​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 May 2017

சித்தன் அருள் - 678 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இஃதொப்ப நிலையிலே ஒரு மனிதன் முழுக்க, முழுக்க ஞானியாகவோ, சித்தனாகவோ மாறிவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அது அவன் எண்ணினாலும் நடக்காது என்பது வேறு விஷயம். ஆனால் நாங்கள் கூற வருவது கூடுமானவரை தன்னலத்தைக் குறைத்து பொதுநலமான எண்ணங்களோடு வாழ்தல், பிறருக்கு முடிந்தவரை நன்மைகளை செய்தல், நன்மைகளை செய்ய முடியாவிட்டாலும் தீமைகளை செய்யாதிருத்தல், சூழ்ச்சி, வஞ்சனை இவற்றை பின்பற்றாமல், வளர்த்துக் கொள்ளாமல் இருத்தல், தம், தம் கடமைகளை நேர்மையாக ஆற்றுதல், கடமைகளை நேர்மையாக செய்ய முடியாத நெருக்கடி வரும் தருணம் அந்தப் பணியையே புறக்கணித்தல். ஏனென்றால் நேர்மையற்று ஒருவன் எதைபெற்றாலும் அதனால் அவன் பெறுவதல்ல, அனைத்தையும் இழக்கிறான் என்பதே சித்தர்கள் பார்வையில் உண்மையாகும். எனவே நேர்மையான எண்ணம், உபகாரமான எண்ணம், சதா தர்ம சிந்தனை, பரிபூரண சரணாகதி, பக்தி – இவையெல்லாம் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் இறை வழி என்பது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் முழுக்க, முழுக்க, முழுக்க இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டாலும் இறைவன் சோதனைக்கு ஆட்பட்டே ஒருவன் மேலேறி வரவேண்டும். நாங்கள் அடிக்கடி கூறுவதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

1 comment: