​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 September 2017

சித்தன் அருள் - 723 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 7


​​அடுத்த வார வியாழக்கிழமை, அதிகாலையில், வகுப்பு தொடர்ந்தது, அகத்தியர் கூறலானார்.

"பிறர் துன்பப்படுகிற சூழ்நிலைகளை, அவர்கள், அதை கடந்து வந்த பின்னும், ஒருவன் விரிவாக நினைக்கிறான் என்றால், அதே சூழ்நிலைகளில் அவன் இருந்து கொண்டு தானும் சிரமப்பட்டு, பிறரையும் (அதில் தொடர்பு கொண்டவர்களையும்) மறுபடியும் வருத்தத்திற்குள்ளாக்குகிறான் என்று அர்த்தம். ஆனால் கம்பனோ, சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பத்தை மிக மிக சுருக்கி எட்டு ஸ்லோகங்களில் முடித்துவிட்டான். ஆம்! அவனால், சீதை துன்பப்படுகிற சூழ்நிலையை பொறுக்க முடியவில்லை. சீதையும் மறுபடியும் துன்பத்திற்குள்ளாக்குகிறோம் என்று நினைத்த மாகா புருஷன். அவன் எழுதிய காவியம், மென்மைக்கு சான்று. இதுபோல் யாரும் எழுதவில்லை" என்று ஒரு வித்யாசமான கருத்தை கூறி தொடர்ந்தார்.

"எத்தனை துன்பம் வரினும், நல்லவர்கள் இருக்கும் வரை, ஒருவர் வாழ்வில், இறைவனே, நம்பிக்கை விளக்கேற்ற ஒருவரை அனுப்புவார். அப்படி வந்தவர் கூறும் வார்த்தைகளை மனதிற்கொண்டு, அந்த ஒருவன்/ஒருவள் தன்னை சாந்தப்படுத்திக்கொண்டு, அமைதியாக இறையிடம் தன் மனதை கொடுத்து வாழ்ந்துவிட்டால், எப்படிப்பட்ட புயல், வாழ்க்கையில் வந்தாலும், அது பாதிக்காமல், அமைதியாக சென்று கொண்டிருக்கலாம். அதற்கு, மிக மிக பொறுமை வேண்டும். அது, இந்த கால மனிதனுக்கு இல்லாததே, கலி தன் விளையாட்டை விளையாட, எளிதாக்குகிறது, மேலும் பிரச்சினைகளை வலுவேற்றுகிறது.  இறைவனிடம் தன் மனதை கொடுத்து, அத்தனை விளையாட்டையும் அவர் விளையாட வைப்பதற்காகத்தான், "ஒரு மனிதன் தன் மனதை தவிர, இறைவனுக்கு கொடுப்பதற்கு என்று இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை" என்று அடிக்கடி கூறி வருகிறோம்." என்றார்.

"இருபத்தி ஒன்பதாவது சர்கத்தில், எட்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நல்ல சகுனங்கள் எவை, எவை என்பதை மனிதனுக்கு உணர்த்தும்."

"தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை நீங்க, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர, குடும்பத்தில் ஏற்படும் மற்ற அனைத்து கஷ்டங்கள், மருத்துவமனையில் போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகள் சுகம் பெற, அத்தனை பேர்களும் இந்த சுந்தரகாண்டத்திலுள்ள 30வது சர்க்கத்தை தினமும் மூன்று தடவை, அனுமனை நினைத்துக் காலையில் பாராயணம் செய்து வந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சந்திர மகா தசையில் ராகு, கேது புக்தி நடப்பவர்கள், ராகு மகா தசையில் சந்திர புக்தி, சூரிய புக்தி நடப்பவர்கள், கேது தசையில் சந்திரன், செவ்வாய், சூரிய  புக்தி நடப்பவர்கள், ஆகியோருக்கு இந்த முப்பதாவது சரகம் நல்ல உயரிய வாழ்வுதனை அள்ளிக்கொடுக்கும்." என்றார்.

"முப்பத்தி ஒன்று முதல், முப்பத்தி ஐந்தாவது சர்கம் வரையில் உள்ள ஸ்லோகங்களை தினமும் பாராயணம் செய்வதால், கீழ் காணும் சிரமங்கள் அனைவருக்கும் விலகும்.

கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்கிறவர்கள் அனுமனின் ஸ்ரீராம சரிதத்தை தினம் படிப்பது நன்று. வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள், வாழ்க்கையில் நம்பிக்கை குறைந்தது போகிறவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கிறவர்கள் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் அனைவரும், இந்த சர்கங்களை படித்துக் கொண்டே வந்தால் போதும், துன்பம் அத்தனையும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும்." என்றார்.

"நமோஸ்து வாசஸ்பதயே ஸ்வஜ்ரிணே ஸ்வயம்புவே
சைவ ஹூதாஸனாயச|
தானே சோக்தம் யதிதம் மாமக்ரோத வனெள
கஸா தச்ச ததாஸ்து நான்யதா!!

