​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 25 February 2026

சித்தன் அருள் - 2131 - அடியவர் கேள்விக்கு அகத்தியப்பெருமானின் பதில்கள் - ஒரு விளக்கம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வியும் பதிலும் இங்கு வெளியிடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். அதில் 61வது கேள்வியின் விவாதத்தில் ஓரிடத்தில் அவர் இவ்வாறு கூறினார். (சித்தன் அருள் - 2130)

"கலியுகத்தில். எந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ சொல்லலாம் அப்பனே! விட்டுவிடு. வேறு யாராவது சொல்லட்டும்!"

வேண்டுமென்றே நியாயமான கேள்விகளை, யதார்த்தமான கேள்விகளை கேட்டு அவரை பதில் கூற தூண்டிவிட்டு, இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தி வைத்தேன். மேற் சொன்ன விளக்கத்தை கொடுத்துவிட்டு அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். நானும்!

நாடி வாசித்த இடத்தில் ஒரு 20லிருந்து 25 பேர் இருந்தனர். யாரும் பதில் கூறவில்லை. "நான் இருக்கிறேன்! நீங்கள் கூறிய விஷயத்துக்கு நான் தயார்!" என ஒருவர் கூட கை உயர்த்தவோ, பதிலளிக்கவோ இல்லை. இதில் என் நண்பர்களும் அடக்கம்!

அகத்தியப் பெருமான் நினைத்தால் எந்த இறை அருளையும் வாங்கி தன் சேய்களுக்கு தர முடியும்! 

கேள்வி புரிந்ததா? இல்லை புரிந்து, நமக்கேன் வம்பு, இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து சென்று விடுவோம் என்கிற நினைப்பா, என்று தெரியவில்லை.

சித்தரே வந்து மிகப்பெரிய அருளை பெற்றுத் தருகிறேன் என்கிற பொழுது, அந்த வாய்ப்பை இழக்கலாமா? 

அமைதியின் முடிவில், இப்படிப்பட்ட மனிதர்களுக்கா, அகத்தியப்பெருமானை இழுத்து வந்து, கேள்வி கேட்டு இத்தனை சிரமப்படுகிறோம்! என்று தோன்றிவிட்டது. "சித்தன் அருளும்" போதும் என்றாகிவிட்டது! அதையும் வேண்டுதலாக அவரிடம் வைத்திருக்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. உண்மை தான் ஐயா, தேவை இருப்பனே இறைவனை நோக்கி ஓடுகிறான்..

    அனைவரும் ஈசனின் படைப்பு ஆனால் மனிதர்கள் மாயை காரணமாக படும் துயரத்தை குறைக்கவே அகத்தியர் ஐயா தானாக இறைவனிடம் அனுமதி கேட்டு மனிதர்களுக்கு உதவுகிறார், நமது கேள்விக்கு பதில் கூற வேண்டும் என எந்த கட்டாயமும் அகத்தியர் ஐயாக்கு இல்லை, ஆனாலும் மணிக்கனக்கா நமக்காக நேரம் ஒதுக்குகிறார் 🙏

    கர்மவினை காரணமாக அவர் எவ்வளவு விளக்கம் சொல்லி புரியவைத்தாலும் மனது ஏற்க மறுக்கிறது அதனால் தான் யாரும் பதில் கூற முன்வரவில்லை.

    உங்கள் கோரிக்கை நியாயமானது தான், முடிவு அகத்தியர் ஐயாவுடையது.. ஓம் அகத்தீசாய நமக 🙏

    கேள்விகளை தொகுத்து எங்களுக்காக நேரம் செலவு செய்து அகத்தியர் ஐயாவிடம் கேட்டதிற்கு மனமார்ந்த நன்றிகள் அக்னிலிங்கம் ஐயா 🙏

    ReplyDelete
  2. Extremely sorry for the same.
    But never stop SITHANARUL please. Our attitude towards the life as well as our activities gets changed to some extent spiritually.
    We, the orphans get guidance sometimes answers to our questions.
    Please never stop. Beg you and Ahathiar Bhagavan please once again.
    Thank You.

    ReplyDelete
  3. அண்ணா,
    “மக்களுக்கு பக்குவம் வேண்டும்” என்று குருநாதர் சொன்னதற்கே இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை, ஒவ்வொரு புரிதல் இருக்கும். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

    நாம் யாரையும் மாற்ற முடியாது; ஆனால் அவர்களுக்கு பக்குவமும் ஞானமும் அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ளலாம். “சித்தன் அருளும் போதும்” அப்படின்னு நினைக்காதீங்க…
    அதையும் தாண்டி, “சித்தன் அருளால் எல்லோருக்கும் பக்குவமும் ஞானமும் பிறக்கட்டும்”ன்னு வேண்டிக்கொள்ளலாம். ஏனெனில் சித்தன் அருளால்தான் எனக்குள்ளும் மாற்றம் வந்தது.
    என் எண்ணங்களிலும், என் பார்வையிலும், என் மனநிலையிலும் அந்த அருள் தான் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதற்கு தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    ReplyDelete
  4. அண்ணா,
    “மக்களுக்கு பக்குவம் வேண்டும்” என்று குருநாதர் சொன்னதற்கே இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை, ஒவ்வொரு புரிதல் இருக்கும். மக்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

    நாம் யாரையும் மாற்ற முடியாது; ஆனால் அவர்களுக்கு பக்குவமும் ஞானமும் அருள வேண்டும் என்று வேண்டிக்கொள்ளலாம். “சித்தன் அருளும் போதும்” அப்படின்னு நினைக்காதீங்க…
    அதையும் தாண்டி, “சித்தன் அருளால் எல்லோருக்கும் பக்குவமும் ஞானமும் பிறக்கட்டும்”ன்னு வேண்டிக்கொள்ளலாம். ஏனெனில் சித்தன் அருளால்தான் எனக்குள்ளும் மாற்றம் வந்தது.
    என் எண்ணங்களிலும், என் பார்வையிலும், என் மனநிலையிலும் அந்த அருள் தான் மாற்றத்தை ஏற்படுத்தியது.

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  6. Agnilingam Aiyya , you are the best person in the world to continue Sidhan Arul Publishing of the divine messages of Agasthiya peruman. nobody can ask such question to the great god Agasthiya Peruman like you. Please keep we all the readers require and request you only to keep publishing . now a days with the photo messages it has become excellent publishing and understanding is better . i.e. talking about the kootu prarthanai summarised photo and messages

    ReplyDelete