயம் பின் பசி எதை என்று புரிய !!!

==================================================
# நாராயணன் பட்ட துயரைக் கண்டு கலங்கிய தெய்வங்கள்!
====================================================

இன்னும் பல பல பெரிய பெரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட நாராயணன் தான் அனைத்தும் கொடுத்தான்!!!

ஆனாலும் யோசிக்கின்றான் அடடா!!! நிச்சயம் அனைத்தும் கொடுத்தோமே!!! ஆனால் மனதைப் பற்றி யோசிக்கவில்லையே என்று!!! நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் இங்கிருந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றாள்!!! பத்மாவதி தாய்!!!!

நிச்சயம் தன்னில் கூட பின் உலகையாளும் நாராயணனுக்கே இவ்வளவா கஷ்டமா????? என்று!! நிச்சயம் தன்னில் கூட கண்ணீருடனே!!!

நிச்சயம் தன்னில் கூட பின் ஆனால் பின் பிரம்மனும் பின் ஏன்???? இவனுக்கு ஏன்????? இந்த வேலை???? என்று!!!
நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட மனம் வருந்தி!!! 

ஆனாலும் நிச்சயம் இருக்கட்டும் என்று!!!

ஆனாலும் எது என்று புரிய எவை என்று கூட ஈசனும் பார்வதியும் பார்த்திட்டு!!!!! பார்த்திட்டு!!!!!!

ஆனாலும் அனைவரும் ஒன்றே!!! என்ற நிலைமையும் ஏன்??? இவ்வாறாக பிரித்து!! பிரித்து!!! இவையெல்லாம் வருங்காலத்தில் தெளிவுடனே யாங்கள் சித்தர்கள் பின் செப்புவோம்!!

===========================================
(இறைவன் ஒன்று தான் பிரம்மா விஷ்ணு இறைவன் ஒன்றுதான் பிரம்மா விஷ்ணு சிவன் பார்வதி பத்மாவதி என பிரிந்து பிரிந்து காணப்படும் ரகசியத்தை வரும் காலத்தில் வாக்கில் சித்தர்கள் எடுத்துரைக்கப் போகின்றார்கள்)
===========================================

ஏனென்றால் காலங்கள்!! நேரங்கள்!! அதாவது இடம் பொருள் ஏவல் எப்பொழுது?? பின் மனிதனுக்கு சரியாக சொன்னால்.... எப்பொழுது? பின் புரியும்?? என்பவை எல்லாம் யாங்கள் அறிந்து கொள்வோம் அறிந்து கொண்டு பின் நிச்சயம் செப்புவோம்!!!

====================================================
# பசியில்லா ஊரில் பிச்சைக்காரனுக்குக் கிடைத்த குரூரத் தண்டனை!
======================================================

மீண்டும் எதை என்று அறிய இதனால் அவர்கள் நிச்சயம் பின் அதாவது பின்  ஊருக்கே பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் அனைவருக்கும் பின் உணவைத் தருபவர்கள்!!!(அன்னதானம் செய்பவர்கள்)

பின் நிச்சயம் அவரிடத்தில் நாராயணன் சென்றான் நிச்சயம் பசிக்கின்றது!!! எதை என்று புரிய என்றெல்லாம்!!!! ஆனால் நிச்சயம் அவன் சொன்னான் பின் எதை என்று கூற ஊரில் பின் பசி என்பதே இருக்கக்கூடாது!!!!

ஆனால் நீ பிச்சை எடுக்கின்றாய் நிச்சயம் இவ்வாறு நிச்சயம் எடுக்கக்கூடாது!!! என்று எதை என்று புரிய!!!!

ஆனாலும் அறிந்தும் கூட எவை என்று அறிய அதனால் பின் உள்ளே அதாவது அடைத்துவிட்டு நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நீ அநாதை!!!! பின் உந்தனக்கு தாய் தந்தை இல்லை!!! பின் நிச்சயம் தன்னில் கூட பின் யாம் அறிவோம் என்றெல்லாம் சொல்லி!!!

ஒரு பின் அதாவது கூண்டில் இட்டு எது என்று அறிய அறிய அதாவது பின் பைரவருக்கு வீசுகிறார்களே அவ்வாறு வீசி எறிந்தார் உணவை!!

================================================
# அனாதைச் சிறுவனை பலியிடத் துணிந்த இரக்கமற்ற மனிதர்கள்!
==================================================

எதை என்று கூற ஆனாலும் நாராயணனே என்னை விட்டுவிடுங்கள்!! பின் உணவும் தேவையில்லை என்றெல்லாம்!!!

நிச்சயம் அதாவது நீ இவ்வாறு (பிச்சை) எடுத்தால் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அதாவது மனசாட்சி இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட அதாவது நீ பிச்சைக்காரன் தாய் தந்தையும் யாருமில்லை!!!

ஒரு பிரயோஜனமும் இல்லை!!!

உன்னை நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எதை என்று கூற பலியிடப் போகின்றோம் என்றெல்லாம் பின் நாராயணனிடம் கூட!!

எதை என்று கூற உன்னை பலியிட்டால் நிச்சயம் தன்னில் கூட!!! அதாவது இவனுக்கு பின் அதாவது ஜாதகன் ஒருவன் சொல்லி இருக்கின்றான் நிச்சயம் தன்னில் கூட !! அதாவது இன்னும் யோகம் கிட்ட அனைத்து பின் மனிதர்களை ஆள!!(ஆட்சி செய்ய) நிச்சயம் ஒரு பலியிடு!!! என்று பின் அதாவது ஜாதகன் ஜாதகத்தை பார்த்து!!!

அப்பப்பா!!! இது கலியுகம் எவ்வாறு?? என்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள்!!!!

அதனால் நிச்சயம் அவர்களும் எண்ணிக்கொண்டார்கள்!!!

இவன் சரியான ஆள் நிச்சயம் தன்னில் கூட!! இவனுக்கு தாய் தந்தையர் இல்லை!!! நிச்சயம் அநாதை இவனை நிச்சயம் பின் பலியிட்டால் பின் எவ்வாறு எதை என்று புரிய என்பதெல்லாம் அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட ஆனாலும் நாராயணனுக்கும் தெரிந்துவிட்டது நாராயணன் அல்லவா!!!!

நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அதனால் நிச்சயம் தன்னில் கூட இவர்களும் அதாவது இவர்களும் பெரிய பக்தர்கள் தான் உணவை அளிப்பவர்கள் தான்!!!

அப்பனே நிச்சயம் ஆனாலும் எண்ணங்கள் எது போல்??? உள்ளது பார்த்தீர்களா?????

அதற்காகத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் முதலில் கொடுப்பு கொடுத்து பார்ப்பானப்பா!!! நிச்சயம் தன்னை கூட சரியான மனதை பின் வைத்திருக்க வேண்டும்!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே அனைத்தும் அப்பனே பின் போய்விடும் என்பேன் அப்பனே!!!

===============================================
# பலியிடுவதற்காக மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இறைவன்!
=================================================

இதனால் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அவன் இல்லத்தவளும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அவனை பின் எது என்று கூற எப்படி எல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டுமோ!? அவ்வாறு கவனித்து பின்பு அவனை நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அழகாக கவனித்தார்கள்!! 

பின் உணவும் இன்னும் பின் அதாவது உடையும் நிச்சயம் அனைத்தும் கொடுத்தனர்!!

ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் பொய் சொல்லி பின் ஒரு மலைக்கு அழைத்துச் சென்றனர் (பலியிடுவதற்கு) நிச்சயம் தன்னில் கூட!!!

அப்பனே எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் புரிந்தும் கூட இப்பொழுது அவ் மலை!! எவ்? மலை??? என்றால் நிச்சயம் அப்பனே பின் கருடன் அப்பனே இருக்கின்றானே!!! (கருடாத்ரி மலை) நிச்சயம் தன்னில் அழகாக அங்கு பின் அதாவது தலை வை!!! என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட!!

===============================================
# மரணத்தின் விளிம்பில் மாயாஜாலம்: நாராயணனைக் காப்பாற்றிய கருடன்!
=================================================

இதனால் எதை என்று புரிய அழகாக பின் எது என்று அறிய வெட்ட!!! நிச்சயம் எது என்று அறிய பின் வாளை ஓங்க!!!!!!!.......

நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிந்தும் கூட பின் (வாளால் வெட்டுவதை) தடுத்து நிச்சயம் பின்  கருடன் எவை என்று அறிந்தும் கூட!!

நிச்சயம் அவை தன் பின் தூக்கி எதை என்று அறியாமலும்!!!

================================================
(வாளை தட்டி விட்டு தூக்கி எறிந்து விட்டார் கருட பகவான்)
================================================

இவர்களையும் கூட பின் அங்கிருந்தே கருடன் எது என்று புரிய அழகாக பின் தூக்கிக்கொண்டு பின் நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று கூற பின் கீழே விட்டுவிட்டது பாதாளத்தில்!!!!! நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் தான் சிறப்பு பின் கருடன் எதை என்று புரிய இன்னும் கூட அவ் மலையில் பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு பின் தோஷங்களாக இருந்தாலும் நிச்சயம் அவ் மலையை பார்த்தாலே நிச்சயம் பின் அவ் தோஷம் பறந்து போகும்!!!

ஆனாலும் அப்பனே ஏன் எதற்கு ஒவ்வொரு விசைக்கும் இவையெல்லாம் அறிவியல் வழியாகவும் யான் சொல்வேன்!!!

=============================================
# உங்கள் உயர்விற்கான பரம ரகசியம்  
# சமப்படுத்தினால் மட்டுமே பின் உயர்வுகள் உண்டு
=============================================

ஏன்? எதற்கு? இவைகள் நடந்தது என்பதெல்லாம் அப்பனே அதை சமப்படுத்தினால் மட்டுமே பின் உயர்வுகள் உண்டு என்பேன் அப்பனே!!!

ஏன்? அப்பனே?? பின் மனிதர்கள் பலர் உயர்ந்து நிற்கின்றார்கள்??

சிலர் அப்பனே பின் தாழ்ந்து நிற்கின்றார்கள்?? அப்பனே சிலர் திருடுகின்றார்கள்?? அப்பனே சிலர் நல்லது செய்கின்றார்கள்?? அப்பனே சிலர் அன்னதானம் செய்கின்றார்கள்??  சிலர் பின் அன்னதானம் செய்வதில்லை???? அப்பனே??

ஏன்?? எதற்கு?? அனைத்தும் அப்பனே கூறுகின்றேன் என்பேன் அப்பனே!!!

அனைத்தும் கூறிவிட்டு நிச்சயம் அனைத்தும் அப்பனே சொன்னால்தான் புரியுமப்பா வாழ்க்கை பற்றி!!!

இல்லையென்றால் பிறந்து அப்பனே இறந்து, அப்பனே இவனை சார்ந்தோரும் அப்பனே. பின் கஷ்டங்கள் படுத்தி அப்பனே நிச்சயம் என்னென்னவோ!?!?!?!?!

இதனால் அப்பனே நாராயணன் எதை என்று புரிய அப்பனே ஆனாலும் நிச்சயம் அனைவருக்கும் இவ்வாறு கொடுத்தோமே!! எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே பலவகையிலும் கூட அப்பனே நாராயணன் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று அறிந்தும் கூட!!!

இதனால் மீண்டும் சுயரூபத்தை காட்டிவிடலாமா!? என்று எண்ணி!!!

=================================================
# குடும்பங்களில் மலிந்து கிடக்கும் வன்முறை: விரக்தியடைந்த நாராயணன்!
====================================================

ஆனாலும் இன்னும் கூட பின் அதாவது பல பக்தர்களை சந்திக்கச் செல்வோம்!!! எதை என்று புரிய அதில் யாராவது நன்றாக இருந்தால் நிச்சயம் பார்ப்போம் என்று!!!

இதனால் பின் அனைவரிடத்திலும் சென்றான்!!!

ஆனாலும் ஒவ்வொருவரும் நிச்சயம் மனம் எதை என்று கூற சரியாக பயன்படுத்த நிச்சயம் இல்லை!!!

ஒவ்வொரு இடத்திற்கும் சென்றான் ஒவ்வொரு குறைகள் அதாவது மனைவியை அதாவது கணவன் இழிவுபடுத்துதல்!!!

பின் கணவன் மனைவியை இழிவுபடுத்துதல் பிள்ளைகளை பின் அடித்து நொறுக்குதல் இவ்வாறாகவே இருந்தது கலியுகத்திற்கு  தொடங்குவதற்கு முன்புதான்!! எதை என்று சில பின் நிச்சயம் பின் ஆண்டுகளிலே!!!!

இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய இவ்வாறாக நிச்சயம் எதை எதையோ செய்து கொண்டிருந்தான் மனிதன்!!!

============================================
#  பல வகையிலும் கூட பின் உணவுக்காக பல நாட்கள் கஷ்டப்பட்டவன்ப்பா!!! பெருமாள்!!!
============================================

அதனால் நிச்சயம் தன்னில் கூட அதை மட்டுமில்லாமல் எவ்வாறெல்லாம்?? பிச்சை எடுத்தான் பின் இலைகளை பின் எடுத்தான்!!!! நிச்சயம் தன்னில் கூட இன்னும் என்னதான் செய்ய வேண்டும்??? என்று எதை என்று புரிய எதை என்று அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே எதை என்று அறிய இதனால் பல வகையிலும் கூட பின் உணவுக்காக பல நாட்கள் கஷ்டப்பட்டவன்ப்பா!!! பெருமாள்!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது எதை என்று அறிய புரிந்து கொள்ளுங்கள்!!!

எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற இப்பொழுது பின் எதை என்று அறிய அப்பனே பின் நாள்தோறும் அப்பனே பின் பெருமான் இருக்கும் இடத்தில் அப்பனே!!  ஏன் எதற்கு எவை என்று புரிய அப்பனே பின் அனைத்து மக்களுக்கும் தாராளமாக கிடைக்கின்றதே!!!!

====================================================
(குருநாதர் இங்கு வாக்கில் குறிப்பிடுவது.. திருப்பதி திருமலையில் நடக்கும் நித்திய அன்னதானம்

திருப்பதி திருமலையில் உள்ள மாத்ருஶ்ரீ தரிகொண்ட வேங்கமாம்பாள் அன்னதானக் கூடம். 