என்கிற இந்த ஸ்லோகத்தை யார் சொன்னாலும்,அநேக நன்மைகளை பெற்று வாழ்வார்கள். சுந்தரகாண்டத்தில் சொல்லப்பட்டுள்ள மிக மிக முக்கியமான ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று." என்றார்.

"கஷ்டங்கள் தொடர்ந்து பெறுகின்ற அனைத்து மக்களும், ஆபத்தில் துடிப்பவர்களும், வியாதியினால் போராடுபவர்களும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பவர்களும், அஷ்டம குரு, அஷ்டம கேது, ராகு நடந்து கொண்டிருப்பவர்களும் , திருமணமாகாத ஆண், பெண் இருபாலர்களும் 35, 36, 37, 38 ஆவது சர்கங்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றும், கஷ்டங்களை விலக்கி வைத்துவிடும்! சௌபாக்கியங்களை அளிக்கும். இது ஒரு மிக மிக முக்கியமான சௌபாக்கிய பகுதியாகும்" என்று உரைத்தார்.

"மனம் நொந்துபோன மனிதர்களுக்கு முப்பத்தி ஒன்பதாவது சர்கத்தில் உள்ள 53 ஸ்லோகங்கள், ஒரு வரப்பிரசாதம்."

"பயத்தினால் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், தன்  பலத்தை தானே அறிந்து கொள்ளாதவர்களுக்கும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் குரு, கேது, சனி இருந்து அதற்குரிய மகாதசையோ, புக்தியோ, அந்தரமோ நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற துர்தேவதைகளால் திடீரென்று பீடிக்கப்பட்டவர்களுக்கும், தோஷங்கள் அனைத்தும் உடனடியாக மறையவும், சந்தோஷங்கள் அதிகரிக்கவும், காவல்துறை, ஜெயில் பயம் விலகவும், முப்பத்தி ஒன்பது முதல் நாற்பத்தி ரெண்டு வரையில் உள்ள சர்கங்களில் உள்ள அனைத்து ஸ்லோகங்களையும், மனதிற்குள் தினம் பாராயணம் செய்து வரலாம். அத்தனை சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் இவை" எனக்கூறி அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டார்.

நானும், நாடியை ராமர் பாதத்தில் வைத்துவிட்டு, த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள் ................ தொடரும்!

18 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  2. vanakam
    ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ
    ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ
    ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

    anbudan s v

    ReplyDelete
  3. Kinatril muzhigikondiruppavanukku veliyil irundhu kayaru kidaithathupol ulladhu...nandrigal..Om Guruve namaha Om Aghatheesaya namaha, Om agatheesaya namaha..Om Agatheesaya namaha..

    ReplyDelete
  4. ஓம் அன்னை லோபாமுத்ரா தேவி அகத்தீச பகவானே போற்றி.

    ReplyDelete
  5. "எத்தனை துன்பம் வரினும், நல்லவர்கள் இருக்கும் வரை.......மிகவும் அருமையான மனதில் ஆழ பதிகின்ற அகத்தியப்பெருமானின் அற்புத அருள்வாக்கு. அவர் சொல்வது போல்
    விதி வழி துன்பத்தை வெல்ல, மனம் தளராத இறை பக்தியுடன் கூடிய பொறுமை மிகவும் அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார். அகத்தியப் பெருமானை சரணடைந்தவர் கைவிடப்படார்...ஒம் அகத்திசாய நமக.....ஒம் ஒதிமலை ஆண்டவா போற்றி....

    ReplyDelete
  6. ஓம் விநாயகப் பெருமான் போற்றி போற்றி

    ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

    ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

    ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

    நன்றிகள் பல திரு. அக்னி லிங்கம் ஐயா, திரு. கார்த்திகேயன் ஐயா

    ReplyDelete
  7. Can we read this in Kambaramayam sir because i am not able to read sanskrit if can then please tell in kamba ramayanam which song we need read every day.

    ReplyDelete
    Replies
    1. Buy the book where the slogas are printed in tamil. Initially you may find it difficult to read but within a week you will find it easy to chant. No reference is given to "kamba ramayanam" by the naadi reader for chanting slogas. If I get any info, i will pass on here.

