​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 28 October 2016

சித்தன் அருள் - 484 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"விதியை வெல்லவேண்டும்" என்கிற ஒரு "விதி" ஒருவனுக்கு இருந்தால் விதியை வெல்லலாம். பற்றற்ற ஞானிகளால்தான், விதியை வெல்ல முடியும். எனவே, "விதி" நன்றாக இருக்கும் வண்ணம் வாழ்ந்து விட்டுப்போவதே, விதியை, வெல்லும் மார்க்கமாகும்.

1 comment:

  1. ROUGH TRANSLATION:
    If you want to “conquer” fate, then fate itself should have already provided scope that you can “defeat” fate.
    Only the Gnanis who have no attachments can “overcome” fate.
    Therefore, the right way to “overcome” fate is to lead a good/proper life so that the “fate” becomes positive.

    ReplyDelete