உலகின் மிகப்பெரிய இலவச உணவு விநியோக மையங்களில் ஒன்றாகும். தினசரி 60,000 முதல் 1,00,000-க்கும் அதிகமான பக்தர்களுக்கு (திருவிழா நாட்களில் 2 லட்சத்திற்கும் மேல்) சுடச்சுட, சுத்தமான, ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. இக்கூடம் அதிகாலை முதல் இரவு வரை இயங்குகிறது, பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் மற்றும் தரிசனத்திற்குப் பின் உணவருந்தலாம்
.
 
அமைவிடம்:- திருமலையில் ஆதிவராக சுவாமி கோயிலுக்கு அருகில் மற்றும் பிரதான கோயிலில் இருந்து நடக்கும் தொலைவில் உள்ளது.

வசதிகள்: ஒரே நேரத்தில் சுமார் 4,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்டது, சூரிய சக்தி மூலம் சமையல் செய்யப்படுகிறது.

உணவு: காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதானம்: வெங்காயம், பூண்டு சேர்க்காத, சுத்தமான, சுவையான, பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுகின்றன. 

பக்தர்களுக்குத் தடையற்ற, தரமான உணவை ஶ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத அறக்கட்டளை மூலமாக தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. 

2023-ம் ஆண்டின் கணக்கின்படி திருப்பதியில் நாளொன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் அன்னதானம் உண்டு வருகின்றனர் என்கிறது தேவஸ்தானம். தரிசனத்துக்குக் காத்திருக்கும் இடத்திலும் சிற்றுண்டி, சித்ரான்னங்கள், பால், காபி போன்றவையும் வழங்கப்படுகின்றன. திருமலைக்கு வருவோர் யாரும் ஏழுமலையானைப் பசியோடு தரிசிக்கவோ, பசியோடு மலை இறங்கவோ இங்கு அனுமதிப்பதில்லை என்பதே உண்மை.தினமும் சுமார் 17 டன் அரிசியும், 8 டன் காய்கறிகளும் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. 1985-ம் ஆண்டு 2,000 பக்தர்கள் உண்ணும் வகையில் நடைபெற்ற திருமலை அன்னதானம் இன்று லட்சம் பேர் உண்ணும் வகையில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட தரிகொண்ட வேங்கமாம்பா அன்ன பிரசாத பவனில் தொடர்ந்து உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.14-ம் நூற்றாண்டில் இருந்தே திருப்பதியில் அன்னதானம் நடைபெற்று வந்ததாகத் தல வரலாறு கூறுகின்றது. எனினும் தரிகொண்ட வேங்கமாம்பா எனும் தியாக தீபம் ஒருவராலேயே இங்கு அன்னதானம் நிலைத்த தர்மமாக விளங்கியது என்று கூறப்படுகிறது.1730-ம் ஆண்டு ஆந்திராவின் சித்தூர் மாவட்டம், வயலபாடிலு அருகே தரிகொண்டா எனும் கிராமத்தில் கிருஷ்ணய்யா-மங்கமாம்பா தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் வேங்கமாம்பா. சிறு வயதிலே கணவரை இழந்த இவர், வேங்கடவன் மீது பக்தி கொண்டு பல நூறு பக்திப் பாடல்களை இயற்றினார். மிகுந்த சிரமத்தோடு மலையேறி வரும் பக்தர்களின் பசிப்பிணியைப் போக்க, தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு எல்லோரிடமும் நன்கொடைகள் பெற்று திருப்பதியில் அன்னதானம் வழங்கினார். இதனால் இங்கு வந்த பக்தர்கள் அவரை 'மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்' என்றே அழைத்தனர். வேங்கடவனும் அவரை தன்னுள் ஐக்கியமாகிக் கொண்டு இன்றும் ஏகாந்த சேவைக்குப் பிறகு நடை சாத்தும் முன் எடுக்கப்படும் கற்பூர ஆரத்தியை 'வேங்கமாம்பா ஆரத்தி' என்ற பெயரிலேயே ஏற்றுக் கொள்கிறான். அன்று வேங்கமாம்பா விரும்பியபடியே ஏழுமலையான் திருவருளால் பிரமாண்ட அன்னதானப் பணி நடைபெற்று வருகிறது.நித்யானந்தம் என்ற அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற அன்னதானம், தற்போது தரிகொண்ட வெங்கமாம்பள் அன்னப் பிரசாதக் கூடம் என்ற பெயரில் பிரமாண்டமான கட்டடமாக உருவெடுத்திருக்கிறது. ஒரே நேரத்தில், ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் 4 அன்னதானக் கூடங்கள் உள்ளன. தரிசனம் முடித்துவரும் பக்தர்கள் ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர் என எந்த வேறுபாடுமின்றி உண்டு வருகின்றனர்.

திருமலையில் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மைய நேரங்கள்
காலை நேரம்: காலை 9:45 - பிற்பகல் 3:30
மாலை நேரம்: மாலை 5:45 - இரவு 10:30..

அன்ன பிரசாத மையத்தில் அனைத்து யாத்ரீகர்களுக்கும் இலவச மற்றும் வரம்பற்ற உணவு வழங்கப்படுகிறது.

இது திருமலை பிரதான கோயிலிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
அன்ன பிரசாத மையம், திருமட தெருவில் உள்ள ஸ்ரீ ஹைக்ரீவர் சுவாமி கோயிலுக்கு அடுத்ததாக உள்ளது.)

====================================================

==============================================
# மீண்டும் அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு ….
==============================================

சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே நாராயணன் என்பேன் அப்பனே!!!!

நிச்சயம் பின் இன்னும் கூட திரிந்து கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய அப்பனே பின் எங்கு? எதை என்று கூற முதலில் அன்னத்தை!!!!   அதாவது பல வகையிலும் கஷ்டங்கள் பட்டு அப்பனே எதை என்று தெரியாமலும் எவை என்றும் அறியாமலும் வந்து மீண்டும் பின் அதாவது இங்கேயே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வந்துவிட்டான்!!!

பின் பல வகையிலும் கூட இதனால் அமைதியாக இருந்தான்!!!!

அதாவது வருவோருகெல்லாம் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அதாவது பல வகையிலும் கூட அறிந்தும் கூட எதை என்று புரிய அதாவது பல வரங்களை கொடுத்து அனுப்பினான். 

பார்ப்போம் பின் இனியாவது பின் எவை என்று அறிந்து பல வரங்களை இன்னும் கொடுத்து அனுப்பினான்!!!

===============================================
# வரங்களை நிறுத்திய இறைவன்: வெறிச்சோடிய ஆலயங்களும் நோய்களின் பெருக்கமும்!
=================================================

ஆனாலும் மீண்டும் சென்றான்!!! (சோதிக்க) அறிந்தும் புரிந்தும் கூட!!!

இதனால் அனைவருமே இப்படித்தான் எதை என்று கூற அறிந்தும் கூட பின் அதாவது எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதே போலத்தான் ஏமாற்றினார்கள்!!!

பின் அனைத்தும் வந்து எவை என்று பணம் ஏதாவது ஏது என்று நல்லது செய்வதில்லை என்று!!!

==============================================
(பெருமாளிடம் வரத்தைப் பெற்று பணத்தை அதிக அளவு ஈட்டினாலும் நல்லது செய்ய யாருக்கும் மனம் வரவில்லை)
==============================================

மீண்டும் அதாவது வரங்களையே நிறுத்திவிட்டான் கொடுப்பதை!!!

நிச்சயம் எதை என்று புரிய அறிந்தும் கூட!!

இதனால் நிச்சயம் அனைவருக்கும் பின் அதாவது காசுகள் இல்லாமல் போயிற்று!!!

இதனால் இறைவன் பொய்!!! எதை என்று கூற பின் அறிந்தும் கூற பின் அதாவது நோய்கள் கூட வந்துவிட்டது!!!!

இதனால் இறைவன் பொய் எதை என்று என்றெல்லாம்!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட வெறிச்சோடி கிடந்ததப்பா இவ் நாராயணனின் ஆலயம்!!!!.....

============================================
(ஒரு காலகட்டத்தில் இறைவனை பொய் என்ற நிலைமைக்கு வந்து யாரும் திருப்பதி மலைக்கு போகாமல் திருப்பதி திருமலையே வெறிச்சோடி யாருமில்லாமல் இருந்தது)
============================================

இதுதான் அப்பனே இன்றைய தினத்தில் அப்பனே இன்றைய காலகட்டத்தில் நடக்கப்போகின்றது என்பேன் அப்பனே!!

இறைவன் அப்பனே அனைத்தும் அப்பனே கொடுப்பான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!

===============================================
# கடுமையான எச்சரிக்கை - அவசியம் புரிந்து கொள்ளுங்கள் 
===============================================

நிச்சயம் மனதில்லை, கலியுகத்தில் அனைத்தும் எடுக்கின்ற பொழுது தெரியும்!!!! 

மனிதன் சொல்வான் நிச்சயம் இறைவன் இல்லை என்று!!!

இதுதான் கலியுகத்தின் கட்டாயம் என்பேன் அப்பனே!!!

அதனுள்ளே திருந்தி விடுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

பின் அவ் நிலைமைக்கு நிச்சயம் வந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நாராயணன் எவ்வளவு பின் உயரத்திலிருந்து அப்பனே இப்பொழுதும் கூட பின் அதாவது திருந்தட்டும் திருந்தட்டும் என்று ஆசிகளையும் பின் அள்ளித் தந்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!

அதனால் உலகம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட காசுகளுக்காக!!!!! அப்பனே!!!

அதாவது பட்டினி கிடக்க, அப்பனே அழிவுகள் பல அப்பனே வந்து கொண்டிருக்கின்றது!!!

================================================
# வினை விதைத்தவன் வினை அறுப்பான்: இயற்கையின் விதி!
==================================================

இதனால் அப்பனே உண்மையை தெரிந்து கொண்டு தெளியுங்கள் என்பேன் அப்பனே!!! ஏன்? எதற்கு?!!!... உங்களை யான் அப்பனே பின் பயப்படுத்தவில்லை என்பேன் அப்பனே!!!

நீங்கள் சரியாக இருந்தாலே அப்பனே இயற்கை மாறிவிடும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!!

நீங்கள் சரியாக இல்லை என்றால் அப்பனே அதாவது அப்பனே பல வகையிலும் கூட அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார் அல்லவா!!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒவ்வொரு அப்பனே பின் செயலுக்கும் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ அதை நிச்சயம் வந்து உங்களையே அடையும் என்பேன் அப்பனே!!! 

மிகவும் சிறப்பாக அப்பனே!!!

======================================
(ஒவ்வொரு வினைக்கும் சமமான மற்றும் எதிரான வினை உண்டு.. அறிஞரான ஐசக் நியூட்டன் மூன்றாம் விதி)
======================================


===========================================
# கலியுக ரகசியம் - நீங்கள் சிறிது செய்தால் அப்பனே அதிகமாகும் எது வேண்டுமானாலும்.
===========================================

நீங்கள் சிறிது செய்தால் அப்பனே அதிகமாகும் எது வேண்டுமானாலும் இக்கலியுகத்தில் என்பேன் அப்பனே!!!

நல்லது சிறிதாக பின் செய்தாலும் அவை அதிகமாகும்!!!

சிறிதாக கெட்டது செய்தாலும் அது இன்னும் அதிகமாகும் என்பேன் அப்பனே!!!

அதனால் பாவ வினைகளில் இருந்து அப்பனே புண்ணியம் எதை என்று அப்பனே பெருக!!!

============================================
# அழிவை நோக்கிச் செல்லும் மனித குலம்: இதுவே திருந்த வேண்டிய இறுதித் தருணம்!
==============================================

ஏன்? எதற்கு? என்றால் அப்பனே நிச்சயம் ஆதியிலே இறைவன் அழகாக மனிதனை படைத்தான்!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் என்னென்னவோ நினைத்து தவறுகள் செய்தான்!!!

அதனால் அப்பனே தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றான்!!

அதனால் அப்பனே பின் அழிவு நிலைக்கு நிச்சயம் தன்னில் கூட வந்து விடாதீர்கள் மனிதர்களே!!!

இதனால் நீடூழி வாழ வேண்டும் என்பதே அப்பனே அதனால் அப்பனே நிச்சயம் பின் என் பக்தர்கள் சில வழிகளில் கூட தெரிந்து கொண்டு அப்பனே மக்களையும் காப்பாற்றுவார்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!

அதனால்தான் அப்பனே சித்தர்கள் யாங்கள் வந்து அப்பனே இறைவனைப் பற்றி தெளிவுபடுத்தி அப்பனே அனைத்தும் அப்பனே பின் வழங்க அப்பனே நிச்சயம் தன்னில் சிலர் கூட அப்பனே பொய் என்றெல்லாம் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இன்னும் அப்பனே காசுகள் சம்பாதிப்பதற்கு எதை எதையோ!?!?!?!?! அப்பனே!!!!

ஆனாலும் ஒன்றும் ஆகாதப்பா!!!!!!

கடைசியில் அப்பனே நிச்சயம் பின் வந்து நிச்சயம் அனைத்தும் பொய் என்றுதான் உணரப் போகின்றீர்கள்!!!

அதற்குள்ளே அப்பனே திருந்தி விடுங்கள் அப்பனே!!!

உண்மையான இறைபக்தியை செலுத்துங்கள்!!!

பின் நன்மை அப்பனே பின் எதை என்று கூற அனைவருக்கும் ஒரு நாள் அப்பனே இறப்பு வரும் என்பேன் அப்பனே!!!

===========================================
# ஒற்றுமை சுவடி ரகசியங்களை அளித்த மனிதர்கள் 
===========================================

அதை இப்பொழுதே உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே ஒற்றுமை கதையெல்லாம் சொல்வேன் அப்பனே!!

எவை என்று கூற பின் எவை என்று கூற பின் இவையெல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று கூற பின் இவையெல்லாம் நிச்சயம் எழுதி எழுதி அப்பனே வைத்தார்கள் சுவடி தன்னில் பெரிய பெரிய ஞானிகள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!

இதனால் பின் அவையெல்லாம் கூட இருந்தால் மனிதன் திருந்தி விடுவான் என்றெல்லாம் அப்பனே (அழித்துவிட்டனர் மறைத்து விட்டனர்)

இதனால் அப்பனே இன்னும் கதைகள் அப்பனே எதை என்று அப்பனே நல்விதமாக இருக்கின்றதப்பா!!!

உண்மையான அப்பனே பின் எவை என்று கூற பின் வரலாற்றையும் கூட அனைத்தும் அழித்து விட்டனர்!!!

அவை முதலில் எடுத்து வந்து மனிதனுக்கு புக்தியை கொடுத்துவிட்டால் அப்பனே அவ்வாறு அப்பனே நிச்சயம் புத்தியை பின் அவன் திருந்தவில்லை என்றாலும்!!.... 

இவைதன் அப்பனே பின் நிச்சயம் எவ்வாறு?? இறைவன் பின் நடந்து!??? எவை என்று கூற உண்மைப் பொருளை அப்பனே நிச்சயம் யாங்கள் அப்பனே சொல்லிச் சொல்லி நிச்சயம் அவந்தன் உண்மையை நம்பித்தான் ஆகவேண்டும்!!!

எதை என்று கூற ஏனென்றால் இக்கலியுகத்தில் பொய்யைத்தான் நம்புகின்றான் மனிதன் அல்லவா!!!

அதுவே நிச்சயம் தன்னில் கூட பதிவாகிவிட்டது!!!

ஆனால் அதனால்தான் வருங்காலத்தில் உண்மைகளை பின் விளக்கமாக செய்து அவ் உண்மைகளுக்கு சக்தி அதிகம் என்பேன் அப்பனே!!!

அவ் உண்மை சக்திகளுக்கு அதிகம் சொல்லி அதிகமாக பின் எவை என்று கூற மூளையை தாக்கி அப்பனே பின் நம்பி விடுவான் என்பேன் அப்பனே!!

ஏனென்றால் கலியுகத்தில் பொய்களான பின் சக்தி அதிகமாகி நிச்சயம் தன்னில் கூட பின் மனித மூளையின் அப்பனே நுழைந்து அப்பனே எதை என்று புரிய அப்பனே!!!!

========================================
# உண்மையை யாரும் தடுக்க முடியாது
========================================

பின் அதனால்..

அப்பனே உண்மையே!! நின்று பேசும்!! நின்று பேசும்!!! உண்மையை யாரும் தடுக்க முடியாது அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!

பின் இன்னும் அப்பனே பின் சித்தர்கள் எழுந்து வருவார்களப்பா நிச்சயம் மாற்றுவார்களப்பா !!!

நல்லோர்கள் அப்பனே பின் எதை என்று அப்பனே பின் வாழ்ந்து அப்பனே பின் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவரும் அப்பனே நிச்சயம் நல்லோர்!! தீயோர்!! என்பதெல்லாம் எங்களுக்கில்லை!!!!

 உங்களுக்காகத்தான் சொல்கின்றேன் அப்பனே!!

பின் எதை என்று கூற எதனால்? நீங்கள் மாறுகின்றீர்கள் என்பவையெல்லாம் அப்பனே யாங்கள் உணர்வோம்!!!!

=========================================
#  தானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைத்து, இறைவனை காணுதலே பேரின்பம்
=========================================

அவையெல்லாம் அப்பனே நிச்சயம் நல் மாற்றங்களாக அனைவருமே பின் ஒற்றுமையாக இருந்து அப்பனே இறைவனைக் கண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைத்து அப்பனே இறைவனை காணுதலே பேரின்பம் அப்பனே!!!!

 அவையெல்லாம் வருங்காலத்தில் செப்புவோம்!!!!

 ஆசிகள்!! அப்பனே நாராயணனின் ஆசிகள் !! ஆசிகள்!!

 மீண்டும் தெரிவிப்பேன் நாராயணன் லீலைகளைப் பற்றி!!!
 ஆசிகள்!! ஆசிகள்!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2131 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள் - ஒரு விளக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வியும் பதிலும் இங்கு வெளியிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அதில் 61வது கேள்வியின் விவாதத்தில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு கூறினார். (சித்தன் அருள் - 2130)

"கலியுகத்தில். எந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ சொல்லலாம் அப்பனே! விட்டுவிடு. வேறு யாராவது சொல்லட்டும்!"

வேண்டுமென்றே நியாயமான கேள்விகளை, யதார்த்தமான கேள்விகளை கேட்டு அவரை பதில் கூற தூண்டிவிட்டு, இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தி வைத்தேன். மேற் சொன்ன விளக்கத்தை கொடுத்துவிட்டு அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். நானும்!

நாடி வாசித்த இடத்தில் ஒரு 20லிருந்து 25 பேர் இருந்தனர். யாரும் பதில் கூறவில்லை. "நான் இருக்கிறேன்! நீங்கள் கூறிய விஷயத்துக்கு நான் தயார்!" என ஒருவர் கூட கை உயர்த்தவோ, பதிலளிக்கவோ இல்லை. இதில் என் நண்பர்களும் அடக்கம்!

அகத்தியப் பெருமான் நினைத்தால் எந்த இறை அருளையும் வாங்கி தன் சேய்களுக்கு தர முடியும்! 

கேள்வி புரிந்ததா? இல்லை புரிந்து, நமக்கேன் வம்பு, இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து சென்று விடுவோம் என்கிற நினைப்பா, என்று தெரியவில்லை.

சித்தரே வந்து மிகப்பெரிய அருளை பெற்றுத் தருகிறேன் என்கிற பொழுது, அந்த வாய்ப்பை இழக்கலாமா? 

அமைதியின் முடிவில், இப்படிப்பட்ட மனிதர்களுக்கா, அகத்தியப்பெருமானை இழுத்து வந்து, கேள்வி கேட்டு இத்தனை சிரமப்படுகிறோம்! என்று தோன்றிவிட்டது. "சித்தன் அருளும்" போதும் என்றாகிவிட்டது! அதையும் வேண்டுதலாக அவரிடம் வைத்திருக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 24 February 2026

சித்தன் அருள் - 2130 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள்-பகுதி - 4!


60. அகத்திய பெருமானை பணிகின்றேன்  ஐயா. ஐயா உழைக்காமல் எளிமையாக முன்னேறுவதற்கான வழியை தேடி கொண்டிருக்கிறது தற்போதைய இளைஞர் கூட்டம் போதிய வேலை வாய்ப்பும் இல்லை போதைக்கு அடிமையாகி பெற்றோருக்கும்  பிறருக்கும் துன்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் இந்த போக்கு மாறுவதற்கும் வேலைவாய்ப்பு அமைவதற்கு வழியும் ஆசிர்வாதமும் தாருங்கள் ஐயா நன்றி!

குருநாதர்: இவர்களை நிறுத்தினாலே, நாடு உருப்பட்டுவிடும். இதனால் தான் முதலிலேயே இதை பற்றி குறிப்பிட்டுவிட்டேன்.  

61. அனைத்து கோவில்களிலும் உள்ள சுவாமிகள், அரசியவாதிகளிடமும், அரசாங்கத்திடமும் கைதியாக இருக்கிறார்களே. அவரை தரிசிப்பதற்கு கூட, இவர்களை மிக நன்றாய் கவனிக்க வேண்டி உள்ளதே! இப்படி ஒரு ஆன்மீக பயணம் தேவையா? இல்லை இறைவன் சக்தியற்றவனா?

குருநாதர்: அடடா! தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற வார்த்தையை மறந்துவிட்டான். 

அடியவர்: அப்போ, இறைவனும் நீங்களும் கெட்டவர்களைத்தான் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா? 

குருநாதர்: நீ எதை இறைவன் என்று நினைக்கின்றாயோ, அக்கல்லானது உனக்கு உதவி செய்யும் என்பதை மறந்து விட்டாயோ? அப்பா! இங்கு உன் பக்தி பொய்யாகிவிட்டதா?

அடியவர்: அப்படியானால், கோவில்களுக்கே போகாமல் இருப்பது நல்லதல்லவா?

குருநாதர்: அப்பா! எனக்கு எதுவுமே தேவை இல்லை என்று அமர்ந்துவிடு. நாங்களே காட்சி அளித்துவிடுவோம். 

அடியவர்: ஓஹோ! பொண்டாட்டி, குழந்தை, அப்பா, அம்மா என ஒருவரும் வேண்டாம் என்று இருந்துவிட்டு உங்களிடம் வந்தால், நீ உன் கடமையை செய்துவிட்டு வா என திருப்பி அனுப்புவீர்கள்! 

குருநாதர்: பின் யானே கேட்க்கிறேன்! எத்தனை பேர்கள் என்னிடம் திருமணம் ஆகவில்லை என்று ஓடோடி வருகின்றார்கள் அப்பா! அப்பொழுது என்ன செய்ய வேண்டும் கூறு! வேண்டாம் என்றா சொல்ல வேண்டும். திருமணம் செய்ய வேண்டாம் என்றா சொல்ல வேண்டும். எத்தனை பேர்களுக்கு குழந்தை இல்லை என்று வருகிறார்கள். குழந்தையே வேண்டாம் என்று யான் சொன்னால் என்னவாகும் தெரியுமா? இதையும் புரிந்து கொள் அப்பா! அடிப்படை தத்துவங்களே, திருமணம் வேண்டும், குழந்தைகள் வேண்டும், காதலி வேண்டும், இதெல்லாம் கேட்கின்றார்கள், விழுந்து விழுந்து! அப்போது இறைவன் என்னடா இது என்று கொடுத்து விடுகின்றான். ஆனால் ஆடுகின்ற ஆட்டத்தை பார்த்தால், நிச்சயம் ஆடு, கடைசியில் என்னிடத்தில் தான் வரப்போகின்றாய் என்று கொடுக்கின்றான். கடைசியில் வந்து இறைவனிடம் கேட்ப்பான். அப்பொழுது இறைவன் கேட்ப்பான், "நீ தானே கேட்டாய்" என்று! மனிதர்கள் அனைவரும் இறைவனுக்கு செல்லக் குழந்தைகள். கொடுத்துவிட்டால், உணர்த்துவான், வேண்டாம் வேண்டாம் என்று. இவர்கள், வேண்டும், வேண்டும் என்று செல்வார்கள். மாயை அப்பா!

அடியவர்: உங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக நான் வருகிறேன். நல்லவிதமாக உணவு சமைத்து போடுவீர்களா, அல்லது தெண்டத்துக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டு போடா என்று செய்வீர்களா?

குருநாதர்: அப்பா! உங்கள் வீட்டுக்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். ஏன் நீரை கொடுக்கின்றீர்கள், போடா வெளியே என்று அனுப்பிவிட வேண்டியதுதானே.

அடியவர்: அது அடிப்படை நாகரீகம்!

குருநாதர்: இறைவன் எப்படிப்பட்டவன் என்று யோசித்தாயா, அன்பு மகனே!

அடியவர்: இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை, நிறைய சொல்லிவிட்டீர்கள், காத்து நிறைய கேட்டுவிட்டோம். இல்லை என்று நான் சொல்லவில்லை. நடக்கிற உண்மையை கேட்கிறேன், என் கண் முன்னாடி நடக்கிற உண்மை இது. அரசியல்வாதிகளிடமும், அறமில்லா துறையிடமும் மாட்டிக்கொண்டு இறைவன் கைதியாக இருக்கிறார்.

குருநாதர்: அப்பா! தேவை இல்லை. உன்னிடத்தில் இருக்கின்றான் இறைவன். நீ ஏன் அவனை தேடி அவனிடத்தல் செல்கிறாய் இங்கு.

அடியவர்: சரி! இத்தனை சொல்கிறீர்களே! எதற்கு, இத்தனை கோவில்களை கட்டினீர்கள், இங்கு?

குருநாதர்: அப்பா! இவைகளை எல்லாம் ஏன் கட்டினோம் என்றால், ஆற்றல்கள். மனிதனுக்கு ஆற்றல்கள் கிடைத்து கூடுகிற பொழுது, தன்னைத்தானே உணர்வான். ஆலயங்களுக்கு சென்றால், அது நடக்கும், இது நடக்கும் என்று காலப்போக்கில் மாறிப்போனது. நீயே, உன்னுள்ளே இறைவனை வரவழைக்கலாம், நீயே திருத்தலமாக்கலாம் என்று சித்தர்கள் எழுதி வைத்தார்களே! 

அடியவர்: எல்லோருக்கும் அந்த மாதிரி அமையாது. அதை புரிஞ்சுக்குங்க! 

குருநாதர்: மனதில் அழுக்குகளை வைத்துக் கொண்டு, சுயநலமாக திருத்தலம் சென்றால், எதுவும் நடக்காது.   இறைவன் இங்கு என்ன விருப்பப்படுகின்றானோ, அதுதான் நடக்கப்போகின்றது. இறைவன் எங்கு இருக்க விருப்பப்படுகின்றானோ அதுதான் நடக்கப்போகிறது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் என்ன சொல்லியிருக்கிறான்? இதே கேள்வியை உங்களை யான் பார்த்து கேட்கின்றேன்!

அடியவர்: என்னெல்லாமோ சொல்லியிருக்கார்.

குருநாதர்: அப்பா! சொல் அறிவிப்போம்!

அடியவர்: என்ன பிரயோசனம்? இந்த கலியுகத்தில், கிருஷ்ணரை போல் திருட்டுத்தனம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

குருநாதர்: அப்பா! அவன் திருடனில்லா!

அடியவர்: திருடன்தான்.

குருநாதர்: அனைத்தையும் அறிந்து உரைத்திருக்கின்றான்.

அடியவர்: எல்லாவற்றையும் செய்து விட்டு, கடைசியில் நானா செய்தேன், நானா கூறினேன் என்பார்.

குருநாதர்: இதெல்லாம் இறைவன் லீலை!

அடியவர்: அது மாதிரி, இதுவும் எங்கள் லீலை. 

குருநாதர்: உங்கள் லீலை கடைசியில் எங்கு முடியப்போகிறது ஏன்பது எங்களுக்கு தெரியும்.

அடியவர்: அதான், அதேதான். இப்ப புரிஞ்சுதா? நீங்கள் உயரத்தில் இருக்கிறீர்கள், நாங்கள் கீழே பள்ளத்தில் இருக்கிறோம். எங்களை தூக்கி விடுகிற பொழுது, சரியான விஷயங்களை சரியான முறையில் காட்ட வேண்டும். 

குருநாதர்: இதுவரை சரியான முறையில் எடுத்து வந்து கொண்டிருக்கிறேன் அப்பா! முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று. கலியுகத்தில் சித்தர்கள் பொய் என்று நிரூபித்துவிட்டிருப்பார்கள் அப்பா! ஆனாலும்  யாங்கள் விடப்போவதே இல்லை.

அடியவர்: ஒரு அடியவர், தான் வாழும் காலத்துலே, அனைவரும் நல்லவர்களாக இருந்து, இறைவன் சன்னதியில் தஞ்சமடைந்து, இருக்க வேண்டுமென ஆசைப்படுவது, தவறே கிடையாது.

குருநாதர்: இதை முதலில் 20 வயதில் கேட்டிருந்தால் எவ்வளவு உத்தமம். அனைத்தும் அனுபவித்துவிட்டு கேட்கிறார்களே, என்ன நியாயம்?

அடியவர்: அந்த வயதில் பக்குவ நிலை அமையாது,

குருநாதர்:  சிவனடியார்களை பாருங்கள்!

அடியவர்: கோடியில் நாலுபேர் இருப்பார்கள். அனைவரும் இருக்க வாய்ப்பில்லை.

குருநாதர்:  ஏன் கோடியில் ஒருவனாக நீயிருக்க கூடாது? நிச்சயம் தாய் தந்தையரின் வளர்ப்பில்தான் உள்ளது.

அடியவர்: அவனுக்கு அந்த ஞானம் இருந்திருந்தால், பிறப்பே எடுத்திருக்க மாட்டானே!

குருநாதர்:  இறைவனை வணங்கு என்று அடித்து சொல்லி, சிறு வயதிலேயே உட்கார வைத்திருந்தால், ஞானம் வந்து விடும்! தன் மகன், மக்கள் எங்கேயாவது செல்லட்டும், பின் யாருடனாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று விரும்பினால், இதுதான் நிச்சயம் வரும்.  என்ன விதைக்கின்றாயோ, அதுவே ஆகும். 

அடியவர்: எதை விதைத்தாலும் அதுதான் வருமென்பது உண்மை. அதெல்லாம் சரிதான். நீங்கள் சொன்ன பகவத் கீதையை படித்து, அதன் படி நடந்து, எல்லாவற்றையும், செய்து, சொல்லிவிட்டு, கடைசியில், நானா சொன்னேன், நானா செய்தேன் என்று கேட்டபொழுது, பலரையும் வேதனைப்படத்தான் வைத்தது.

குருநாதர்: அப்பா! இறைவனின் விளையாட்டு. விளையாடு. ஆனால் இறைவன் விளையாடினால், நிச்சயம்..... 

அடியவர்: நான் கேட்கிற கேள்வி ஒன்றுதான். ஒரு மனிதன், தான் வாழும் காலத்தில் ஒரு நல்லது நடப்பதை, நல்லது செய்வதை காண்பது தவறா?

குருநாதர்: அப்பா! அவன் மனது நல்லதாக இருந்தால், நடப்பதெல்லாம் நல்லதாக இருக்கும். அவன் மனதில் குற்றமிருந்தால், அவன் காண்பதெல்லாம் குற்றமாக இருக்கும்.

அடியவர்: நீங்கள் ஒரு விஷயம் பண்ணுங்கள். நீங்கள் மனித ரூபம் எடுத்து வந்து திருவண்ணாமலையில் இறை ........

குருநாதர்: அப்பா! எத்தனையோ முறை வந்திருக்கின்றேன்! கூட்டுப்பிரார்த்தனைக்கே வந்திருக்கின்றேன்! ஆனாலும் கண்டவர் எவர்? அத்தனை மனதும் அழுக்குகள் அப்பா! 

அடியவர்: இருக்கட்டு. ஒரு நிமிடம்! நான் கூறுவதை கேளுங்கள். கவனித்துக் கொள்ளுங்கள். ஒருநாள், உங்களது எந்தவிதமான சக்தியையும் பயன்படுத்தாமல், சாதாரண மனிதனாக வந்து ஒரு நாழிகைக்குள் நீங்கள் வரிசையில் நின்று அப்பனை, தரிசனம் பண்ணிவிட்டு வந்தீர்கள் என்றால், நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன். என் தலையில் முடி இல்லை, ஆதலால், நீங்கள் சொல்வதை நான் கேட்க்கிறேன். குறிப்பு: யார் மனதையும் வசியப்படுத்தக் கூடாது!

குருநாதர்: அப்பா! இன்னொன்றையும் சொல்கிறேன் அப்பா! அவ்வளவு ஆற்றல் நீங்கள் பெற்றிருந்தால் தான் உண்டு. யங்கள் வந்தால், நிச்சயம் சொல்லிவிட்டால், இறைவன் நான்தான் என்று சொல்லிவிட்டால் சிரிப்பான் மனிதன். நீயா இறைவன் என்று. அவ்வளவு பக்தி மனிதனுக்கு. என்னை பற்றி யான் புகழ்வதும் இல்லை, அது சரியில்லை.

அடியவர்: நான் அதைப்பற்றி எதுவுமே கூறவில்லை. எனக்கு தெளிவு படுத்துங்கள், ஒரு நாழிகைக்குள், அண்ணாமலையாரை, அருணாச்சலத்தை வரிசையில் நின்று பார்த்து விடுவீர்கள் என்று. 

குருநாதர்: அப்பா! இவை எல்லாம்! எங்கெல்லாம் மனிதர்களுக்கு காட்சி அளித்திருக்கிறேன்!

அடியவர்: காட்சி அளித்ததை பற்றி நான் சொல்லவில்லை. இப்பொழுது திருவண்ணாமலை கோவிலில் இருக்கும் நிலைமைக்காக சொல்கிறேன். சாதாரண மனிதனாக வந்து நீங்கள் தரிசனம் பண்ணி காட்டலாம் இல்லையா?

குருநாதர்: அப்பனே! அனைத்தும் பார்த்து வந்ததினால் தான் சித்தன் ஆகின்றான் அப்பனே! அனுபவித்து வராமல் சித்தன் ஆக முடியாதப்பா.

அடியவர்: அந்த அனுபவம் என்பது வேறு! நான் கேட்பது வேறு. 

குருநாதர்: யானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே! சாதாரண மனிதனை பார்க்க  எவ்வளவு அலைகின்றார்கள்! இறைவனை பார்க்க காத்திருந்தால் என்ன? அப்பனே! திருத்தலத்திற்கு சென்றால் சில நாட்கள் இருக்க வேண்டும். ஐந்து நாட்கள், பத்து நாட்கள் என்று. ஆனாலும், இப்பொழுது அப்படி இருப்பதே இல்லை. ஏன் எதற்கு சொன்னேன் என்றால், நல் விதமாக ஆற்றல்களை பெற்று, திருத்தலங்களில் விழும் கிரகங்களின் ஆற்றல்களை கட்டி, இத்திருத்தலத்தில் பத்து, பதினைந்து நாட்கள் இருந்தால் அனைத்தையும் அழித்து விடுவோம். இதை எல்லாம் இப்பொழுது மறுத்துவிட்டார்கள் ஏன் என்றால், திருமண ஆசைக்காக திருத்தலங்களுக்கு வந்து என்னென்னவோ செய்கின்றான். அதனால் தான் அப்பனே! அனைத்தும் நாங்கள் முடிவெடுப்பதுதான் நடக்கின்றது என்பேன் அப்பனே! நாங்கள் முடிவெடுப்பது மனிதனுக்கு தவறாக தோன்றலாம். ஆனால் ஒருநாள் இது நிச்சயம் உண்மையாகவே மாறும்!

அடியவர்: என்றேனும் ஒருநாள், இந்த உடலைவிட்டு நான் சென்றபின் நடந்து ......

குருநாதர்: அப்பா! 30 வருடங்கள் 40 வருடங்களில் ஊறியது ஒரே நாளில் அழித்திட முடியுமா அப்பா? 

