​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 15 March 2026

சித்தன் அருள் - 2153 - அகத்தியப்பெருமானின் சில வாக்குகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், ஓரிடத்தில் நாடி வாசிக்கையில், அகத்தியப் பெருமான் பொதுவாக கூறிய சில விஷயங்களை, உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க சொன்னதை, சுருக்கமாக கீழே தருகிறேன்!

1. என் குழந்தைகள் எதை கேட்டாலும், அதை கொடுக்க வேண்டுமா இல்லாயா என்பதை யான் தான் முடிவு செய்வேன். 
2. எப்பொழுது ஒரு விஷயத்தை சொல்லவேண்டுமா அப்பொழுது சொன்னால்தான் அதற்கு மதிப்பு அதிகம்!
3. மருந்தாக எதை உட்கொண்டாலும், அதற்கு உயிர் தரவேண்டியது அகத்தியனே!
4. எல்லா நோயையும் வெற்றி கொண்டு உடம்பை காப்பதினால்தான் "வெற்றிலை" என பெயர் வந்தது!
5. அனைத்திற்கும் காரணம், நீங்கள் செய்த புண்ணியங்கள். அவரவர் புண்ணியத்திற்கு ஏற்ப யான் வந்து அமர்ந்து வாக்குகள் செப்புகின்றேன். மேன்மேலும் புண்ணியங்களை சேர்த்துக்கொள்ள, உங்கள் சந்ததிகளும் வளம் பெறும்! புண்ணியங்கள் இருந்தால் யாங்களே தேடி வந்து வாக்குகள் சொல்வோம்!
6. ஒருவனின் கடைசி மூச்சை இறைவன் தீர்மானிக்கிறான். ஆகவே, ஒவ்வொருவனும் விடுகிற மூச்சு, இறைவன் தந்த மூச்சு. 
7. எதை கேட்கிறோமோஅதை வாங்கி பிரதிபலிக்கிற தன்மை அரச மரத்துக்கு உண்டு. ஆகவே, அந்த மரத்தை சுற்றி வந்து, அதன் இலையை சிறிதளவு உட்கொண்டால், நினைத்தது நிறைவேறும்.
8. ஒரு ஆன்மாவிற்கு பல பிறப்புக்கள். ஏதேனும் ஒரு பிறவியில் தொடங்கி, என்னை தேடி தேடி வந்தால் தான், எம்மை இப்பிறப்பில் வந்தடைய முடியும்.
9. எல்லாம் செய்கிறேன் செய்கிறேன் என்று கூறி, பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து கொடுத்து, வாழ்வெனும் ஆற்றை கடத்தி கூட்டி செல்கிறேன்!
10. மனிதனுக்கு மற்றொரு பெயர் "கவலை". அது விலக, வேண்டுதலுடன் வேல்மாறலை தினமும் கூறி வாருங்கள்!
11. கும்பம், மீனம், மேஷ ராசிக்காரர்கள், அஷ்டமி அன்று பைரவருக்கு 21 விளக்குகள் போடவேண்டும். ஞாயிறு அன்று ராகுகாலத்தில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடவேண்டும்.
12. சித்திரை மாதத்தில் சித்திரகுப்தனை தரிசித்து, விளக்கு ஏற்றுங்கள். 
13. விதியில் கடுமையான போராட்டங்கள் உள்ளவர்கள்தான் அகத்தியனை தேடி வருவார்கள். யானும், விதியில் கடுமையாக போராடுபவர்களைத்தான் தேர்ந்தெடுப்பேன்.
14. தானாக தட்டில் சோறு வராது!
15.  அகத்தியன் கூறும் பரிகாரங்களை செய்வது உன் கடமை! அதன் பலனை கொடுப்பது அகத்தியன் கடமை!
16. சித்தனின் விளையாட்டு யாருக்கும் தெரியாது. விளையாட்டு கடைசியில் வினையாகி போகும் என்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை.
17. அகத்தியனை தேடி வந்துவிட்டால், விதியை ஆராய்வேன்! பொறுமை தேவை!
18. கவனி! அனுபவம்தான் பாடம்!
19. வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்பவன்தான், மோக்ஷம்!
20. எலுமிச்சை கனி சாறில், கல்லுப்பு சேர்த்து அருந்துவது, கோடை காலத்துக்கு நல்லது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. நன்றி அகத்தீயர் ஐயா, ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா🙏 அகத்தியர் அப்பா இயற்கை சீற்றத்தால் அல்லது இயல்பான மரணமாக இல்லாமல் எவரேனும் உயிர் பிரிந்தால் மோட்ச தீபம் ஏற்ற சொல்லுவார்கள் அல்லவா!! இப்போது ஈரான் போரில் இறந்த ஆத்மாகளுக்கு குறிப்பாக பள்ளியில் ஏற்பட்ட விபத்தில் இறந்த ஏறத்தாழ 150 பெண் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய வருகின்ற அமாவாசை 18 ஆம் தேதி மோட்ச தீபம் ஏற்றலாமா, ஐயா?

    அதன் சரியான வழிமுறை தெரியவில்லை. எவ்வாறு செய்யலாம் என தாங்கள் வழிகாட்டினால் நன்றாக இருக்கும், ஐயா🙏🙏

    ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்🙏🙏

    ReplyDelete
    Replies
    1. https://siththanarul.blogspot.com/2014/08/blog-post.html

      Delete
  3. வணக்கம் அக்னிலிங்கம் ஐயா, ஓதிமலை கும்பாபிஷேகம் குறித்து ஒரு மெயில் தங்களுக்கு அனுப்பி உள்ளேன்.. காண வேண்டுகிறேன் 🙏

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா🙏 அகத்தியர் அப்பா இயற்கை சீற்றத்தால் அல்லது இயல்பான மரணமாக இல்லாமல் எவரேனும் உயிர் பிரிந்தால் மோட்ச தீபம் ஏற்ற சொல்லுவார்கள் அல்லவா!! இப்போது ஈரான் போரில் இறந்த ஆத்மாகளுக்கு குறிப்பாக பள்ளியில் ஏற்பட்ட விபத்தில் இறந்த ஏறத்தாழ 150 பெண் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய வருகின்ற அமாவாசை 18 ஆம் தேதி மோட்ச தீபம் ஏற்றலாமா, ஐயா?

    அதன் சரியான வழிமுறை தெரியவில்லை. எவ்வாறு செய்யலாம் என தாங்கள் வழிகாட்டினால் நன்றாக இருக்கும், ஐயா🙏🙏

    ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்🙏

    ReplyDelete
    Replies
    1. செய்யலாம்! அனைத்து ஆத்மாவுக்கும் என வேண்டிக்கொண்டு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சிவபெருமான் அல்லது பெருமாள் கோவிலில் தீபமேற்றி, 108 முறை ஓம் நமசிவாய அல்லது ஓம் நமோநாராயண என ஜெபித்து மோக்ஷ தீபம் இடலாம்!

      Delete
    2. https://siththanarul.blogspot.com/2014/08/blog-post.html

      Delete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete