​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 9 November 2025

சித்தன் அருள் - 1989 -அன்புடன் அகத்தியர் - போகர் சித்தர் வாக்கு - ஐப்பசி நீராடல்!

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02.11.2025 அன்று  திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.

வணக்கம் அடியவர்களே, திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனையில், அன்புடன் போகர் சித்தர் உரைத்த வாக்கு - அதன் ஒரு பகுதி மட்டும் இங்கு  அதி முக்கிய அவசர பதிவாக வெளியிடுகின்றோம். முழு வாக்கும் பின்பு வெளிவரும். 

அடியவர்கள் இந்த வாக்கினை பயன்படுத்தி , நம் குருநாதர் அகத்திய மாமுனிவரின் வாக்குகளை பெற்றுக் கொள்க. வாருங்கள் இந்த அதி முக்கிய அவசர பதிவு வாக்கின் உள் செல்வோம். 

=======================================================

# அன்புடன் போகர் சித்தர் வாக்கு  ( அவசர பதிவு வாக்கு)

=======================================================

அகிலமெல்லாம் ஆளக்கூடிய அகிலாண்டேஸ்வரி, அகிலாண்டேஸ்வரியை பணிந்து போற்றுகின்றேனே. போகனவனே.

(..................)

நிச்சயம் ஏற்றங்கள் உண்டு. யாங்கள் கொடுப்போம், யாங்கள் சொல்லியதை, நிச்சயம் தன்னில் கூட கடைபிடித்து, நிச்சயம் பின் ஏற்றம் பெருக. பின் அதாவது, பின் 

திருவாசகத்தில் 13 ஆம் பின் பதிகம் ( திருப்பூவல்லி ) , பின் பாடல் அறிந்தும் எது என்று கூற  யோகங்கள்.

(..................)

இதைத்தன் அறிந்து, இவைத்தன் நிச்சயம் தன்னில் அறிந்தும், பின் நவ, எவை என்று அறிய, பின் அதாவது தானியங்களுடனே தீபங்கள், பின் ஏற்றி, நிச்சயம் தன்னில் கூட, பின் காவேரி  தன்னில் , இப்பாடலை பாடிற்று, நிச்சயம் தன்னில் கூட, பின் அமாவாசை தன்னில் கூட, நீராட,  அகத்தியனின் ஆசிகளும் கிட்டும், இன்னும் ஞானங்களும் கிட்டி , இன்னும் அவரவருக்கு அகத்தியன் வந்து வாக்குகள் சொல்வான் பலமாக.

(..................)

இன்னும் இன்னும் சிறப்பாகவே வாக்குகள் உண்டு. சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட உங்களைப் பின் வழிநடத்துவார்கள். மீண்டும் சொல்கின்றேன்.

சித்தர்கள் பின் வழியில் வருவதற்கும் நிச்சயம் தன்னில் கூட புண்ணியம் வேண்டும்.

நிச்சயம் எவை என்று அறிய கீழானவர்களை யாங்கள் சேர்க்க மாட்டோம்.  நிச்சயம் இவ்வுலகத்தில் இரண்டு எது என்று கூற (1) ஒன்று மேலானவர்கள் (2) மற்றொன்று கீழானவர்கள்.

நிச்சயம் மேன்மையான எண்ணங்கள் உடையவர்கள் மேன்மையானவர்கள். மற்றவர்கள் கீழான எண்ணம் உடையவர் பின் நிச்சயம் கீழானவர்கள். 

நிச்சயம் அக் கீழானவர்கள் எங்கள் அருகில் வரவே முடியாது. அதனால்தான் மேன்மையான எண்ணங்கள் வையுங்கள். யாங்களே அழைத்து வருவோம். இறைவனிடத்தில் அழைத்துச் செல்வோம். இறைவனை காட்டுவோம் அருளை, ஆசிகளை பெற்றுத் தருவோம். 

நீடோடி வாழ்க!  ஆசிகள்! ஆசிகள்! அனைவருக்குமே!. 

==============================================

#  அதி முக்கிய, அவசர பதிவு வாக்கு  (நிறைவு)

==============================================

=============================================

# அதி முக்கிய அவசர பதிவு வாக்கு விளக்கம் :- 

=============================================

திருவாசகத்தின் 13ஆம் பதிகமான திருப்பூவல்லி பாடலை, பாடினால் யோகங்கள் கிட்டும்.

அமாவாசை நாளில் காவிரி ஆற்றில் நீராடி, இந்த பாடலை  பாட வேண்டும். நவ  தானியங்களுடனே  தீபங்களை ஏற்றி, பக்தியுடன் பாடும் போது, குருநாதர் அகத்திய மாமுனிவரின் அருள் ஆசிகள் மேலும் பலமாக கிடைக்கும்.  

நவதானியங்கள் வைத்து அதன்மேல் நவ தீபங்கள் ஒரே பாக்கு மட்டை தட்டில் ஏற்றலாம் அல்லது தனித்தனியாகவும் ஏற்றலாம். உங்கள் விருப்பமே. 

இந்த பாடலை காவிரி ஆற்று நீர் நிலைகளில், தீபம் ஏற்றி, பூ வைத்து, நவதானியங்களை வைத்து பாடும் போது,  குருநாதர் அகத்திய மாமுனிவரின் அருள் ஆசிகள்  மேலும் பலமாக கிடைக்கும்

மேலும், ஞானம் பெருகும். இதை உணர்ந்து, நிச்சயமாக இவ் வழிபாட்டை செய்தால்,  நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்,   உங்களுக்கு நேரடியாக, பலமான  வாக்குகள் உரைப்பார்கள்.  இதனை அடியவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்க. குருநாதரின் வாக்குகள் பெறுக. அனைவருக்கும் தெரிவியுங்கள். 

====================================================

#  ஐப்பசி நீராடல் குறித்து மற்ற நலம் தரும் வாக்குகள் 

====================================================

=====================================================

# (1) பல பாவங்கள் நீங்கி, சித்திகள் பெறுவது எப்படி ? 

=====================================================

சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்!

https://siththanarul.blogspot.com/2021/09/1034.html

வாக்கு சுருக்கம்:-

ஐப்பசி மாதத்தில்,  காவேரி நதியில் நவ நாட்கள் (9 நாட்கள்) பக்தியுடன் நீராடி, அகத்திய மாமுனிவரை  நினைத்து, அமாவாசை திதியில் தொடங்கி இந்த வழிபாட்டை மேற்கொண்டால், பல பாவங்கள் நீங்கும். இதனை பெரிய அரசர்கள் செய்தும் சித்திகள் பெற்றுள்ளனர்.

அடியவர்கள் பயன்படுத்தி கொள்க.

================================================

# (2) ஏன் புண்ணிய நதிகளில் நீராடினால் யோகங்கள்? 

================================================

https://www.youtube.com/watch?v=3I2PCGce2a4

https://www.youtube.com/watch?v=aDzHl_TZd9k

சித்தன் அருள் - 1710 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!

https://siththanarul.blogspot.com/2024/10/1710.html

அன்புடன் அகத்திய முனிவர் வாக்கு (சித்தன் அருள் - 1710) :- 

“ஐப்பசி திங்களில் இவ் மாதத்தில் தான்... அப்பனே சக்திகள் அப்பனே பின் குவிந்து நிற்குமப்பா...போகப்போக அப்பனே அவை குறைவாகிவிடும் என்பேன் அப்பனே!!!”

வாக்கு சுருக்கம்:-

மனித உடலில், குறிப்பாக மூளை, கண்கள், பற்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் (microorganisms) சில நேரங்களில் செயல் இழக்கின்றன. ஆனால், கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற புனித நதிகளில் நீராடும் போது, அங்கு உள்ள சக்திவாய்ந்த நுண்ணுயிர்கள் உடலில் உள்ள நுண்ணுயிர்கள் உடன்  இணைந்து, புத்துணர்ச்சி ஏற்படுத்துகின்றன.

இதனால்:

- மூளை நுண்ணுயிர்கள் செயல்படத் தொடங்கும்

- கண்களில் உள்ள நுண்ணுயிர்கள் சீராகி பார்வை மேம்படும்

- பற்களில் உள்ள நுண்ணுயிர்கள் செயல்பட்டு பல் நோய்கள் குறையும்

- உடல் இளமை பெறும்

- யோகங்கள் ( நன்மைகள்) ஏற்படும்

இந்த ஐப்பசி மாதத்தில், நதிகளில் நீராடி, நவகிரகங்களின் ஒளியை சரியாகப் பயன்படுத்தி, நவகைலாயங்கள் மற்றும் நவதிருப்பதிகள் தரிசனம் செய்தால், பாவங்கள் கரையும், வளர்ச்சி ஏற்படும். இது சித்தர்களின் ரகசியம்

==========================================

# (3) ஐப்பசி மாத அறிவியல் ரகசியங்கள்

==========================================

https://www.youtube.com/watch?v=K66nCQA4Tr4

சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர் - அகத்திய பெருமானின் உத்தரவு!

https://siththanarul.blogspot.com/2022/10/1201.html

வாக்கு சுருக்கம் :- 

ஐப்பசி மாதத்தில் துருவ் நட்சத்திரம் பூமிக்கு நெருக்கமாக பிரகாசிக்கிறது. இந்த நேரத்தில், சூரியன் மற்றும் சந்திரன் கீழ்நோக்கி பயணிக்கின்றனர், மேலும் மேலிருந்து வரும் நன்மை தரும் ஒளியை ஒரு கோள் தடுத்து, தீய ஒளியாக மாற்றி மனிதர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நோய்கள், இறை பலம் குறைபாடு போன்ற விளைவுகள் ஏற்படும்.

இந்த தீய சக்திகளிலிருந்து மனிதர்களை காக்க, நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் காவிரி மற்றும் தாமிரபரணி நதிகளை அறிவியல் ரீதியாக உருவாக்கி உள்ளார்கள்.

இந்த தீய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்காக, ஐப்பசி மாதத்தில் காவிரி மற்றும் தாமிரபரணி நதிகளில் நீராட வேண்டும். நவகிரகங்களின் ஒளி அதிகமாக இருக்கும்; அதனை நன்மையாக பயன்படுத்த, நவகைலாயங்கள் மற்றும் நவதிருப்பதிகளை பக்தியுடன் தரிசிக்க வேண்டும்.

இந்த ஐப்பசி மாதத்தில் ஈசன், பெருமாள் மற்றும் பிரம்மா ஆகியோர் நதிகளில் நீராடி அருள் வழங்குவார்கள். சனிபகவான் இந்த மாதத்தில் அதிக சக்தியுடன் இருப்பார்; நல்லோர் நன்மை பெறுவார்கள், தீயோர் தண்டனை பெறுவார்கள்.

====================================================

# திருவாசகம் - 13 ஆம்  பதிகம் - திருப்பூவல்லி - சுருக்கம்

====================================================

திருப்பூவல்லி என்பது திருவாசகத்தில் இடம்பெறும் ஒரு பக்தி பாடல் தொகுப்பு. இதில் "வல்லி" என்றால் "கொடி" என்று பொருள். பெண்கள் பூக்களை கொடியிலிருந்து கொய்யும் செயல் "பூவல்லி" என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "பூவல்லி கொய்யாமோ" என்ற அழைப்பு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. நால்வகைப் பூக்களில் பெரும்பாலும் கொடிப்பூக்கள் பற்றியே இப்பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.

இந்த பாடல்களின் முக்கிய நோக்கம் மாயவிஷயங்களை நீக்குதல் ஆகும். அதாவது, உலக வாழ்க்கையின் வெற்றியால் ஏற்படும் மயக்கத்தை விலக்கி, இறைவனிடம் முழு மனதுடன் சரணாகதி அடைவது.

திருப்பூவல்லி என்பது திருவாசகத்தின் ஒரு பகுதி, மாணிக்கவாசகர் அருளிய 13வது பாடலாகும். இது மாயா விசயம் நீக்குதல் என்ற தலைப்பில், உலக மயக்கங்களை விட்டு இறைவனிடம் சரணாகதி அடையும் ஆன்மீகப் பயணத்தைப் பாடுகிறது.

திருப்பூவல்லி சுருக்கம்

பாடல் வடிவம்: நாலடி தரவு, கொச்சகக் கலிப்பா.

பாடும் சூழல்: பெண்கள் சிவபெருமானுக்குப் பூக்கள் சூட்ட, அவனது புகழைப் பாடிக்கொண்டு அல்லி மலர்களைப் பறிக்கின்றனர்.

முக்கிய கருத்துகள்:

இறைவனின் திருவடிகளை தலைமேல் வைத்து, உலக பந்தங்களைத் துறந்து பக்தியில் ஈடுபடுதல்.