      Delete
  8. Sir
    Instead of reading Sanskrit slogan in Tamil can we read the narration of the sargam written in Tamil

    ReplyDelete
    Replies
    1. வேதம், மந்திரம் போன்றவை வடமொழியில் உருவாக்கப்பட்டதே, அவைகளை உச்சரித்தாலே, உள்ளுக்குள் பல அதிர்வலைகளை உருவாக்கி, ஒருவனை உடலளவில், மனஅளவில், ஆத்ம அளவுக்கு கொண்டு செல்லும். அவற்றை தவறாக சொன்னாலும் இறை ஒரு போதும் தண்டிக்காது என்று அகத்தியப் பெருமானே கூறியுள்ளார். வால்மீகி எழுதிய சுந்தரகாண்டத்தின் ஸ்லோகங்களை இறை தன் மனித குலத்துக்கான திட்டத்துக்காக தேர்ந்தெடுத்து, அருள் வழங்கியுள்ளது. அதற்காக மற்றவர்கள் எழுதியது குறைந்தது என்று இங்கு கூறவில்லை. இறை ஒரு வழியை காட்டும்போது அதை அப்படியே தொடர்வது சித்தர்கள் பாணி. நாமும், ஏன், எதற்கு என்று கேட்காமல் தொடருவோம். குறைந்தது அந்தவழி நிச்சயம் நமக்கு நிம்மதியை தரும் என்று நம்பலாம்.

      Delete
    2. Thanks.. I will slowly start reading in Sanskrit itself. Thanks.

      Delete
    3. ஐயா ஒரு வேன்டுகொள்

      இறைவனை அடைய

      தியானம் செய்வதர்க்கு சில ஆலோசனை தர வேண்டும்.

      தியானத்தில் அமரும் போது இறைவனை நெற்றியில் வைத்து மந்திரம் சொல்ல வேண்டுமா அல்லது மௌனமா அமர வேண்டும்மா

      அல்லது இறையய் மனதில் நிருத்தி மௌனமாக அமர வேண்டுமா

      இறைவன் ருபம் நெற்றியில் பதிக வேன்டுமா அல்லது ஔியாக நினைத்து இருக்கலாமா

      நெறாக அமர்ந்து ,கையில் முத்திரை பிடுத்து தான் தியானம் செய்ய வேண்டுமா

      ஒரு இறைவனை நினைத்து மட்டும் தான் தியானம் செய்ய வேண்டுமா, அல்லது ஒரு தியானம் எல்லா இறையும் சென்று அடையுமா

      சிவன் மிகவும் பிடிக்கும் இருந்தும் நாரயனன் , முருகர் மிதும் பக்தி உண்டு , அகத்தியர் வழி செல்வும் மனம் விழைகிரது , எப்படி தியானத்தால் இவர்களை அடைவது

      எனவே இறை தியானம் யாரை நோக்கி எப்படி செய்வது என்று சற்று விலக்கத்துடன் சொல்லவும்.

      nandhini6happy@gmail.com

      Delete
    4. வணக்கம். த்யானம் என்பது எப்படி மூச்சு விடுகிறோமோ அப்படி இயல்பாக இருக்க வேண்டும். முதலில், மனம் அலை பாயும். விட்டுவிடுங்கள். அதை கவனிக்காமல் இருந்தால், தானே ஒரு புள்ளியில் வந்து அமரும். பின்னர் அது நம் வசப்படும். இதற்கு, உள்ளே, வெளியே செல்லும் மூச்சை கவனியுங்கள். கண் மூடி த்யானம் என்றால், இறைவன் பாதத்தை, புருவ மத்தியில், வைத்துப்பாருங்கள். அது போதும். கவனமும், இறைவனும், சித்தர்களும் தானாக கைவல்யப்படுவார்கள். ஒரு சில நாட்களில், உறவினர்களும், நண்பர்களும் "உனக்கென்ன ஆச்சு!" என்று கேட்டால் என்னை திட்டாதீர்கள், அதற்கு பதிலாக ஒரு புன்னகையை பரிசாக கொடுக்க எப்போதும் கை வைத்திருங்கள். வாழ்த்துக்கள்.

      Delete
    5. மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. விதி தன் கடமையை செய்யும் ..!

    ReplyDelete
  10. this for script
    http://webstock.in/001-Epics-PDF/Sundar-Kand-Valmiki-Ramayan-in-Tamil/001-Sundar-Kand-Valmiki-Ramayan-in-Tamil.pdf ---This is for sarga 1-10
    http://webstock.in/001-Epics-PDF/Sundar-Kand-Valmiki-Ramayan-in-Tamil/002-Sundar-Kand-Valmiki-Ramayan-in-Tamil.pdf -- This is for sarga 11-28 etc..

    AND

    This is for pronounciation -mp3 -go to you tube
    Adhikavya Ramayana - "Sundara Kaandam" - Sarga 1 (Ch1) - "Sagaraolanghanam" (Sage Valmiki)
    Adhikavya Ramayana - "Sundara Kaandam" - Sarga 2 (Ch2) - "Sagaraolanghanam" (Sage Valmiki) etc etc

    ReplyDelete
  11. ayya vanakkam sree rama saritham padikavendum endru kooriyirukirgal apdi endraal ramayanan muluvathuma vilakam vendum thayai koornthu ????

    ReplyDelete
  12. வால்மீகி இராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டமானது தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    http://www.prapatti.com/slokas/category/t2-raamaayanam-sundarakaandam-index.html

    ReplyDelete