​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 29 August 2011

அகத்தியர் சமாதி - அனந்த பத்மநாபா சுவாமி கோவிலே!

அகத்தியரின் சமாதி அனந்த சயனத்தில் உள்ளது என்று கேள்விப்பட்டு, என் நண்பரிடம் விசாரித்தேன்.  பல வருடங்களாக அதை தானும் தேடிவருவதாகவும் வந்தால் உடன் தெரிவிக்கிறேன் என்று சொன்னார்.   அவருக்குள்ளேயே ஒரு சந்தேகம் இருந்தது.  திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி கோயிலாகத் தான் இருக்கவேண்டும் என.

சமீபத்தில் சென்னைக்கு அருகிலுள்ள "பஞ்சேஷ்டி" என்ற இடத்துக்கு அவர் சென்று வந்தார்.  அங்கு அவர் தேடி நடந்ததற்கு விளக்கம் கிடைத்ததாக சொல்லி, ஒரு புகைப்படத்தை காட்டினார்.  பார்த்த உடனேயே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா!  பொதுவாகவே சயனத்தில் இருக்கும் பத்மனாபரின் வலது கை ஒரு சிவ லிங்கத்தை தழுவியதாக இருக்கும்.  மேலே உள்ள படத்தில், பத்மனாபரின் கை ஒரு முனிவரின் தலையில் வைத்தது ஆசிர்வதிப்பதுபோல் உள்ளது!  அகத்தியர் பன்ஜெஷ்டியில் ஐந்து மகா யாகங்களை செய்ததாகவும் பின்னர் பொதிகை வழி சென்று அனந்த சயனத்தில் சமாதியில் அமர்ந்ததாகவும் புராணம் சொல்கிறது.  இவை அனைத்தையும் தொடர்பு படுத்தி பார்க்கையில் "திருவனந்தபுரம் அனந்த பத்மநாபா சுவாமி கோயிலே" அகத்தியரின் சமாதி இருக்கும் இடமாக இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.

பஞ்சேஷ்டி கோயில் ஆயிரத்தி எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது என்பது ஒரு சிறு தகவலும்!

3 comments:

  1. thanks for clearing my doubt also.

    ReplyDelete
  2. Vazhga Valamudan. Quite interesting. many more informations needed for the younger generations.. prof.m.srinivasan, Annamalai University,Cuddalore, Tamil Nadu

    ReplyDelete