​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 14 August 2025

சித்தன் அருள் - 1918 - அன்புடன் அகத்தியர் - மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 8








அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 8

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தன் அருள் - 1903  - பகுதி 1 
2.சித்தன் அருள் - 1905 - பகுதி 2
3.சித்தன் அருள் - 1911  - பகுதி 3
4.சித்தன் அருள் - 1914 - பகுதி 4
5.சித்தன் அருள் - 1915 - பகுதி 5
6.சித்தன் அருள் - 1916 - பகுதி 6
7.சித்தன் அருள் -  1917 - பகுதி 7)

குருநாதர் :- இவையெல்லாம் நிச்சயம் சொல்லிக் கொடுத்துத்தான் பின்பு வாக்குகள் செப்புவேன். 

**தாயே !!! தந்தையே!!!! (உங்கள்) விதியைப் பற்றிச் சொல்வது சாதாரணமில்லை.**

**நிச்சயம் அப்புண்ணியங்கள் நீங்கள் பெற்றுவிட்டால் நிச்சயம் விதியின் ரகசியத்தை யான் சொல்வேன்.**

நிச்சயம் உலகம் எங்கு சென்று கொண்டிருக்கின்றது ?

சுவடி ஓதும் மைந்தன் :- அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

அடியவர்கள் :- (வழி மொழிந்தனர்) 

குருநாதர் :- நிச்சயம் அவ்அழிவை நோக்கி அதாவது இங்கு இறைவனும் இதற்கு எதை என்று கூற நிச்சயம் தன்னில் கூட.  

**இதனால் நிச்சயம் அப்பனே நிச்சயம் அனைத்தும் உங்களுக்குச் செய்கின்றேன்.**

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் தருகின்றார் அம்மா எல்லாருக்கும். இந்த கலியுகத்தில் உங்களுக்கு என்னென்ன தேவையோ அதைக் கொடுக்கின்றேன். கூட இருந்து வழி நடத்துகின்றேன் (என்று சொல்கின்றார்.) 

குருநாதர் :- நிச்சயம் எப்படி ? எந்த ரூபம் எடுத்து வருவேன் என்பதையெல்லாம் நிச்சயம் யான்  இங்கு இப்பொழுது சொல்வதற்கில்லை. 

அப்பனே மீண்டும் சொல்கின்றேன். 

** பொய் சொல்லக்கூடாது. **

** பிறரை ஏமாற்றக் கூடாது. ** 

** கோபம் கொள்ளக் கூடாது. ** 

** நேர்மையாக இருக்க வேண்டும். ** 

அடியவர் :- முடியமாட்டேங்குது ஐயா. கோபம் வராமல் இருக்க என்ன வழி? 

குருநாதர் :- அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பா. நிச்சயம் தந்தை சொல்வதைக் கேட்டால், நிச்சயம் பிள்ளை எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிவிட்டால் அப்படியே கேட்கவேண்டும். அவ்வளவுதான் . எப்படி கோபம் வருது , நிக்குது அதையெல்லாம் கேட்கக்கூடாது. 

குருநாதர் :- 

**அப்பனே பின் இன்னொருவன் அப்பனே உன்னை அடித்தாலும் அப்பனே நீ அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இதுதான் சித்தன் வழி.**

**அப்பனே உன்னை திட்டித் தீர்த்தாலும் , திட்டுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் சித்தன் வழி.**

நிச்சயம் அடித்தாலும், திட்டினாலும், குறை சொன்னாலும் நிச்சயம் நீ என்ன சொல்ல வேண்டும்? 

அடியவர் :- புன்முறுவல்.  ( இன்முகம் காட்டி மெல்லிய சிரிப்பு ) 

(பின் வரும் வாக்கினைப் பலமுறை படித்து, புரிந்து , உணர்ந்து செயல் படுத்தவும். இறைவனுக்குப் பிடித்தவாறு வாழும், இறைவனை வணங்கும் சித்த வழி) 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட 

**என் தந்தை இருக்கின்றான் அகத்தியன். **

**பின் நிச்சயம் (உங்கள் விருப்பம் போல்) பேசிட்டுச் செல்லுங்கள். **

**அடியுங்கள் என்றுதான் சொல்லவேண்டும். **

**இதுதான் இறைவனுக்கு நிச்சயம் பின் கொடுக்கும் மரியாதை நீங்கள். ** 

தாயே !!!! நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பக்குவம் வருவதற்கே ஐம்பது வருடங்கள் ஆகின்றது. நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் முதலிலே செய்துவிட்டால், நிச்சயம் இறைவனை நேரில் தரிசிக்கலாம். நிச்சயம் இறைவன் நேரில் வந்து நிச்சயம் சில சில விதிகளைக்கூட பின் மனதார பேசி சென்றும் இருக்கின்றார்கள். அவர்களும் இங்கு வந்திருக்கின்றார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் இங்கு உள்ள சிலரிடம் நேரில் பேசி இருக்கின்றார். அவங்க யார் என்று தெரியவில்லை. ரகசியமாக இருக்கின்றது. 

[ **  உங்கள் கஷ்டங்களின் மூல காரணம் ** ] 

குருநாதர் :- இறைவன் உங்களுக்காகக் கொடுக்கத் தயார். ஆனாலும் நீங்கள் மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் இறைவனும் சந்தோசமடைவான். உங்களுக்கே, உங்களுக்கே கேட்டுக்கொண்டிருந்தால் இறைவனும் கோபங்கள் பட்டு, பின் அதாவது இறைவன் கோபப் படலாமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இறைவன் எல்லையற்றவன். பின் இறைவனின் லீலை யாருக்குத் தெரியும்? இதனால் நிச்சயம் தன்னில் கூட அட முட்டாளே!!! உந்தனுக்கு இவ்புத்தியா கொடுத்தேன் என்று இறைவன் கோபம் கொள்கின்ற பொழுதுதான் பின் உங்களுக்குக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. 


“””””அப்பனே நிச்சயம் அனைத்தும் தாங்கும் சக்தி எவனிடத்தில் இருக்கின்றதோ, அவனை இறைவனே கட்டி நிச்சயம் அணைத்துக்கொள்வானப்பா. ஆனந்தக் கண்ணீர் விடுவானப்பா.”””””

*நிச்சயம் அழிவதும், வாழ்வதும் உங்களிடத்திலே.**

*அப்பனே இறைவன் பன்மடங்கு தருவதற்கு உங்களுக்குத் தயாராக இருக்கின்றானப்பா.*

அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. வாங்குவதற்கு கைகள் இல்லையப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு மனம் கடல் போன்று இருக்க வேண்டும் என்று சொல்கின்றார். 

குருநாதர் :- இவ்வாறாக இருந்தாலே  கடல் போன்று , பின் நால்வர்கள் வந்து விடுவார்கள். தானாகவே நிச்சயம் அதாவது தேவாரம் திருவாசகத்தையும் தானாக உங்களுக்குள் நுழைந்து நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறாகக் கடல் போன்று இல்லை என்றால் திருவாசகத்தையும், தேவாரத்தையும் ஓதவும் கூட முடியாது. 

————————-
(  “நால்வர்" என்றால் தமிழில் நான்கு பேர் என்று பொருள். இது பொதுவாக, சைவ சமயத்தில் நான்கு முக்கிய குருமார்களைக் குறிக்கும், அதாவது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மற்றும் மாணிக்கவாசகர். அவர்களை "சமயக் குரவர் நால்வர்" என்றும் அழைப்பர்.) 
——————————

குருநாதர் :- அப்பனே இறைவன் கஷ்டத்தையும் கொடுத்து , அதை நீக்குவதற்குச் சக்திகளும் உங்களிடம் கொடுக்கின்றானப்பா. ஆனாலும் அதை நீக்குவதற்குச் சக்திகள் உங்களுக்குத் தெரியவில்லையே!!!! 

அப்பனே அதைத் தெரிவித்து விட்டால், உங்களை நீங்களே வெல்லலாம். 

அதைத் தெரிவிப்பதற்காகத்தான் அப்பனே இவ்வளவு எதை என்று புரிய. இதனால் அப்பனே அவ் சக்கரத்தை இயக்கவேண்டும். அவ்வளவுதான். 

அப்பனே அச்சக்கரம் அப்படியாக இருந்தால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து வந்தால்தான் அப்பனே , எப்பொழுது திரிகின்றதோ  (சுற்றுகின்றதோ) அப்பொழுது பிறவிகள் இல்லை. 

விஷ்ணு அதனால்தான் நிச்சயம் சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு , “அடப்பாவிகளா!!!!!!!!!!!! அதை இயக்குங்கள் , இயக்குங்கள் என்று”  …. ஆனாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதைப் புரியும். 

இதனால் நிச்சயம் பச்சையாக அதாவது பச்சை நிறத்தில் எதை என்று புரிய. ஆனாலும் (பச்சை நிற மனிதர்களும்) இருக்கின்றார்கள். பச்சை நிறத்திற்கு இழுத்து வந்துவிட்டால்,  மற்றவர்களுக்காக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். 

இப்பொழுது அனைவரிடத்திலும் சிவப்புத்தான் இருக்கின்றது. 

நிச்சயம் சிவப்பிலிருந்து பின் நிச்சயம் மஞ்சளுக்கு எடுத்துவர வேண்டும். நிச்சயம் இவ் மஞ்சள் வருவதற்கு ஒரு குருவானவன் தேவைப்படுகின்றான். நிச்சயம் அவ்மஞ்சளை நிச்சயம் பின் எடுத்து வந்து விட்டால் தானாகவே எவை என்று அறிய பச்சை நிறத்தில் (வந்துவிடும்). நிச்சயம் அவ்வாறாக இதை பின்பு நீல நிறமாக மாறிவிடும். அப்பா!!! பாற்கடலில் பள்ளி கொண்டானே… அவனைப் பார்த்து விடலாம். அப்பனே மோட்சமும் கிடைத்து விடும். இதனால்தான் அப்பனே சூரியனும்  கூட உங்களைச் சிவப்பிலிருந்து பின் எடுத்துக் கொள்ளாதவாறு இருக்கின்றான். (சூரிய தேவன் நம்மை சிவப்படையாமல் பாதுகாக்கின்றார்) 

இதனால்தான் அப்பனே அனுதினமும் சூரியனை அப்பனே நமஸ்கரித்து,  நிச்சயம் யாங்கள் சந்திரனுக்குச் செல்ல வேண்டும். பின் இரவில் கூட சந்திரனே , நிச்சயம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் வழிவிட்டால் மட்டுமே நீங்கள் இறைவன் பாதையை நிச்சயம் பிடிப்பீர்களாக. 

நிச்சயம் சூரிய நமஸ்காரத்தை யான் எதற்காகச் சொன்னேன்? அனைவரும் தெரிவியுங்கள்? 

அடியவர் :- சூரியன் அனைத்து ஒளி ஆதாரங்களைத் தருகின்றார். 

குருநாதர் :- நிச்சயம் சூரிய நமஸ்காரத்தை யான் செய்யச் சொன்னேன் என்றால் நிச்சயம் உடம்பில் சிலபாகங்கள் சூரியன் ஒளி வருவதால் மட்டுமே இயங்கும். (உடல் பாகங்கள்) சில சிலவற்றுக்குச் செல்லாமல் இருக்கையால் நோய்கள் வந்து விடும். 

அப்பனே நோய்கள் வருவதென்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இறைவன் அதை பாதுகாப்பதற்காக வழிகளிலும் வைத்துத்தான் அனுப்புகின்றான் அப்பா. ஆனாலும் மாயையில் சென்றுவிடுவதால் (சிக்கிவிடுவதால்)  அவையெல்லாம் தெரிவதே இல்லை. பின் நோய் வந்தவுடன் ஓடோடி வருகின்றார்கள் ஐயோ ஐயோ என்று மார்பைத் தட்டி. 

ஆனால் நல்லது சொல்வதற்கு ஆளே இல்லையப்பா உலகில். நிச்சயம் அப்பனே உருவாக்குவோம் யாங்களே!!! அப்பனே உருவாக்குவதற்கும் பல அடிகள், பல அவமானங்கள் நிச்சயம் அடியோ அடியோ என்று அடித்துத்தான் தேர்ந்தெடுப்போம். 

அப்பனே நீங்கள் அனைவருமே சந்தோஷங்களை வேண்டிக்கொண்டே வந்திருக்கின்றீர்கள் அல்லவா? அப்பனே ஆனால் மற்றவர்களுக்காக உழைப்பதற்கு அடி வாங்க வேண்டும் பலமாக. யார் இருக்கின்றீர்கள் அப்பனே? 

அடியவர் :- அடிவாங்கத் தயார். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடி வாங்கி விட்டீர்கள். இன்னும் அடியடித்தால் , அப்பனே இறந்து விடுவீர்கள் நீங்கள். 

அப்பனே ஆசிகள் இன்னும் விவரிக்கின்றேன். 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete