​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 9 October 2014

அந்தநாள் இந்த வருடம் - கோடகநல்லூர் - 04/11/2014


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

சித்தன் அருளை வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் நமக்கென உரைத்த மிக முக்கியமான ஒரு சில நாட்கள், சில புண்ணியத் தலங்களை பற்றி அறிந்திருப்பீர்கள். அவை இந்த வருடத்தில் எந்த தியதியில் எங்கு வருகிறது என்பதை முன்னரே தெரிவித்திருந்தேன். அந்த வகையில், இனி இந்த வருடம் கடைசியாக வருவது கோடகநல்லூர்.   ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து 04/11/2014, செவ்வாய் கிழமை அன்று வருகிறது.

சென்ற வாரம் சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் சென்று தாமிரபரணியில் நீராடி, பச்சைவண்ணப் பெருமாளின் கருடசேர்வை உற்சவத்தை கண்குளிர காண்கிற பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. நண்பர் ஒருவரின் குடும்ப வகையில் அன்றைய தினம் பெருமாளுக்கு திருவாராதானமும் (அபிஷேக ஆராதனை), இரவு கருட சேர்வையும் (கருட வாகனத்தில் பெருமாளை வீதி உலா கொண்டு செல்வது) நடந்தது. மிக ஆனந்தமான வீதி உலா காட்ச்சியும், ஆராதனையும் காண முடிந்தது.

அந்த நேரத்தில் ஒரு நண்பருடன் 04/11/2014 அன்றைய முக்கியத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பல விஷயங்களை நினைவிற்கு கொண்டு வர முடிந்தது.
  • நாம் தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடுகிற ஆடிப் பெருக்கு பண்டிகை இங்குதான் அந்த நாளில் தொடங்கியது. பின்னர் அது ஆடி மாதத்துக்கு மாற்றிக் கொள்ளப்பட்டது.
  • அகத்தியப் பெருமானுக்கு, பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் தங்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்த நாளும் அதுவே.
  • கங்கை, தாமிரபரணியில்  மஞ்சள் தேய்த்து குளித்து தன் பாபத்தை போக்கிக் கொண்ட நாளும் அதுவே. 
  • தாமிரபரணியை, லோபா முத்திரையாக ஆக்கி, அகத்தியப் பெருமான் தன்னுடனே வைத்து இந்த தென் தமிழகம் பசுமை பெற விருப்பப் பட்ட நாளும் அதுவே.
  • எல்லா தெய்வங்களும், தேவதைகளும் ஒன்றாக அமர்ந்து அளவளாவி, பகிர்ந்து உண்டு இருந்த நாள் இதுவே.
  • எல்லா நதிகளும் ஒருமித்து இங்கு வந்து அனைவரின் அருளை பெற்ற நாளும் இதுவே.
  • எத்தனையோ சித்தர்கள் ஒன்று கூடி இருந்து அத்தனை தெய்வங்களின் அருளை பெற்ற நாளும் அதுவே.
சென்ற வருடம் அகத்தியர் அடியவர்கள் இங்கு வந்து பெற்ற அனுபவங்களும், இப்படி எத்தனையோ விஷயங்கள் நினைவிற்கு வர, ஒரு சிறிய அவா மனதுள் தோன்றியது. நண்பரிடம் கூறினேன். உடனேயே அதற்கான ஏற்ப்பாடுகளை செய்தார். ஆம்! அது என்ன?

அன்றைய தினம் (04/11/2014) அங்கு வருகிற அனைத்து அடியவர்களுக்கும் இறை, சித்தர்களின் அருள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றேன். நண்பர் கோவில் அர்ச்சகர், ட்ரஸ்டி இவர்களுடன் கலந்து பேசி, பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை, நிவேதனம் இவைகளை செய்ய ஏற்பாடு செய்தார். அன்று அங்கு வந்து செல்கிற எல்லோருக்கும், இறை தரிசனமும், இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதமும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
​​
அபிஷேகம் காலை 10 மணிக்குமேல், (தாமதமாக வந்து சேருகிறவர்களுக்காக) நடத்துமாறு வேண்டிக் கொண்டோம். அதற்கும் கோவில் பூசாரி ஒப்புதல் தெரிவித்துள்ளார். முடிந்தவர்கள், விருப்பம் உள்ளவர்கள் அங்கே உழவாரப் பணி கூட செய்யலாம். அல்லது, நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று, உடலால் சேவை செய்யலாம், உதவி செய்யலாம்.

​போன வருடம் வெகு தாமதமாக தெரிவித்தது போல் அல்லாமல், இந்த முறை மூன்று வாரங்களுக்கு முன்னரே உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற அவாவில், இந்த விஷயங்களை தருகிறேன். விருப்பம் உள்ள அடியவர்கள், எப்படி தீர்மானிக்க வேண்டுமோ, அதை செய்து, அன்றைய தினம் அங்கு சென்று, இறை அருள், சித்தர்கள் அருள் பெற்று, அங்கு நடக்கும் பூசையில் கலந்துகொண்டு, ஆனந்தப் படுமாறும், நல் வாழ்க்கைக்கான அருள் பெறுமாறும் வேண்டிக் கொள்கிறேன்.​

உங்கள் தகவலுக்காக - பயணிக்க வேண்டிய வழி > திருநெல்வேலி > சேரன்மாதேவி வழி தடத்தில், நடுக்கல்லூர் நிறுத்தத்தில் இறங்கி, கோடகநல்லூருக்கு சுமார் 1 கி.மி. நடுக்கல்லூரில் இருந்து ஆட்டோவில் அல்லது நடந்துதான் செல்ல வேண்டும். பஸ் வசதி கிடையாது. கைவசம், அவசியமான விஷயங்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சின்ன கிராமத்தில் எந்த வசதியும் எதிர் பார்க்க முடியாது. வெகு தூரத்திலிருந்து வருபவர்கள், குடும்பத்துடன் வருபவர்கள், திருநெல்வேலியில் தங்கிவிட்டு கோடகநல்லூர் சென்று வருவது நல்லது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

கார்த்திகேயன்!

5 comments:

  1. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  2. Sir, the calendar which I refer to is: http://srirangaminfo.com/Tamil-daily-calendar.php. It is showing trayodasi on 5th, not on 4th.

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் அவர்களே! திதி, நட்சத்திரம், மாதம் - இவை தான் சேர்ந்து வரவேண்டும். அப்படி பார்க்கையில் 4ம் தியதி காலை 9 மணிக்கு த்ரயோதசி திதி தொடங்கி மறுநாள் காலை 7 மணி வரை உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம் 4ம் தியதி மாலை 6 மணிவரை தான் உள்ளது. இவை இரண்டும் சேர்ந்து இருக்கிற நேரம் என்பது 4/11/2014ல் மட்டும் தான் உள்ளது. அதனால் தான் 4/11/2014 என்று தெரிவித்தேன்.

      உங்கள் தகவலுக்கும் நன்றி.

      கார்த்திகேயன்

      Delete
  3. According to the Sidhanarul on 04.11.2014 Tuesday we,3 friends went to Karkodaganallur and finished our holy bath in Thamirabarani river then participate in the swamy Thirumanjanam and worship Lord Sri Bhoomi Neela sametha Sri. Prahan Madhavan. Devotees participated from various places ie. Chennai, Krishnagiri,Coimbatore, Vellore, Thiruvananthapuram etc. Deepe Aradhana done at 02.00 pm then Swamy Pooja currency Rs.10 only distributed to all devotees along with Prasatham. Every thing arranged by Shri Krishnan team from Thiruvanandapuram. Credit goes to SIDTHANRUL becaues of the timly information.

    ReplyDelete
  4. உங்களால் தைப்பூசத்தன்று 16/1/14 நம்பிமலையிலும் முன்னர் கோடகநல்லூரிலும் குடும்பத்துடன் தீர்த்தமாடி இறைவனை தரிசித்து எங்கள் குலகுரு ஆறுமுகத்தம்பிரான் பூஜையில் கலந்து கொண்டோம்.இதன் காரணமோ அல்லது எம் குடும்ப புண்ணியமோ ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதியும்
    உத்திரட்டாதி நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து 04/11/2014, செவ்வாய்
    கிழமை அன்று எங்கள் 14வயது மகனை இறைவன் 5.15 pm மணியளவில் ஆட்கொண்டார்!

    ReplyDelete