பாண்டிப் பிரான் எனும் சிவன், பந்தங்களை அறுத்து ஆன்மாவை ஆண்டவனாக வர்ணிக்கப்படுகிறார்.

வல்வினைகள் அழிக்கப்படும், பழவினைகள் கிறி செய்யப்படும், பேராசை நீக்கப்படும்.

சிவபெருமான் பல வடிவங்களில், பல இடங்களில், பல செயல்களில் அருள்புரிந்தவனாக வர்ணிக்கப்படுகிறார்:

முப்புரம் எரித்தவன்

ஆலமரத்தின் கீழ் அருமறைகள் அருளியவன்

பாம்புகளை அணிகலனாக அணிந்தவன்

யானையின் தோலை போர்த்தியவன்

நரியைக் குதிரையாக்கி வந்தவன்

தில்லை அம்பலத்தில் நடமாடும் சிவன், சிலம்பொலி கேட்க ஆசை, பெருந்துறையான் எனும் சிவபெருமானின் திருநடனம்—all symbolize the soul’s yearning for divine union.

மூலம்: ஒவ்வொரு பாடலும் "பூவல்லி கொய்யாமோ" என்ற அழைப்புடன் முடிகிறது, இது பூக்களை கொய்யும் ஆன்மீகச் செயலை குறிக்கிறது.

இந்த பதிகம் , உலக மாயையை விட்டு இறைவனின் அருளை நாடும் ஆன்மாவின் அழகிய பயணத்தை மிகுந்த கவிதைத் திறனுடன் வெளிப்படுத்துகின்றன.

===============================================

# திருவாசகம் - 13 ஆம்  பதிகம் - திருப்பூவல்லி

===============================================

இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே,

துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்;

அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ!         (1)

எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய

பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்;

அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த

பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ!        (2)

நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,

தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்,

மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின்

வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!           (3)

பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே,

எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,

விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால்

புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!             (4)

தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்

ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே

நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்

வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!        (5)

எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,

சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி,

உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே

புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ!         (6)

வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து;

இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான்,

அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற

குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!        (7)

நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே

குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி,

முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக்

கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!             (8)

பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர்

என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்,

கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள்

பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!        (9)

பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான்,

சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,

கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி,

போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ!        (10)


பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய்,

கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்

ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே

போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ!         (11)

வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும்

கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன்

ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய,

போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!        (12)

அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி,

நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும்,

நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப்

பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!     (13)

படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு

இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,

தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,

நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!        (14)

அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,

செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும்,

பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய,

பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!    (15)

திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு,

மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி,

தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட,

புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!     (16)

முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும்,

பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே?

என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்

பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!        (17)

சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே

ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,

தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்

பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!        (18)

அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,

பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய்,

முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல்,

புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!        (19)

மா ஆர வேறி மதுரைநகர் புகுந்தருளித்

தேவார்ந்த கோலத் திகழப் பெருந்துறையான்

கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்

பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ        (20)

====================================================

# திருவாசகம் - 13 ஆம்  பதிகம் - திருப்பூவல்லி (நிறைவு)

=====================================================

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 8 November 2025

சித்தன் அருள் - 1988 - அன்புடன் அகத்தியர் - மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025


இறைவா !!!!! நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025

நாள் : 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி.


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.

எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில் கூட உங்களை வழிநடத்தும். இதனால் சில சில மாற்றங்கள் இவ்வுலகத்தில், அதாவது இங்கிருந்து சொல்கின்றேன், மீனாட்சியிடம் இருந்தே சொல்கின்றேன். 

==================================================
#     உங்கள்  குழந்தைகள் வாழ்வில்  முன்னேற ……
==================================================

நிச்சயம் நீங்கள் என்ன செய்தீர்களோ, அதைத்தன் நிச்சயம் உங்கள் பிள்ளைகள் செய்யும். அதை மட்டும் நீங்கள், ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் உங்களை பின் பக்திக்குள் இழுத்து வந்து விட்டால், உங்கள் குழந்தைகளும், உங்கள் குழந்தைகளும் கூட பக்திக்குள் வந்துவிடும். 

அதைவிட்டு நீங்கள் என்னென்ன செய்தீர்களோ, நிச்சயம் நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். பின் நிச்சயம், பின் உங்கள் பிள்ளைகளும் அதேபோலத்தான் செய்வார்கள். 

மீண்டும் நிச்சயம், ஐயோ, என் பிள்ளைகள் இப்படி இருக்கின்றதே என்று இறைவனிடம் முறையிட்டாலும், நிச்சயம் அதை பின் நடக்கப்போவதில்லை. அதனால்தான் முதலிலிருந்தே, நிச்சயம் தன்னில் கூட, வரும் காலத்தில் அழிவுகள் என்றே சொல்லிக்கொண்டு வருகின்றோம் நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட மனம் ஊர்ந்து, திரிந்து, இறைவனை பின் வழிபட்டால், பின் உங்கள் பின்னே வரும் குழந்தைகள் நன்றாக, நிச்சயம் இறைவனை பிடித்துக் கொண்டு முன்னேறி விடும். 

==================================================
#     பழமையை கடைபிடிக்க வேண்டும் 
==================================================

இதனால்தான் சித்தர்கள், யாங்கள் ஏன் எதற்கு என்றெல்லாம், அதாவது நிச்சயம் ஒவ்வொரு இல்லத்திலும், அதாவது பழமையை கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் இவ்வுலகத்தில் மனிதனை, பின் மனிதனே நம்புவதில்லை. 

==================================================
#     உயர்ந்த எண்ணங்கள் - தீய  எண்ணங்கள் 
==================================================

ஏனென்றால், பின் அறிந்தும்  கூட மனிதனின் எண்ணங்கள், தீய எண்ணங்கள், அதாவது நிச்சயம் தன்னில் கூட.  

அத் தீய எண்ணங்கள் தான், நிச்சயம் தன்னில் கூட உங்களை வழிநடத்தும். 

உங்கள் குடும்பத்தையும் பின் வழிநடத்தும். 

உங்களை சார்ந்தவர்களையும் கூட வழிநடத்தும். 

அதேபோலத்தான் உயர்ந்த எண்ணங்கள், பின் கொண்டோர்கள், நிச்சயம் தன்னில் கூட 

உயர்ந்த எண்ணங்களோடு, 

உயர்ந்த வாழ்க்கையோடு, 

அவ் உயர்ந்த எண்ணங்களே வழிநடத்தும். 

இதனால் மனிதனின் எண்ணங்கள், நிச்சயம் வரும் வரும் காலத்தில், அதாவது கீழ் நோக்கித் தான் செல்லும். மேல் நோக்கி செல்லாது. 

எப்பொழுது மேல்நோக்கி நல்லெண்ணங்களோடு செல்கின்றீர்களோ, 

அப்பொழுதுதான் நிச்சயம் விடிவும் கூட,

அப்பொழுதுதான் மோட்சம் கூட,

அப்பொழுதுதான் நல்வாழ்வும் கூட,
 
அப்பொழுதுதான் நிம்மதியான வாழ்க்கை கூட.

ஆனால் இக்கலியுகத்தில், நிச்சயம் தீய மனதோடு தான் வாழ்வான் மனிதன் என்பதெல்லாம், நிச்சயம் பின் கலியின் கட்டாய விடயம். 

==================================================
#       உங்களிடமே அனைத்தும் உள்ள ரகசியம்    
==================================================

அதை நிச்சயம் உங்கள், எதை என்று புரியும். அது மட்டுமில்லாமல், நீங்கள் அதாவது எதை என்று புரிய, பின் எல்லாம் எதை என்று அறிய, இறைவனிடத்தில் இருக்கின்றதா என்றால், நிச்சயம் இல்லை. 

ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் பிறக்கும் பொழுதே, இறைவன் உங்களிடத்தில் அனைத்தும் பத்திரமாக கொடுத்து அனுப்பி வைத்திருக்கின்றான். பாவமும் புண்ணியம்.

ஆனாலும், நீங்கள் பாவத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, புண்ணியம் என்ற பின் சொல்லே மறந்து. 

==================================================
#       உங்களிடமே புண்ணியம் தேங்கி கிடக்கின்றது    
==================================================

அதாவது புண்ணியம் என்பதே, நிச்சயம் தேங்கி கிடக்கின்றது, இக்கலியுகத்தில் ஒவ்வொரு ஒவ்வொருவரின் பின் வாழ்க்கையிலும் கூட. 

அதை எப்படி நீங்கள் வெளிக்கொண்டு வருவது ?????

அப்புண்ணியத்தை எப்பொழுது வெளிக்கொண்டு வருவீர்களோ, அப்பொழுதுதான் நல்வாழ்க்கை. 


=========================================================
#       உங்கள் புண்ணியத்தை சித்தர் பெருமக்களால் 
#       மட்டுமே  வெளிக்கொண்டு வர முடியும்
=========================================================

அப்புண்ணியத்தை எப்படி எதை என்று அறிய யாராலும்,  அப்புண்ணியத்தை வெளிக்கொண்டு வர முடியாது. 

நீங்கள் என்ன பின் தவங்கள், தியானங்கள் என்னென்ன செய்தாலும், இறைவனிடத்தில் சென்றாலும், அப் புண்ணியங்கள் நிச்சயம் உங்களை, அதாவது எதை என்று புரிய, பின் அதை கொண்டு வரவே முடியாது. 

“““““““ நிச்சயம் சித்தர் பெருமக்களால் மட்டுமே முடியும். ”””””””

அதனால்தான், நிச்சயம் இக்கலியுகம், அழியும் காலமாகவே வந்து கொண்டிருக்கின்றது. அதனால்தான் உண்மைகளை சொல்லிச் சொல்லி, நிச்சயம் உங்களை பக்குவப்படுத்தி, பக்குவப்படுத்தி இருந்தாலே போதுமானது. 

நீங்களும் நன்றாக வாழலாம்.

உங்கள் பின் பின்னே வருபவர்களும் நன்றாக வாழலாம்.

அனைத்து ஜீவராசிகளும் நன்றாக வாழலாம். 

=========================================================
#       உங்கள் இல்லங்களில், ஜீவ ராசிகள் பிராணிகளை  
#       பாசத்துடன் வளர்த்தால், புண்ணியங்கள் பெருகும். 
=========================================================

ஏன், எதற்கு, நிச்சயம் அப்புண்ணியத்தை எப்படி பெருக்குவது என்றால், நிச்சயம் அன்றைய காலகட்டத்தில், நிச்சயம் ஒவ்வொரு இல்லத்திலும் கூட ஆடுகள், மாடுகள் இன்னும், பின் இன்னும் எதை என்று புரிய அறிந்தும்  கூட சில சில உயிரினங்கள் இருந்தது. 

அதேபோல், பின் ஒவ்வொரு இல்லத்திலும், நிச்சயம் தன்னில் கூட, பின் பரிசுத்தமாக அன்பை வெளிப்படுத்துவதற்காக, இன்னும் சில சில நிச்சயம் தன்னில் கூட, பின் வளர்த்தல் அவசியம். 

நிச்சயம் அவ்வாறாக, பின் வளர்த்துக் கொண்டு வந்தாலே, நிச்சயம் உங்களுக்கு பாசம் என்பது தெரியும். 

ஏனென்றால், இக்கலியுகத்தில், பின் கருணை என்பதே இருக்காது. 

பாசம் என்பதே இருக்காது. 

நிச்சயம் இதனால், மனிதன், மனிதனே அழித்துக் கொள்வான், அதாவது நண்பர்களாக இருப்பான். நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட, மறைமுகமாகவே ஏன், எதற்கு என்றெல்லாம். 

ஆனாலும், நிச்சயம் நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் வந்துவிட்டீர்கள். 

================================================================
#       அன்னை மீனாட்சி தேவி அருளால் - போகர் சித்தர் ரகசியங்கள் 
===============================================================

இதனால், போகனின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வு தேசம் மீனாட்சியிடம் வந்து, நிச்சயம் தவழ்ந்து, பின் மீனாட்சி தேவியுடன் மன்றாடி கேட்டதனால், நிச்சயம் பின் விடிவெள்ளியாக, பின் போகனுக்கும் அருள் சித்திகள் கிடைத்து, நிச்சயம் அவன் வித்தைகளை இவ்வுலகிற்கு பின் எடுத்துக் காட்டினான். 

================================================================
#    போகர் சித்தர் பாடல் பாடி , கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களுக்கு 
#    மீனாட்சி தேவியிடம் ஆசிகள் வாங்கிக் கொடுத்தார்கள், 
===============================================================

அதேபோல், உங்களுக்கும் நிச்சயம் அவன் தன் பின் மீனாட்சி தேவி பாடிட்டு, நிச்சயம் உங்களுக்கும் அருளாசி வழங்கி, நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக. 


======================================
#      நோய்கள் விலகும் ரகசியங்கள்  
======================================

ஏனென்றால், இக்கலியுகத்தில் நோய்கள் ஒவ்வொருவருக்கும் பின் பரவிக்கொண்டே வருகின்றது. ஏன், எதற்கு என்று பார்த்தால், சற்று சிந்தியுங்கள். 

அனைத்தும் நீங்களே தான் காரணம். 

இதனால் எப்படி ஏது என்று அறிய. 

““““““ அதனால், போகனின் அருள் இருந்தால் மட்டுமே, அவர் நோயும் விலகிப் போகும். நிச்சயம் தன்னில் கூட.  ””””””


இதனால், மனிதன் நிச்சயம், அதாவது மனிதன் திருந்தினால் மட்டுமே, இவ்வுலகத்திற்கு நிச்சயம் தன்னில் கூட நீதி கிடைக்கும். 

அப்படி இல்லை என்றால், நீதியும் கிடைக்காது. இறைவனும் கண்ணுக்குத் தெரிய மாட்டான். 

நிச்சயம் தன்னில் கூட, இறைவனை நீங்கள் தேடி தேடி அடைய வேண்டியதுதான். 

==================================================
#      ஏன் மனிதன்  குருடானனாக இருக்கின்றான்? 
==================================================

அதாவது, குருட்டு கண்களுடனே, நிச்சயம் இறைவன், அதாவது கண்களுக்கு பின் தெரியும்படி, நிச்சயம் இருக்கின்றான். 

ஆனால், மனிதனோ, நிச்சயம், அதாவது குருடன் என்பேன். யான். 

ஏன், எதற்கு குருடன் பின் என்றேன், எதை என்று புரிய. ஆனால், இக்குருடுக் கண்ணை வைத்து, இறைவனை காண முடியவில்லையே !!!!!!!!!!!!!!!!!!! 

ஏன், எதற்கு என்றால், அவ்வளவு அழுக்குகள் மனிதன் மனதில் தேங்கி உள்ளது என்பேன். 

இதனால்தான், இறைவன் கண்ணுக்கே தெரியப்படுவதில்லை. அதனால், இன்னும் எது என்று புரிய. அது மட்டுமில்லாமல், நிச்சயம் இறைவன் எவை என்று அறிய அறிய, இறைவன் பெயரே மனிதன் தான் கிடைக்கப் போகின்றான் என்பது, நிச்சயம் யாங்கள் அறிவோம். 

====================================================================
#     பக்தி  =   அன்பு + கருணை + பாசம் + அமைதி +  நற்பண்புகள் 
#                        + உயர்ந்த எண்ணங்கள் 
#                         - பொறாமை  விட்டொழித்தல் 
#                       - கள்ளத்தனம் பின் இல்லாமை 
====================================================================

ஏனென்றால், இறைவனின், அதாவது பக்தி என்பது சாதாரணம் இல்லை. பக்தி என்ற சொல்லுக்கு அன்பு, கருணை, பாசம், இன்னும் எது என்று அறிய, எவை என்று புரிய அமைதி, 

இவையெல்லாம் பின், அதாவது பொறாமை, விட்டொழித்தல், நிச்சயம் கள்ளத்தனம் பின் இல்லாமை, இன்னும் எது என்று கூற, நற்பண்புகள், உயர்ந்த எண்ணங்கள், இவையெல்லாம் சேர்ந்தால்தான் பக்தி. 

ஆனால், நிச்சயம் பின், அதாவது மனிதன் இறைவனிடத்தில் பக்தியே செலுத்துவதில்லை நிச்சயம் தன்னில் கூட, 

இவ்வாறு பக்தி, பின் எது என்று அறிய, பின் கோடியில், பின் ஒருத்தன் தான் பக்தி செலுத்துகின்றான். 

மற்றவர்கள், நிச்சயம் எப்படி, அதனால் எது என்று புரிய. வருங்காலத்தில், பக்தர்களே தவறு செய்வார்கள். இதனால், நிச்சயம் மற்றவர்களும் கூட, பின் எதை என்று கூற, இறைவனை வணங்கி என்ன பிரயோஜனம் என்று கேட்பார்களே, அப்பொழுது, உன்னாலும் கூட, இறைவனுக்கு அவப்பெயர் தான் ஏற்படும். 

அதேபோல், நீங்களும் எங்கெங்கே சென்று, இறைவனை வணங்கி வணங்கி, நிச்சயம் துன்பங்களை தான் சந்தித்துக் கொண்டே வருவீர்கள். அப்பொழுது, இன்னொருவன் கேட்பான், இறைவன் திருத்தலங்கள் சென்றீர்களே, என்ன நடந்தது என்று. 

இதனால், நிச்சயம் பக்குவத்தோடு, இறைவன் யார் என்பதை உணர்ந்து வணங்க வேண்டும். இல்லையென்றால், கஷ்டங்களே . 

==================================================
#      நோய்களுக்கு மூல காரணம் உங்கள் பாவமே……. 
==================================================

ஆனாலும், நிச்சயம் பேரன்பு எது என்று அறிய, நிச்சயம் காக்கும். இதனால், தெரிந்தும் தெரியாமலும், எது என்று அறிய, பல நோய்களை நீங்கள் சம்பாதித்து உள்ளீர்கள். நிச்சயம் தன்னில் கூட, பின் பல நோய்களுக்கும் காரணம் எவை என்று அறிய, இவ் நிச்சயம் தன்னில் எது என்று புரிய. அறிந்தும் கூட, இப்பாவமே 

ஏனென்றால், இக்கலியுகத்தில் பாவம் தான் வழிநடத்தும் நிச்சயம் தன்னில் கூட. 

அப்பொழுது, நிச்சயம் தீங்கு எது என்று அறிய, மனிதனின் எண்ணங்கள் தீங்கு செய்யத்தான் நினைக்கும். 

அதனால், புண்ணியங்கள் ஆனாலும், சேர்த்து வைத்துள்ளீர்கள். 

ஆனால், அது அதை செலவு செய்ய மனமில்லையே. 

எப்படி செலவு செய்வது, அப்படி நன்றாக உணர்ந்து செலவு செய்தால் மட்டுமே, உங்களை நீங்கள் நிச்சயம் அணுகுவீர்கள் நிச்சயம் தன்னில் கூட.

மீனாட்சி எது என்று அறிய பார்த்து, நிச்சயம் போகணும். பின் அருளாசிகள் உங்களுக்கு தருவான். 

அதை பெற்றுக்கொண்டு, நல்லவிதமாக ஆசிகளோடு மீண்டும் யான் விவரிக்கின்றேன். போகன் வாக்குரைப்பான்.


====================================================
#              அகத்திய மாமுனிவர் ஆசி வாக்கு நிறைவு !            
====================================================


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 7 November 2025

சித்தன் அருள் - 1987 - அன்புடன் அகத்தியர் - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை முருகப்பெருமான், போகர் சித்தர் வாக்கு.!


அன்புடன் முருகப்பெருமான், போகர் சித்தர்  அருளிய திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 

நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை. வாக்குரைத்த ஸ்தலம் :-  ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.

(அடியவர்கள் பின் வரும் கூட்டுப் பிரார்த்தனை நாடி வாக்கு YouTube வீடியோவை இயக்கி  , அதனுடன் இந்த பாடல் வடிவமான வாக்கினை படிக்க நன்கு புரிதல் உண்டாகும்.
https://www.youtube.com/watch?v=NHHNnQ4laao&t=0h1m10s )



====================================================
#                         போகர் சித்தர்  வாக்கு                                     #
====================================================

பாரெங்கும் அருள் ஈயும் , ஈசா, போற்றியே! பார்வதி தேவியே, போற்றியே! 

நிச்சயம், மனிதன் அறிந்தும், அறியாமலும் என்னென்ன சில தவறுகள் அறிந்தும் புரியாமலும் செய்தாலும், நிச்சயம் முருகா, மைந்தா, ஓடோடி வந்து, நிச்சயம் நீ இறங்கினால் மட்டுமே, நிச்சயம் உன் தாய் தந்தையரும் அறிந்தும் புகழ்பாடி,  நிச்சயம் பின் மகிழ்ந்து சில மனிதர்களிடையே பாவக்கணக்கு அதிகமாக இருப்பதினாலே, அதையும் நீக்கிட, நிச்சயம் வா, வா, முருகா! 

ஓடோடி வந்து, உன் தாயையும் தந்தையையும் மகிழ்வித்து, ஆசிகள் கொடுப்பாயாக, முருகா! வா.

====================================================
#                         முருகப்பெருமான் வாக்கு                               #
====================================================


பாரெங்கும் வீற்றிருக்கும் தாயை, தந்தையை பணிந்தே , உன் பிள்ளைகளுக்காகவே உந்தனை வரவேற்கின்றேனே. ஆசிகள் கொடு.

பிள்ளைகள், தவறுகள் செய்திருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, புண்ணிய கணக்கு அதிகமாக்கு  தாயே, தந்தையே. 

அண்ணாமலையா, உண்ணாமலை தாயே, பின் உன்னை வாழ்த்தி  பாடுகின்றேனே . 

====================================================
#                         முருகப்பெருமான் பாடல்                               #
====================================================

அன்பென்றும் அறியாத தந்தையே, 

அன்பென்றும் அறியாத அன்னையே , 

உன்னையே என்றென்றும் பாடி துதித்து, 

உன்னையே என்றென்றும் பாடி துதித்து, 

அன்பான என்றென்றும்  சேவை செய்தார்களே உன் பிள்ளைகள் 

நமச்சிவாயா என்றென்றும் அழைத்தார்களே உன்னையே  

அதற்காக மனதில் பாவங்கள் தொலைப்பாயே, 

அன்னை தந்தையே, வருவாயே, வருவாயே ! 

அன்னை தந்தையே, வருவாயே, வருவாயே ! 

===========================================================================
#   கூட்டுப்பிரார்த்தனை - வர இயலாமல் உள்ள அடியவர்களுக்கும்  ஆசிகள்           #
===========================================================================

என்றென்றும் உன் பிள்ளைகள் உன்னை தேடி வந்து நிச்சயம் தன்னில் அங்கங்கு இருக்கும் வரமுடியாமல் நின்றாலும் அப்பா, 

அப்பா, தந்தையே, என்றெல்லாம் நினைத்து நினைத்து , பின் உருகுகின்ற மனிதர்கள்,  (அவர்களுக்கும்) ஆசிகள் கொடுக்க. வா, வா! 

என் தந்தையே, வா! வா! 

என் அன்னையே , வா! வா! 

எத்தனை பாவங்கள் செய்தாலும், 

எத்தனை பாவங்கள் செய்தாலும்,

அதை தன் பின்  குறையாக நினைத்தாலும், 

அதையும் தீர்ந்தாலும், நீக்கிடு 

தந்தையே, நீக்கிடு , நீக்கிடு ! 

தந்தையே, நீக்கிடு , நீக்கிடு ! 

எப்பொழுதும் உனை நாடி  வந்திட்டு 

எப்பொழுதும் உனை நாடி  வந்திட்டு 

பின் என் தந்தை, பின் அன்றென்றும், என்றென்றும், அனைத்தும், 

பின் செய்வாய் என்றென்றும், ஓடோடி வந்து, 

அனைத்தும் பின் தந்தையே, செய்வானே என்று 

மனிதன் பின்,  உன்னையே நினைத்து இருக்கின்றான், 

மனிதனே, உன்னையே நினைத்து இருக்கின்றான். 

சிறிது பாவத்தை தொலைத்தாலே போதும், 

சிறிது பாவத்தை தொலைத்தாலே போதும். 

அறிவு ஒன்று வெளிப்படும் தந்தையே, 

அறிவு ஒன்று வெளிப்படும் தந்தையே, 

================================================================
#   அடியவர்கள் புண்ணியக் கணக்கை அதிகரிக்க  வேண்டுதல்            #
================================================================

அவ் அறிவை நீ வைத்தும் தானே , புண்ணியக் கணக்கை,  இன்னும் கூட்டிட்டு கூட்டிட்டு, அவர்களே செல்வார்கள் தந்தையே, 

அவர்களே  கொண்டு செல்வர்களே புண்ணியத்தை , 

அருள் கூர்ந்து தா தா தந்தையே,

அன்னை பராசக்தி வடிவமாக  வருக,

அன்னை பராசக்தி வடிவமாக  வா, வா! 

என் அன்புத் தாயே, 

என் அன்புத் தாயே, 

உன்னையே நம்பி வந்து, வந்து

உன்னையே நம்பி வந்து, வந்து. 

என் தாயே குறை தீர்ப்பாள் என்று எண்ணி , 

என் தாயே குறை தீர்ப்பாள் என்று எண்ணி , 

உன்னையே நம்பி நம்பி, ஓடோடி மனிதன் வந்து வந்து, 

தாயே, தந்தையே, உன்னையே வலமாக சுற்றுகின்றான்

மனம் இறங்கு, தா தா, 

அருள்கள் மனம் இறங்கி வந்து , தா தா, அருள்கள்  தா தா. 

================================================================
#         அடியவர்கள் பாவ கணக்கை பிடுங்கி எறிய  வேண்டுதல்             #
================================================================

அருள் கூர்ந்து , அருள் கூர்ந்து , ஈயும் தந்தையே, 

அனைத்தும், ஈயும்  தந்தையே. 

பாவ கணக்கை  ஏதும் இருந்தாலும், 

அதனை பிடுங்கி தானே எறிவாயே தந்தையே, 

உன்னாலே அனைத்தும் முடியும், தந்தையே, 

உன்னாலே அனைத்தும் முடியும், தந்தையே.

தாயே, வருக, வருக. 

தந்தை கோபம் இருந்தாலும், தாயே, வருக, 

நீயும் சொல்லி, தா தா. 


=============================================================
#             திருவண்ணாமலை அழிவை தடுக்க  வேண்டுதல்                 #
=============================================================

தாயே வருக !

தந்தையே, வருக !

இம் மலையே பின் அழியப் போகின்ற நிலையத்தில் 

பின்  அண்ணாமலை, உண்ணாமலை என்று இத்தலம் இல்லாமல் போகுமே 

என்றென்றும், அப்பொழுது ஈசன் தலத்திலே இப்படி நடந்ததே  என்று கூறுவார்கள்  தந்தையே,

அதற்குள்ளே மனிதனின் பாவத்தை தூரே எறிந்து 

அறிந்தும் தந்தையே  எத்தனை மனிதனிடத்தில் குறைகள் இருந்தாலும், 

அத்தனையும்  முடிவு  கட்டு, 

அத்தனையும்  முடிவு  கட்டு,   கட்டு,

தந்தையே, வா, வா. 

தாயே. வா, வா! 

=============================================================
#             மக்கள் அனைவரையும் காப்பாற்ற   வேண்டுதல்                 #
=============================================================

அனைத்தும் உன்  பிள்ளைகள் தானே தந்தையே

அனைத்தும் உன்  பிள்ளைகள் தானே தந்தையே

தாயே நீயும்  தந்தையிடம் கூறு , 

எத்தனை கோபங்கள் இருந்தாலும் தாயே, 

அத்தனையும்  விட்டிட்டு, 

மக்களை காப்பாற்ற வரச்சொல் தாயே, 

மக்களை காப்பாற்ற வரச்சொல் தாயே, 

அறிந்தும் அறியாமலும் இன்னும் கூட மாதங்கள் பெரும் அழிவு காத்துக் கொண்டிருக்கிறது 

அன்னையே , தந்தையே  நீயே அதை தானே  அறிவாயே  

அனைவரும் உன் பிள்ளைகள் தானே 

அதை நீ கூட பின் அழித்து எதை என்று பாரு, 

அதை தன் தடுத்து நிறுத்தி,  அதிர்ஷ்ட வாய்ப்பு பெருக்கும் தந்தையே !!! 

அதிர்ஷ்ட வாய்ப்பு   தந்தை பெருக்குவானே !!!

தாயே தாயே, வா, வா! 

அன்பு நிறைந்தவளே வா, வா! 

பணிகின்றேனே, பணிகின்றேனே. 

மக்களுக்காக யான் பணிகின்றேனே, 

==================================================================
#   திருச்செந்தூர் வரும் பக்தர்களின் பாவத்தை போக்க  வேண்டுதல்      #
==================================================================

மக்களுக்காக யான் பணிகின்றேனே. 

நிச்சயம் செந்தூருக்கு என்னை தேடி வந்து. 

நிச்சயமாக, செந்தூருக்கு என்னை தேடி வந்து. 

பாவங்கள் நீக்கு  முருகா என்று சொன்னார்களே, 

அங்கும் மிகுந்த பாவத்தை   கொண்டு வந்தார்களே, 

அதையும் நீங்கள் தானே நீக்க வேண்டும், 

அதையும் நீங்கள் தானே நீக்க வேண்டும். 

முடிவெடுங்கள் தந்தையே !!! 

தாயே முடிவெடுங்கள் தந்தையே !!

அன்னைக்கும் தாய்க்கும் என்ன வித்தியாசம் ?

இதனை கூட அறியாத மனிதன் இங்கு இருந்தாலும், 

அதனையும் நீ உணர்த்திடு  தாயே. 

என்னென்ன லீலைகள் எதனை புரிந்தாரோ 

என்னென்ன லீலைகள் எதனை புரிந்தாரோ 

அன்னையே, வருக, வருக.

தந்தையிடம் கூறு, கூறு, கூறுக. 

எத்தனை, எத்தனை பிறவி இருந்தால், மனிதனுக்கு 

அத்தனை பிறவிகள், பின் சந்தோஷமாக வாழ  முடியவில்லையே, 

சந்தோஷமாக வாழ முடியவில்லையே. 

தாயே, தந்தையே, உன்னை நம்பியோர்க்கு . 

தாயே, தந்தையே, உன்னை நம்பியோர்க்கு 

கஷ்டங்கள் தானே வந்த வண்ணம், 

அதையும் தானே, தானே உணர்ந்தேனே. 

அதையும் யானே  உணர்ந்தேனே. 

நீங்கள் தானே  அதையும் பின் பின் பொறுத்தாக வேண்டும், தந்தையே. 

அதை கூட மாற்ற, மாற்றோடு  வா, வா, 

=============================================================
#       விதியின் சதியாட்டம் -  அதனை முறியடிக்க  வேண்டுதல்        #
=============================================================

அன்னையே, எத்தனை விதியின் சதியாட்டம்  மனிதனுக்கு. 

எத்தனை விதியின் சதியாட்டம்  பின் மனிதனுக்கு. 

தந்தையே, பிரம்மாவிடம் , முறையிடு  

தந்தையே, பிரம்மாவிடம் , முறையிடு  

சிறிதாவது கலியுகத்தில் நல்லதே பின்  நடக்கட்டுமே  மனிதனுக்கு

சிறிதாவது நல்லதே  நடக்கட்டுமே  மனிதனுக்கு

என்றென்றும் இருக்கும், தந்தையே. 

அழியாத  தந்தையே, 

அழககாக  தந்தையே. 

கருணை வடிவான தந்தையே. 

பாசமிகு  தந்தையே. 

கோபத்தை மனிதனிடம்   காட்டாதே,

உன் கோபத்தை  மனிதனிடம்  பின்  காட்டாதே,

அவர்களும் பின் தாங்க மாட்டார்கள் 

அவர்களும் பின் தாங்க மாட்டார்கள் 

விதியில்  எத்தனை, எத்தனை போராட்டம். 

விதியில்  எத்தனை, எத்தனை போராட்டம். 

அவையே தாங்க முடியவில்லை , மனிதனாலே, 

அவையே தாங்க முடியவில்லை , மனிதனாலே, 

நீயும் கஷ்டத்தை அள்ளி அள்ளி கொடுக்கின்றாயே, தந்தையே. 

நீயும் அள்ளி அள்ளி கொடுக்கின்றாயே, தந்தையே.

அனைத்தும் உணர்ந்தும், தந்தையே. 

எதோ , தெரிந்தும் தெரியாமல் பிறப்பில் விட்டிட்டே. 

இனி  மேலும் காத்தருள்வாயே, தந்தையே. 

இனி  மேலும் காத்து காத்தருள்வாய், தந்தையே. 

மனிதனை திருத்தவே  சித்தர்கள் இருக்கின்றார்கள். 

மனிதனை திருத்தவே சித்தர்கள் இருக்கின்றார்கள். 

பின் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை பொறுத்துக்கொண்டு பின் அருள் ஆசிகள்  கொடுப்பாயே , அன்னையே, 

அருள் ஆசிகள்  கொடுப்பாயே , அன்னையே, 

தந்தையிடம் எடுத்துக்கூறும் அன்னையே, 

தந்தையிடம் எடுத்துக்கூறும், அன்னையே. 

அனைத்தும் மாற்று, மாற்று, 

உன்னையே கதியென்று எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். 

உன்னையே கதியென்று எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள். 

நமசிவாயா, நமசிவாயா என்று உன்னையே பாசத்தோடு , அழைத்துக் கொண்டு இருக்கின்றானே  மனிதன், 

தந்தையே நமச்சிவாய என்று  அழைத்துக் கொண்டு இருக்கின்றானே உன்னையே. 

=============================================================
#   மக்களுக்கு அறிவைத் தந்து, பாவத்தை போக்க  வேண்டுதல்      #
=============================================================

அப்பேர்ப்பட்ட மனிதனுக்கு இறங்கி வா தந்தையே 

எத்தனை குறைகளும்  இருப்பினும்,

ஒரு எத்தனை குறைகளும்  தானே  இருப்பினும், 

சிறிதாவது , அறிவை தந்திட்டு, தந்திட்டு, 

சிறிதாவது  பாவத்தை போக்கு 

சிறிதாவது  பாவத்தை போக்கு

அதன் மூலம் தெளிவு அடைவான்,

அதன் மூலம் தெளிவு அடைவான்,

தெளிவு அடைந்துவிட்டாலே, நிச்சயம் தன்னில் பின்  தீயவை நடக்காது, நடக்காது. 

இதுதானே யான் பொறுப்பு , தந்தையே. 

இதுதானே யான் பொறுப்பு , தந்தையே. 

என்னிடத்தில் வந்து உறங்கின்றோர்க்கெல்லாம் புலம்பல் புலம்பல் புலம்பல் 

திருச்செந்தூரிலே, ஒருவனையும் ஒருவனையும் பார்க்கின்றேன் தந்தையே 

உறங்கியும் தானே  வந்து வந்து , குழம்பி நிற்கின்றானே  தந்தையே. 

குழம்பி நிற்கின்றானே , தந்தையே. 

பின் என்னாலும் விதியை மாற்றமுடியும் தந்தையே

ஆனாலும்  பின் அனைத்தும் அறிந்தவர் , தந்தையே. 

நீயும் அனைத்தும் , அறிந்தவரும்  பின்  தந்தையே. 

பெரியோனே பெரியோனே !!!

=============================================================
#   பாவ வினை இனிமேலும் அண்டாமல்  இருக்க -  வேண்டுதல்      #
=============================================================

அன்னை பராசக்தியே !!!

தந்தையிடம் எடுத்து கூறு, எடுத்து கூறு. 

பாவ வினை இனிமேலும் அண்டாமல் பார்க்க சொல்கின்றேன்.. 

சித்தர்களை பார்க்க சொல்கின்றேனே….

இனிமேலும் எத்தனை, எத்தனை அழிவுகள் என்று சித்தர்கள் உணர்ந்தார்களே

என்னையும் வந்து, தந்தையிடம்  நீ  முறையிட்டு  கூறு என்று முருகா  

தந்தையிடம் முறையிட்டு கூறு என்று முருகா . 

சித்தர்கள் வந்து, பின் அனைவரும்  என்னிடத்தில் செப்ப, செப்ப. 

தாயே, தந்தையே, சிலர் என்னிடத்தில் மனிதர்கள்  வந்து, வந்து கொண்டே இருக்கையில்  

அவர்களுக்கும் புத்தியை மட்டும் யான் கொடுக்கின்றேன் 

அதிர்ஷ்ட வாய்ப்பை நீயே அள்ளித்தருவாயே 

தந்தையே தாயே 

உன்னை, 
அண்ணாமலை உண்ணாமலை, என்று ஓடோடி வருகின்றார்கள் உன்னிடத்திலே  

அண்ணாமலை உண்ணாமலை காப்பாற்றுவார்கள் என்று ஓடோடி வருகின்றார்கள் தந்தையே  

எப்படி நீயும்,  வணங்காமல் போனாலும் நிச்சயம் தன்னில் ஒரு முறையாவது , ஒரு முறையாவது மனிதனுக்கு சந்தர்ப்பத்தை கொடுப்பாயாக ஈசனாரே 

சந்தர்ப்பத்தை கொடுப்பாயாக ஈசனாரே 

அனைத்தும் உன்னிடத்தில், எவ்வாறு  எவ்வாறு,

மண்டியிட்டு,  மண்டியிட்டு கேட்கின்றேனே. 

மனிதனுக்கு ஒன்றும்  தெரியவில்லை , தந்தையே, 

மனிதனுக்கு ஒன்றும் தெரியவில்லை , தந்தையே, 

அனைத்தும் தெரிந்திருந்தால் , 

அனைத்தும் தெரிந்திருந்தால் , 

தந்தையே, மனிதன் தவறு செய்ய மாட்டானே, 

தந்தையே, தவறு செய்ய மாட்டானே, 

அழிவுகளிலிருந்து  காத்திட  வா, வா !!!!!

அழிவுகளிலிருந்து  காத்திடு வா, வா, தந்தையே !!!!!

அன்னையே, பராசக்தியே 

அன்னையே, பராசக்தியே 

மண்டியிட்டு உன்னையே கேட்கின்றேன் நிச்சயம் தன்னில் 

தந்தையிடம் எடுத்துக்கூறி , எடுத்துக் கூறி   தாயே, 

என் அன்புத் தாயே, தாயே, 

தந்தையிடம் பின் எடுத்து கூறி, கூறி, மக்களை காப்பாற்ற சொல்லு , 

தந்தையை , மக்களை காப்பாற்ற சொல்லு , 

வரும் காலத்தில் அழிவுகள் பலம் என்று, பலம் என்று, வந்து கொண்டிருக்கின்றதே 

சித்தர்களும் தந்தைக்கு பயந்து, பயந்து, அப்படியே நிற்கின்றார் 

என்னிடத்தில் முறையிட்டு, முறையிட்டு, 

முருகா!!  முருகா!! 

அன்னையிடம்,  தந்தையிடம் கேளு !!

என்றென்று நிச்சயம் தன்னில் தாயே, தந்தையே, யானே பொறுப்பு  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தாயே, தந்தையே, யானே பொறுப்பு  !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

=============================================================
#         மனிதருக்கு   தலையெழுத்து  மாற்ற -  வேண்டுதல்                   #
=============================================================

நிச்சயம் தன்னில் சில மனிதருக்கு, தலையெழுத்து  மாற்று தந்தையே !!!

உன்னை போல் இங்கு கருணை படைத்தவர் எவர் ??????

பின் விதியினை உன்னாலும் எல்லாம் மாற்ற முடியும், 

காத்தருள்வாயே, காத்தருள்வாயே, 

தந்தையே, தாயே, காத்தருள்வாயே, 

அழிவுகளிலிருந்து  காத்தருள்வாயே, தந்தையே. 

உன்னை நம்பியே நம்பியே, 

கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார்களே  

அவர்களும்  உந்தனை பணிந்து, பணிந்து, வருகின்றாரே !!! 

=============================================================
#           புண்ணியத்தை அள்ளி அள்ளி தர,   வேண்டுதல்                    #
=============================================================

புண்ணியத்தை அள்ளி அள்ளி, தா தா ,  தந்தையே, 

புண்ணியத்தை பின் அள்ளி அள்ளி, தா தா ,  தந்தையே, 

என்றென்றும் உன்னையே நம்பி இருப்போர் பல மக்கள் 

உலகிற்கும்  நிச்சயம் பஞ்சம் வந்து விடுகின்றதே… உலகத்தில் 

அதையும் போக்கிட வா  வா !!!

மனிதனால்  அனைத்தும் அழிவுகள், என்று அனைத்து சித்தர்களுக்கும் தெரியும் 

நீயே விளையாடுகின்றாய், 

தந்தையே, நீயே விளையாடுகின்றாய். 

நிச்சயம் சிறிதாவது இடையே நிமித்திட்டு , அப்பிடவே நீ மக்களை ,

சித்தர்கள் பின் திருத்திடுவார்கள், தந்தையே,

=============================================================
#                       உண்ணாமலை தாயிடம்   வேண்டுதல்                           #
=============================================================

தாயே, உண்ணாமலையவளே !!!

அன்பாலே அழைக்கின்றேனே !!!

மண்டியிட்டு அழைக்கின்றேனே தாய் தந்தையே !!!

என் மக்கள் அனைத்தும் அறிந்தும்  கூட, 

அனைவரும் தானே, நம் மக்கள் தானே, தந்தையே, 

அனைவரும் நம் மக்கள் தானே, தாயே , தந்தையே, 

நீயும் கூட இப்படியே  அழிவிற்கு சென்றால் 

எப்படி, எப்படி, வாழ்வது ?????

மண்டியிட்டு  கேட்கின்றேன் !!!!!!!!!!!!!!!!!!!!!

உன் பக்தர்களை நிச்சயம் யானே திருத்துகின்றேன் எப்படியோ 

பின் உன்போல் கருணை படைத்தவரே, 

எவரோ எவரோ அண்ணாமலை தந்தையே  !!

எவரோ எவரோ அண்ணாமலை தந்தையே  !!

உண்ணாமலை அம்மா அம்மா !!

எத்தனை எத்தனை மனிதர்களுக்கு துன்பம் வாழ்க்கையில் 

எத்தனை, எத்தனை துன்பங்கள் 

எப்படியோ  தந்தையிடம், பின் நீக்கிட, வா, வா, 

அருள்வாய், அருள்வாய், அருள்வாய், அன்னையே, 

மனமிறங்கி, வா வா, வா வா, வா  வா, 

தந்தையிடம் பின் முறையிட்டு சொல்லு தாயே, 

=============================================================
#     மக்கள் , கோடி கோடியாக அழிவதைத் தடுக்க  வேண்டுதல்     #
=============================================================

தந்தையிடம் முறையிட்டு சொல்லு தாயே, 

வரும் காலத்திலே,  கோடி கோடியாக அழிவார்கள், என்பது தந்தைக்கு தெரியுமே,

அதையும் கூட நிற்கச் சொல்லு, நிற்கச் சொல்லு,

=============================================================
#          அகத்திய மாமுனிவருக்காக  மனமிறங்க வேண்டுதல்            #
=============================================================

அகத்தியன் வாக்கைக்  கேட்டு, அனைவரும் மண்டியிட்டு,

பின் அறிந்தும் உள்ளம், உன்னை போற்றி போற்றி ,  திருத்தி, திருத்தி, அறிந்தும் புரிந்தும் 

மக்களை திருத்தி, திருத்தி, அகத்தியன் பின் போராடி இருக்கின்றாரே, தந்தையே, 

அகத்தியருக்காக மனமிறங்கு, மனமிறங்கு, 

நிச்சயம் எதையும் நிச்சயம் தன்னில் , 

அத்தனையும் மனிதனுக்கு கொடு  கொடு, கொடு கொடு, 

தந்தை, தாயே, என்றென்றும் நீங்களே, பின் அழிவற்றவர்கள் 

எத்தனை, எதையும் உணர்ந்த பின்னும், 

எத்தனை, எத்தனை கோடி மக்கள், 

எத்தனை, எத்தனை கோடி மக்கள். 

அவர்கள் எல்லாம் நின் தாளை  பணிந்து, உணர்வுள்ளம் இங்கேயும் நின்று. 

அறிந்து, பின். தாயே, எத்தனை என்று தந்தைக்கு முறையிட்டு கூறு கூறு, 

நன்றென்று, தாயே, தந்தையே, 

மண்டியிட்டு கேட்கின்றேன், உந்தன் செல்லப் பிள்ளையே  முருகனே, 

இறங்கி வாருங்கள், தாய், தந்தையரே, 

இறங்கி வாருங்கள், தாய், தந்தையரே, 

அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கொடுத்திட்டு. 

அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் கொடுத்திட்டு,

இன்னும் இவர்களும் மேன்மேலும்  மக்களை நிச்சயம் நல்வழிப்படுத்துவார்களே, 

இன்னும் மக்களை இவர்கள் நல்வழிப்படுத்துவார்களே, 

எத்தனை சிறுக, சிறுக, சேர்த்து, சேர்த்து, சேர்த்து, இன்னும் பெருமக்கள் கூட்டிட்டு, கூட்டிட்டு, 

பாவ வினையை  நீக்குவார்களே , 

பாவ வினையை நீக்குவார்களே , 

மண்டியிட்டு கேட்கின்றேனே, தந்தையே, 

மண்டியிட்டு கேட்கின்றேனே, தந்தையே, 

அன்னையே, தந்தையிடம் சொல் சொல், சொல் சொல், 

அன்னையே, தந்தையிடம் சொல், சொல், சொல், சொல், சொல், 

எத்தனை, எத்தனை பிறவிகள் கடந்த மக்கள், 

இப்பிறப்பில் இன்பம் காணட்டுமே கலியுகத்திலே 


இன்னும் ஆசிகள் 

என் அன்னையும், என் தந்தையும் மனமிருக்குவார்கள். 

உங்களுக்கே புரியும்,

பின் கருணை படைத்தவர் எவரெவர் , உங்களைப் போலே. 

====================================================
#                         முருகப்பெருமான் பாடல்  நிறைவு  !            #
====================================================


====================================================
#                         முருகப்பெருமான் ஆசி வாக்கு !                    #
====================================================

ஆசிகள். 

அறிந்தும், தாய், தந்தையரே, பின் அனுகி , பின் உங்களுக்கெல்லாம் ஆசீர்வாதங்கள். 

இதனால் அறிந்தும், புரிந்தும், நிச்சயம் சில குறைகளை  என் தாயே, தந்தையே, நீக்குவாள். 

இன்னும் மென்மேலும் பெருகட்டும், மக்கள் வெள்ளம் அறிந்து கூட, 

பக்தி பரவசத்தில் பெருகட்டும், 

பின் பாவங்கள் நீக்கட்டும்,

புண்ணியங்கள் அருளட்டும், 

புண்ணியத்தால் நல்வாழ்வு பெருக, 

ஆசிகள், ஆசிகள்.

====================================================
#              முருகப்பெருமான் ஆசி வாக்கு நிறைவு !               #
====================================================

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1986 - அன்புடன் அகத்தியர் - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை இடைக்காடர் சித்தர் வாக்கு.- பகுதி 4




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு - பகுதி 4

31.08.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 4

=======================================================

=======================================================
 #      திரு அண்ணாமலையார் -  திருவிளையாடல் ரகசியம்  #
=======================================================

=======================================================

இடைக்காடர் சித்தர் :- அப்பா , இவ்  அண்ணாமலையில்,  பின் ஒன்று நடந்தது. உண்மை நிலையை யான் உரைக்கின்றேன் இப்பொழுது. 

அன்பும். அறனும், அறிந்தும் புரிந்தும் கூட, இறைவா, எங்கும் நிறைந்திருக்கும் அன்பானவனே, ஈசனே, உன்னைப் பற்றியே, யான் இங்கு தெரிவிக்கப் போகின்றேன். 

மகள்களே, மகன்களே, அறிந்தும், நிச்சயம் அறிந்தும், (ஒரு செல்வந்தன்) இவைதன்  பல செல்வங்களுக்கு அதிபதி. ஆனாலும், நிச்சயம் அறிந்தும், இவைதன், அதாவது, தற்பொழுது  தில்லை தன்னிலே. ஆனாலும், இது எவை என்று புரிய.

(செல்வம்) அத்தனையும் நிச்சயம் பின் தில்லை தனக்கே சொந்தம் என்று வந்துவிட்டான் அண்ணாமலைக்கு. (அதாவது தனது செல்வம் அனைத்தும்  எம்பெருமான் தில்லை நடராஜருக்கே என்று அனைத்தையும் தில்லையிலேயே விட்டு விட்டு வந்துவிட்டார் அந்த தில்லை செல்வந்தன், அண்ணாமலைக்கு) 

அதாவது, நிச்சயம் எதை என்று புரிய. ஆனாலும், இவைதன் இங்கு, அதாவது, தற்பொழுது ஈசானிய லிங்கம் என்று அறிந்து, அங்கே பின் அமர்ந்து கொண்டான்.  நிச்சயம் வருவோர்கள் போவோர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனாலும், ஏன் இவர்கள் இவ்வாறு சுற்றித் திரிகின்றார்கள் என்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனாலும், இவ்வாறாகவே வருவார்கள், போவார்கள். ஆனாலும், நிச்சயம் இவனும் பார்த்துக் கொண்டே இருப்பான். பின், ஏன், எதற்கு என்று? ஆனால், அனைவரும் வருவோர்கள் எல்லாம், நிச்சயம் பின், ஏன் இவ்வாறு இவன் பார்க்கின்றான்? திருடன் போல் என்று, நிச்சயம் அவனை பின் ஏசி ஏசி விட்டு செல்வார்கள். அப்பா. 

இப்படித்தான் அப்பா உலகம். நிச்சயம் உண்மை பேசுபவனை திருடன் என்பார்கள். பொய் பேசுபவர்கள் நல்லோர்கள் என்பார்கள் அப்பா. இதுதான் கலியுகம். 

இதுதான் கலியுகம்.  இப்படியே, நிச்சயம் அறிந்தும்  புரிந்தும் , இப்படியே ஒருவன் நிச்சயம் இருந்தான். இதனால், பின் பார்வதி தேவியும் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனாலும், நிச்சயம் இவன் கூட பார்ப்பவர்கள் எல்லாம் ஏதோ பின், அதாவது, நமச்சிவாயா, அருணாச்சலா  என்றெல்லாம் கூட சொல்ல மாட்டான். 

நிச்சயம் பிதற்றிக்கொண்டே கொண்டே இருப்பான். அவை, இவை, எதை புரிந்து, எவை, என்று ஏதோ ஒன்றை பிதற்றிக்கொண்டே இருப்பான்.

ஆனாலும், மேலிருந்து. அதாவது, பின் பார்வதி தேவியும்  கூட, ஈசனிடம் முறையிட்டாள். நிச்சயம் இவனும், அதாவது, என்ன ஏது, வருவோரெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கின்றான். நிச்சயம் ஓர் முறை இவனிடத்தில் சென்று வாருங்கள். 

தேவியே!!  அறிந்து புரிந்து கூட, பின், அதாவது, செல்கின்றேன். இவன்  பாசத்திற்காக.  

அதாவது, (தானாக) மனித வடிவிலே, நிச்சயம் வந்து, நிச்சயம், அதாவது, சுற்றிக் கொண்டிருக்கின்றார்களே நிச்சயம் புரிந்து கூட, அதாவது, கால்களை மிதித்து சென்றான் ஈசன்.  (ஈசனார் மனித வடிவில் வந்து அருளினார் - திருவண்ணாமலையில் அதி மிக கவனம் தேவை. எவ் மனித வடிவத்திலும் எம்பெருமான் அண்ணாமலையார் வரக்கூடும் )

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, ஆனாலும்  (பக்தன்) அவனுக்கு தென் பட்டுவிட்டது, இவன் இறைவன் தான் என்று. ஆனாலும், இறைவனை பார்த்து, கண் தெரியாதவனே என்று கூறிவிட்டான். 

ஆனாலும், நிச்சயம் பின், ஈசன் கூட பார்த்தான். கண் தெரியாதவனே என்று. ஆனாலும், அவனுக்கும் தெரியும், ஈசன் என்று. ஆனாலும், வந்தது கோபம் பார்வதி தேவிக்கு. நிச்சயம் ஆனாலும், உன்னை கண்டு விட்டான் அவன் எதை என்று புரிய. ஏன் கண்டுவிட்டான் என்றால், நிச்சயம் ஈசன் என்று கண்டுவிட்டான். 

பின், ஏன், எது என்றால், அவனிடம் ஆசைகளும் இல்லை. நிச்சயம் எதுவுமே இல்லை. அதனால்தான், நிச்சயம் உன்னை கண்டு உணர்ந்தான் என்று. 

அறிந்தும்  புரிந்தும் , ஆனால் ஈசன் மீண்டும் பின் வலங்கள் வந்து மீண்டும் ஒரு மிதி  மிதிக்கின்றான். அட, முட்டாளே! பின், கண் தெரியாதா என்று  மீண்டும்.

அறிந்து புரிந்து, மீண்டும் வலங்கள் வந்து, நிச்சயம் அறிந்தும் , எதை என்று புரிய, மீண்டும் (பக்தன்) உறங்கிக் கொண்டிருந்தான். (பக்தன்) வயிற்றில் , ஏறி மிதிக்கின்றான் ஈசன். ஆனாலும் , எழுந்து பின், மீண்டும் கண் தெரியாதவனே, முட்டாளே, அறிவில்லாதவனே  என்று (அவ் பக்தன்) திட்டித்தீர்த்தான் ஈசனை. 

நிச்சயம் அப்பொழுது பார்வதிக்கு கோபம் வந்து, மீண்டும் கீழே வந்து விட்டாள். பின், தேவனை அறிந்தும், நிச்சயம் இவ்வளவு திட்டி தீர்க்கின்றானே,  நிச்சயம் உங்களுக்கு கோபமே வரவில்லையா என்று?.

(எம்பெருமான் ஈசனாரும்)  நிச்சயம் வரவில்லை. அவந்தனக்கு , நிச்சயம் எதை என்று புரிய எவ் ஆசையும் இல்லை. 


எதனையும் அவை என்று  புரிய, 

#---------------------------------------------------------------------------------#
#---------------------------------------------------------------------------------#

““““““  அன்பான என் பக்தன் என்னை திட்டுகின்றான் என்றால், அதனையும் யான் ஏற்றுக்கொள்வேன். ”””””” 

#---------------------------------------------------------------------------------#
#---------------------------------------------------------------------------------#

( எம்பெருமான் ஆதி ஈசனார்  சொல்வது என்னவென்றால், ஒருவர் உண்மையானவனாகவும், ஆசை இல்லாதவனாகவும், பாசத்துடன் , அன்பாக  இருந்தால், இறைவனை திட்டினால், அதனையும் அன்போடு  யான் ஏற்றுக்கொள்வேன்)

அறிந்தும் புரிந்தும் மீண்டும். பின், அதாவது பார்வதி தேவியே !!!  நீ அமைதியாக இரு, யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று மீண்டும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நிச்சயம் வயிற்றின் மேலே மிதிக்கின்றான். நிச்சயம் பக்கத்தில் உள்ள, பின் அதாவது அறிந்தும், (அவ் பக்தன்) ஒரு கொம்பொன்றை எடுத்து, பின் பலமாக அடிகின்றான் ஈசனை.  ஈசன் அழகாக சிரிக்கின்றான். 

அறிந்தும்  புரிந்தும், எதை என்று அறிய, நிச்சயம் இவை புரிந்தும் கூட. இதனால், பின் எதை என்று அறிய, நிச்சயம். ஆனால், பின் சிவபெருமானே விளையாட வந்து, உந்தனுக்கு அறிந்து கொடுக்க, அதாவது, என்னிடத்திலிருந்து தான் நீ விளையாடுவாயா என்ன?  நிச்சயம் அறிவு  இல்லாதவனே  என்று மீண்டும் திட்டி தீர்க்கின்றான். 

அப்ப. சரியா? ஆள் இல்லையா? ஆள் இல்லையா? நானே ஒன்னும் இல்லாம இதை, இதை ஒன்னு வந்து நீங்க பார்த்தீங்கன்னா, மீண்டும் என்னை விளையாடி இருக்கிறான். அது மாதிரிதான் சொல்லி இருக்காங்க. 

நிச்சயம் இப்பொழுதும்  எது என்று அறிய அறிய  சில அடியார், நிச்சயம் ஈசனேயே  வணங்கிக் கொண்டு இருப்பவர்களை எல்லாம் (எம்பெருமான் ஈசன்) அவன் விளையாடிக் கொண்டே இருக்கின்றான். பின் பார்ப்போம் பார்ப்போம் என்று. 


ஆனாலும், அறிந்து புரிந்தும், அதற்குள்ளே எங்களுக்கு கஷ்டம் என்று நீங்கள் ஓடி ஒளிந்து விடுகின்றீர்கள். 

எதை புரிந்து, ஆனால் நிச்சயம். மீண்டும் பின் ஈசன், பின் அவனிடம் கேட்கின்றான். நிச்சயம் அறிந்து, பின் (யான்) யார் என்று (உனக்கு) தெரிகின்றது. அதாவது, கேட்கின்றேன், உனக்கு என்ன வேண்டும்? என்ன வரத்தை? நிச்சயம் என்று. 

(அவ் பக்தனை எம்பெருமான் ஆதி ஈசனார், என்ன வரம் வேண்டும் என்று  கேட்கின்றார்.)

இதே போலத் தான், நீங்கள் எதை கேட்கிறீர்களோ, ஈசன் நிச்சயம் தன்னில் கூட. அதாவது, அமைதியாக இருந்தாலே, ஈசன் இடத்தில் கேட்பான். நிச்சயம், அதாவது, யாங்கள் சொல்வதெல்லாம். 

(உண்மை , நேர்மை, பக்தி, ஒழுக்கம், அன்பு, புண்ணியங்கள் செய்தல்)

(பக்தன் ஈசனாரிடம்) :- நிச்சயம் அறிந்தும் புரிந்தும், அறிவில்லாதவனே, நிச்சயம். அதாவது, ஒரு துளியும் கூட இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்று, ஈசனிடம் வேண்டும் என்றால், நிச்சயம் அறிந்து புரிந்தும், எதை என்று தேவையில்லை. வரமெல்லாம். 

நிச்சயம் தன்னில் கூட கொடுப்பதற்கு நீ யார் ?

(ஆதி ஈசனார்) :- அறிந்தும்  புரிந்தும் , தெரிந்து தான் பேசுகின்றாயா? ஆனாலும், நிச்சயம் அறிந்தும்  புரிந்தும் , (யான் தான் ஈசன் என்று) தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம்.

(பக்தன்):- தெரிந்து தான் பேசுகின்றேன். இறைவனாக  இருந்தால்  என்ன? 
(நான் நீங்கள் ஈசன் என்று தெரிந்துதான் பேசுகிறேன். நீங்கள் ஈசனாக இருந்தால் எனக்கென்ன? ஒன்றும் தேவையில்லை)

ஏற்கனவே (என்னிடம் உள்ள) அனைத்தும் நீக்கிட்டுதான், இங்கு உட்கார்ந்து நிச்சயம் தன்னில் கூட கொஞ்சம். இங்கு, பின் அமர, பின் அழகாக, எதன் அருகிலே?, பிணத்தின் அருகிலே, நிச்சயம், பின் அறிந்தும்  புரிந்தும் கூட, அனைவரும் இங்கு உட்கார்ந்து இருக்கின்றார்கள். ஆனால், உயிரோடு இருக்கும் பொழுதே , என்னை இங்கு அமர்த்தி விட்டாயே?. இது நியாயமா? என்று (பக்தர் , ஆதி ஈசனாரை பார்த்து கேட்டார்)


(அதன் பின்னர்) நிச்சயம் அறிந்து புரிந்தும், (அவ் பக்தன்) கெட்டியாக ஓடோடி வந்து, ஈசனை பிடித்துக் கொள்கின்றான். நிச்சயம் அறிந்தும் புரிந்தும், எதை என்று, நிச்சயம். அதாவது, நீதான் வேண்டும் என்று நிச்சயம், பின் ஓடோடி, நிச்சயம் நேரடியாக (பக்தர், திரு அண்ணாமலையார் திருவடிகளை சரண் அடைந்தார்).


=======================================================
=======================================================
 #           திரு அண்ணாமலையார்  மூலவர் ரகசியம்                  #
=======================================================
=======================================================


(திரு அண்ணாமலையார் ) :- அறிந்தும் புரிந்தும், அதாவது, எப்பொழுதும் (திரு அண்ணாமலையார்) யான்  இருக்கும் வரை, நிச்சயம் என், அதாவது, எதை  என்றும்  புரிய,  என் மடியின் மீதே, நீ அமர்ந்து, இங்கு வருவோருக்கு எல்லாம், சரியான நிச்சயம் தன்னில் கூட  என்ன கேட்கின்றார்களோ, அதையே நீ தர வேண்டும். உன்னையே யான், முதலாளி ஆக்குகின்றேன் என்று, இப்பொழுது கூட மூலஸ்தானத்தில்  மடியின் மீது அமர்த்தி வைக்கின்றான் அவனை. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( திரு அண்ணாமலையார், தன்னுடைய மடியின் மீது அந்த ஞானியை / சித்தரை எப்போதும் நிரந்தரமாக மூலஸ்தானத்தில் அமர்த்தி, அவரை, திரு அண்ணாமலையின்  “முதலாளி” என நிரந்தரமாக அறிவித்து. அவர் எப்போதும், திரு அண்ணாமலைக்கு வருகிறவர்களின்  நியாயமான கோரிக்கைகளை அவர் முன் வைத்தால், அந்த ஞானி சித்தரே அதை வழங்க வேண்டும் என திரு அண்ணாமலையார் அருளியுள்ளார்கள்.)


இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம். இவ்வாறாகவே அருள்கள் வருவோருக்கெல்லாம் , அவன் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். 

ஐயோ, பாவம்! ஈசனே கொடுக்கலாமா என்று ( அவ் ஞானி கேட்டாலும் ), நிச்சயம் அப்பா கொடு என்று ( ஈசனார் அண்ணாமலையார்). 

(ஆனால்) நிச்சயம் தவறு செய்து விட்டு, மீண்டும்  வந்தால், யான் பிடுங்கி விடுவேன் என்று ஈசன்,

நிச்சயம், இவ்வாறாகத்தான்  நிச்சயம் அறிந்தும்  புரிந்தும் , எவை என்று அறிய, இப்பொழுதும்  வருபவர்களுக்கு எல்லாம், வாரி வாரி அருள்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அறிந்தும் கூட . 

=======================================================
=======================================================
 #        திரு அண்ணாமலையார்  மூலவர் - பிணம் ஞானி         #
=======================================================
=======================================================

நிச்சயம், அவனை அறிந்தும் புரிந்தும் , எவை என்று கூற  அவன் பெயர் என்னவென்றால், 

“““““““““““““   பிணம் ஞானி    ”””””””””””

ஏன்? எதை என்று எதிர்பார்க்க? பிணத்தை எரிக்கும் இடத்தில் பின் இருந்ததால், அவனை அனைவருமே பிணம், பிணம் என்று அழைத்தார்கள். 

இதனால் நிச்சயம் உங்களுக்கும், ஆசிகள் வழங்கத்தான் போகின்றான். நிச்சயம், அவனை பற்றி யான் சொல்லிக் கொடுத்துவிட்டேன். 

நிச்சயம், இவ்வாறாகத்தான் இன்னும் தவழ்ந்து நிற்கின்றார்கள் நிச்சயம், பல ஞானிகள். அவர்களைப்  பற்றி எல்லாம் சொல்வேன். அங்கெல்லாம் சென்றால், நிச்சயம் பின் விடிவு, எவை என்று கூற கிடைத்து,  பின் மாபெரும் வாழ்வு வாழ்வீர்கள். ஆனாலும், உண்மையை  இன்னும் எதை என்று அறிய, இக் கூட்டத்தில், எதை என்று புரிய இன்னும் நிச்சயம் பின் கூட்டி கூட்டி, நல் வாக்குகளாக செப்பி செப்பி, சித்தர்கள் பக்குவங்கள் எடுத்து, உங்களுக்கு தேவையானது அனைத்தும் உங்கள் கொடுக்கத் தயார். 

(கூட்டுப் பிரார்த்தனை மூலம் பல நல்  வாக்குகளை  இனிமேல் சித்தர்கள் , அனைவரின்  நலனுக்காக செப்புவார்கள். அடியவர்களுக்கு தேவையான அனைத்தும் கொடுக்க சித்தர்கள் தயார். எனவே அடியவர்கள் இவ் கூட்டுப்பிரார்தனையில் அவசியம் கலந்து கொள்ளவும்)

நிச்சயம், தாயே , தந்தையே , எம்முடைய ஆசிகள். இடைக்காடனின்  ஆதிகளால், நிச்சயம் சில கிரக நிலைகளையும்  கூட உங்களுக்கு மாற்றி அமைக்கின்றேன். ஆசிகள். அடுத்து சில வாக்குகள் தெரிவிக்கும் பொழுது, சில உண்மைகள் தெரியும். ஆசிகள்.

=====================================================
(கூட்டுப் பிரார்த்தனைக்கு வந்த அடியவர்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏன் என்றால் அவர்களுக்கு கிரக நிலைகளை மாற்றி அமைத்துவிட்டார் கருணையுடன் இடைக்காடர் சித்தர். எப்பேர்ப்பட்ட பாக்கியம் அவ் அடியவர்களுக்கு. மாபெரும் பாக்கியம் பெற்ற அவ் அடியவர்கள் அனைவரும் இன்னும் பலரை இனி வரும் கூட்டுப் பிரார்தனைக்கு அழைத்து வாருங்கள். அனைவருக்கும் நன்மைகள் உண்டாகட்டும்.)  
=====================================================

(அன்புடன் இடைக்காடர் சித்தர் அருளிய - 31.08.2025 அன்று நடந்த திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு நிறைவு) 


ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1985 - அன்புடன் அகத்தியர் - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை இடைக்காடர் சித்தர் வாக்கு.- பகுதி 3


அன்புடன் அகத்தியர்  அருளால், அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு - பகுதி 3 31.08.2025 - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 3

இடைக்காடர் சித்தர் :-  அப்பப்பா, பக்தி என்ற அதிர்ஷ்டம் வந்து விட்டால், நிச்சயம் பல அதிர்ஷ்டங்கள். அதாவது, நீங்கள் கேட்பீர்களே, இல்லம் என்று உங்களை தேடி வரும். பணம் உங்களை தேடி வரும். அனைத்தும் உங்களை தேடி வரும். ஆனால், நிச்சயம், பின் தேடி எதனை தேட வேண்டும் என்பது ? -  பக்தி அதிர்ஷ்டத்தை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   (அப்போ கேளுங்க...முதல்ல பக்தி என்ற அதிர்ஷ்டம் உங்க வாழ்க்கையில வந்துருச்சுன்னா, அதுவே எல்லா நல்ல விஷயங்களுக்கு துவக்கம். வீடு வேணும்னா? சரி, உங்க கையில ஒரு வீடு இருந்தா, இறைவன் இரண்டு வீடு கொடுப்பார். மூணு வீடு, நாலு வீடு... அப்படியே வந்து கொண்டே இருக்கும். அதே மாதிரி, நீங்க “பணம் வேண்டாம்”ன்னு சொன்னாலும், பக்தி அதிர்ஷ்டம் உங்க மேல இருக்கிறதால, இறைவன் அருளால் , பணம் தானாக வந்து கொண்டே இருக்கும். ஆனா, இவங்க எல்லாம் முன்னாடி, முதல்ல என்ன அதிர்ஷ்டம் வேணும்னு கேக்கணும். அதுக்கு பதில் — பக்தி.  அந்த பக்தி இல்லாம, எதுவும் நிலைக்காது. )

இடைக்காடர் சித்தர் :-  அப்பா, அறிந்தும், ஆனால், பக்தி என்ற அதிர்ஷ்டத்தை, (இறைவன்)  அனைவருக்கும் கொடுத்திருக்கின்றான். ஆனால், அனைவருமே அதை தூரே,   கண்டுகொள்ளவேயில்லை . 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இறைவன் எல்லாருக்கும் பக்தி என்ற அதிர்ஷ்டத்தை வழங்கியிருக்கிறார். ஆனால், மக்கள் அதை மதிக்காமல் புறக்கணித்து விட்டார்கள்.) 

இடைக்காடர் சித்தர் :- அப்பா , அறிந்தும்  இவைகள் அப்பனே  பயன்படுத்துவதே இல்லை. அவ் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துவது என்று, நிச்சயம் சொல்கின்றேன். நிச்சயம், உழையுங்கள். உழைத்து வாழுங்கள். பின் தானாக 10% வந்துரும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (உழைப்பே அடிப்படை. நீங்கள் முழுமையாக உழைத்தால், முயற்சி செய்தால், அதன் பலனாக இறைவனுடைய 10% அதிர்ஷ்டம் உங்களுக்கு வந்து சேரும்.) 
இடைக்காடர் சித்தர் :- அடுத்து நிச்சயம் கூட, மற்றவர்கள் ஏமாற்றக்கூடாது. அப்பொழுது 10% பக்தி அதிர்ஷ்டம் வரும். 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இறைவன் சொல்வது உழைப்பும் நேர்மையும். மற்றவர்களை ஏமாற்ற கூடாது. முதலில் உழைக்க வேண்டும் — எந்த வேலையும் நேர்மையாக  செய்யலாம்.  (1) உழைத்தால் 10% அதிர்ஷ்டம் வரும். (2) நேர்மையுடன் இருந்தால், இறைவன் மேலும்  10% பக்தி அதிர்ஷ்டம் தருவார்.  இப்போது மொத்தம் 20% அதிர்ஷ்டம்  உங்கள் கையில்.)
இடைக்காடர் சித்தர் :- மீண்டும் பொய் சொல்லக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (அடுத்ததாக பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் என்ன ஆகும் ?)

இடைக்காடர் சித்தர் :- அப்பா, நிச்சயம் பொய் சொன்னால், அவ் இருபதும் போய்விடும்.

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( பொய் சொன்னதால் இப்போ சம்பாதித்த 20% அதிர்ஷ்டம்  முழுவதும் இழந்து விடுகிறார். அதாவது இப்போ (0%) ஜீரோ தான்.)

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அடுத்து  பின் 30% (அதிர்ஷ்டம் ). நிச்சயம் அனைத்தும் தன் உயிர் போல் என்னுதல். 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( அடுத்த 30% அதிர்ஷ்டம் என்பது — எல்லாவற்றையும் தன் உயிரைப் போல எண்ணும் மனநிலை. எல்லாரும் நம்மவங்க.  எல்லா ஜீவராசிகளையும் நாம உயிர் போல நேசிக்கணும். அந்த ஒற்றுமையும், கருணையும் தான் இந்த 30% அதிர்ஷ்டத்தின் அடிப்படை. இப்போது மொத்தம் உங்களிடம் 50% அதிர்ஷ்டம்  சேர்ந்து இருக்கும்) 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, அறிந்தும் நிச்சயம், இவை யாரும் பயன்படுத்துவதே இல்லை. இதனால் அனைவருக்கும் பக்தி அதிர்ஷ்டம் பூஜ்யத்திலே  இருக்கின்றது. 

இடைக்காடர் சித்தர் :- எதையும் பயன்படுத்தாமல், இறைவன் அதாவது தந்தையை நினைத்தால் , தந்தை அனைத்தும். செய்வான். ஆனால், நிச்சயம் அறிந்தும் பின் புரிந்தும் இதனால்  நிச்சயம் நீங்கள் தந்தை பேச்சையே கேட்பதில்லையே !!!! . அப்பொழுது, நிச்சயம் என்ன செய்வான்  தந்தை உங்களுக்கு?  இங்கு தந்தை என்பவன் இறைவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். 
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( அப்போ கேளுங்க... ஒரு நிமிடம் உங்கள் அம்மாவை , அப்பாவை நினைச்சுப் பாருங்க. அவங்க உங்களுக்கு எவ்வளவு செஞ்சிருக்காங்க? ஒரு குழந்தை தன் அம்மா , அப்பாவோட வார்த்தையை கேட்டால் , என்ன பண்ணுவாங்க? சாப்பாடு வேண்டும் என்றால் , உடனே அந்தக் குழந்தைக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க . தேவையானதெல்லாம் — உடை, உணவு, பாதுகாப்பு — எல்லாம் அவங்க தருவாங்க. ஏனென்றால், அது தான் அப்பா. ஆனா, அந்த அப்பாவை நீங்க, அவர்களை புறக்கணித்தால், நம்மை நேசிக்கிற ஒரே ஆதாரத்தை நாமே இழக்கிறோம் அவர் சொல்றதை கேக்காம விட்டீங்கன்னா? அப்போ என்ன ஆகும்? நம்மால் தான், நம்ம இழக்கிறோம். நம்ம வாழ்க்கையில நம்மை நேசிக்கிற ஒரே ஆதாரத்தை நாமே தொலைக்கிறோம். அதே மாதிரி தான். இறைவனையும் ஒரு தந்தை போலவே நினைக்கனும். அவர் சொல்ற வார்த்தையை நம்பனும். அவர் வழிகாட்டும் பாதையை நாம் பின்பற்றணும். அவரை நம்பினால் , அவர் நம்ம வாழ்க்கையில தேவையான எல்லாம் தருவார். அவர் கொடுப்பது உண்மையான பாதுகாப்பு, உண்மையான ஆசீர்வாதம். இறைவனை தந்தை போல நேசிக்கணும், நம்பிக்கையோட வாழணும்.
இறைவனை தந்தையாக நினைக்கணும். நம்ம தந்தை நமக்கு வேண்டியதை கண்டிப்பா கொடுப்பார்கள். அந்த நம்பிக்கை எப்ப வருகின்றதோ அப்போது  உங்களுக்கு எல்லாமே கிடைக்கும். ) 

இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம், அறிந்தும் புரிந்தும் , அதனால் இறைவனும் பின் சிரித்துக் கொண்டே இருப்பான். நிச்சயம், அதாவது ஒவ்வொருவருக்கும் பக்தி என்ற அதிர்ஷ்டத்தை கொடுத்து அனுப்பினோம். ஆனால், எவருமே  அதை நிச்சயம் உபயோகிக்கவில்லையே  என்று. 

எப்படியாப்பா?  இறைவனை  பின் நிச்சயம் புரிந்து வாழ, கற்றுக்கொள்ள,  எற்கனவே கொடுத்து அனுப்பியதை நீங்கள் தான்  சரியாக உபயோக  படுத்த வில்லை. பின் அப்பொழுது, யார் தவறு இது?. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (இறைவன் நமக்கு மிகப்பெரிய பக்தி அதிர்ஷ்டத்தை கொடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் நாம் அதை தூரத்தில் வச்சு, கவனிக்காம இருக்கிறோம். சின்ன  சின்ன அதிர்ஷ்டத்தை மட்டும் கேட்டு, பெரிய அதிர்ஷ்டத்தை மறந்துவிட்டோம். நம்ம வாழ்க்கையில் ஏற்கனவே இருக்கிற அந்த பெரிய பக்தி அதிர்ஷ்டத்தை நாம் உணரவில்லை என்றால், சின்ன ஆசைகள் — பணம், பொருள், வசதி — எதுவும் நமக்கு உண்மையான மகிழ்ச்சியை தராது. மிகப்பெரிய பக்தி அதிர்ஷ்டம் நம்மிடம் இருக்கிறது. அதை உணர்ந்து, நாம் பயன்படுத்தும் தருணம் தான் நமது வாழ்க்கையின் மாபெரும்  திருப்புமுனை. எனவே பக்தி என்ற அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.) 

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், பின் பிற அதிர்ஷ்டங்களை நிச்சயம் தந்து விடுகின்றான். ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்  புரிந்தும் கடைசியில் பார்த்தால், நிச்சயம் அதனால் பொய் என்று இறைவன் நிரூபிக்கின்றான். மீண்டும், அப்பொழுதுதான் பின் தூசி, அதாவது பட்டிருக்கிறதே,  இறைவன், அதாவது பக்தி அதிர்ஷ்டம் எடுத்து, அப்பொழுதுதான் பார்க்க முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( இறைவன் நமக்காக எல்லா மாயா அதிர்ஷ்டங்களும் கொடுக்கிறார் — வீடு, நிலம், வசதி, செல்வம். நாம் கேட்டதெல்லாம் தருகிறார். ஆனால், அது நிஜமா? அந்த மாயையை உண்மை என்று நம்பும் நம்ம மனநிலையை இறைவன் கடைசியில் சோதிக்கிறார். அந்த மாயா அதிர்ஷ்டங்களை திருப்பி எடுத்து, “ஐயோ !!! இது எல்லாம் பொய்யா?” என்று நம்மை விழித்தெழச் செய்கிறார். அப்போதுதான், நம்ம உள்ளத்தில் தூசி தட்டி எழும் உண்மையான பக்தி என்ற அதிர்ஷ்டம். அதுதான்  நம்ம வாழ்க்கையின் உண்மையான அர்த்தம். அதை உணர்ந்தவனுக்கே இறைவன் முழுமையாக கிடைப்பார். மாயையை விட, பக்தியை நம்புங்கள். அப்போதுதான், உண்மை அதிர்ஷ்டம் உங்கள் வாழ்க்கையில் ஒளிரும். பக்தி அதிர்ஷ்டம்  அதை முதலிலேயே கையில் எடுத்திருந்தால் …….)
இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, உங்கள்  தவறுகள் நிச்சயம் தன்னில் கூட இல்லைப்பா. அப்பா, சொல்லித் தர ஆள் இல்லைப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (உங்கள்  மேல் தவறு இல்லை. உண்மை சொல்வதற்கு ஆள் இல்லை.)

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, இறைவன் பெயரை வைத்து ஏமாற்றுபவர்கள் தான் அதிகம் அப்பா. 

இடைக்காடர் சித்தர் :- அப்பனே இப்படி இருக்க, அப்பனே எப்படி அப்பா  இறைவனை நம்புவார்கள்? . இறைவனும் கூட, அப்பனே அதாவது உங்களை  அழகாக இறைவன் அனுப்பினான். ஆனால், பின் நீங்கள் இப்படி இருந்தால், இறைவனுக்கே அவமானம். அதாவது, மற்றவன் திட்டிட்டு செல்வான். இறைவனை  நம்புகின்றானா என்று? 

=======================================================
 #          உங்கள் மூக்கில் -   இல்லம் அதிர்ஷ்டம் உள்ளது          #
=======================================================

இடைக்காடர் சித்தர் :- அப்பா, அறிந்தும் இன்னும் அதிர்ஷ்டத்தை அதாவது மூக்கில் அப்பா, அதிர்ஷ்டம், பின் இல்லம் அதிர்ஷ்டம் இருக்கின்றது, பின் கோபப்பட்டால், அவ் அதிர்ஷ்டம் தானாக சென்று விடும்.  இதை யார் கற்பிப்பார்கள் ? 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( உங்கள் வீடு அல்லது இல்லம் வரும் அதிர்ஷ்டம் உங்கள் மூக்கின் மேலே உள்ளது.  நீங்கள் கோபப்படாமல் இருந்தால், அமைதியா இருந்தால், இல்லம் யோகம், வீட்டு யோகம், அது உங்களுக்கு தானாக கிடைக்கும். இவ் ரகசியத்தை யார் சொல்லிக் கொடுப்பாங்க? என்று கேட்கின்றார் அய்யா. மூக்கின் மேலே உள்ள உங்கள் இல்லம் அதிர்ஷ்டம்,  நீங்க கோபப்பட்டா, உங்களை விட்டு தானாக போய்விடும். அதனால், எது வந்தாலும், யார் என்ன பண்ணாலும், அமைதியா போங்க அம்மா , அமைதியா போங்க அய்யா)
 

=======================================================
 #      பொய் சொன்னால்  -   பணம் உங்களிடம் தங்காது        #
=======================================================

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், அடுத்து நிச்சயம் பொய். வாயில் பொய் வருவதென்றால், நிச்சயம் நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். பணம் உங்களிடம் தங்காது. 

=======================================================
 #   நிலம் வாங்கும்  அதிர்ஷ்டம்    -   கண்களில் இருக்கிறது   #
=======================================================

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, அத்தனை அதிர்ஷ்டங்கள், அப்பா, நிலம் வாங்கும் அதிர்ஷ்டம், அப்பா, கண்களில் இருக்கிறது. கண்களை சரியாக கூர்ந்து, இறைவனை கண்டால், அவ் அதிர்ஷ்டம் தேடி வரும். ஆனாலும், நிச்சயம் பின், அதாவது அநியாயங்களை  கண்டு, நிச்சயம் எதை என்று புரிந்து, பின் கூர்ந்து கவனித்து, அமைதியாக இருந்தால், நிச்சயம் பின் நிலத்தினால் , பெரும் பாதிப்பு ஏற்படும். 


=======================================================
 #   நெற்றியில்   இறைவனுடைய  அதிர்ஷ்டம்  இருக்கிறது    #
=======================================================

இடைக்காடர் சித்தர் :-  அப்பா, நிச்சயம் இன்னும் அப்பா, பின் நெற்றியில் தான் இறைவனுடைய அதிர்ஷ்டம். அப்பா, இவையெல்லாம் கடந்து வந்தால், இறைவன் சரியாக உன் நெற்றியில் அமர்வான்  அப்பா, அனைத்தும் கொடுப்பான் அப்பா.  நிச்சயம் எப்பொழுது இறைவன் நெற்றியில் அமர வைக்க போகிறீர்கள்? 

இடைக்காடர் சித்தர் :- அப்பா, அறிந்தும் இதைத்தன் உணர ஆள் இல்லை. உங்களுக்கு சொல்லித் தரவும் பின், நியாயமானதை சொல்லித் தரவும் இங்கு ஆள் இல்லை. அனைத்தும் காசுகளுக்காக  சொல்லிக் கொடுத்து, பொய் சொல்லிக் கொடுத்து, எதை எதையோ கற்பித்துக் கொண்டிருக்கையில், உண்மையிலேயே நீங்கள் நிச்சயம் (பாவம் அப்பா). ஆனால் அவன் அவன் பாவம், அவன் நிச்சயம் பின் அழிவதற்கு சமம். 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, இன்னும் கலியுகத்தில் பொய்கள் தான் பக்தியில் நுழைந்து கொண்டே . அப்பா, இறைவன் மீது பயமே இல்லை அப்பா. 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, நிச்சயம் தன்னில் எதை என்று அறிய சிறு வயதிலிருந்தே, அப்பப்பா, நிச்சயம் பின், அதாவது தவறு செய்தால், இறைவன் நிச்சயம் தண்டிப்பான் என்று நிச்சயம். அப்பனே , சொல்லித் தருவார்கள். அப்பா, இப்பொழுதும் நிச்சயம் அவைதான் நடக்கப்போகின்றது. 

““““   பெரும் தண்டனையாக இருக்கும். ””””””  

இடைக்காடர் சித்தர் :- பின் இன்னும், அதாவது இன்னும் சரியவனுக்கு பரிகாரங்களாம், இன்னும் கேதுவானவனுக்கு பரிகாரங்களாம், இன்னும், இன்னும், பின் இவையெல்லாம் நிச்சயம். ஆனால் நீங்கள் சரியாக இருந்தால் அப்பா, ஏனப்பா பரிகாரங்கள் செய்யப் போகின்றீர்கள்? அப்பொழுது நீங்கள் திருடர்கள் தானே? 


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் மானிடா எதை என்று புரிய, இறைவன் பொருளுக்கு ஆசைப்படுகின்றீர்கள் நீங்கள். நிச்சயம் பணம் என்பது இறைவனுடைய தான். நிச்சயம் நிலம் என்பது கூட இறைவனுடையது தான். 



இடைக்காடர் சித்தர் :-ஆனால் அவை (அனைத்தும்), தந்தை நீங்கள் கேட்காமலேயே கொடுப்பான். ஆனால், பொருத்தாகவே வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( மனிதன் ஆசைப்படும் பணம், நிலம் போன்றவை அனைத்தும் இறைவனுடைய சொத்துகள். அந்த சொத்துக்கள் இறைவனுக்கே சொந்தமானவை, அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியும். ஆனால் மனிதன் அவற்றை உரிமையுடன், நேர்மையான வழியில் , பொறுமையாக இருந்து  பெற வேண்டும்; ஏமாற்றம், திருட்டு போன்ற குறுக்கு வழிகளில் அல்ல. இறைவனுடைய சொத்துக்கு ஆசைப்படுவது தவறு அல்ல, ஆனால் அதை நேர்மையான முறையில், இறைவனின் அருளால் பெற வேண்டும்.)

இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் புரிந்தும் தாயே , தந்தையை என்று உங்களுக்கு அழைக்கின்றேன். சொல்லித் தர ஆள் இல்லை, பொய் சொல்வதற்கு தான்  ஆள் இருக்கின்றது. 

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அங்கு சென்றால். அவை நடக்கும், அங்கு சென்றால் இவை நடக்கும்? அவன் ஆனால் மரணத்தை நிச்சயம் வெல்ல முடியாது.  யாராவது சொல்லச் சொல் ? 


இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், உயிர் எப்பொழுது போகப்போகும் என்று யாருக்கும் தெரியாது அப்பா.  சித்தர்கள் எங்களுக்குத் தெரியும். 


இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அறிந்தும்,  அனைத்தும், பின் பணத்துக்காகவே இவ்வுலகத்தில், பொய் சொல்லி நடிப்பான்  அப்பா.

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அறிந்து, இவை நடக்கும். அப்பொழுது நீ எந்தனுக்காக எதையாவது செய் என்று  யாராவது சொல்கின்றார்களா  என்று பார்ப்போம்? 

இடைக்காடர் சித்தர் :- அப்பப்பா, இன்றைய நிலைமையில் அப்பா, நிச்சயம், பெரும் எது என்று அறிய அறிய,  பின், திருடுவது பக்தி என்ற  நிலைமைக்கு வந்தே திருடுகின்றார்கள் . 

இடைக்காடர் சித்தர் :-  அப்பா, வித விதமாக வேஷம்  இட்டுக்கொள்வது, வித விதமாக, நிச்சயம் எதையெதையோ அணிந்து கொள்வது. ஆனால், நிச்சயம் அறிந்தும்  புரிந்தும், இவையெல்லாம் செய்தால், இறைவன் தன்னிடத்தில் இருந்து விடுவானா என்ன? 

இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம் அப்படி இருந்தால், எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை. அதாவது, பின் தர்மம் வேறு கொண்டு எதையோ உட்கொண்டு கொண்டிருப்பார்கள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு தொடரும் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!