அடியவர்: ஐந்து வருடங்களுக்கு முன் நிலைமை இப்படி இல்லை! இரண்டு வருடங்களுக்கு முன் சிவராத்திரி அன்று இறைவனை பார்க்காமல் திரும்பி வந்தேன்.

குருநாதர்: அப்பா! எங்கிருந்தாலும், இறைவனை நினைத்தாலே போதும். அதுவே சிவராத்திரி!

அடியவர்: அதனால் தான் அடியேன் இப்பொழுது எங்கும் செல்வதில்லை. எப்படியும் போங்கள்! உமக்கு என்று மனிதர்களை, அரசியல்வாதிகளையும், அறமில்லா துறையையும்  வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

குருநாதர்: அவர்களையும் தேர்ந்தெடுப்பது இறைவன் அல்லவா? நாங்கள் சித்தர்கள் அனைவரும் வந்து, அந்த  நிலையில் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தால், பக்குவப்பட்ட நிலையில் யாரும் இல்லையப்பா! அதனால், அடித்து, நொறுக்கி, கஷ்டத்தை கொடுத்து, பின் இறைவன்தான் என்றிருந்தால், நாங்கள் மேலே தூக்கி விடுவோம் அப்பா!

அடியவர்: இத்தனை கோடி மக்களில் ஒருவர் கூடவா இல்லை இம்மக்களில்!

குருநாதர்: இல்லையப்பா! அதனால் தான் வந்துவிடுகின்றோம்.

அடியவர்: நீங்கள் சரியாக பார்க்கவில்லை! புரிந்ததா?

குருநாதர்: என்ன யான் பார்க்கவில்லையா? அனைவருக்கும், திருமணம் வேண்டும், மனைவி  வேண்டும், மனைவி வந்தால் பிள்ளைகள் வேண்டும்............

அடியவர்: இறைவன் முன்னாடி சென்று நிற்கும் பொழுது, இறை என்ன வேண்டும் என்று கேட்டால், எனக்கு நீ இருக்கிறாயே, வேறு எதுவும் வேண்டாம் என்று கூறுகிற மனமிருந்தால் போதுமே?

குருநாதர்: அப்படி யாரால் கூற முடியும்? இங்கிருப்பவரை கூறச்சொல்!

அடியவர்: யான் கூறியுள்ளேன், இறைவன் கேட்ட பொழுது.

குருநாதர்: திருமணமாகி, பிள்ளைகளும் பெற்றுவிட்டாய்....

அடியவர்: அந்த நேரத்தில் தான், திருமணம் முடிந்து, பிள்ளைகளையும் அடைந்த பிறகுதான் இறைவனிடம் சொன்னேன், எனக்கு நீ இருக்கிறாயே, எனக்கு எதுவுமே தேவை இல்லை என்று சொன்னவன் நான்.

குருநாதர்: எதுவுமே தேவை இல்லை என்று சொன்னதால்தான் உன்னிடத்தில் வந்து வாக்குகள் செப்பிக்கொண்டு இருக்கின்றேன். 

அடியவர்: அது வேறு விஷயம்! சற்றுமுன், அப்படி ஒரு மனிதர் கூட இல்லை என்று கூறியது தவறு என்று தெரிவிப்பதற்காகத்தான் இதை கூறினேன்.

குருநாதர்: :நிச்சயம் இல்லை அப்பா! கலியுகத்தில். எந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ சொல்லலாம் அப்பனே! (உன்னை) விட்டுவிடு. இங்கிருக்கும் வேறு யாராவது சொல்லட்டும்!

[யாரேனும் சொல்கிறார்களா என்று பொறுத்து காத்திருக்க, எங்கும் மயான அமைதி!]

அடியவர்: திருவண்ணாமலையில் இறைவனை தரிசனம் செய்ய நான் தான் சென்றேன், நான் தான் ஆசைப்பட்டேன்.

குருநாதர்: அப்பனே! இதுவும் இறைவன் லீலை என்றே நினைத்துக்கொள் அப்பனே! நீ மிகவும் அலைந்திருப்பதினால்தான் ஈசன் விடவில்லை, வீட்டிலேயே இருந்துகொள் என்று. இப்படியும் நினைத்துக் கொள்ளலாம் அல்லவா? ஏனப்பா!

அடியவர்: கேட்டிருக்கணும்! மத்தவங்களை மாதிரி. அப்பொழுது தெரிஞ்சிருக்கும். (ஜானகிராமன் என்னவோ சால்ஜாப்பு சொல்ல போக) ஏய்! தமிழ் பாடத்துல நான் யூனிவர்சிட்டி முதல் ரேங்க் வாங்கினவன். ஆகவே என்னை தமிழில் பேசி ஏமாற்ற வர வேண்டாம். எல்லா அர்த்தமும் எனக்கு புரியும்!

குருநாதர்: அதை ஏற்படுத்தியவனே யான் தான் அப்பா! என்னிடத்தில் கற்றுக்கொண்ட வித்தைகளை எல்லாம் கேட்கின்றாயே அப்பா!

அடியவர்: எப்பொழுதுமே, (கற்பித்த) ஆசானிடம் தானே ஆயுதத்தை பிரயோகப்படுத்த முடியும்.

குருநாதர்: அப்பா! அதனால், நிச்சயம் தன்னில் கூட, மாணவனுக்கு என்ன கொடுக்கவேண்டுமோ, யாம் அறிவோம்!

அடியவர்: அதாவது, நான் கேட்ட கேள்விக்கான பதில் சரியாகவே இல்லை.

குருநாதர்: அப்பா! சரியாகவில்லை என்றால் மீண்டும் கேளப்பா, சொல்வதற்கு உன் ஆசான் இருக்கின்றான்!

[அகத்தியர் அடியவர்களே!

இந்த கேள்வியின் விவாதம் சென்ற விதத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள். கோவில்களில் நடக்கும் அட்டூழியங்களுக்கு நாம் தான் காரணம். ஆம்! ஆயிரம் ரூபாய் கொடுத்து ஸ்வாமியை பார்க்க தயாராகிறோம் என்ற பக்தர்களின் குணத்தை அறிந்த ஓநாய்கள் பிடியில் கோவில்கள் உள்ளது. இதற்கு சரியான பழி வாங்கல், என் வரையில் சொல்கிறேன். எந்த காரணம் கொண்டும் கோவில் உண்டியலில் பணத்தை போடாதீர்கள். இறைவன் கேட்பதே இல்லை. நீங்கள் செய்து கூட்டுகிற பாபங்களை ஆயிரம் ரூபாய் போட்டு அழிக்க முடியாது. பணம் போடுவதால்/கொடுப்பதால் ஓநாய்களுக்கு உணவளிக்கிறீர்கள். அவர்கள்தான் கைபோட்டு வாரி எடுத்துக் கொள்கிறார்கள். அறமில்லா துறையின் கோவில்களில் வைத்திருக்கும் உண்டியல்களில் அடியேன் காசு போடுவதே இல்லை. சுமார் 45 வருடங்களாயிற்று. இறை வழியில் எனக்கு இறைவன் எந்த குறையும் வைத்ததில்லை. சிறப்பாகத்தான் என்னை வைத்திருக்கிறார். இது என் கருத்து. உங்கள் விருப்பம், உங்கள் பக்கம்!]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!