6/7/2025 ... வளர்பிறை ஏகாதசி தினத்தன்று... குருநாதர் அகத்திய பெருமான் கொடுத்த உத்தரவு!!!
வாக்குரைத்த ஸ்தலம்: திருப்பதி திருமலை.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே.... வளர்பிறை ஏகாதசி அன்று குருநாதர் அகத்திய பெருமான் திருப்பதியில் வைத்து பொதுவாக்குகள் உரைத்தார். கொங்கணர் சித்தரின் வாழ்க்கையைப் பற்றியும்..... எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு மார்பு பகுதியில் ஏற்படும் சுவாசக் கோளாறுநோய்களை பற்றியும் அதற்கு தீர்வு மற்றும் மருத்துவம் மற்றும் மந்திரங்களை பற்றியும் குருநாதர் நீண்ட நெடுவாக்காக கொடுத்திருக்கின்றார் அவ் வாக்குகள் பின் வாக்குகளாக வெளிவரும்.
அதற்கு முன்பாக ஆடி அமாவாசையில் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமை தன்னில் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை குருநாதர் உத்தரவாக கொடுத்துள்ளார்!
அவ் உத்தரவு!!
அப்பனே எம்முடைய ஆசிகளப்பா குறைகள் வேண்டாம் அப்பனே நல்விதமாக.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... அதாவது பின் நிச்சயம் தன்னில் கூட
அப்பனே பின் அதாவது ஆடி அமாவாசை அன்று அப்பனே... அனைவருமே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் முன்னோர்களை வழிபடுங்கள் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட
(பித்ரு தர்ப்பணம் வீட்டில் முன்னோர்களுக்கு படையல் இட்டு அவர்களை நினைத்து வணங்கி அன்னதானம் வழங்குவது)
அவர்கள் அப்பனே மனமுவந்து அதாவது... அப்பனே பின்.. சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... எதற்கு சம்பந்தங்கள் என்று.
அப்பனே பின் அதாவது உங்களிடத்தில் அப்பனே ஒரு துகள் அப்பனே பின் பிரிவதனால் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ் ஆன்மாக்கள் அப்பனே.
இதனால் அப்பனே அவ் ஆன்மாக்களை உள்ளிழுக்க வேண்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
சில ஆன்மாக்கள் முற்று பெற்று விட்டாலும் கூட.. குறைகள் இல்லை அப்பா நிச்சயம் தன்னில் கூட.
இதனால் அப்பனே இவ் அமாவாசை தன்னில் கூட...
அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு சொல்கின்றேன் அப்பனே... அதாவது வெள்ளி தோறும்.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது...
ஆடி வெள்ளி தோறும் அப்பனே... அம்பாள் இடத்திற்கு சென்று... அப்பனே அவள் தனக்கு அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட ஏதாவது அப்பனே பின்.. சமர்ப்பியுங்கள் என்பேன் அப்பனே.. அதாவது பின் உணவையும் கூட அப்பனே... அதில் நீரிட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. கொடுங்கள் என்பேன் அப்பனே... அதில் வேப்பிலை இட்டு..
அப்பனே இவை தன் பயன்படுத்துவார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட இன்றளவும் கூட
கூழ் பிரசாதம்.
ஏன் எதற்கு பயன்படுத்துவார்கள் என்பதை எல்லாம் யாருக்கும் தெரியாதப்பா... இதனால் அப்பனே பின் யோகங்கள்... நிச்சயம் பின் கிடைக்கும் என்பேன் அப்பனே.
இதை பயன்படுத்தி வாருங்கள் அப்பனே.. நல்விதமாக கவலையை விடுங்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அதிலிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட வேப்பிலை இட்டு... அவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட....
தேவிக்கு வேப்பிலையும் கொடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அவ் வேப்பிலையையும் கூட இல்லத்தில் வையுங்கள் என்பேன். அப்பனே.
(ஆடி வெள்ளி தோறும் மாரியம்மன் காளியம்மன் போன்ற அம்பாள் கோயில்களுக்கு சென்று கூழ் பிரசாதம் படைத்து அதில் வேப்பிலையும் விட்டு படைத்து..
அதுமட்டுமில்லாமல் அம்மனுக்கு வேப்பிலையை சாற்றி அதில் இருந்து சிறிதளவு வீட்டிற்கு எடுத்து வந்து வீட்டில் வைக்க வேண்டும்)
தேவி அப்படியே வந்து அப்பனே... நிச்சயம் அவரவர் இல்லத்தில் அப்பனே... இன்னும் அப்பனே சக்திகள் அதிகமாகும் பொழுது அப்பனே சில தீவினைகள்... அதாவது அப்பனே அண்டுவதற்கு வந்தாலும்... அப்பனே அவையெல்லாம் தானாகவே நீங்கிவிடும் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே...
சில வகைகளும் கூட உண்மைகள் தெரியவருமப்பா!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கே சில விஷயங்கள் கற்பிப்பேன் அப்பனே வரும் காலத்தில் என்பேன். அப்பனே.
இதைச் செய்க!!
நன்று என்பேன் அப்பனே.. ஆசிகள் ஆசிகள் அப்பனே நாராயணனுடைய ஆசிகள்... பரிபூரணமாக பின் பெற்று தந்து விட்டேன் அப்பனே ஆசிகள் ஆசிகள்!! நலங்களாகவே ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
நன்றி இறைவா 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
அய்யன் திருவடிகளே சரணம் ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete